இனி தினசரி மாறும் பெட்ரோல் டீசல் விலையை நாம் தெரிந்துக்கொள்வது எப்படி...? முழுத் தகவல்கள்..!

Written By:

இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை தினசரி மாற்றியமைக்க முடிவுசெய்யப்பட்டுள்ளது. இந்த நடைமுறை வரும் 16ம் தேதி முதல் நாடுமுழுவதும் அமலுக்கு வருகிறது.

நாடு முழுவதும் இனி பெட்ரோல், டீசல் விலை தினமும் மாறும்..!

பெட்ரோல், டீசல் விலையை 15 நாட்களுக்கு ஒரு முறை இண்டியன் ஆயில் கார்ப்பிரேஷன், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் போன்ற எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி அமைத்து வருகின்றன.

நாடு முழுவதும் இனி பெட்ரோல், டீசல் விலை தினமும் மாறும்..!

ஆனால் பல நாடுகளில், இதற்கான விலை தினசரி மாற்றப்படுகின்றன. இதையே இந்தியாவும் பின்பற்ற வேண்டும் என மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிராதனை எண்ணெய் நிறுவனங்களின் அதிகாரிகள் நேற்று சந்தித்துப் பேசினர்.

நாடு முழுவதும் இனி பெட்ரோல், டீசல் விலை தினமும் மாறும்..!

ஏற்கனவே மே 1ம் தேதி முதல் புதுச்சேரி, சண்டிகர், ஜம்ஷெட்பூர், உதய்பூர், விசகாப்பட்டினம் ஆகிய 5 நகரங்களில் பெட்ரோல், டீசல் விலை திருத்தம் தினசரி மாற்றும் நடைமுறை சோதனை அடிப்படையில் அறிமுகமானது.

நாடு முழுவதும் இனி பெட்ரோல், டீசல் விலை தினமும் மாறும்..!

இதில் கிடைத்த வருவாய் உட்பட சில முடிவுகளை வைத்து, நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலையை தினசரி மாற்றியமைப்பதற்கு பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஒப்புதல் அளித்துள்ளார்.

நாடு முழுவதும் இனி பெட்ரோல், டீசல் விலை தினமும் மாறும்..!

பெட்ரோல், டீசல் பொருட்கள் மேல் வரும் 16ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் தினசரி விலை மாற்றம்

சில்லறை விற்பனையை அதிகமாக்கும், தற்போது விலைமதிப்பையே பிரதிபலிக்கும்.

நாடு முழுவதும் இனி பெட்ரோல், டீசல் விலை தினமும் மாறும்..!

மேலும் இந்த மாற்றம், பெட்ரோல் டீசலின் சில்லறை விற்பனையில் உள்ள ஏற்ற இறக்கத்தை குறைக்கும் என இந்திய ஆயில் கார்பிரேஷன் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

நாடு முழுவதும் இனி பெட்ரோல், டீசல் விலை தினமும் மாறும்..!

தினசரி அடிப்படையில் திருத்தப்பட்ட விலைகளை குறித்து வாடிக்கையாளர்களுக்கு தகவல் தெரிவிக்க பல வழிமுறைகளையும் எண்ணெய் நிறுவனங்கள் கையாள உள்ளன.

நாடு முழுவதும் இனி பெட்ரோல், டீசல் விலை தினமும் மாறும்..!

தினசரி மாற்றம் பெறும் டீசல் மற்றும் பெட்ரோல் விலை குறித்த தகவல்களை செயலிகள், எஸ்.எம்.எஸ், சில்லறை விற்பனை நிலையங்கள் மற்றும்,

நாளிதழ்கள் ஆகியவற்றின் மூலம் வாடிக்கையாளர்கள் தெரிந்துக்கொள்ள எண்ணெய் நிறுவனங்கள் வழிவகை செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
Petrol and Diesel Price will differ in Every Day. Petroleum Ministry says. Click for More...
Story first published: Friday, June 9, 2017, 12:59 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark