டயர்கள் பத்தி இனி டவுட்டே வரக் கூடாது... ஆமா, சொல்லிபுட்டேன்!!

கார்களின் பாதுகாப்பிற்கும், மைலேஜுக்கும் டயர்களின் பங்கு இன்றியமையாதது. கார்களின் பிற பாகங்களை விட டயர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டியது அவசியம். சரியான பராமரிப்பு, காரை ஓட்டும் விதம் போன்றவற்றை பொறுத்து டயர்களின் ஆயுட்காலமும் அதிகரிக்கிறது.

இந்த நிலையில், டயர்களை எப்போது மாற்றுவது, டயர்களை சுழற்சி முறையில் மாற்றுவது உள்ளிட்ட டயர் பற்றி அடிக்கடி எழும் சில சந்தேகங்களுக்கு விடைதரும் வகையில் இந்த பகுதியை வழங்குகிறோம். டயர் பற்றி ஏற்கனவே முழுத் தகவல்களை ஏற்கனவே வழங்கியிருக்கும் நிலையில், கூடுதல் தகவல்கள் கொண்ட இந்த பகுதியும் உங்களுக்கு மிகவும் பயனுள்ளாதாக இருக்கும் என நம்புகிறோம்.

டயரை எப்போது மாற்ற வேண்டும்?

டயரை எப்போது மாற்ற வேண்டும்?

கார் டயரின் பக்கவாட்டில் தடிமனான கோடு கொடுக்கப்பட்டிருக்கும். விலை குறைந்த டயர்களில் கூட இந்த கோடு இருக்கும். இந்த கோடு வரை டயர் தேய்ந்து விடுவதற்கு முன்பாக மாற்றுவது நல்லது. மேலும், புதிய டயரை மாற்றும்போது டியூப்பையும் மாற்றிவிடுவது நல்லது.

மாற்று ரகம் கொண்ட டயர்களை போடலாமா?

மாற்று ரகம் கொண்ட டயர்களை போடலாமா?

ஒவ்வொரு டயரும் வெவ்வேறு நிலைகளில் வைத்து தயாரிக்கப்படுவதுடன் கட்டுமானமும் மாறுபடுகிறது. எனவே, டயரின் அளவு, பிராண்டு ஆகியவை ஒன்றாக இருப்பது மிக அவசியம். இதேபோன்று, ரேடியல் டயரையும், சாதாரண பயாஸ் டயரையும் மாற்றிப் போடுவதும் தவறு. காரின் கையாளுமை மற்றும் நிலைத்தன்மை சிறப்பாக இருக்காது.

ரேடியல், பயாஸ் டயர்களை எவ்வாறு போடுவது?

ரேடியல், பயாஸ் டயர்களை எவ்வாறு போடுவது?

ரேடியல் மற்றும் பயாஸ் டயர்களை ஒருவேளை பயன்படுத்தும் நிலை வந்தால், பின்புறம் ரேடியல் டயர்களையும், முன்புறம் பயாஸ் டயர்களையும் பொருத்த வேண்டும். ஒரே பக்கத்தில் மாற்றிப்போடக் கூடாது.

வேகத்தரம் அவசியமா?

வேகத்தரம் அவசியமா?

கண்டிப்பாக... குறைந்த வேக தரம் கொண்ட டயர்களை பயன்படுத்தக்கூடாது. காரின் வேகத்துக்கு ஏற்ப பரிந்துரைக்கப்பட்ட வேக தரம் கொண்ட டயர்களையோ அல்லது அதைவிட அதிக வேக தரம் கொண்ட டயர்களையோ பயன்படுத்தலாம்.

வெவ்வேறு அளவு டயர்களை பொருத்தலாமா?

வெவ்வேறு அளவு டயர்களை பொருத்தலாமா?

கையில் இருக்கிறதே என்று சிலர் வெவ்வேறு அளவு கொண்ட டயர்களை பயன்படுத்துகின்றனர். இது முற்றிலும் தவறானது. மேலும், காருக்கு பரிந்துரைக்கப்பட்ட அளவை விட குறைந்த எடை தாங்கும் திறன் கொண்ட டயர்கள் மற்றும் சரியான அளவு கொண்ட டயர்களையே பயன்படுத்த வேண்டும். மேலும், டயர் மாற்றும்போது முன்பு போடப்பட்டிருக்கும் டயரின் அளவு மற்றும் இதர விபரங்களை குறித்துக் கொண்டு அதற்கு ஏற்ப தேர்வு செய்யுங்கள்.

எப்படி பொருத்துவது?

எப்படி பொருத்துவது?

4 டயர்களையும் மாற்ற முடியாத சூழலில் இரண்டு டயர்களை மட்டும் வாங்கும்போது அதனை பின்பக்கத்தில் மட்டுமே பொருத்த வேண்டும். காருக்கு அதிக நிலைத்தன்மை மற்றும் சிறப்பான கையாளுமையை கொடுக்கும்.

ட்யூப்லெஸ் டயரின் சாதகங்கள் என்ன?

ட்யூப்லெஸ் டயரின் சாதகங்கள் என்ன?

  1. பஞ்சர் ஆனால் உடனே காற்று இறங்காது.
  2. அதிர்வுகள் குறைவு என்பதால் சொகுசான பயணம்.
  3. டியூப் இல்லாததால் டயரின் எடை குறைவு என்பதால் அதிக மைலேஜ் தரும்.
  4. உராய்வினால் டயருக்கும், டியூபுக்கும் இடையில் வெப்ப நிலை குறைவு என்பதால் டயர் ஆயுள் அதிகம்
டியூப்லெஸ் டயர் பராமரிப்பு

டியூப்லெஸ் டயர் பராமரிப்பு

  1. டயரை கழற்றி மாட்டுவது தானியங்கி எந்திரங்கள் மூலம் செய்ய வேண்டும்.
  2. நன்கு அனுபவம் வாய்ந்த மெக்கானிக் மூலம் டயர் பஞ்சர் மற்றும் இதர பணிகளை செய்யவேண்டும்.
  3. சிறந்த ரிம் இருத்தல் அவசியம்.
டயரின் ஆயுட்காலத்தை அதிகரிக்கும் வழிகள்

டயரின் ஆயுட்காலத்தை அதிகரிக்கும் வழிகள்

தாறுமாறாகவும், அதிவேகத்திலும் ஓட்டுவதை தவிர்த்தல் அவசியம். அதிவேகத்தில் செல்லும்போது டயரில் அதிகப்படியான வெப்பம் உருவாகும். இதனால், டயரின் உறுதித்தன்மை குறைந்து ஆயுளும் சுருங்கிவிடும்.

வளைவுகளில் வேகமாக திரும்புவதையும், திடீரென காரை நிறுத்துவதையும் தவிர்க்க வேண்டும். கொஞ்சம் தூரம் அதிகம் என்றாலும் சிறந்த சாலைகளை தேர்ந்தெடுத்து செல்லுங்கள்.

 டயரை மாற்றிப் போடுவதற்கான ஐடியா

டயரை மாற்றிப் போடுவதற்கான ஐடியா

ஒவ்வொரு 5,000 கிமீ முதல் 8,000 கிமீ தூரத்திற்கு ஒருமுறை டயர்களை சுழற்சி முறையில் மாற்றிப்போடுவது நல்லது. இது டயரின் ஆயுட்காலத்தை அதிகரிக்கும். அடுத்தடுத்த ஸ்லைடரில் அதற்கான வழிமுறைகள்.

 ப்ரன்ட் வீல் டிரைவ்

ப்ரன்ட் வீல் டிரைவ்

ஸ்டெப்னி இல்லாத போது பின்புற டயர்களை குறுக்குவாட்டில் முன்புறத்திற்கு மாற்ற வேண்டும். முன்புற டயர்களை அப்படியே நேராக பின்புறத்திற்கு மாற்றிப் போடுங்கள்.

ரியர் வீல் டிரைவ்

ரியர் வீல் டிரைவ்

ஸ்டெப்னி இல்லாதபோது ரியர் வீல் டிரைவ் கொண்ட கார்களில் பின்புற டயர்களை அப்படியே நேராக முன்புறத்திற்கு மாற்ற வேண்டும். முன்புற டயர்களை குறுக்குவாட்டில் நேரெதிர் திசையில் பின்புறத்திற்கு மாற்றுங்கள். ஆல்வீல் அல்லது 4 வீல் டிரைவ் மாடல்களுக்கும் இதே முறையை பின்பற்றவும்.

 ப்ரன்ட் வீல் டிரைவ்

ப்ரன்ட் வீல் டிரைவ்

ஸ்டெப்னி கையில் இருந்தால் இந்த முறையை பின்பற்றுங்கள். ஸ்டெப்னியை வலது பக்கம் முன்புறத்தில் மாற்றவும். இடது புற பின்பக்க டயரை ஸ்டெப்னியாக்கிவிடுங்கள். முன்புற டயர்களை அப்படியே நேராக பின்புறத்திற்கு மாற்றிவிடுங்கள். வலது பக்க பின்புற டயரை இடது பக்கம் முன்பக்க டயராக பொருத்தவும்.

 ரியர் வீல் டிரைவ்

ரியர் வீல் டிரைவ்

ரியர் வீல் டிரைவ் கொண்ட கார்களுக்கும், ஆல் வீல் அல்லது 4 வீல் டிரைவ் சிஸ்டம் கொண்ட கார்களுக்கும் ஒரே முறைதான். ஸ்டெப்னியை இங்கேயும் வலது புறத்தில் முன்பக்க டயராக பொருத்தவும். வலது புற பின்பக்க டயரை ஸ்டெப்னியாக்கவும். முன்பக்க டயர்களை அப்படியே நேராக பின்புறத்திற்கு மாற்றிவிடுங்கள். இப்போது இடது பக்கம் பின்புற டயரை நேராக முன்பக்கத்திற்கு மாற்றவும்.

கார் டயர்... சந்தேகங்களுக்கான தீர்வுகள்

கார் டயர்கள் பற்றி உங்களுக்கு இருந்து வந்த பல்வேறு சந்தேகங்கள் இந்த பதிவின் மூலம் நிவர்த்தியாகி இருக்கும் என நாங்கள் நம்புகிறோம். இந்த செய்தி உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்களுடைய நண்பர்களுக்கும், தெரிந்தவர்களுக்கும் பகிருங்கள். இதன் மூலம் அவர்களின் சந்தேகங்களும் நிவர்த்தியாகும்.

Most Read Articles

English summary
The tyres are the most important part of any car. They are only contact between the car and the road. All the power and torque at the end is transmitted to the wheeles. It is very necessary to have proper tread on your tyres and also ensure. Basic tyre care contains are given this article.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X