என் பணம்... என் உரிமை... பெட்ரோல் பங்குகளின் விதிமீறல்களுக்கு எதிராக வெடிக்குமா புரட்சிப் போராட்டம்

By: Gopi

பெட்ரோல் பங்குகளில் எரிபொருளைத் தவிர பிறசேவைகளை இலவசமாக்கினால் எப்படியிருக்கும்?

அதாவது கழிப்பறை வசதி, குடிநீர் வசதி, காற்று நிரப்புதல் உள்ளிட்டவை தாராளமாகவும், இலவசமாகவும் கிடைத்தால் நல்லதுதானே. ஆனால், பெரும்பாலான பெட்ரோல் பங்க்குகளில் எங்கே இந்த வசதிகள் எல்லாம் இருக்கின்றன? அதிலும், 200 ரூபாய்க்கு பெட்ரோல் போட்டுவிட்டு காற்று நிரப்பச் சென்றால் அதற்கும் காசு கேட்கிறார்கள் என்பதுதானே நம்முடைய ஆதங்கம். சில பங்க்குகளில் காற்று நிரப்பும் வசதியே இல்லை. இருந்தாலும் பழுதாகிக் கிடக்கிறது.

Petorl Pump

இதையெல்லாம் யாரிடம் போய் சொல்வது? எல்லாம் தலையெழுத்து என்று அலுத்துக் கொள்ளாதீர்கள். பெட்ரோல் பங்க்குளில் இலவசமாக காற்று நிரப்பப்பட வேண்டும். கழிப்பறை வசதி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். குடிநீர் வழங்க வேண்டும் என்பது கட்டாய விதி.

அவை உங்களுக்குக் கிடைக்க வேண்டிய தார்மீக உரிமை. அந்த உரிமை மறுக்கப்பட்டால், துணிந்து எதிர்க்கவும், கேள்வி எழுப்பவும் உங்களுக்கு வாய்ப்பு உள்ளது.

பெட்ரோல் பங்க்குகளை வைத்திருப்பவர்கள் அங்கு சில அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என்பது கட்டாயம் பின்பற்ற வேண்டிய விதிகளில் ஒன்று.

அவ்வாறு ஒரு பெட்ரோல் பங்க்கில் எந்தெந்த வசதிகளெல்லாம் கண்டிப்பாக இருக்க வேண்டும்? என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

காற்று நிரப்பும் வசதி.

தரமான பொருள்கள், சரியான விலையில் விநியோகிக்க வேண்டும்.

வேலை நேரம் மற்றும் விடுமுறை குறித்த அறிவிப்பை வாடிக்கையாளர்கள் பார்வைக்கு வைப்பது முக்கியம்.

சுகாதாரமான கழிப்பறை வசதி.

முதலுதவி வசதிகள்.

தொலைபேசி வசதி.

வாடிக்கையாளர்கள், தங்களது கருத்துகளைத் தெரிவிப்பதற்காக பிரத்யேக ஏடுகள் பராமரிக்க வேண்டும்.

கழிப்பறை பயன்பாட்டில் இருக்க வேண்டும்.

குடிநீர் வசதி.

பணியாற்றும் ஊழியர்களுக்கான பாதுகாப்பு சாதனங்கள் இருக்க வேண்டும்.

மேற்கண்ட முக்கிய அம்சங்கள் உள்பட பல்வேறு விதிகள் பெட்ரோல் பங்க்குளுக்கு விதிக்கப்பட்டுள்ளன.

அவற்றை மீறினால் முதல் முறை 15 நாள்களும், இரண்டாம் 30 நாள்களும் விற்பனையை நிறுத்தி வைக்க முடியும். தொடர்ந்து விதி மீறல் நடைபெறும் பட்சத்தில், பெட்ரோல் பங்க் உரிமையாளரின் விநியோக உரிமையை ரத்து செய்யவும் வழி வகை உள்ளது.

எனவே, பெட்ரோல் பங்க் உள்பட சமூகத்தின் அனைத்து இடங்களிலும் உங்கள் உரிமையை எதற்காகவும் விட்டுக் கொடுக்காதீர்கள்...

English summary
பெட்ரோல் பங்குகளில் இந்த இலவச சேவைகளை தர மறுத்தால்... ?

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark