நில், கவனி, செல்... சாலை குறியீடுகள் பற்றிய விபரம்

சாலையில் செல்வோருக்கு உதவவும், பாதுகாப்பையும் கருதி சாலையில் எச்சரிக்கை குறியீடுகள் வைக்கப்படுகின்றன.

சாலை குறியீடுகள் மூன்று வகையாக பிரிக்கப்பட்டுள்ளன. அவை, கட்டாய குறியீடுகள், எச்சரிக்கை குறியீடுகள் மற்றும் தகவல் குறியீடுகளாக அழைக்கப்படுகின்றன. இதில், முதலாவதாக கருதப்படும் கட்டாயக் குறியீடுகளையும், அதன் விபரத்தையும் ஸ்லைடரில் காணலாம்.

நில்

நில்

வாகனம் அல்லது பாதசாரிகளை நிற்பதற்கு அறிவுறுத்தும் குறியீடு. சில சமயம் போக்குவரத்து போலீசாரும் கையால் இந்த பலகையுடன் சமிக்ஞை காண்பிப்பதும் வழக்கம்.

 வாகனங்களுக்கு தடை

வாகனங்களுக்கு தடை

மோட்டார் வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை என்பதை குறிக்கிறது.

ஒரு வழிப்பாதை

ஒரு வழிப்பாதை

ஒருவழிப் பாதை - இடது புற சாலையில் செல்லும் வாகனங்களுக்கு மட்டும்.

இதுவும் ஒருவழிப்பாதைதான்

இதுவும் ஒருவழிப்பாதைதான்

இடது பக்க தடத்தில் வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை என்பதையும், வலது பக்க தடத்தில் மட்டும் வாகனங்கள் வருவதற்கு அனுமதி உண்டு என்பதையும் குறிக்கிறது.

தடை

தடை

அனைத்து ரக வாகனங்களும் செல்ல தடை விதிக்கப்பட்ட சாலை.

டிரக்குக்கு தடை

டிரக்குக்கு தடை

டிரக்குகளுக்கு மட்டும் தடைவிதிக்கப்பட்ட சாலை.

வண்டிகளுக்கு தடை

வண்டிகளுக்கு தடை

மாட்டு வண்டிகள் மற்றும் கையால் இழுத்துச் செல்லப்படும் வண்டிகளுக்கு தடைவிதிக்கப்பட்ட சாலை.

குதிரை வண்டிக்கு தடை

குதிரை வண்டிக்கு தடை

குதிரை வண்டி செல்ல தடைவிதிக்கப்பட்ட சாலை.

சைக்கிளுக்கும் தடை

சைக்கிளுக்கும் தடை

சைக்கிள் செல்ல தடைவிதிக்கப்பட்ட சாலை.

பாதசாரிகளுக்கு தடை

பாதசாரிகளுக்கு தடை

பாதசாரிகள் செல்ல தடைவிதிக்கப்பட்ட சாலை

வலது பக்கம் தடை

வலது பக்கம் தடை

வலது பக்கம் திரும்புவதற்கு அனுமதி இல்லை.

இடது பக்கம் தடை

இடது பக்கம் தடை

இடது பக்க திரும்புவதற்கு அனுமதி இல்லை.

யு- டர்ன் போடக்கூடாது

யு- டர்ன் போடக்கூடாது

இந்த இடத்தில் யு- டர்ன் போட்டு வாகனத்தை திருப்பக்கூடாது.

முந்துவதற்கு தடை

முந்துவதற்கு தடை

இந்த பகுதியில் முன்னால் செல்லும் வாகனத்தை முந்துவதற்கு தடை உள்ள பகுதி என்பதை குறிக்கிறது.

நோ ஹார்ன்

நோ ஹார்ன்

ஒலிப்பான் பயன்படுத்த தடை உள்ள பகுதி.

நோ பார்க்கிங்

நோ பார்க்கிங்

இந்த போர்டை பார்த்தால் பலருக்கு எரிச்சல் வரும். ஆம், காரை இந்த இடத்தில் நிறுத்தக்கூடாது என்பதை குறிக்கிறது.

 நிற்க கூடாது

நிற்க கூடாது

இந்த குறியீட்டு பலகை வைக்கப்பட்டிருக்கும் பகுதியில் அல்லது சாலையில் காரை நிறுத்துவதற்கும், நிற்பதற்கும் அனுமதி இல்லை என்பதை குறிக்கிறது.

வேக வரம்பு

வேக வரம்பு

வேகக்கட்டுப்பாடு நிர்ணயிக்கப்பட்ட சாலை என்பதை குறிக்கிறது. சாலையில் 50 கிமீ வேகத்திற்கு மிகாமல் செல்ல வேண்டும் என்ற வரும்பு உள்ள பகுதியாக குறிக்கிறது.

 இடது பக்கம் திரும்புக

இடது பக்கம் திரும்புக

கட்டாயம் இடது பக்கம் திரும்ப வேண்டும் என்பதை அறிவுறுத்தும் குறியீடு.

 வலது பக்கம் திரும்புக

வலது பக்கம் திரும்புக

கட்டாயம் வலது பக்கம் திரும்ப வேண்டும் என்பதை தெரிவிக்கிறது.

எல்லை முடிவு

எல்லை முடிவு

கட்டுப்பாட்டு எல்லை முடிவுற்றதை காட்டும் குறியீடு.

 
Most Read Articles

English summary
Signs form a vital and integral part of the trafficking system for the safety of the road users. As per IRC (Indian Roads Congress) Road Signs are for indications on the road the road signs are categorized into 3 types. Here are given details of Mandatory road signs.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X