Just In
- 7 hrs ago
ராயல் என்பீல்டு நிறுவனத்திற்கு பெரிய மனசுங்க!! மீட்டியோர் 350 பைக்கில் உத்தரகாண்ட் செல்லும் பெங்களூர் பெண்!
- 11 hrs ago
விபத்தில் சிக்கிய ஆளில்லா இயங்கும் டெஸ்லா கார்!! இருவர் காருக்கு உள்ளேயே கருகி பலி!
- 12 hrs ago
100 கிமீ ரேஞ்ச்.. அசத்தலான புதிய நெக்ஸு எலெக்ட்ரிக் சைக்கிள் அறிமுகம்!
- 12 hrs ago
மாஸ்க் அணியவில்லை என்றால், என்ன இப்படி தூக்குறாங்க!! போலீஸாரிடம் சிக்கிய தம்பதியினர்...
Don't Miss!
- News
போலி செய்தி பரப்பினால்.. அது யாராக இருந்தாலும் நடவடிக்கை நிச்சயம்.. மகேஷ் குமார் அகர்வால் எச்சரிக்கை
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 20.04.2021: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு எதிர்பார்த்த வாய்ப்பு தேடி வரப்போகுது…
- Sports
தல... சின்ன தல... ஒவ்வொருத்தரா பெவிலியனுக்கு அனுப்பிய ராஜஸ்தான் பௌலர்... மிகச்சிறப்பு!
- Finance
இனி அமெரிக்க டாப் நிறுவனங்களில் ஈசியா முதலீடு செய்யலாம்.. பேடிஎம்-ன் புதிய சேவை..!
- Movies
காரக் குழம்பு சாப்பிட கனி வீட்டிற்கு சென்ற சிம்பு...வைரலாகும் ஃபோட்டோ
- Education
ரூ.75 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை வேண்டுமா? விண்ணப்பங்கள் வரவேற்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
காரில் இன்ஜின் எந்த பக்கம் அமைந்திருந்தால் பெஸ்ட்?
ஒவ்வொரு மாடல் காரிலும் ஒவ்வொரு பகுதியில் இன்ஜின் இருப்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள் ஏன் அப்படி வேறு வேறு இடங்களில் அமைக்கப்படுகிறது என்று உங்களுக்கு தெரியுமா?

கார் வாங்கும்போது இந்த காரில் இன்ஜின் முன்புறம் உள்ளது. இந்த காரில் இன்ஜின் பின்புறம் உள்ளது. இதில் இன்ஜின் காரின் நடுவில் உள்ளது என கூறவதை நாம் கேட்டிருப்போம்.

ஆனால் இன்ஜின் வேறு வேறு இடங்களில் இருப்பதனால் என்ன பலன் என்று பலருக்கு தெரியாது. காரின் ஒட்டுமொத்த பெர்பாமென்ஸ் இன்ஜின் இருக்கும் இடத்தை பொருத்துதான் இருக்கிறது.

பொதுவா இன்ஜின் இருக்கும் பகுதியில் காரின் எடை அதிகம் உள்ள பகுதியாக இருக்கும் அதனால் இன்ஜினை எந்த பக்கம் பொருத்துகின்றனர் என்று கார் தயாரிப்பு நிறுவனங்கள் கவனமாக இருக்கின்றனர்.

இந்த செய்தியில் காரின் எந்த பக்கம் இன்ஜின் இருப்பதால் கார் ஓட்டும் போது என்னென்ன மாற்றங்கள் நடக்கும் என கீழே பட்டியலிட்டுள்ளோம்.

பின் பக்கம் இன்ஜின்
பொதுவாக ரேஸ் கார்களுக்கு தான் இன்ஜின் பின் பக்கம் இருக்கும். ரியர் வீல் டிரைவில் தான் கார் சீக்கிரமாக வேகத்தை எடுக்கும். அதனால் ரேஸ் கார்கள் எல்லாம் ரியர் வில் டிரைவ் கொண்டது. அதனால் பின்பக்கம் இன்ஜின் பொருத்தப்படுகிறது.

மேலும் இன்ஜினிற்கு இழுவை திறனை விட ஊந்து சக்தி அதிகமாக இருக்கும் இதனால் காரின் இன்ஜினிற்கு முன் காரின் மற்ற எடை இருந்தால் ஈசியாக காரை தள்ளும். சில ஃபோர்ஸ்911 போன்ற சில சாதாரண காரிலும் பின்பக்க இன்ஜின் உள்ளது.

காரின் நடுவில் இன்ஜின்
காரின் நடுவில் இன்ஜின் இருக்காது. மொத்தமாக பின் பக்கம் இல்லாமல் சற்று முன்னே தள்ளி அமைக்கப்பட்டிருக்கும் காரையே நடுவில் இன்ஜின் உள்ள கார் என கூறப்படுகிறது.

சிலர் நடுவில் இன்ஜின் இருப்பதால் இதை சுலபமாக கையாளலாம் என தவறாக நினைத்து கொண்டிருக்கின்றனர். அந்த காரை வைத்திருப்பவர்கள் கூட அந்த வாதத்தையே முன் வைக்கின்றனர்.

ஆனால் இன்ஜின் நடுவில் உள்ள காரை கையாள்வது சிரமமானது. அதை விடமுக்கியமானது. நடுவில் இன்ஜின் உள்ள காரில் இட வசதிகள் குறைவாகதான் இருக்கும்.

மேலும் இந்த ரக கார்கள் வேகமாக செல்லும் போது டிரைவரின் கண்ட்ரோலை இழந்தால் சுலபமாக உருண்டு ரோட்டில் பல்டி அடிக்கும் வாய்ப்புகள் அதிகமாக இருக்கும். இது இயற்பியல் விதிப்படி சென்டர் ஆப் கிராவிட்டி குறைவாக உள்ள வாகனம்.

முன் பக்க இன்ஜின்
உலகில் உள்ள கார்களில் 98 சதவீதம் முன் பக்கம் இன்ஜின் உள்ள கார்கள் தான். முன்பக்கம் இன்ஜினை வைப்பது தான் கார்களுக்கு அதிக பலனை தருகிறது.

முன்பக்கம் இன்ஜின் இருந்தால் கார் விபத்தில் சிக்கும் சூழ்நிலையில் காரில் உள்ளவர்களுக்கு மற்ற பகுதியில் இன்ஜின் உள்ள காரில் உள்ளவர்களுக்கு ஏற்படும் பாதிப்பை விட இவர்களுக்கு ஏற்படும் பாதிப்பு குறைவாக இருக்கும்.

பல கார்கள் முன் பக்க வீல் டிரைவிலேயே வருவதால் காரின் இன்ஜின் முன் பக்கம் இருப்பது சற்று சவுகரியமான விஷயம். முன் பக்கம் இன்ஜின் இருந்து ரியர் வீல் டிரைவ் காராக இருந்தால் காரின் எடை பிரிவதால் பேலன்ஸ் செய்ய சுலபமாக இருக்கும்.

மேலும் முன் பக்கம் இன்ஜின் இருப்பது சென்டர் ஆப் கிராவிட்டியை அதிகப்படுத்தும் அதனால் கார் கண்ட்ரோலை இழக்கும் போது கார் விபத்திற்குள்ளாவதற்கான வாய்ப்பு குறைவு.

முன்னர் சொன்னது போல் கார் இன்ஜின்களுக்கு இழுவை திறன் குறைவு இதனால் நீங்கள் சற்று அதிகமாக ஆக்ஸிலரேட் செய்ய வேண்டியது இருக்கும்

எது பெஸ்ட்?
முன்பக்கம் இன்ஜின் உள்ள கார்கள் காரின் பயணிப்பவர்களுக்கு அதிக பாதுகாப்பு வழங்குகிறது. ஆனால் வேகமாக செல்ல முடியாது. பின் பக்கம் இன்ஜின் உள்ள கார் வேகமாக செல்ல முடியும். ஆனால் அதை கையாள்வது சற்று சிரமம் தான். நடுவில் இன்ஜின் உள்ள கார்களில் பேலன்ஸ் சரியில்லாமல் இருக்கும். ஆனால் மார்க்கெட்டில் இந்த மாடல் கார்களில் இன்ஜின் அடிப்பகுதியில் இருப்பதால் அதிக இட வசதிகள் இருக்கும்.

இவைகளை கணக்கில் கொண்டு நீங்கள் உங்கள் தேவைக்கு தகுந்த காரை தேர்ந்தெடுங்கள் ஒவ்வொரு காரும் ஒவ்வொரு விதமான வகையில் சிறப்பான கார்கள் தான்.