கார் ஓட்டுநர்கள் பலர் இந்த தப்ப பண்ணிருக்காங்க! இரண்டு லைசென்ஸ் வைத்திருப்பது தப்பு! இப்பவே ஒன்னா மாத்திடுங்க!

ஒரே நபர் இரண்டு ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பது இந்தியாவில் சட்டப்படி குற்றம், பலர் இது தெரியாமல் ஒன்றிற்கும் மேற்பட்ட லைசென்ஸ்களை வாங்கி வைத்துள்ளனர். இப்படி அதிகமாக லைசென்ஸ் வைத்திருந்தால் என்ன பிரச்சனை வரும் இதற்கான தண்டனை என்ன? முழு விபரங்களை காணலாம் வாருங்கள்.

இந்தியாவில் பலர் பிழைப்பிற்காக ஒரு மாநிலம் விட்டு வேறு மாநிலத்திற்கு சென்று பணியாற்றுகிறார்கள். தமிழர்களைப் பொருத்தவரை, பெங்களூரு, மும்பை, டில்லி, கொல்கத்தா,ஐதராபாத் ஆகிய நகரங்களில் அதிகமாக பணியாற்றி வருகின்றனர்.இப்படியாக ஒரு மாநிலம் விட்டு வேறு மாநிலத்திற்குச் செல்லும் போது பலர் அந்த மாநிலத்தில் தங்களுக்கென ஒரு ஓட்டுநர் உரிமத்தை எடுத்துக்கொள்கிறார்கள். இவர்கள் சொந்த ஊரிலும் ஒரு ஓட்டுநர் உரிமம் வைத்திருக்கிறார்கள்.

கார் ஓட்டுநர்கள் பலர் இந்த தப்ப பண்ணிருக்காங்க! இரண்டு லைசென்ஸ் வைத்திருப்பது தப்பு! இப்பவே ஒன்னா மாத்திடுங்க!

பெரும்பாலும் வெளி மாநிலத்தில் டிரைவிங் பணிக்காகச் செல்பவர்கள் பலர் இப்படியாக இரண்டு ஓட்டுநர் உரிமத்தை வைத்திருக்கின்றனர். இது கடந்த 2019ம் ஆண்டு வரை அனுமதிக்கப்பட்ட ஒன்று தான் கிட்டத்தட்ட இந்தியாவில் டிரைவர்களாக பணியாற்றும் 25 சதவீதம் பேரிடம் இரண்டு டிரைவிங் லைசென்ஸ் இருப்பதாக ஒரு ஆய்வு சொல்கிறது. இதற்காக மத்திய அரசு கடந்த 2019ம்ஆண்டு ஒரு சட்டம் ஒன்றைக் கொண்டு வந்தது.

இனி இந்தியாவில் யாரும் 2 லைசென்ஸ் வைத்திருக்கக்கூடாது என்ற சட்டம் கொண்டு வரப்பட்டது. இந்தியாவில் எந்த மாநிலத்தில் டிரைவிங் லைசென்ஸ் எடுத்திருந்தாலும் சரி அது இந்தியா முழுவதும் வாகனம் ஓட்ட செல்லுபடியாகும். அது டூ-வீலர் லைசென்ஸாக இருந்தாலும் சரி 4-வீலர் லைசென்ஸாக இருந்தாலும் சரி, இதற்காக மத்திய அரசு ஒரு ஒருங்கிணைந்த தளம் ஒன்றை உருவாக்கியுள்ளது. பரிவாகன் என்ற தளத்தின் மூலம் இந்த தகவல்களைக் கையாண்டு வருகிறது.

இதற்காக அப்பொழுதுதே டிரைவிங் லைசென்ஸில் சிப் பொருத்தப்பட வேண்டும், அதில் முக்கியமான தகவல்கள் எல்லாம் இருக்க வேண்டும், உள்ளிட்ட ஏராளமான விஷயங்கள் இடம் பெறவேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இப்படியாக இன்று வழங்கப்படும் புதிய லைசென்ஸ் அல்லது புதுப்பிக்கப்படும் லைசென்ஸ்களில், லைசென்ஸ் வைத்திருப்பவரின் பெயர், முகவரி, அவரின் ரத்த வகை, முந்தைய டிராஃபிக் விதிமுறை மீறல் தகவல்கள், ஆகியவை பதிவாகியிருக்கும்.

இதை ஒரு போலீசார் சோதிக்க விரும்பினால் அவர் குறிப்பிட்ட நபரின் டிரைவிங் லைசென்ஸை அவர் வைத்திருக்கும் கருவியில் பொருத்தினாலே இந்த தகவல்கள் எல்லாம் தானாக வந்துவிடும். இதனால் இனி இரண்டு லைசென்ஸை ஒரு நபர் வைத்திருந்தால் அவர் போலியாக லைசென்ஸ் வைத்திருப்பதாகக் கருதப்படும். இப்படியாகப் போலி லைசென்ஸை எடுத்ததற்காக அவரை போலீசார் கைது செய்யவும் சட்டத்தில் இடம் இருக்கிறது.

தற்போது உங்களிடம் இரண்டு மாநிலங்களில் எடுக்கப்பட்ட லைசென்ஸ் இருக்கிறதா? ஒன்றும் கவலை வேண்டாம். நீங்கள் இதை பரிவாகன் தளத்தில் இந்த இரண்டு தளத்தையும் ஒன்றாக இணைக்கலாம். இதற்காக பரிவாகன் தளத்திற்குச் சென்று அதற்கான ஆப்ஷனில் இந்த லைசென்ஸை இணைப்பதற்காக ஆர்டிஓவில் புக் செய்யலாம். அவர் குறிப்பிட்ட நேரத்திற்கு அந்த இடத்திற்குச் சென்றால் உங்கள் இரண்டு லைசென்ஸ்களையும் ஒன்றாக இணைக்க முடியும்.

அதே போல சிலர் காருக்கு ஒரு லைசென்ஸ், டூ-வீலருக்கு ஒரு லைசென்ஸ் என இரண்டு விதமான லைசென்ஸ்களை வைத்திருப்பார்கள். காருக்கான லைசென்ஸை எடுக்கும் போதே டூவீலர் லைசென்ஸை சரண்டர் செய்தால் இரண்டும் ஒரே லைசென்ஸாக வந்திருக்கும். ஆனால் இதைச் செய்யாதவர்களும் பரிவாகன் தளத்திலேயே இதற்காக அப்ளை செய்ய முடியும். ஆனால் இந்த சேவை சில மாநிலங்களில் மட்டுமே வழங்கப்படும்.

Most Read Articles

மேலும்... #எப்படி #how to
English summary
Having double driving license is an offense in India
Story first published: Thursday, December 8, 2022, 16:27 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X