கார் கடன் பெற எளிமையான 4 வழிகள்....!

By Lekhaka

கார் வாங்கும் கனவில் இருக்கும் பெரும்பாலானோர், என்ன மாடல் வாங்கலாம்? என்ன கலர் வேண்டும்? என்ற சிந்தனைகளில் மட்டுமே மூழ்கியிருப்பார்கள்.

கார் இன்ஷூரன்ஸ்... காசை மிச்சப்படுத்த 5 வழிகள்...!!

பணத்துக்கு லோன் போட்டால் போகுது என்று அசால்ட்டாக பலர் சொல்லி நாம் கேட்டதுண்டு. தற்போதைய நவநாகரீக உலகில் லோன் வாங்குவது, கடையில் நியூஸ் பேப்பர் வாங்கும் அளவுக்கு சுலபமாகிவிட்டது என்பது உண்மைதான்.

பாதுகாப்பான பைக் பயணத்துக்கு 10 முக்கிய ஆக்சஸெரீகள்!

அதேவேளையில், விண்ணப்பித்த அனைவருக்கும் கடன் ஒதுக்கீடு செய்யப்படுகிறதா? ஏதோ ஒரு காரணத்தைச் சொல்லி லோன் விண்ணப்பத்தை ரத்து செய்து விடுகிறார்கள்.

01. கிரெடிட் ரேட்டிங்

01. கிரெடிட் ரேட்டிங்

கிரெடிட் இன்ஃபர்மேஷன் பீரோ இந்தியா லிமிடெட் (சிஐபிஐஎல்) எனப்படும் இந்தியக் கடன் தகவல் குழு நிறுவனம் உங்களது வரவு செலவு விவரங்களைக் கண்காணித்து வைத்திருக்கும்.

ஏற்கெனவே வாங்கிய கடன்களை நீங்கள் முறையாக செலுத்தாவிட்டாலோ, உரிய ஆவணங்கள் இல்லாவிட்டாலோ உங்கள் கடன் விண்ணப்பம் நேராக அலுவலகக் குப்பைத் தொட்டிக்குப் போய்விடும்.

இதுபோன்ற இக்கட்டான சூழல்களைத் தவிர்க்கவும், எந்தத் தடையுமின்றி கடன் வாங்கவும் 4 முக்கிய ஆலோசனைகளை இங்கே காணலாம்

பட்ஜெட்டைக் கணக்கிடுங்கள்....

பட்ஜெட்டைக் கணக்கிடுங்கள்....

கார் வாங்குவதில் முதலில் சிந்திக்க வேண்டிய முக்கியமான விஷயம் பட்ஜெட். உங்களிடம் உள்ள தொகை என்ன? அதற்கு எந்த காரை வாங்க முடியும்? என்பது குறித்து ஆலோசிக்க வேண்டும்.

லோன் மூலம் வாங்கும்போது, முன்பணமாக எவ்வளவு தொகை செலுத்த முடியும்? மாதத் தவணை எவ்வளவு? உள்ளிட்ட விஷயங்களை கணக்கிட்டுப் பார்ப்பது அவசியம்.

இதைத்தவிர காருக்குண்டான சாலை வரி, மாநில வரி, இன்ஷுரன்ஸ் உள்ளிட்ட கூடுதல் செலவினங்களை சமாளிப்பது எப்படி என்று யோசித்து மொத்தமாக எவ்வளவு கடன் தேவைப்படும் என்பதைக் கணக்கிட வேண்டும்.

முதல்ல இத கவனிங்க...

முதல்ல இத கவனிங்க...

கிரெடிட் ஸ்கோர்ஸ் என்பது ஏற்கெனவே நீங்கள் வாங்கியிருக்கும் பிற கடன்களுக்கு முறையாக வட்டியும், அசலும் செலுத்தியருக்கிறீர்களா? குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் கடனை முடித்து விட்டீர்களா? என்பதைக் கணக்கிடும் முறை.

நீங்கள் முறையாக பழைய கடன்களை செலுத்தாத பட்சத்தில், உங்களுக்கு புதிய லோன் வழங்கப்படுவது தடைபடலாம். இதுவே கிரெடிட் ஸ்கோர்ஸ் அடிப்படையி்ல கடன் வழங்குவது எனக் கூறப்படுகிறது.

ஆகவே, கடனைத் திருப்பிச் செலுத்தும் உங்கள் நாணயத்தை நீங்களே பரிசோதித்துவிட்டு லோனுக்கு விண்ணப்பியுங்கள்.

இணை விண்ணப்பதாரர்

இணை விண்ணப்பதாரர்

லோனுக்காக விண்ணப்பிக்கும் போது கோ-அப்ளிக்கன்டாக, அதாவது உங்களுடன் இணைந்து ரத்த சம்பந்தமான குடும்ப உறுப்பினர்கள் எவரையேனும் இணை விண்ணப்பதாரராகச் சேர்த்துக் கொள்ளுங்கள்.

இதன் மூலம், உங்களது விண்ணப்பம் விரைவில் பரிசீலிக்க வாய்ப்புள்ளது. உங்களை நம்பிப் பணம் தரும் நிதி நிறுவனங்களோ, வங்கிகளோ கையாளும் பாதுகாப்புக்கான அம்சம் இது.

செலவுகளை உள்ளடக்க வேண்டும்...

செலவுகளை உள்ளடக்க வேண்டும்...

கார் வாங்கிய பிறகு சீட் கவர், மியூசிக் சிஸ்டம், ஸ்டிக்கரிங் உள்ளிட்டவற்றுக்காக நாம் செலவழிக்க வேண்டியது இருக்கும். எனவே, அந்தத் தொகையையும் சேர்த்துக் கணக்கிட்டு, லோனுக்கு விண்ணப்பிப்பது புத்திசாலித்தனம்.

அப்போதுதான் கடைசி நேர செலவுகளுக்கு பிறரை எதிர்பார்த்துக் காத்திருக்கும் நிலைமை வராது.

இந்த நான்கு வழிகளையும் கடைப்பிடித்தால், கனவு கார் நம் வீட்டு வாசலுக்கு வருவது நிச்சயம்....

 

Tamil
English summary
Four Tips To Help Finance A Brand New Car.
 
X

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark

Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Drivespark sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Drivespark website. However, you can change your cookie settings at any time. Learn more