புது கார் வாங்க போறீங்களா? கண்டிப்பா இத படிங்க...!

By Arun

ஒரு காலத்தில் புதிய கார் என்றால் ப்ரீமியர் பத்மினி மற்றும் ஹிந்துஸ்தான் அம்பாஸிடர் உள்ளிட்ட ஒரு சில கார்களை மட்டுமே நீங்கள் தேர்வு செய்ய முடியும். அதை விட்டால் வேறு கார்கள் கிடையாது. ஆனால் அந்த காலம் எல்லாம் மலையேறி விட்டது. தற்போது விதவிதமான பல புதிய கார்கள், நமக்கு அருகிலேயே உள்ள ஷோ ரூம்களில் கிடைக்கின்றன. அதாவது ஆப்ஷனே இல்லாமல் இருந்த காலம் போய், எந்த காரை தேர்வு செய்வது? என்பதில் குழப்பம் ஏற்படுத்தும் காலம் வந்து விட்டது. ஆனால் நீங்கள் குழம்ப வேண்டாம். புதிய காரை எப்படி தேர்வு செய்வது? என்பது பற்றி நாங்கள் உங்களுக்கு விளக்குகிறோம். அது பற்றிய விபரங்களை பின்வரும் ஸ்லைடர்களில் காணலாம்.

புது கார் வாங்க போறீங்களா? கண்டிப்பா இத படிங்க...!

ஆரம்பம் முதலே தெளிவு

கார் வாங்குவது என முடிவெடுத்து விட்டால் தொடக்கத்தில் இருந்தே தெளிவாக இருங்கள். ஏனெனில் நமக்கு அதிகம் எதுவும் தெரியாது என நினைத்துக்கொண்டு, கார் விற்பனை பிரதிநிதிகள் நம் மீது ஆதிக்கம் செலுத்த தொடங்கி விடக்கூடும். அதற்கும் இடம் கொடுக்காதீர்கள். தெளிவாக தயாராகி கொள்ளுங்கள். அப்போதுதான் கார் விற்பனை பிரதிநிதிகளிடம் உரிய விளக்கங்களை கேட்டு பெற முடியும். அவரை ஏமாற்ற முடியாது என்ற தோற்றத்தை கார் விற்பனை பிரதிநிதிகளிடமும் ஏற்படுத்தி விடலாம்.

புது கார் வாங்க போறீங்களா? கண்டிப்பா இத படிங்க...!

பட்ஜெட்

உங்கள் சூழ்நிலையை பொறுத்து பட்ஜெட் என்ன? என்பதை முடிவு செய்து கொள்ளுங்கள். பட்ஜெட்டை முடிவு செய்த பிறகே என்ன கார்? என்பதை பற்றியெல்லாம் யோசிக்க முடியும். நீங்கள் திட்டமிட்ட பட்ஜெட்டில் இருந்து நீங்கள் வாங்க முடிவு செய்த காரின் விலை ஒரு சிறிய தொகைக்கு மட்டும் முன்னும், பின்னும் வருமாறு பார்த்து கொள்ளுங்கள். அதை விட அதிகமாக சென்றுவிடக்கூடாது. ஏனென்றால் அதன்பின் சாலை வரி, இன்சூரன்ஸ் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் உள்ளன என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும்.

புது கார் வாங்க போறீங்களா? கண்டிப்பா இத படிங்க...!

பெட்ரோலா? டீசலா?

பெட்ரோல் மாடல் கார்களை விட டீசல் மாடல் கார்களின் விலை அதிகம் என்பதை எப்போதும் நினைவில் வைத்து கொள்ளுங்கள். உங்களின் தேவையை பொறுத்தே பெட்ரோல் காரா? அல்லது டீசல் காரா? என்பதை முடிவு செய்ய முடியும். பெட்ரோல் கார்களை விட டீசல் கார்கள் அதிக மைலேஜ் கொடுக்கும். பெட்ரோலை காட்டிலும் டீசலின் விலையும் குறைவு. எனவே தினசரி கார் பயன்படுத்தியாக வேண்டும், அதிக தூரம் கார் ஓட்டிச்செல்ல வேண்டும் என்பவர்கள் டீசல் கார்களை தேர்வு செய்யலாம். அப்படி எல்லாம் இல்லை, காரை அதிகம் பயன்படுத்த மாட்டேன் என்பவர்கள் பெட்ரோல் கார்களை தேர்வு செய்யலாம். ஆனால் டீசல் கார்களை காட்டிலும் பெட்ரோல் கார்களின் செயல்திறன் சிறப்பாக இருக்கும் என்பதே பரவலான கருத்தாக உள்ளது.

புது கார் வாங்க போறீங்களா? கண்டிப்பா இத படிங்க...!

எந்த கார் தேவை?

என்ன வகையான கார் தேவைப்படும்? என்பதை பற்றி முதலில் யோசித்து கொள்ளுங்கள். சிறிய குடும்பம் என்றால், டொயாட்டோ இன்னோவா போன்ற பெரிய எம்.யூ.வி.கார்கள் உங்களுக்கு தேவைப்படாது. எதிர்காலத்தில் குழந்தைகள் பிறந்தால், இதில் மாற்றம் ஏற்படலாம். எனவே எதிர்காலத்தில் உங்கள் தேவைகள் எப்படிப்பட்டதாக மாறும்? என்பதையும் உணர்ந்து கொண்டு முடிவெடுங்கள். என்ன கார்? என்பதை முடிவு செய்யும் முன் எதிர்காலம் குறித்தும் ஒரு முறைக்கு இரு முறை அனலைஸ் செய்து கொள்ளுங்கள்.

புது கார் வாங்க போறீங்களா? கண்டிப்பா இத படிங்க...!

அபாயங்களை உணருங்கள்

உற்பத்தி நிறுத்தப்படும் கார் மாடல்களை எதற்காகவும் தேர்வு செய்யாதீர்கள். ஏனென்றால் பின்னாளில் ஸ்பேர் பார்ட்ஸ் கிடைக்காமல் சிரமப்பட நேரிடலாம். அதுமட்டுமின்றி எந்த நிறுவனத்தின் காரை வாங்குவது என்பதிலும் கவனம் அவசியம். காரை விற்பனை செய்த சிறிது காலத்தில் மூடப்பட்ட நிறுவனங்களும் உள்ளன. எனவே நமது நாட்டின் சூழலுக்கு நம்பகமான நிறுவனத்தை தேர்வு செய்யுங்கள்.

புது கார் வாங்க போறீங்களா? கண்டிப்பா இத படிங்க...!

உங்களை நீங்களே கேட்க வேண்டிய கேள்விகள்

அதாவது கார் வாங்கும் முன் உங்களை நீங்களே ஒரு சில கேள்விகளை கேட்டு கொள்ள வேண்டும். அந்த கேள்விகளுக்கு எல்லாம் பதில் தெரிந்து கொண்டால், எளிதாக காரை தேர்வு செய்து விடலாம். எதற்காக அந்த காரை அதிகம் பயன்படுத்த போகிறோம்? அதிகம் ஓட்டுவது நகர்ப்புறத்திலா? அல்லது டிராபிக் குறைவான சாலைகளிலா? என்னென்ன வசதிகள் வேண்டும்? பாதுகாப்பு முக்கியமா? அதிக பவர் வேண்டுமா? பட்ஜெட் என்ன? காரை எங்கே பார்க் செய்ய போகிறோம்? கேரேஜ் உள்ளதா? அல்லது வீட்டிற்கு வெளியே தெருவில்தான் காரை பார்க் செய்ய வேண்டுமா? எந்த வகையான இன்சூரன்ஸ் பாலிஸி எடுக்கப்போகிறோம்? என்பது போன்ற கேள்விகளை உங்களுக்கு நீங்களே கேட்டு விடையை அறிந்து கொண்டால், நிச்சயம் தெளிவு பிறந்து விடும்.

புது கார் வாங்க போறீங்களா? கண்டிப்பா இத படிங்க...!

டீலர்களை அணுக எது சிறந்த நேரம்?

டீலர்கள் எப்போதும் சேல்ஸ் டார்க்கெட் வைத்தே பணியாற்றி வருகிறார்கள். இதனால் மாதத்தின் கடைசி வாரத்தில் அவர்களை அணுகுவது நல்லது. ஏனென்றால் அப்போதுதான் டார்க்கெட்டை எட்டுவதற்காக ஆக்ஸஸரீஸ், டிஸ்கவுண்ட் என உங்களுக்கு சலுகைகளை அள்ளி வீசுவார்கள். எனவே மாத கடைசியில் டீலர்களை அணுகுவதே, கார் வாங்க சிறந்த நேரமாக இருக்கும்.

புது கார் வாங்க போறீங்களா? கண்டிப்பா இத படிங்க...!

எச்சரிக்கை அவசியம்

அங்கீகரிக்கப்படாத டீலர்களிடம் கார் வாங்குவதை தவிர்த்து விடுங்கள். அவர்கள் சலுகைகளையும், விலை குறைப்புகளையும் செய்வார்கள். ஆனால் எதிர்காலத்தில் கார் மெயின்டனன்ஸில் பல பிரச்னைகளை நீங்கள் சந்திக்க நேரிடலாம். அது நீங்கள் பெற்ற சலுகைகளை விட உங்களுக்கு அதிக செலவை வைத்து விடும்.

புது கார் வாங்க போறீங்களா? கண்டிப்பா இத படிங்க...!

கறாராக எழுதி வாங்குங்கள்

ஆக்ஸஸரீஸ் தருகிறோம், டிஸ்கவுண்ட் தருகிறோம் என டீலர்கள் பேச்சிலேயே உங்களை மயக்குவார்கள். ஆனால் அவர்கள் சொல்வதை எல்லாம் அவர்களின் லெட்டர் பேடில் அவர்கள் கைப்பட எழுதி வாங்கி கொள்ளுங்கள். ஏனெனில் கடைசி நேரத்தில் அவர்கள் கை விரித்து விடுவதை தவிர்க்க இது உதவும்.

புது கார் வாங்க போறீங்களா? கண்டிப்பா இத படிங்க...!

பேரம் பேசுங்கள்

இவ்வளவு பெரிய இடத்தில் பேரம் பேசுவதா? என்றெல்லாம் தயக்கம் வேண்டாம். இது உங்கள் பணம். தயங்காமல் பேரம் பேசுங்கள். ஆனால் அந்த போராட்டத்திற்கு நீங்கள் சிறந்த முறையில் தயாராக வேண்டும். அதாவது நீங்கள் வாங்க நினைக்கும் காரின் மார்க்கெட் வேல்யூ குறித்து ஹோம் ஒர்க் செய்யுங்கள். அப்போதுதான் உங்களால் பேரம் பேச முடியும்.

புது கார் வாங்க போறீங்களா? கண்டிப்பா இத படிங்க...!

இன்டர்நெட்டை பயன்படுத்துங்கள்

எந்த டீலரிடம் கார் வாங்கலாம் என்பது தொடர்பான உதவிகளை பெற இன்டர்நெட்டை நாடுங்கள். ஒன்றுக்கும் மேற்பட்ட டீலர்களை பற்றி இன்டர்நெட்டில் தெரிந்து கொள்ளலாம். எந்த டீலரிடம் என்ன விலை? என்பது குறித்தும் அறிந்து கொள்ளலாம். அத்துடன் செல்போன் மூலமாக பல டீலர்களிடம் பேசவும் செய்யலாம்.

புது கார் வாங்க போறீங்களா? கண்டிப்பா இத படிங்க...!

ஒப்பந்தங்களில் கவனம் அவசியம்

ஒரு முறைக்கு இரு முறை கவனமாக படிக்காமல் எந்தவொரு ஒப்பந்தத்திலும் கையெழுத்து போடதீர்கள். நீங்கள் கையெழுத்து போட வேண்டியுள்ள ஒரு பகுதி உங்களுக்கு புரியாவிட்டால், எந்த காரணத்திற்காகவும் கையெழுத்து இடாதீர்கள். பொறுமையாக நேரம் எடுத்து, உரிய விளக்கங்களை பெற்ற பின்பு கையெழுத்து போடுங்கள். எதற்காகவும் கூச்சப்பட வேண்டாம்.

புது கார் வாங்க போறீங்களா? கண்டிப்பா இத படிங்க...!

டெஸ்ட் டிரைவ்

ஒருவரின் கருத்து அடிப்படையில் மட்டும் காரை தேர்வு செய்து விடாதீர்கள். டெஸ்ட் டிரைவ் செய்து பார்ப்பதுதான் முக்கியமானது. அதற்காக ஒரு கிலோ மீட்டர் மட்டும் ஓட்டி விட்டு ஒகே என சொல்லி விடாதீர்கள். வெறும் ஒரு கிலோ மீட்டரில் நீங்கள் எதையும் தெரிந்து கொள்ள முடியாது. விரிவாக காரை ஓட்டி பாருங்கள். அதாவது டிராபிக் நிறைந்த பகுதியிலும், டிராபிக் இல்லாத பகுதியிலும் நீண்ட நேரம் காரை செலுத்துங்கள். காரில் உள்ள ஆப்ஷன்களை எல்லாம் பயன்படுத்தி பாருங்கள். தெரிகிறதோ தெரியவில்லையோ அதைப்பற்றி எல்லாம் கார் விற்பனை பிரதிநிதியிடம் கேளுங்கள்.

புது கார் வாங்க போறீங்களா? கண்டிப்பா இத படிங்க...!

குடும்பத்தினருக்கும் ஒகேவா?

டெஸ்ட் டிரைவ்வின்போது, டிரைவர் சீட்டில் அமர போதிய சவுகரியம் இருக்கிறதா? கியர் பாக்ஸ் சரியாக இருக்கிறதா? கியர் மாற்ற வசதியாக இருக்கிறதா? என உங்கள் சவுகரியங்களை மட்டும் பார்க்காதீர்கள். உங்கள் குடும்பத்தில் வயதானவர்கள் இருந்தால் அவர்களால் சவுகரியமாக காரில் ஏறி இறங்க முடியுமா? என்பது போன்ற விஷயங்களையும் பாருங்கள். டிக்கியில் எவ்வளவு பொருட்கள் வைக்கலாம்? என்பது போன்ற அம்சங்களையும் சோதிக்கலாம்.

புது கார் வாங்க போறீங்களா? கண்டிப்பா இத படிங்க...!

நண்பர்களையும் உடன் அழைத்து செல்லுங்கள்

டெஸ்ட் டிரைவ் செய்யும்போது உங்கள் நம்பிக்கைக்குரிய நண்பர்களையும் உடன் அழைத்து செல்லாம். அவர்களுக்கு காரை பற்றி அதிகம் தெரியாவிட்டாலும் கூட குறைந்தபட்சம் ஏதேனும் ஒரு சில கமெண்ட்களை கொடுப்பார்கள். நீங்கள் சரியான முடிவை எடுக்க அது உதவி செய்யும். ஒருவேளை காரை பற்றி முழுமையாக தெரிந்தாலும் நல்லதுதானே.

புது கார் வாங்க போறீங்களா? கண்டிப்பா இத படிங்க...!

கிரெடிட் கார்டு வேண்டாமே...

நம்மில் ஒரு சிலரால் மட்டும்தான் உடனடியாக பணத்தை கொடுத்து காரை வாங்க முடியும். எஞ்சிய அனைவரும் மாத தவணையில்தான் காரை வாங்குகிறோம். காரின் விலையில் குறைந்தபட்சம் 15-20 சதவீதத்தை முன்பணமாக செலுத்த வேண்டியதிருக்கும். எஞ்சிய 80-85 சதவீதத்தை லோன் மூலமாக செலுத்தலாம். ஆனால் அதற்கென தனி விதிகள் எல்லாம் இல்லை. உங்களால் எவ்வளவு தொகையை மாதந்தோறும் செலுத்த முடியும் என்பதை பற்றி எல்லாம் யோசித்து கொள்ளுங்கள். இதற்கு கிரெடிட் கார்டு உபயோகிப்பதை கூடுமானவரை தவிர்க்கலாம். ஏனென்றால் கிரெட்டி கார்டுக்கான வட்டி விகிதம் அதிகம் என கூறப்படுகிறது.

புது கார் வாங்க போறீங்களா? கண்டிப்பா இத படிங்க...!

யாரிடம் லோன் வாங்குவது?

டீலர்கள் உள்பட மத்தியஸ்தர்கள் யாரையும் வைத்து கொள்ளாமல் நேரடியாக பைனான்ஸ் கம்பெனியை அணுகுங்கள். அதுதான் உங்களுக்கு பலன் அளிக்கும். டீலர்களை காட்டிலும் வங்கிகள், அதிலும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் குறைந்த வட்டியில் கார் லோன் வழங்குகின்றன. ஆனால் அப்ரூவல் கிடைக்க சற்று காலதாமதம் ஆகும். சில தனியார் பைனான்ஸ் கம்பெனிகளும் விரைவான அப்ரூவலுடன் குறைந்த வட்டியில் லோன் வழங்குகின்றன. அவர்களை ஆன் லைன் மூலமாக கூட அணுகலாம்.

புது கார் வாங்க போறீங்களா? கண்டிப்பா இத படிங்க...!

உஷ்...டீலரிடம் சொல்லாதீர்கள்

நீங்கள் சொந்தமாக பைனான்ஸ் ஏற்பாடு செய்திருந்தால், அதை முன் கூட்டியே டீலரிடம் சொல்லாதீர்கள். ஏனெனில் டீலர்களுக்கும், பைனான்ஸ் கம்பெனிகளுக்கும் இடையே கூட ரகசிய ஒப்பந்தங்கள் உள்ளன. அதாவது இவ்வளவு பார்ட்டி பிடித்து தருகிறோம் என்பது போன்ற ஒப்பந்தங்கள் இருக்கலாம். எனவே பைனான்ஸ் நிறுவனம் மூலம் கிடைக்க வேண்டிய கமிஷனை உங்கள் மூலம் பெற்று விட டீலர்கள் முயற்சி செய்யும் அபாயம் உள்ளது.

புது கார் வாங்க போறீங்களா? கண்டிப்பா இத படிங்க...!

நண்பர்களிடம் பேசுங்கள்

இதற்கு எல்லாம் முன்னதாக உங்கள் நம்பிக்கைக்கு உரிய நண்பர்கள், கார் குறித்த அதிக அனுபவம் உள்ளவர்களிடம் நிறைய பேசுங்கள். இதன்மூலம் புது புது ஐடியாக்கள் உங்களுக்கு கிடைக்கும். இந்த டிப்ஸ்களை பின்பற்றினால், உங்களுக்கு விருப்பமான காரை திருப்திகரமாக நீங்கள் வீட்டிற்கு ஓட்டி செல்லலாம்.

Most Read Articles

மேலும்... #எப்படி #how to
English summary
How to buy a *NEW* car in India. read in tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X