எலெக்ட்ரிக் காரை அதிக ரேஞ்ஜ் தரும் வாகனமாக மாற்றுவது எப்படி? எல்லாம் உங்க கையிலதான் இருக்கு! இதோ டிப்ஸ்!

எலெக்ட்ரிக் காரை அதிக ரேஞ்ஜ் மற்றும் திறன்மிக்க காராக மாற்றுவது எப்படி என்கிறத தகவலையே இந்த பதிவில் வழங்கியிருக்கின்றோம்.

எலெக்ட்ரிக் காரை அதிக ரேஞ்ஜ் தரும் காராக மாற்றுவது எப்படி? எல்லாம் உங்க கையிலதான் இருக்கு! இதோ உங்களுக்கான டிப்ஸ்!

இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்குவோரின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்திருக்கின்றது. 2020ம் ஆண்டில் மிகக் குறைவாக காணப்பட்ட மின் வாகன விற்பனை 2021ம் ஆண்டில் பல மடங்கு அதிகரித்திருக்கின்றது. பெட்ரோல், டீசல் விலை உயர்வில் இருந்து மக்களைக் காக்கும் விதமாக பேட்டரியால் வாகனங்கள் செயல்படுகின்றன. இதன் விளைவாகவே இந்த திடீர் விற்பனை உயர்வை அவை பெற்றிருக்கின்றன.

எலெக்ட்ரிக் காரை அதிக ரேஞ்ஜ் தரும் காராக மாற்றுவது எப்படி? எல்லாம் உங்க கையிலதான் இருக்கு! இதோ உங்களுக்கான டிப்ஸ்!

மேலும், அவை சுற்று சூழலுக்கு நண்பனாகவும் செயல்படுகின்றன. இத்தகைய அதிக சிறப்புகள் கொண்ட எலெக்ட்ரிக் வாகனத்தை கூடுதல் லாபம் வழங்கக் கூடியதாக மாற்றுவது எப்படி என்பது பற்றிய தகவலையே இப்பதிவில் பார்க்க இருக்கின்றோம். அதாவது, உங்கள் மின்சார காரின் திறன் மற்றும் வரம்பை மேம்படுத்த எலெக்ட்ரிக் காரை எப்படி பயன்படுத்துவது என்கிற தகவலையே பார்க்க உள்ளோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

எலெக்ட்ரிக் காரை அதிக ரேஞ்ஜ் தரும் காராக மாற்றுவது எப்படி? எல்லாம் உங்க கையிலதான் இருக்கு! இதோ உங்களுக்கான டிப்ஸ்!

இரு காரணங்களுக்காக மின்சார கார்கள் நகர்ப்புறங்களில் மிக சிறப்பானதாக காட்சியளிக்கின்றன. அமைதியான இயக்கம், அதேநேரத்தில், தானியங்கி கார்களை போன்று நிதானமான இயக்கத்தை வழங்கும் வாகனங்களாக எலெக்ட்ரிக் கார்கள் இருக்கின்றன. இது, முதல் சிறப்பாகும். இரண்டாவது, பிரேக் மீளுருவாக்கத்தின் (regeneration) வாயிலாக பயணத்தின்போது தானே ரீசார்ஜ் செய்து கொள்ளும் வசதியை சில எலெக்ட்ரிக் கார்கள் பெற்றிருக்கின்றன. இதுபோன்ற காரணங்களினாலயே மின்சார கார்கள் நகர்ப்புற பகுதிகளில் மிக சிறப்பான வாகனமாக பார்க்கப்படுகின்றன.

எலெக்ட்ரிக் காரை அதிக ரேஞ்ஜ் தரும் காராக மாற்றுவது எப்படி? எல்லாம் உங்க கையிலதான் இருக்கு! இதோ உங்களுக்கான டிப்ஸ்!

மின்சார வாகனங்களை அதிக பயனுள்ளதாக மாற்ற டிராஃபிக்கில் கடைபிடிக்க வேண்டியவை:

பொதுவாக சிக்னலில் இருந்து புறப்படும்போது அதிக வேகத்தில் காரை இயக்கக் கூடாது என்றே பலர் கூற கேள்வி பட்டிருப்போம். ஆனால், இந்த விதி மின்சார வாகனங்களுக்கு பொருந்தாது. அதேநேரத்தில், மிக அதிக வேகத்திலும் செல்லக் கூடாது. கட்டுப்படுத்தக் கூடிய மற்றும் பாதுகாப்பான வேகத்தில் காரை இயக்க வேண்டும். இது தேவையற்ற மின் விரையமாதலைத் தவிர்க்க உதவும்.

எலெக்ட்ரிக் காரை அதிக ரேஞ்ஜ் தரும் காராக மாற்றுவது எப்படி? எல்லாம் உங்க கையிலதான் இருக்கு! இதோ உங்களுக்கான டிப்ஸ்!

மீளுருவாக்க அம்சத்தை அதிகளவில் பயன்படுத்தவும்:

தற்போது விற்பனைக்கு வரும் பெரும்பாலான எலெக்ட்ரிக் கார்கள் மீளுருவாக்கம் திறனுடன் விற்பனைக்கு வருகின்றன. இவை ஆஃப் த்ரோட்டில் வாகனம் இயங்கிக் கொண்டிருக்கும்போது காரின் பேட்டரியை குறிப்பிட்ட அளவில் மறு-சார்ஜ் செய்ய உதவும். இந்த வசதி உங்கள் காரில் இருக்குமானால் அதை அதிகளவில் பயன்படுத்துங்கள். இது கூடுதல் ரேஞ்ஜை பெற வழி வகுக்கும். ஆஃப் த்ரோட்டிலில் வாகனத்தை இயக்கும்போது அதிக சௌகரியமான இயக்க அனுபவத்தை பெற முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

எலெக்ட்ரிக் காரை அதிக ரேஞ்ஜ் தரும் காராக மாற்றுவது எப்படி? எல்லாம் உங்க கையிலதான் இருக்கு! இதோ உங்களுக்கான டிப்ஸ்!

குளிர் காலங்களில் ஹீட்டர்களை பயன்படுத்துவதை தவிர்க்கவும்:

கன்வென்ஷன் கார்கள் பலவற்றில் ஹீட்டர் கோர் வசதி வழங்கப்படுகின்றது. இது கேபினின் வெப்ப நிலையை அதிகரிக்கச் செய்ய உதவும். குளிர்காலங்களில் வசதியான பயணத்தை மேற்கொள்வதற்காக இந்த அம்சம் வழங்கப்படுகின்றது. இந்த அம்சம் கூலண்டை வெப்பப்படுத்தி கேபினை வெப்பமாக மாற்றுகின்றது. இந்த கூலண்ட் வெப்பமடைய வேண்டும் என்றால் என்ஜினில் இருந்து வெளியாகும் வெப்பம் அதிகரிக்க வேண்டும்.

எலெக்ட்ரிக் காரை அதிக ரேஞ்ஜ் தரும் காராக மாற்றுவது எப்படி? எல்லாம் உங்க கையிலதான் இருக்கு! இதோ உங்களுக்கான டிப்ஸ்!

ஆகையால், வழக்கமான வெப்பநிலையைக் காட்டிலும் கூடுதலாக வெப்பமாக்கப்படுகின்றது. இதனால், எஞ்ஜின் மட்டுமின்றி பேட்டரியும் கூடுதல் சூடாகும் நிலை உருவாகின்றது. இந்த நிலை பேட்டரியின் ஆயுட்காலம் மற்றும் ரேஞ்ஜ் திறனைக் கடுமையாக பாதிக்கும். ஆகையால், அதிகளவில் கார் ஹீட்டர்களை பயன்படுத்த வேண்டாம்.

எலெக்ட்ரிக் காரை அதிக ரேஞ்ஜ் தரும் காராக மாற்றுவது எப்படி? எல்லாம் உங்க கையிலதான் இருக்கு! இதோ உங்களுக்கான டிப்ஸ்!

ஏசி பயன்பாட்டின்போது அதிக கவனம் தேவை:

எலெக்ட்ரிக் காரின் பேட்டரியை பயன்படுத்தியே ஏசி இயங்குகின்றது. ஆகையால், நாம் ஏசி பயன்படுத்தும்போது அது மின்சார காரின் ரேஞ்ஜ் திறனை பாதிக்கச் செய்கின்றது. ஆகையால், ஏசியை தேவைக்கேற்ப பயன்படுத்துவது மிக சிறந்தது. இது எலெக்ட்ரிக் காரின் பேட்டரி திறன் விரையமாதலைத் தவிர்க்க உதவும். ஏசியை மட்டுமில்லைங்க தேவையில்லாமல் மின்சாரத்தை பயன்படுத்த பிற உபகரணங்களின் இயக்கத்தையும் குறைப்பது மிக சிறந்த பயனை அளிக்கும். ஒரு சில கிமீ கூடுதலாக செல்ல இவை வழிவகுக்கும்.

எலெக்ட்ரிக் காரை அதிக ரேஞ்ஜ் தரும் காராக மாற்றுவது எப்படி? எல்லாம் உங்க கையிலதான் இருக்கு! இதோ உங்களுக்கான டிப்ஸ்!

வீட்டில் உள்ள சார்ஜிங் கருவியை அடிக்கடி பயன்படுத்த தவறாதீர்கள்:

அதிக வேகத்தில் சார்ஜ் செய்யும் பொது மின் வாகன சார்ஜிங் மையங்கள் தற்போது நாட்டில் அதிகளவில் காட்சியளிக்க தொடங்கிவிட்டன. முக்கிய நகர்புற பகுதிகளில் மட்டுமே இவை சற்றே அதிகமாக காட்சியளிக்கின்றன. ஆகையால், மின்சார கார் பயனர்கள் தங்களின் வாகனத்தை சார்ஜ் செய்ய அதி-வேக சார்ஜிங் மையங்களை பயன்படுத்துகின்றனர்.

எலெக்ட்ரிக் காரை அதிக ரேஞ்ஜ் தரும் காராக மாற்றுவது எப்படி? எல்லாம் உங்க கையிலதான் இருக்கு! இதோ உங்களுக்கான டிப்ஸ்!

இதற்கு பதிலாக வீட்டில் சார்ஜ் செய்யும்படி வழங்கப்படும் சார்ஜிங் கருவியைக் கொண்டு அடிக்கடி பயன்படுத்துவதனால் பேட்டரியின் ஆயுட்காலத்தை நீட்டிக்க முடியும் என மின்சார வாகன வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். அதிலும், முழுமையாக பேட்டரி தீர்ந்து போகும் முன்னர் இதை செய்வதனால் பேட்டரியின் ஆயுட்காலத்தை பல மடங்கு நீட்டிக்க முடியும் என கூறப்படுகின்றது.

எலெக்ட்ரிக் காரை அதிக ரேஞ்ஜ் தரும் காராக மாற்றுவது எப்படி? எல்லாம் உங்க கையிலதான் இருக்கு! இதோ உங்களுக்கான டிப்ஸ்!

போக்குவரத்து நெரிசலை முடிந்தளவு தவிர்க்கவும்:

பெட்ரோல், டீசல் வாகனங்களை போல எலெக்ட்ரிக் வாகனங்களின் ரேஞ்ஜ் திறனும் போக்குவரத்து நெரிசலால் குறைகின்றது. ஆகையால், நீங்கள் தொலை தூரமோ அல்லது நகர்ப்புறங்களிலோ பயணத்தை மேற்கொள்ளும்போது போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகளை தவிர்ப்பது நல்லது. அதேநேரத்தில், குறைவான வேகத்தில் செல்லும் மின்சார கார்கள் அதிக ரேஞ்ஜை வழங்கும் என்பதால், மெதுவான வேகம் உங்கள் ரேஞ்ஜ் திறனை அதிகரிக்கச் செய்ய உதவும். மேலும், ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங் சிஸ்டம் சில வாட் மின்சார திறனை வழங்க உதவும். ஆனால், அடிக்கடி நிற்க வைப்பது இதை பாதிக்கவே செய்கின்றன.

எலெக்ட்ரிக் காரை அதிக ரேஞ்ஜ் தரும் காராக மாற்றுவது எப்படி? எல்லாம் உங்க கையிலதான் இருக்கு! இதோ உங்களுக்கான டிப்ஸ்!

க்ரூஸ் கன்ட்ரோலை பயன்படுத்தலாம்:

நெடுஞ்சாலைகளில் சீரான இயக்க வேகத்தை வழங்க க்ரூஸ் கன்ட்ரோல் உதவுகின்றது. இந்த நிலையில் செல்லும் போது மின்சார வாகனத்தின் திறன் லேசாக மேம்படும். குறிப்பாக, தொடர் சீரான வேகத்தில் இயங்குவதனால் மின்சாரத்தின் பயன்பாடும் தொடர்ச்சியாக சீராக இருக்கும். இதன் வாயிலாகவும் தேவையற்ற மின் விரையமாதலைத் தவிர்க்க முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

Most Read Articles
English summary
Here is some tips how to get most range from e car
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X