அசால்டா நினைக்காதீங்க இந்த கேப் மட்டும் இல்லேன்னா எவ்வளவு பிரச்சனைகள் வரும் தெரியுமா?

வாகன டயர்களில் ஏர் வால்வு பகுதியை மூடியிருக்கும் கவரின் தேவை குறித்து பலருக்கும் தெரியவில்லை. இது வெறும் அழகிற்காக மட்டுமல்ல இது டயரின் ஆயுளுக்கும் மிக முக்கியமானது, இது மட்டுமல்லாமல் டயர் எதிர்பாராத விதமாகச் சேதமடையும் வாய்ப்பையும் குறைக்கும் இது குறித்த விரிவான விபரங்களைக் காணலாம் வாருங்கள்.

இன்று பெரும்பாலான வாகன ஓட்டிகள் தங்கள் வாகனத்தின் டயர்களில் உள்ள ஏர் பிடிக்கும் வால்வு பகுதியில் இருக்கும் ஏர் வால்வு கவர் பாதி பேருக்கு இருக்காது. இந்த கவரை ஏர் பிடிக்கும் போது கழட்டும் பலர் பின்பு சரியாக மாட்ட மறந்துவிடுகின்றனர் அல்லது, சரியாக மாட்டாமல் விட்டு விடுகின்றனர். இதனால் கழட்டு விடுகிறது.

அசால்டா நினைக்காதீங்க இந்த கேப் மட்டும் இல்லேன்னா எவ்வளவு பிரச்சனைகள் வரும் தெரியுமா?

இதனால் ஊரில் ஓடும் பெரும்பாலான வானகங்களில் இந்த ஏர் வால்வு கவர் என்பதே இருக்காது. நேரடியாக ஏர் வால்வு மட்டும் தான் இருக்கும். இதற்கு முக்கியமான காரணம் இந்த ஏர் வால்வு கவரின் உண்மையான பயனை மக்கள் பலர் அறியாதது தான். பலர் இந்த ஏர் வால்வு கவர் இல்லை என்றாலும் வாகனத்திற்கு எதுவும் செய்யாது என்ற எண்ணத்தில் இருப்பதால் தான். இந்த ஏர் வால்வு கவரை பாதுகாப்பாக வைத்திருக்காமல் அசால்டாக இருக்கின்றனர்.

ஆனால் ஏர் வால்வு கவர் என்பது, வாகனத்தில் சும்மா கொடுக்கவில்லை அதற்கான காரணம் இருக்கிறது. இதன் முக்கியமான பணி ஏர் வால்வுக்குள் தூசு மற்றும் தும்பட்டைகள் உள்ளே நுழையாத படி பார்த்துக்கொள்ளும், அதே நேரம் ஏர் வால்வு பகுதி வழியாக டயர் உள்ளே உள்ள காற்று லீக் ஆனாலும் அந்த காற்றை வெளியேற விடாமல் தடுக்கும். இந்த இரண்டும் மிக முக்கியமான பணிகள் நாம் சாலையில் வாகனத்தை ஓட்டுகிறோம். சாலைக்கும் வாகனத்திற்கும் இருக்கும் ஒரே கனெக்ஷன் டயர் தான்.

இதனால் சாலையில் உள்ள தூசு, தும்பட்டைகள் எல்லாம் சாலைகளில் ஏர் வால்வில் சிக்கிக்கொள்ள வாய்ப்பு இருக்கிறது. இதனால் ஒரு டயருக்கு ஏர் வால்வு கவர் முக்கியம். இதன் விலை மிகவும் குறைவு தான். ஆனால் இதனால் கிடைக்கும் பலன் அதிகம். நீங்கள் உங்கள் வாகன டயரின் ஏர் வால்வு கேப்பை தவற விட்டிருந்தாலும் புதிய கேப் அருகில் உள்ள ஆட்டோமொபைல் ஸ்பேர் பார்ட்ஸ் கடைகளில் கிடைக்கும். இல்லை என்றால் ஆன்லைனில் கூட இது கிடைக்கிறது. அங்கிருந்து வாங்கி பொருத்திக்கொள்ளலாம்.

இது பிளாஸ்டிக் மற்றும் மெட்டல் ஆகிய இரண்டு வகைகளில் மார்கெட்டில் கிடைக்கிறது. மெட்டலை விட பிளாஸ்டிக் தான் சிறந்தது. மெட்டல் நாளாக நாளாகத் துருப் பிடிக்க வாய்ப்பு இருக்கிறது. அதே போல மெட்டல் கவரை கழட்டுவது கடினமாக இருக்கும். வாகனத்திற்கு ஏற் பிடிக்கும் நேரங்களில் எல்லாம் டயர்களை கழட்ட வேண்டும். அதற்கு இது சிரமமாக இருக்கும். அதனால் பிளாஸ்டிக் தான் சிறந்தது, டயர்களுக்கு இந்த கவரே போதுமானது தான்.

நீங்கள் பயணத்தில் இருக்கும் போது இந்த கவர் தொலைந்து விட்டால் இடையில் வாங்கி பொருத்துவது சிரமம் என்று எல்லாம் யோசிக்க வேண்டும். இந்த ஏர் வால்வு கேப் இல்லாமல் பயணிப்பது பெரிய ஆபத்து என்று எல்லாம் இல்லை ஆனால் ஒரு முன்னெச்சரிக்கையாக இதைச் செய்வது சிறந்தது தான் என்பதால் நீங்கள் குறிப்பிட்ட பயணத்தை முடிந்த பின்பு உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது இந்த கவரை வாங்கி பொருத்திக்கொள்வது சிறந்தது. இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.

Most Read Articles
English summary
How air value caps are important to tires
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X