இமயமலையில் பைக் பயணம் எனும் கனவு... தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள்!!

By Saravana

இமாலய மலைகளில் பைக் பயணம் என்பது மோட்டார்சைக்கிள் வைத்திருப்பவர்களின் வாழ் நாள் கனவாகவே இருக்கிறது. பிற பயணங்களை போன்று அல்லாமல், இமாலய பைக் பயணம் திகிலையும், தித்திப்பான அனுபவத்தையும் ஒருங்கே வழங்கும் சாகச பயணமாக அமைகிறது. அதற்கு, முறையான திட்டமிடுதல் வேண்டும் என்பதுடன், உடல், மனம், பணம் ஒத்துழைப்பும் அவசியம்.

அப்படி, ஒவ்வொரு வாகன பிரியர்களின் கனவாக இருக்கும் இமாலய பைக் பயண திட்டத்தின்போது மனதில் வைக்க வேண்டிய விஷயங்களை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.

01. வழித் தடம்

01. வழித் தடம்

இமாலய பைக் பயணத்தை திட்டமிடும்போது முதலில் செய்ய வேண்டியது வழித்தடத்தை தேர்வு செய்வது. பல வழித்தடங்கள் இருப்பதால் உங்களுக்கு உகந்த அல்லது விரும்புகின்ற வழித்தடத்தை தேர்வு செய்து கொள்வது அவசியம். ஆன்லைனிலும், இதற்கான பயண ஏற்பாட்டாளர்களிடமும் விபரங்களை கேட்டு தெரிந்து கொள்ளலாம். எங்கு துவங்கி, எங்கு முடிப்பது என்று முடிவு செய்து கொண்டு பிற ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.

02. மோட்டார்சைக்கிள்

02. மோட்டார்சைக்கிள்

இமாலய பைக் பயணங்களை தாக்கு பிடிக்கும் அம்சங்கள் கொண்ட சரியான மோட்டார்சைக்கிளில் செல்வது அவசியம். மேலும், மோட்டார்சைக்கிளை முழுவதுமாக அனைத்து பிரச்னைகளையும் சரி செய்து எடுத்துச் செல்வதும் அவசியம்.

 03. ரைடிங் கியர்

03. ரைடிங் கியர்

இமாலயத்தில் பைக் பயணம் செல்வதற்கு பாதுகாப்பு உடைகள் மற்றும் உபகரணங்கள் அவசியம். ஹெல்மெட், வாட்டர் புரூப் ஷூ, உடைகள் அவசியம்.

04. உடைகள்

04. உடைகள்

குளிரைத் தாங்கக்கூடிய தன்மை கொண்ட உடைகளாக இருப்பதுடன், அவை இலகு எடை கொண்டதாக இருந்தால் நல்லது.

05. சான்ஸே இல்ல...

05. சான்ஸே இல்ல...

துணைக்கு ஒரு நண்பருடன் ஒரே மோட்டார்சைக்கிளில் செல்ல வேண்டும் என்ற நினைப்பை விட்டுவிடுங்கள். மோட்டார்சைக்கிளில் செல்லும்போது தனியாக செல்வதே நல்லது. பின்னால் ஒருவரை அமர வைத்து செல்வதை கண்டிப்பாக தவிர்ப்பது அவசியம். மேலும், உங்களது பொருட்களை வைப்பதற்கு போதிய இடமும் தேவைப்படும் என்பதால் உங்கள் பைக்கில் இன்னொருவர் என்ற பேச்சுக்கே இடமில்லை.

06. எடுத்துச் செல்வதற்கான பொருட்கள்

06. எடுத்துச் செல்வதற்கான பொருட்கள்

பெரும்பாலான பகல் நேரம் மோட்டார்சைக்கிளில் தொடர்ந்து பயணம் செய்ய வேண்டியிருக்கும் என்பதால், அதிக எடையுடைய பொருட்களையும், அதிக எண்ணிக்கையில் உடைகளையும் எடுத்துச் செல்வதை தவிர்க்கவும்.

07. பழுதுபார்க்கும் உபகரணங்கள்

07. பழுதுபார்க்கும் உபகரணங்கள்

சிறிய பழுதுகளை நீக்கிக் கொள்வதற்கு வசதியாக, வீல் ஸ்பேனர் ஸ்க்ரூ டிரைவர், பஞ்சர் கிட் ஆகியவற்றை தவிர்த்து கூடுதலாக டயர் மற்றும் ட்யூப் ஆகியவை கைவசம் இருத்தல் வேண்டும்.

08. பயண தூரம்

08. பயண தூரம்

அதிகபட்சமாக நாள் ஒன்றுக்கு 200 கிலோமீட்டர் தூரம் சராசரியாக ஓட்டுவதற்கு திட்டமிட்டுக் கொள்ளுங்கள். அடுத்து தங்கும் இடத்திற்கு தகுந்தாற்போல் இதில் சற்று மாறுபாடு இருக்கலாம். ஏனெனில், சில சமயம் மோசமான மற்றும் அபாயகரமான சாலைகளில் பயணிக்க வேண்டியிருக்கும் என்பதால், நிதானத்தை கடைபிடிப்பது அவசியம். அதிகாலையில் பயணத்தை துவங்கி, மாலையிலேயே அன்றைய பயணத்தை முடித்துக் கொள்ள வேண்டும். இரவு பயணத்தை அவசியம் தவிர்க்க வேண்டும்.

09. உடல்நல பாதிப்புகள்

09. உடல்நல பாதிப்புகள்

இமாலயத்தின் சில பகுதிகளில் ஆக்சிஜன் குறைவாக இருக்கும் என்பதால், தலைவலி, தலை சுற்றல், மயக்கம், களைப்பு போன்ற உடல்நல பாதிப்புகள் ஏற்படும். அப்படி உடல்நல பாதிப்புகள் ஏற்படும் பட்சத்தில், அதற்குண்டான மருந்துகளை மருத்துவரின் அறிவுரைப்படி பெற்று அதனை பயன்படுத்துவது நலம். அத்துடன், அங்கேயே நேரத்தை செலவிடாமல் உயரமான பகுதிகளைவிட்டு இறங்கிவிடுவதும் அவசியம்.

10. தங்குமிடம்...

10. தங்குமிடம்...

முன்கூட்டியே தங்குமிடங்களை முன்பதிவு செய்து செல்வதும் அவசியம். அங்கு சென்றுவிட்டு, பின்னர் இடத்தை தேடுவதும் வீண் தொந்தரவுகளை தரும். பயண ஏற்பாட்டாளர் வழியாக சென்றால் அவர்களே தங்குமிட வசதிகளையும் செய்து விடுகின்றனர்.

11. ஆவணங்கள்

11. ஆவணங்கள்

ஓட்டுனர் உரிமம், வாகனப் பதிவு சான்று, வாகனத்துக்கான காப்பீடு, எமிசன் சான்று போன்றவற்றின் ஒரிஜினல் சான்றுகளை எடுத்துச் செல்ல வேண்டும். ஜெராக்ஸ் காப்பியும் கையில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

 12. தகவல்கள்

12. தகவல்கள்

காலையில் கிளம்பும் இடத்தில் உள்ள ஓட்டல்கள் அல்லது அங்குள்ளவர்களிடம் வழியை தெளிவாக தெரிந்து கொண்டு செல்வதும் அவசியம். அந்த வழியில் உள்ள அபாயங்களையும் தெரிந்து கொண்டு செல்லவும்.

13. ஈரமான உடுப்புகள்

13. ஈரமான உடுப்புகள்

அணிந்து செல்லும் உடைகள், ஷூ போன்றவை மழை மற்றும் ஆற்றை கடக்கும்போது ஈரமாகிவிட்டால், உடனடியாக உலர்த்திக் கொண்டு செல்வதும் அவசியம். இரவில் தங்கும்போது அவற்றை உலர்த்தி வைத்துக் கொள்ளுங்கள்.

14. நீர்ச்சத்து குறைபாடு

14. நீர்ச்சத்து குறைபாடு

இமாலயத்தில் பயணிக்கும்போது உடலில் நீர்ச்சத்து குறைந்து அடிக்கடி தாகம் எடுக்கும். எனவே, போதிய அளவு தண்ணீர் பாட்டில்களை கையில் வைத்துச் செல்லுங்கள்.

15. இது முக்கியம் அமைச்சரே...

15. இது முக்கியம் அமைச்சரே...

எப்போதுமே நிதானத்தை கடைபிடிக்க வேண்டும். பாதுகாப்பாகவும், சீரான வேகத்தில் மோட்டார்சைக்கிளை ஓட்டுவது அவசியம்.

 16. கவனம்...

16. கவனம்...

மலையிலிருந்து பனிக்கட்டிகள் உருகி சாலையில் ஆறாக பெருக்கெடுத்து ஓடும் இடங்களை கவனமாக கடக்க வேண்டும். அதில், இருக்கும் பள்ளங்கள் தெரியாமலோ அல்லது நீரின் வேகம் அதிகமாக இருந்தாலோ கவனித்து செல்க.

17. மொபைல்போன் சிக்னல்

17. மொபைல்போன் சிக்னல்

இமாலயத்தில் பைக் பயணம் மேற்கொள்பவர்களுக்கு பெரும் பிரச்னை இதுதான். அவசரத்திற்கு கூட மொபைல்போன் உதவாது. பெரும்பாலான பகுதிகளில் சிக்னல் கிடைக்காது. எனவே, சிக்னல் கிடைக்கும் இடத்தில் இருந்து உங்களது வீட்டிற்கும், நண்பர்களுக்கும் தகவல்களை தெரிவித்துவிடுங்கள். மேலும், நீங்கள் இருக்கும் இடம், தங்க இருக்கும் ஓட்டல் போன்ற தகவல்களை அவ்வப்போது தெரிவிப்பது அவசியம்.

18. பெட்ரோல் நிலையங்கள்...

18. பெட்ரோல் நிலையங்கள்...

குறிப்பிட்ட தூரத்திற்கு பெட்ரோல் நிலையங்கள் அறவே இருக்காது. சில சமயம் 300 கிமீ தூரம் வரை பெட்ரோல் நிலையங்கள் இருக்காது. அதற்கு தக்கவாறு எரிபொருள் இருக்கிறது. கூடுதல் எரிபொருளுடன் செல்வதும் அவசியம்.

19. அவசர மருத்துவ சிகிச்சை...

19. அவசர மருத்துவ சிகிச்சை...

வழியில் உடல்நல குறைவு ஏற்பட்டால், உடனடி மருத்துவ சிகிச்சை கிடைப்பது கடினம். கிளம்பும்போதே வழியில் உள்ள மருத்துவமனைகள் அல்லது மருத்துவ உதவி மையங்கள் பற்றிய தகவல்களை தெரிந்துகொள்ளுங்கள். அத்துடன், உங்கள் உடல்நலம் நன்றாக இருந்தால் மட்டுமே இந்த பயணத்திற்கு திட்டமிடவேண்டும்.

20. கவனம்...

20. கவனம்...

இமாலயத்தில் பைக் பயணம் என்பது ஒரு த்ரில்லான அனுபவமாக, வாழ்க்கையின் ஏதோவொரு சாதனை சிகரத்தை தொட்டுவிட்ட உணர்வை வழங்கும் என்பது நிச்சயம். அதற்கு தகுந்தவாறு திட்டமிட்டு சென்றால், அது நிச்சயம் சிறப்பான அனுபவமாகவே அமையும்.

பயணம் சிறக்க வாழ்த்துகள்!

 
Most Read Articles

English summary
So, what do you need to know when you are planning such a trip on a motorcycle? Here are a few important things to keep in mind while planning a trip to Leh, or simply to the Himalayas:
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X