மார்க்கெட்டில் கிடைக்கும் ஹெல்மெட் வகைகளின் சாதக, பாதகங்கள்!

போக்குவரத்து நெரிசல் விவரிக்க முடியாத அளவு அதிகரித்து விட்டது. அதற்கு இணையாக விபத்துக்களின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது. குறிப்பாக, இருசக்கர வாகன விபத்துக்களின் எண்ணிக்கை கவலை தரும் விஷயமாக மாறியுள்ளது.

இந்த நிலையில், எதிர்பாராத தருணங்களில் இருசக்கர வாகனங்களில் செல்வோரின் உயிரை காப்பதில் ஹெல்மெட்டுகளின் பங்கு இன்றிமையாததாக உள்ளது. ஹெல்மெட் அணிந்து சென்றால் முழு பாதுகாப்பு கிடைக்குமா என்ற கேள்வியும் உடனே எழுகிறது.

ஏனெனில், தற்போது மார்க்கெட்டில் பல்வேறு வடிவங்களிலும், ரகத்திலும் ஹெல்மெட்டுகள் கிடைக்கின்றன. அவற்றில் எந்த ஹெல்மெட் பாதுகாப்பானதாக இருக்கும். ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வுகளிலும், புள்ளிவிபரங்களிலும் விபத்துக்களின்போது ஹெல்மெட் கழன்றுவிடுவதால் பலர் படுகாயமடைந்துவிடுவது உறுதியாகியுள்ளது.

இதற்கு சரியான டிசைன் கொண்ட ஹெல்மெட்டுகளை அவர்கள் அணியாதது தெரியவந்துள்ளது. இந்த நிலையில், தலைக்கு சரியான பிடிமானம் கொண்ட ஹெல்மெட்டுகளை அணிவதுதான் சிறந்த பாதுகாப்பை வழங்கும் என்பது தெளிவாகியுள்ளது. தற்போது மார்க்கெட்டில் கிடைக்கும் ஹெல்மெட் டிசைன்கள் மற்றும் அதன் சாதக, பாதகங்களை ஸ்லைடரில் காணலாம்.

குழப்பம்

குழப்பம்

ஹெல்மெட்டுகளை வாங்கும்போது, பல வகைகளை கடைகளில் காட்டுகின்றனர். அதில், எந்த ஹெல்மெட் சிறந்ததாக இருக்கும் என்பதில் குழப்பம் ஏற்படும். சிறந்தது எது என்பதை அலசும் விதமாக இந்த செய்தியை அடுத்தடுத்த ஸ்லைடுகளில் வழங்கியுள்ளோம்.

 1. ஹெல்மெட் வகைகள்

1. ஹெல்மெட் வகைகள்

பல்வேறு டிசைன்களில் ஹெல்மெட்டுகளில் கிடைத்தாலும், முகத்தை மூடாமல் தலையில் மட்டும் உட்காரும் ஓபன் ஸ்டைல், ஹெல்மெட்டின் முன்பக்கத்தை மடக்கி விரிக்கும் வசதி கொண்ட ஃபிலிப் மாடலிலும், தலையையும், முகத்தையும் முழுவதுமாக மூடும் வசதி கொண்ட ஃபுல் ஃபேஸ் ஹெல்மெட்டுகளும் மூன்று முதன்மையான ரகங்களில் கிடைக்கின்றன.

2. ஓபன் ஃபேஸ் ஹெல்மெட்

2. ஓபன் ஃபேஸ் ஹெல்மெட்

பிற மாடல்களைவிட காற்றோட்டம் அதிகம் கொண்டதாக இருப்பதால் சிலர் இதனை விரும்புகின்றனர். கழற்றி, மாட்டுவதும் எளிது. மேலும், சாலையை தெளிவாக பார்த்து ஓட்டுவதற்கும் சிறப்பானதாக கருதுகின்றனர். ஸ்டைலாகவும் சிலர் கருதுகின்றனர். ஆனால், இந்த சவுகரியமெல்லாம் கீழே விழும்போது கிடைக்காது. இது பாதுகாப்பு குறைவானதாகவே கூறலாம்.

 3.ஃபிலிப் ஹெல்மெட்

3.ஃபிலிப் ஹெல்மெட்

முகத்தை மூடும் பகுதியை திறந்து மூடும் வசதியுடன் கிடைக்கும் இந்த ஹெல்மெட்டுகள் இளைஞர்களிடையே அதிக வரவேற்பு இருக்கிறது. பார்க்க கவர்ச்சியாக இருப்பதுடன், சிக்னலில் நிற்கும்போது திறந்து வைத்துக் கொள்ளலாம். அதேநேரத்தில், இந்த வகை ஹெல்மெட்டுகள் கீழே விழும்போது தானாக திறந்து விடும் ஆபத்து இருப்பதாக எச்சரிக்கின்றனர். இதனால், முகத்தில் காயம் ஏற்பட வாய்ப்பு அதிகம்.

4. ஃபுல் ஃபேஸ் ஹெல்மெட்

4. ஃபுல் ஃபேஸ் ஹெல்மெட்

பிற ஹெல்மெட் மாடல்களைவிட அதிக பாதுகாப்பு கொண்டதாக தலையையும், முகத்தையும் முழுவதுமாக மூடி மறைக்கும் ஃபுல் ஃபேஸ் ஹெல்மெட்டுகள் இருக்கின்றன. தலை, கழுத்து வரை அதிக பாதுகாப்பை வழங்குவதோடு, டிரைவிங்கின்போது தூசி, சிறு கற்கள், பூச்சிகள் போன்றவற்றிலிருந்து கண்களுக்கு முழு பாதுகாப்பை வழங்கும். மேலும், குளிர்ச்சியான சீதோஷ்ண நிலைகளிலும் இவை சிறப்பான பயன் தருகின்றன.

 5. பாதிப்பு

5. பாதிப்பு

அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின்படி, தாடைப் பகுதியில் அதிக பாதிப்பு ஏற்படுவது கண்டறியப்பட்டுள்ளது. எனவே, ஃபுல் ஃபேஸ் ஹெல்மெட்டுகள் அதிக பயன்தருவதாக தெரிவிக்கப்படுகிறது.

6. ஃபுல் ஃபேஸ் ஹெல்மெட் பாதகங்கள்

6. ஃபுல் ஃபேஸ் ஹெல்மெட் பாதகங்கள்

சென்னை போன்ற நகரங்களில் கோடை காலங்களில் ஹெல்மெட் பயன்படுத்தும்போது அதிக அசகவுரியங்கள் ஏற்படுகின்றன. வியர்வையில் தலை நனைந்து போய் நம்மை சோர்வை ஏற்படுத்துகின்றன. பனிக்காலங்களில் மூச்சுக் காற்று மூலம் புகை படர்ந்து பார்வையை பாதிக்கும். இதற்கு ஷேவிங் க்ரீம் அல்லது ஷாம்பூவை உள் பக்கம் தடவி துடைப்பது ஒரு உபாயமாக கூறலாம். இதன்மூலம், புகை போன்று படர்வது தவிர்க்கப்படும்.

 7. எது சிறந்தது?

7. எது சிறந்தது?

அனைத்து விதத்திலும் ஹெல்மெட் அணியும்போது பாதுகாப்புக்குத்தான் அதிக முன்னுரிமை கொடுக்க முடியும். எனவே, ஃபுல் ஃபேஸ் ஹெல்மெட்டுகள்தான் சிறந்ததாக கருதப்படுகிறது. மேலும், தலைக்கு சரியான அளவில் அதிக பிடிமானம் கொண்டதாகவும், காற்றோட்டத்திற்கு போதிய வசதிகள் கொண்டதாக கிடைக்கும் ஃபுல்ஃபேஸ் ஹெல்மெட்டுகளை வாங்கி பயன்படுத்துவதே சாலச் சிறந்தது.

ஹெல்மெட் அவசியத்தை உணர்த்தும் வீடியோ.

 
Most Read Articles

English summary
Helmets today are mandatory in most states in the country and with good reason. Proper usage of a helmet can save your life in an unforeseeable incident. In this article we will bring to you the advantages of a full-face helmet in comparison to the other styles available, but not before we tell you that wearing a helmet is of no use if you haven’t strapped it on tightly.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Drivespark sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Drivespark website. However, you can change your cookie settings at any time. Learn more