நைட்ரஜன் வாயு நிரப்புவதன் மூலம் டயர் வெடிப்பதை தவிர்க்க முடியுமா?

கோடை விரைவில் துவங்க இருக்கும் நிலையில், கார் டயர்கள் வெடிக்கும் வாய்ப்பும் அதிகரிக்கும். இந்த சூழலில் டயர் வெடிப்பை தவிர்க்கும் உபாயங்களில் ஒன்றாக, டயரில் நைட்ரஜன் வாயு நிரப்புவதும் ஒரு தீர்வாக குறிப்பிட்டிருந்தோம். இதுகுறித்து வாசகர்கள் சிலர் கேட்டிருந்த சந்தேகங்களுக்கு பதில் காணும் விதத்தில் சற்றே விரிவாக இந்த செய்தித் தொகுப்பு அமைகிறது.

முதல் காரணம்

முதல் காரணம்

ட்யூப் அல்லது டயரின் ரப்பர் வழியாக சாதாரண வாயு எளிதாக கசியும் வாய்ப்பு இருக்கிறது. ஆனால், நைட்ரஜன் வாயு நிரப்பினால், ரப்பரின் வழியாக வெளியேறும் அளவு மிக குறைவாக இருக்கும். இதன் காரணமாக, நீண்ட நாட்களுக்கு டயரில் காற்றழுத்தம் நிலையாக இருக்கும். அடிக்கடி காற்றுப் பிடிக்கும் தொல்லை இருக்காது.

வெப்பத்தை தாங்கும் திறன்

வெப்பத்தை தாங்கும் திறன்

வெப்பத்தின் காரணமாக சாதாரண வாயுவில் உள்ள ஆக்சிஜனில் ஏற்படும் அழுத்த மாற்றத்தைவிட நைட்ரஜன் வாயுவில் ஏற்படும் மாற்றம் குறைவு. இதனால், காற்றழுத்தம் எளிதாக குறையாது. இதன்மூலமாக, டயரின் தேய்மானம், காரின் கையாளுமை சிறப்பாக இருக்கும்.

ஈரப்பதம்

ஈரப்பதம்

சாதாரண வாயுவைவிட, நைட்ரஜன் வாயு ஈரப்பதத்தை தக்க வைப்பதில் சிறப்பானது. இதனால், உராய்வின்போது டயரின் வெப்பம் கிடுகிடுவென உயர்வது தவிர்க்கப்படுகிறது.

துருப்பிடிக்கும் தன்மை

துருப்பிடிக்கும் தன்மை

நைட்ரஜனில் நீர் மூலக்கூறு இல்லை என்பதால், ரிம் துருப்பிடிக்கும் வாய்ப்பும் குறைவாக தெரிவிக்கப்படுகிறது.

மைலேஜ்

மைலேஜ்

நைட்ரஜன் வாயு நிரப்பும்போது டயரில் காற்றழுத்தம் நீண்ட நாட்களுக்கு நிலையாக இருப்பதால், அதிக மைலேஜ், டயரின் தேய்மானம் குறைவு போன்றவை கூடுதல் பலன் தருவதாக அமைகிறது.

டயர் வெடிப்பு

டயர் வெடிப்பு

பரிந்துரைக்கப்பட்ட அளவைவிட குறைவான காற்றழுத்தத்துடன், அதிக வேகத்தில் செல்லும்போது டயர் வெடிக்கும் ஆபத்து அதிகமிருக்கிறது. அதேபோன்று, அதிக காற்றழுத்தம் அதிகமிருந்தாலும் டயர் வெடிக்கும் வாய்ப்பு இருக்கிறது. இந்தநிலையில், அதிக குளிர்ச்சித் தன்மை கொண்ட நைட்ரஜன் வாயு டயரின் சூட்டுக்கு தாக்குப்பிடித்து, ட்யூபிலிருந்து வாயு வெளியேறுவதை குறைவாக உள்ளது.

நைட்ரஜன் பயன்பாடு

நைட்ரஜன் பயன்பாடு

பொதுவாக பந்தய கார்கள், விமானங்களின் டயர்களில்தான் நைட்ரஜன் வாயு நிரப்பப்படுவது வழக்கமாக இருக்கிறது. அவற்றின் வேகம், அதன் காரணமாக டயரில் ஏற்படும் வெப்பம் காரணமாகவே நைட்ரஜன் வாயு நிரப்பப்படுகிறது. ஆனால், நாம் சாதாரண வாயு நிரப்பும்போதும் அதில் முக்கால்வாசி நைட்ரஜன் வாயுவும், 20 சதவீதம் அளவுக்கு ஆக்சிஜனும், 10 சதவீதம் இதர வாயுக்களும் உள்ளன.

பயன்பாட்டை பொறுத்து...

பயன்பாட்டை பொறுத்து...

அடிக்கடி நெடுஞ்சாலைகளில் பயணிப்பவர் என்றால் மட்டும் தொடர்ந்து நைட்ரஜன் வாயுவை நிரப்புவது அதிக பலன் தரும். அதேநேரத்தில், நைட்ரஜன் வாயு நிரப்புவதற்கு அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. எனவே, நகர்ப்புறங்களில் தினசரி பயணிப்பவர்கள் சாதாரண வாயுவை நிரப்பிக்கொள்ளலாம். ஆனால், அடிக்கடி காற்றழுத்தத்தை பராமரிப்பது அவசியம். எனவே, பயன்பாட்டை பொறுத்து நைட்ரஜன் வாயுவை நிரப்பிக் கொள்வது உங்கள் சாய்ஸ்.

 
Most Read Articles

English summary
Filling Nitrogen In Tyres - Pros and Cons.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X