டியூப் லெஸ் டயர்களில் உள்ள நிறை - குறைகள் என்னென்ன?

Written By: Krishna

நேற்று நாம் பார்த்த விஷயங்கள் இன்று மாறியிருக்கின்றன. நாளை அவை வேறு பரிணாமமாக உருவெடுக்கக்கூடும். தொழில்நுட்பங்களும் அப்படித்தான். டயருக்குள், டியூபைப் பொருத்தி அதில் காற்றை நிரப்பிக் கொண்டிருக்கும் நிலையிலிருந்து மெல்ல மாறி டியூப் லெஸ் டயர்கள் வந்துவிட்டன.

அந்த வகையில் டியூப் லெஸ் டயர்களில் உள்ள சாதக, பாதக அம்சங்கள் என்னென்ன? என்பதை பார்க்கலாம் வாருங்கள்...

டியூப்லெஸ் டயர்களின் நிறைகள்...

1. டியூப் உள்ள டயர்கள் பஞ்சர் ஆவதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன. ஆனால், இதில் அப்படியில்லை. மிகப் பெரிய ஆணியோ, இரும்போ குத்தி டியூப் லெஸ் டயர்கள் பஞ்சரானால் கூட நாம் தொடர்ந்து வண்டியை ஓட்டலாம். உடனே காற்று இறங்காது என்பதால், தள்ளிக் கொண்டு போக வேண்டிய அவசியமில்லை.

டியூப்லெஸ் டயர்களின் நிறைகள்...

2. பொதுவாக டியூப்பினுள் உள்ள காற்று குறைந்துவிட்டால், அதை நிரப்ப வேண்டியிருக்கும். அவ்வாறு நிரப்பாமல் ஓட்டினால், அதுவே பஞ்சருக்கான காரணமாகவும் அமைந்து விடும். ஆனால், டியூப் லெஸ் டயர்களில் அந்தப பிரச்னைக்கு இடமில்லை. குறைந்த காற்றழுத்தத்திலும் அது ஓடக்கூடியது.

டியூப்லெஸ் டயர்களின் நிறைகள்...

3. லிக்யூடு சீலென்ட் எனப்படும் திரவத்தை டியூப் லெஸ் டயர்களில் நிரப்பும்போது கூர்மையான பொருட்களால் ஏற்படும் பஞ்சரை கூட சமாளித்துவிடும். உடனடியாக அந்த திரவம் ஓட்டை விழுந்த இ டத்தை அடைத்து காற்று வெளியேறுவதை தடுத்துவிடும். இதன் காரணமாக பஞ்சரானாலும் தொடர்ந்து பயணிக்கலாம்.

டியூப்லெஸ் டயர்களின் நிறைகள்...

4. டியூப் பொருத்தபபட்ட டயர்களில் பஞ்சர் ஆனால் உடனடியாக காற்று வெளியேறி விடும். ஆனால், டியூப் லெஸ் டயர்கள் அப்படியல்ல. மிகவும் தாமதமாகவே காற்று வெளியேறும். அதுவும் சிறிது, சிறிதாகவே... எனவே, இதுவும் டியூப்லெஸ் டயரில் உள்ள ஒரு சாதக அம்சம்.

டியூப்லெஸ் டயர்களின் நிறைகள்...

5. சாதாரண டயர்களைக் காட்டிலும் இவை எடை குறைந்தவை. எடை குறைவான டயர்கள் மைலேஜை அதிகரிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை.

டியூப்லெஸ் டயர்களின் நிறைகள்...

6. அதிக வேகத்தில் செல்லும்போது டியூப் உள்ள டயர்களில் உராய்வு அழுத்தம் அதிகரிக்கும். இதனால் டயரோ, டியூபோ விரைவில் வெப்பமடைய வாய்ப்புள்ளது. இதனால்கூட விபத்துகள் நேரலாம். டியூப் லெஸ் டயர்களில் அவ்வாறு உராய்வு அழுத்தம் அதிகமாக ஏற்படாது.

டியூப்லெஸ் டயர்களின் நிறைகள்...

7. டயருக்குள் நிரப்பப்பட்டிருக்கும் காற்றின் அழுத்தம் சீராக இருந்தால்தான் வாகனம் சரியாக ஓடும். வண்டி வேகமாகச் சென்றால் டியூபினுள் உள்ள காற்று அழுத்தமடைய வாய்ப்புள்ளது. இதன் காரணமாக வண்டியின் டயர்கள் நிலையாக செல்லாமல் ஆடக்கூடும். இதை ஆங்கிலத்தில் வாப்லிங் என்பார்கள். அந்தப் பிரச்னை டியூப் லெஸ் டயர்களில் இல்லை.

டியூப்லெஸ் டயர்களின் குறைகள்...

1. டியூப் லெஸ் டயர்களை ரிம்மில் பொருத்துவது சற்று கடினமான காரியம். நன்கு அனுபவம் வாய்ந்தவரகளால் உரிய கருவிகள் துணையுடன் மட்டுமே அதைச் சரியாக பொருத்த முடியும். சரிவரப் பொருத்தாவிட்டால் உள்ளே இருக்கும் காற்று வெளியேறக்கூடும்.

டியூப்லெஸ் டயர்களின் குறைகள்...

2. சாதாரணமாக பஞ்சர் போடுவது போன்று டியூப் லெஸ் டயர்களை பஞ்சர் போட முடியாது. அதற்கான சிறப்பு உபகரணங்கள் தேவை. இதற்கான பஞ்சர் கிட்டை கையில் வைத்திருப்பது பலன் தரும். ரூ.250 விலையிலிருந்து இது கிடைக்கிறது.

டியூப்லெஸ் டயர்களின் குறைகள்...

3. சைடு வால் எனப்படும் பக்கவாட்டில் பஞ்சர் ஏற்பட்டால் சாதாரண டயர்களில் டியூபை மட்டும் மாற்றினால் போதும். ஆனால், டியூப் லெஸ் டயர்களைப் பொருத்தவரை மொத்த டயரையும் மாத்த வேண்டிய சூழல் ஏற்படும்.

டியூப்லெஸ் டயர்களின் குறைகள்...

4. சாதாரண டயர்களைக் காட்டிலும் டியூப் லெஸ் டயர்களின் விலை அதிகமாகும். இதனால், நடுத்தர வர்க்கத்தினர் பெரும்பாலும் இதை தேர்வு செய்வதில்லை.

டியூப்லெஸ் டயர்களின் குறைகள்...

மொத்தத்தில் சில குறைகள் இருந்தாலும், டியூப் லெஸ் டயர்களின் வருகை ஆட்டோ மொபைல் மார்க்கெட்டில் புதிய புரட்சியை உருவாக்கியுள்ளது என்பதில் மாற்றுக் கருத்தில்லை. பாதுகாப்பான பயணம், சௌகரியம் ஆகியவற்றின் அடிப்படையில் கணக்கிட்டுப் பார்த்து டியூப்லெஸ் டயர்களை வாசகர்களுக்கு பரிந்துரைக்கிறது டிரைவ் ஸ்பார்க்.

கார் கடன் பெற எளிமையான 4 வழிகள்....!

கார் கடன் பெற எளிமையான 4 வழிகள்....!

English summary
Expert Talk: The Main Advantages & Disadvantages Of Tubeless Tyres.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark