பயன்படுத்திய காரை வாங்குவது எப்படி? முழு அலசல்

பயன்படுத்திய கார்களை வாங்கும்போது சிலர் அதிக விலை கொடுத்து ஏமாந்து விடுகின்றனர்.இது போன்ற இக்கட்டான சூழ்நிலைகளில் நம் வாசகர்கள் சிக்கிகொள்ளாமல் இருக்க பயன்படுத்திய கார் வாங்குவதற்கான டிப்ஸ்கள்...

இந்தியாவில் மக்கள் மத்தியில் கார்கள் மீதான மோகம் அதிகரித்து கொண்டே வருகிறது. சில ஆண்டுகளுக்கு முன் வீட்டு ஒரு பைக் என்பது இந்தியாவில் வெகு சாதாரண விஷயமாக மாறி இன்று வீட்டு 2-3 பைக்குகள் கூட இருக்கின்றன.

பயன்பாடுத்திய காரை வாங்குவது எப்படி? முழு அலசல்

தற்போது இந்தியர்கள் கார்களை வாங்குவதில் அதிக அளவு விரும்பம் காட்டி வருகின்றனர். ஆண்டு அதிகரித்து கொண்டே போகும் கார் விற்பனை விகிதமே இதற்கு சாட்சி.

பயன்பாடுத்திய காரை வாங்குவது எப்படி? முழு அலசல்

இதே நிலையில் இந்தியர்களின் வருமானத்தை கணக்கிடுகையில் அனைவராலும் புதிய கார்களை வாங்கி விட முடியாது. அதனால் பயன்படுத்திய கார்களையே பலர் விரும்பி வாங்குகின்றனர்.

பயன்பாடுத்திய காரை வாங்குவது எப்படி? முழு அலசல்

அப்படி பயன்படுத்திய கார்களை வாங்கும்போது சிலர் அதிக விலை கொடுத்து ஏமாந்து விடுகின்றனர். சில கார்கள் வாங்கி சில நாட்கள் நன்றாக ஓடி பின்னர் தன் வேலையை காட்டி விடுகிறது.

பயன்பாடுத்திய காரை வாங்குவது எப்படி? முழு அலசல்

இது போன்ற இக்கட்டான சூழ்நிலைகளில் நம் வாசகர்கள் சிக்கிகொள்ளாமல் இருக்க பயன்படுத்திய கார் வாங்குவதற்கான சில டிப்ஸ்களை கீழே வழங்கியுள்ளோம் படித்துதான் பாருங்களேன்.

பயன்பாடுத்திய காரை வாங்குவது எப்படி? முழு அலசல்

பட்ஜெட்

பயன்படுத்திய கார்கள் மார்கெட்டில் சில ஆயிரங்களில் துவங்கி பல லட்சங்கள் வரை கடைக்கிறது. இதனால் கார் வாங்குவதற்கான உங்களது பட்ஜெட்டை சரியா முடிவு செய்யவது கட்டாயம்.

பயன்பாடுத்திய காரை வாங்குவது எப்படி? முழு அலசல்

சில நிறுவனங்கள் பயன்படுத்திய கார்களுக்கும் லோன் வசதியை வழங்குகிறது. நீங்கள் லோன் மூலம் கார் வாங்க விரும்பினால் மாதம் எவ்வளவு தொகை கட்டமுடியும். எவ்வளவு காலம் கட்ட முடியும். முன்பணம் எவ்வளவு செலுத்த முடியும் என்பதை கணக்கிட்டு கொள்ளுங்கள்.

பயன்பாடுத்திய காரை வாங்குவது எப்படி? முழு அலசல்

மாடல்

உங்கள் பட்ஜெட்டை தயார் செய்துவீட்டீர்களா அடுத்து நீங்கள் பார்க்க வேண்டியது. உங்கள் பட்ஜெட்டிற்குள் அடங்கும் கார்களை தான். நீங்கள் முடிவு செய்த பட்ஜெட்டிற்குள் எந்ததெந்த கார்கள் மார்கெட்டில் கிடைக்கின்றன. அதில் என்ன என்ன அம்சங்கள் இருக்கிறது? என்பதை முதலில் தெரிந்து ஒருபட்டியலிடுங்கள்.

பயன்பாடுத்திய காரை வாங்குவது எப்படி? முழு அலசல்

புரோக்கர்

நீங்கள் கார்களை பெரும்பாலும் இணையதளம், பேப்பர் விளம்பரம் ஆகியவற்றின் மூலம் தெரிந்து கொள்வீர்கள், அவர்களில் சில புரோக்கர்களும் விளம்பரம் செய்வார்கள் ஆகவே நீங்கள் பட்டியலிட்டுள்ள கார்களில் நேரடியாக காரின் ஓனர் விற்பனை செய்கிறாரா? அல்லது புரோக்கர் விற்பனை செய்கிறாரா என்பதை தெரிந்து கொள்ளுங்கள், புரோக்கர் விற்பனை செய்கிறார் என்றால் அவரது கமிஷன் எவ்வளவு என்பதையும் கணக்கிட்டு கொள்ளுங்கள்.

பயன்பாடுத்திய காரை வாங்குவது எப்படி? முழு அலசல்

பைனான்ஸ்

இவை அனைத்தையும் கணக்கிட்டு ஒரு நீங்கள் கார் வாங்குவதற்கான ஒரு வட்டத்தை முடிவு செய்திருப்பீர்கள். அடுத்ததாக உங்களுக்கான காரை தேர்ந்தேடுப்பது தான். ஆனால் ஈ.எம்.ஐ. மூலம் கார் வாங்க கூடியவர்கள் அதற்க முன்னதாக உங்கள் வட்டத்திற்கு உட்பட்ட கார்களுக்கு எந்தெந்த நிறுவனங்கள் லோன் வழங்குகின்றன.

பயன்பாடுத்திய காரை வாங்குவது எப்படி? முழு அலசல்

எந்தெந்த நிறுவனங்களில் எவ்வளவு தொகை ஈ.எம்.ஐ. செலுத்த வேண்டும். எவ்வளவு காலம் செலுத்த வேண்டும். வட்டி எவ்வளவு வருகிறது என்பதை அறிந்து கொள்ளுங்கள் அதில் உங்களது பட்ஜெட்டிற்கு ஏற்ற பைனான்ஸ் நிறுவனத்தை தேர்ந்தேடுத்துகொள்ளுங்கள்

பயன்பாடுத்திய காரை வாங்குவது எப்படி? முழு அலசல்

காரை செலக்ட் செய்தல்

தற்போது உங்கள் பட்ஜெட், அம்சங்கள், லோன் வசதிக்கு ஏற்ற சில கார்கள் உங்கள் பட்டியலில் இருக்கும். அவற்றில் எதை வாங்குவது என்ற சந்தேகம் அனைவருக்கும் வரும். நீங்கள் எந்த காரை தேர்ந்தேடுக்க வேண்டும் என்பது உங்கள் தேவைய பொருத்தே.

பயன்பாடுத்திய காரை வாங்குவது எப்படி? முழு அலசல்

ஆனால் உங்கள் கையில் உள்ள கார் பட்டியலில் சில மாடல்களில் உள்ள டாப் வேரியண்ட், சில மாடலில் உள்ள என்ட்ரி லேவல் கார்களும் இருக்கும் இதில் டாப் வேரியண்ட் கார்ளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதையே நாங்கள் பரிந்துரைக்கிறோம்.

பயன்பாடுத்திய காரை வாங்குவது எப்படி? முழு அலசல்

பொதுவாக டாப் வேரியண்ட் கார்களில் தான் அதிக வசதிகள் இருக்கும் (உதாரணம் :பவர் விண்டோ,ஏ.சி.,). சில என்ட்ரி லேவலில் சில வசதிகள் இல்லாமல் இருக்கும். நீங்கள் வாங்கும் விலையில் இந்த அனைத்து வசதிகளும் உடைய கார்களையே தேர்ந்தேடுங்கள். ஆனால் உங்கள் தேவை என்ட்ரி லேவல் காரில் இருந்தால் அதை செலக்ட் செய்து கொள்ளுங்கள் அது முழுவதும் உங்கள் விருப்பத்தை சார்ந்தது.

பயன்பாடுத்திய காரை வாங்குவது எப்படி? முழு அலசல்

எதை எல்லாம் கவனிக்க வேண்டும்?

இவ்வாறாக நீங்கள் காரை செலக்ட் செய்த பின் அந்த கார் குறித்து நீங்கள் சிறிது ஆய்வு நடத்த வேண்டும் அப்பொழுது தான் காரின் உண்மையான நிலை குறித்து நீங்கள் அறிய முடியும். அவற்றை கீழே பட்டியலிட்டுள்ளோம் பாருங்கள்.

பயன்பாடுத்திய காரை வாங்குவது எப்படி? முழு அலசல்

ஆவணம்

முதலில் இந்த காரின் ஆவணங்களை சரிபாருங்கள். இந்த காரை முதலில் வாங்கியது. யார் அடுத்தடுத்து யார், யார் கைகளுக்கு மாறியது. என்பதை தெரிந்துகொள்ளுங்கள். காரை முதலில் வாங்கியவரே உங்களிடம் விற்பதாக இருந்தால் நல்லது அதிக பேரிடம் கைமாறியிருந்தால் சற்று யோசிக்க வேண்டும்.

பயன்பாடுத்திய காரை வாங்குவது எப்படி? முழு அலசல்

சான்று

சில பயன்படுத்தி கார்களை விற்கும் பெரிய நிறுவனங்கள் தாங்கள் விற்கும் சில கார்களுக்கு மட்டும் சான்றுகளை வழங்குவர் அந்த நிறுவனம் இந்த காருக்கு சான்ற எதுவும் வழங்கியுள்ளதா? அப்படி இருந்தால் அது என்ன சான்று என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

பயன்பாடுத்திய காரை வாங்குவது எப்படி? முழு அலசல்

வாரண்டி

நீங்கள் வாங்கும் காருக்கு ஏதேனும் வாரண்டிகள், அல்லது இலவச சர்வீஸ்கள் இருக்கிறதா? அப்படி இருக்கிறது என்றால் எவ்வளவு காலம் வாரண்டி இருக்கிறது எவ்வளவு இலவச சர்வீஸ் இருக்கிறது என்பதை தெளிவுபடுத்தி கொள்ளுங்கள்.

பயன்பாடுத்திய காரை வாங்குவது எப்படி? முழு அலசல்

பிரபலமில்லாத கார்

நீங்கள் தேர்ந்தேடுத்திருப்பது பிரபலமில்லாத காராக இருந்தால் அதை தவிர்ப்பது நல்லது. நீங்கள் கார் வாங்கிய பின்னர் அதில் ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால் பிரபலமில்லாத கார்களுக்கான உதிரிபாகங்கள் கிடைப்பது கடினம் ஆகையால் அதை வாங்குவதை தவிர்க்கலாம்.

பயன்பாடுத்திய காரை வாங்குவது எப்படி? முழு அலசல்

மாடிபிகேஷன் கார்

மாடிபிகேஷனின் போது காரின் தரம் எவ்வாறு பாதுகாகக்கப்படும் என்பது சந்தேகம் தான். இதனால் மாடிபிகேஷன் செய்த காரை வாங்குவதை தவிர்க்கலாம்.

பயன்பாடுத்திய காரை வாங்குவது எப்படி? முழு அலசல்

மார்க்கெட்டில் இல்லாத காரா?

நீங்கள் செலக்ட் செய்திருப்பது மார்க்கெட்டில் இல்லாதகாராக இருந்தால் அதை தவிர்ப்பது நல்லது. அந்த கார்களுக்கான உதரிபாகத்தின் விலை அதிகமாக இருக்கும் இதனால் உங்களுக்கு பராமரிப்பு செலவு அதிகரிக்கும்.

பயன்பாடுத்திய காரை வாங்குவது எப்படி? முழு அலசல்

பறிமுதல் செய்யப்பட்ட காரா?

நீங்கள் வாங்கும் காரின் பின்ணணியை தெரிந்து கொள்ளுங்கள் லோனை கட்ட முடியாமல் ஏதேனும் பைனான் நிறுவனத்தால் பறிமுதல் செய்யப்பட்டிருந்தாலோ, அல்லது ஏதேனும் குற்றப்பிண்ணியில் இந்த கார் ஈடுபடுத்தப்பட்டு போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டிருந்தோலோ வாங்குவதை தவிர்க்கலாம் .இது நீங்கள் காரை வாங்கியதற்கு பின்னால் பிரச்னையை ஏற்படுத்தும்.

பயன்பாடுத்திய காரை வாங்குவது எப்படி? முழு அலசல்

குறைந்த பயன்பாடு

நீங்கள் செலக்ட் செய்த கார் உதாரணத்திற்கு 10 ஆண்டுகளுக்கு முன்பு வாங்கப்பட்டு வெறும் 30,000 கி.மீ., தான் பயணம் செய்திருந்தது என்றால் அவற்றை வாங்க வேண்டாம். அது அடிக்கடி பிரச்னை ஏற்பட்டு உங்களுக்கு தலைவலியை ஏற்படுத்தும்.

பயன்பாடுத்திய காரை வாங்குவது எப்படி? முழு அலசல்

ரீ பெயிண்ட்

கார் வாங்கப்பட்டு சுமார் 5 ஆண்டுகளுக்கு உள்ளாகவே மறுபடியும் பெயிண்ட் செய்யப்பட்டால் நீங்கள் சந்தேப்படவேண்டிய இடம் இது. 5 ஆண்டுக்குள் பெயிண்ட் செய்யவேண்டிய கட்டாயமில்லை. இது விபத்தில சிக்கியிருக்கலாம். அதன் காரணமாக கூட பெயிண்ட் அடிக்கப்பட்டிருக்கலாம். கவனமாக இருக்க வேண்டிய இடம் இது.

பயன்பாடுத்திய காரை வாங்குவது எப்படி? முழு அலசல்

மெக்கானிக்

நீங்கள் காரை வாங்கும் முன் உங்களுக்கு நம்பகமான மெக்கானிக் ஒருவரை முறை காரை ஓட்டி பாரக்க சொல்லி அவரது கருத்துக்களை கேட்பது என்பது முக்கியம். நீங்கள் கவனிக்காத பல விஷயங்களை அவர் கவனிக்க வாய்ப்பு உண்டு.

பயன்பாடுத்திய காரை வாங்குவது எப்படி? முழு அலசல்

பகல் நேரம்

நீங்கள் காரை பகல்நேரத்தில் சோதனையிடுங்கள், இரவு நேரத்தில் சில விஷயங்கள் நமக்கு தெரியாமல் கூட போக வாய்ப்புள்ளது.

பயன்பாடுத்திய காரை வாங்குவது எப்படி? முழு அலசல்

சரி பார்க்க வேண்டிய ஆவணங்கள்

1. ஆர்.டி.ஓ. வரி ரசிது: இது ஒரு முறை மட்டுமே செலுத்தக்கூடியது காரின் முதல் ஓனர் தான் இதை செலுத்தியிருக்க வேண்டும்.

2. ஆர்.சி. புக்: இந்த கார் எந்த மாநிலத்தில் பதிவு செய்யப்பட்டது என்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள். இந்த ஆர்.சி., "DRC"என குறிப்பிடப்பட்டிருந்தால் அது டுப்ளிகேட் ஆர்.சி. புக் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

3. இன்சூரன்ஸ்: கார் எந்த வகையில் இன்சூரன்ஸ் செய்யப்பட்டுள்ளது. அதன் காலம் எவ்வளவு இருக்கிறது.

பயன்பாடுத்திய காரை வாங்குவது எப்படி? முழு அலசல்

4. இன்வாய்ஸ்: காரை முதல் ஓனர் வாங்கும் போது வழங்கப்பட்ட இன்வாய்ஸ் அதில் உள்ள சேஷின் நம்பரும், காரின் சேஷிஸ் நம்பரும் சரியாக இருக்கிறதா என்பதை பார்த்துக்கொள்ளுங்கள்.

5. பைனான்ஸ் என்.ஓ.சி.,: இதன் முன்னர் கார் பைனான்ஸ் மூலம் வாங்கப்பட்டிருந்தால் அந்த நிறுவனத்தின் என்.ஓ.சி., சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளவும்.

பயன்பாடுத்திய காரை வாங்குவது எப்படி? முழு அலசல்

ஓடோ மீட்டர்

காரின் ஓடோ மீட்டரில் பிராடு செய்வது சுலபம் ஆகையால் காரின் சர்வீஸ் ரெக்கார்டுகளை சரிபார்க்க வேண்டும். எவ்வளவு கிலோ மீட்டருக்கு ஒருமுறை, எவ்வளவு கால இடைவெளியில் சர்வீஸ் விடப்பட்டுள்ளது. என்பதை செக் செய்ய வேண்டும். கார் டயரின் தேய்மானத்தை வைத்தும் உத்தேசமாக எவ்வளவு கிலோ மீட்டர் ஓடியிருக்கும் என்பதை கணக்கிடலாம்.

பயன்பாடுத்திய காரை வாங்குவது எப்படி? முழு அலசல்

இன்ஜின் சைஸ்

நவீன கார் பிராடுகள் டாப் வேரியண்ட் கார்களில் உள்ள இன்ஜினை எடுத்துவிட்டு என்ட்ரி லேவல் காரில் உள்ள இன்ஜனை பொருத்தி ஏமாற்ற முயல்வர் நீங்கள் காரின் ஆர்.சி. புக்கில் உள்ள நம்பரும் இன்ஜின் நம்பரும் சரியாக இருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

பயன்பாடுத்திய காரை வாங்குவது எப்படி? முழு அலசல்

தயாரிப்பு தேதி

காரின் தயாரப்பு தேதியை தெரிந்துகொள்ளுங்கள் இதற்காக வி.ஐ.என் என்ற எண் காரின் இருக்கும் இதை இணையதளத்தில் டிகோட் செய்து காரின் தயாரிப்பு தேதியை கணக்கிடலாம்.

பயன்பாடுத்திய காரை வாங்குவது எப்படி? முழு அலசல்

மாற்று சாவி

காருக்கு மொத்தம் எத்தனை சாவிகள் வழங்கப்பட்டது. என்பதை உறுதிசெய்து கொள்ளுங்கள் சிலர் காரை உங்களிடம் விற்ற பின்பு மாற்று சாவியை வைத்து காரை திருடும் கும்பலும் இருக்கிறது.

பயன்பாடுத்திய காரை வாங்குவது எப்படி? முழு அலசல்

புரோக்கர் கமிஷன்

நீங்கள் காரை புரோக்கர் மூலம் வாங்குகிறீர்கள் என்றால் அவருக்கான கமிஷன் எவ்வளவு என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். பொதுவாக கார் விற்ற விலையில் 2 சதவிதம் கமிஷன் என்பது மார்க்கெட்டில் இருக்கும் ஒன்று அதற்கு குறைவாக இருத்தல் நலம்.

பயன்பாடுத்திய காரை வாங்குவது எப்படி? முழு அலசல்

முளை சலவைக்கு ஆளாகாதீர்கள்

நீங்கள் கார் வாங்க வேண்டும் என சென்றவுடன் உங்களிடம் கார் குறித்து அதிகமாக பேசி அவர்களிடம் விலை போகாத காரையே உங்களிடம் தள்ளிவிட கார் விற்பனையாளர்கள் கருதுவார்கள். உங்களது தேவைய உணர்ந்து அதற்கு தகுந்த காரையே தேர்ந்தேடுங்கள் அவர்கள் சொல்வதை மட்டும் நம்பி காரை வாங்க வேண்டாம்.

பயன்பாடுத்திய காரை வாங்குவது எப்படி? முழு அலசல்

மேலே குறிப்பிட்டதை வைத்து சரியாக விசாரித்து, ஆய்வு செய்து சிறந்த காரை நீங்கள் தேர்ந்தெடுப்பீர்கள் என நாங்கள் நம்புகிறோம். உங்களுக்கு சிறந்த கார் கிடைக்க எங்களது வாழ்த்துக்கள்.

Most Read Articles
மேலும்... #எப்படி #how to
English summary
How to buy a USED Car in India. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X