உங்கள் காரை இப்படிதான் திருடுகிறார்கள்..! தடுப்பது எப்படி?

உங்கள் காரில் எவ்வளவு தான் உயர் ரக பாதுகாப்பு வசதிகள் இருந்தாலும் அதை திருடுவதற்கான வாய்ப்பும் அதிகமாக இருக்கிறது. அந்த வகையில் ரிமோட் லாக் போட்ட காரை எளிதாக திருட முடியும்.

By Balasubramanian

உங்கள் காரில் எவ்வளவு தான் உயர் ரக பாதுகாப்பு வசதிகள் இருந்தாலும் அதை திருடுவதற்கான வாய்ப்பும் அதிகமாக இருக்கிறது. அந்த வகையில் ரிமோட் லாக் போட்ட காரை எளிதாக திருட முடியும் என இரண்டு இளைஞர்கள் நிருப்பித்து அதன் காண செயல் விளக்கமும் செய்து காண்பித்துள்ளனர். இது குறித்து விரிவாக இந்த செய்தியில் பார்க்கலாம்.

உங்கள் காரை திருடுவது எப்படி?

தொழிற்நுட்பங்கள் வளர வளர கார் தயாரிப்பு நிறுவனங்கள் கார்களின் பாதுகாப்பு அம்சங்களை அதிகரித்துகொண்டே செல்கின்றனர். என்னதான் பாதுகாப்பு அம்சங்கள் அதிகரித்தாலும், கார் திருட்டு சம்பவங்களில் இன்னும் குறைந்த பாடிலில்லை

உங்கள் காரை திருடுவது எப்படி?

காரில் என்னதான் நவீன தொழிற்நுட்பங்களை புகுத்தினாலும், அந்த தொழிற்நுட்பத்தை புரிந்து கொண்டு அதையும் மீறி திருட்டில் ஈடுபடும் கும்பல் நாடு முழுவதும் அதிகரித்து கொண்டே இருக்கிறது. இப்படியான பாதுகாப்பு அம்சமான ரிமோட் லாக்கிலும் சில குறைகள் உள்ளன.

உங்கள் காரை திருடுவது எப்படி?

பொதுவான கார் வைத்திருப்பவர்கள் தங்கள் காரை திருட்டில் இருந்து தடுக்க அவர்களிடம் இருக்கும் முக்கிய அம்சமாக அவர்கள் பார்ப்பது ரிமோட் லாக் தான். இதின் மூலம் நாம் லாக் செய்தால் அவ்வளவு எளிதாக திறக்க முடியாது என்ற எண்ணம் பலருக்கு இருக்கிறது. ஆனால் அதையும் பாதுகாப்பு இல்லாமல் செய்யும் அளவிற்கான தொழிற்நுட்பம் தற்போது வந்துவிட்டது.

உங்கள் காரை திருடுவது எப்படி?

தற்போது உள்ள ரிமோட் லாக் என்பது ரேடியோ ஃப்ரீகொண்ஸி அதிகளால் தகவல்களை கடத்துகிறது. கிட்டத்தட்ட நம்ம எப்.எம் ரோடியோ போல. அதில் ரிமோட் டிரான்ஸ்மிட்டராகவும், கார் ரிசீவராகவும் செயல்படுகிறது.

உங்கள் காரை திருடுவது எப்படி?

இப்பொழுது திருடர்கள் காரில் உள்ள ரிசீவர் போலவே ஒரு ரிசீவரை வைத்து உங்கள் ரிமோட்டில் இருந்து காருக்கு செல்லும் தகவலை காப்பி செய்து விடுகின்றனர். பின்னர் அவர்கள் அந்த கோடை பயன்படுத்தி மற்றொரு டிரான்ஸ்மிட்டர் மூலம் மீண்டும் உங்கள் காருக்கு அனுப்புகின்றனர்.

உங்கள் காரை திருடுவது எப்படி?

இதன் மூலம் நீங்கள் பூட்டி சென்ற உங்கள் கார் மீண்டும் திறந்து விடுகிறது. இதன் பின் மிக எளிதாக உங்கள் காரை திருடி விடுகின்றனர். இதற்கு நீங்கள் காரை லாக் அல்லது அன்லாக் செய்யும் போது உங்கள் காருக்கும் உங்களுக்கும் இடையில் அவர்கள் வேறு ஒரு வாகனத்திலோ அல்லது வேறு ஏதாவது ஒரு வகையிலோ அவர்கள் ரிசீவருடன் இருந்தால் போதும்.

உங்கள் காரை திருடுவது எப்படி?

இந்த லாக் கார் சென்டர் லாக்கிற்கிற்கு மட்டும் அல்லது நவீன கார்களில் கீலெஸ் எண்ட்ரி உள்ள கார்களிலும் இந்த முறையை பயன்படுத்தி எளிதாக காரை ஸ்டார்ட் செய்து விடவே முடியும். கீலெஸ் என்ட்ரி என்பது குறுகிய தூரத்தில் உள்ள ரோடியோ ஃப்ரீகொண்ஸியை வைத்து செயல்படுகிறது.

உங்கள் காரை திருடுவது எப்படி?

இது கீயுடன் நீங்கள் காரின் அருகில் வந்தால் நீங்கள் அருகில் வருவதை உணர்ந்து தானாக கார் அன்லாக் ஆகும் அதே போல காரை விட்டு நீங்கள் தூரமாக சென்று விட்டால் தானா கார் லாக் ஆகும்.

உங்கள் காரை திருடுவது எப்படி?

இப்படியாக இந்த தொழிற்நுட்பம் இருப்பதால் நீங்கள் பயன்படுத்தும் கீயில் இருந்து எப்பொழுதும் இந்த ரேடியோ ப்ரீகொண்ஸி வழியாக தகவல்கள் சென்று கொண்டே இருக்கும். அந்த தகவல் காரில் உள்ள ரிசீவரில் கனெக்ட்டில் இருந்தால் கார் அன்லாக் ஆகும் அல்லது லாக் ஆகி விடும் என்று தான் இந்த டிசைன் செய்யப்பட்டுள்ளது.

உங்கள் காரை திருடுவது எப்படி?

தற்போது திருடர்கள் ஏதோ ஒருவகையில் நீங்கள் பொது இடங்களில் இருக்கும் போதோ, அல்லது ஏதோ ஒரு வகையில் உங்கள் கீக்கு மிக அருகில் அவர்களது ரிசீவரை கொண்டு வந்து கீயில் இருந்து வெளியாகும் கோடை காப்பி செய்து விட்டால்

உங்கள் காரை திருடுவது எப்படி?

அவர்கள் அந்த கோடை கொண்டு சுலபமாக உங்கள் காரை திறந்து விடலாம். மேலும் கீலெஸ் என்ட்ரி உள்ள காரில் பெரும்பாலும் புஷ் ஸ்டார்ட் பட்டன் தான் இருக்கும். அதாவது காருக்கும் இருக்கும் உங்கள் கீயில் இருந்து வெளியாகும் சிக்னலில் இருந்து காரின் ஸ்டார்ட் பட்டனை ரிலீஸ் செய்யும் அதன் பின் நீங்கள் அந்த பட்டனை அழுத்தினால் போது காரை ஸ்டார்ட் செய்து விடலாம்.

உங்கள் காரை திருடுவது எப்படி?

சாதாரண கார்களிலாவது இந்த தொழிற்நுட்பத்தை கொண்டு காரை கதவைதான் திறக்க முடியும். ஆனால் கீலெஸ் என்ட்ரி காரில் இந்த தொழிற்நுட்பத்தை கொண்டு காரையே ஸ்டார்ட் செய்து விடலாம். இதனால் நீங்கள் கீலெஸ் என்ட்ரி காரை பயன்படுத்தினால் கவனம் தேவை.

உங்கள் காரை திருடுவது எப்படி?

இதை கார் குறித்து தகவல்களை வழக்கமாக வீடியோவாக பதிவு செய்து சமூகவலைதளத்தில் பதிவு செய்யும் நண்பர்கள் இருவர் இதை பரிசோதித்துள்ளனர். அவர்கள் ஹூண்டாய் க்ரெட்டா, ஃபோக்ஸ்வாகன் கிராஸ் போலோ, ஆகிய கார்களை அவர்கள் வைத்திருந்த ஒரு டிவைஸ் மூலம் ஹேக் செய்தனர்.

உங்கள் காரை திருடுவது எப்படி?

ஒருவர் காரை வந்து நிறுத்துவிட்டு ரிமோட்டில் லாக் செய்து விட்டு சென்றபோது காரின் ஓனர்கள் அங்கிருந்து நகரும் முன்பே இவர்கள் காரை அன்லாக் செய்தனர். இதனால் கார் ஓனர்கள் என்ன நடக்கிறது என தெரியாமல் விழித்தார்கள். பல முறை அவர்கள் மீண்டும் மீண்டும் ரிமோட்டில் லாக் செய்து பார்த்தார்கள். ஒவ்வொரு முறையும் இவர்கள் லாக்கை எடுத்துவிட்டனர்.

உங்கள் காரை திருடுவது எப்படி?

பின்னர் இவர்களே காரை விட்டு இறங்கி கார் ஓனர்களிடம் தாங்களே இதை செய்தோம். இதை செய்வது மிக எளிது மக்கள் மத்தியில் இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவே இதை செய்வதாக கூறினர். மேலும் அவர்கள் ரிமோட் லாக்கை மட்டும் நம்ப வேண்டாம் எனவும் எச்சரித்தனர். அந்த வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.

இவ்வாறாக திருட்டுகளிடம் இருந்து உங்கள் காரை பாதுகாக்க முதலில் நீங்கள் காரை உங்களுக்கு மிக பாதுகாப்பானதாக உணரும் ஒரு பகுதியில் மட்டும் காரை நிறுத்தவும், நீங்கள் காரை நிறுத்தும் இடத்தில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதா என்பதை உறுதிபடுத்தி கொள்ளுங்கள். ஒரு வேலை உங்கள் கார் திருடுபோனால், திருடியவர்களை கண்டுபிடிக்க இது வசதியாக இருக்கும்.

உங்கள் காரை திருடுவது எப்படி?

மேலும் உங்கள் காரில் ஜிபிஎஸ்ஸை பொருத்தலாம். இது உங்கள் கார் திருடுபோனால் கார் தற்போது எங்கே உள்ளது. என்பதை உங்களால் பார்க்க முடியும். இதை வைத்து உங்கள் காரை மீட்கலாம். இவை எல்லாவற்றை விட உங்கள் காரில் மிகுந்த மதிப்புள்ள பொருட்களை வைத்து விட்டு செல்வதை தவிர்க்க வேண்டும்.

உங்கள் காரை திருடுவது எப்படி?

காரை திருடுபவர்கள் கார் மீது உள்ள ஆசையை விட காரில் நீங்கள் விட்டு செல்லும் பொருட்களின் மீது ஆசைப்பட்டே காரை திருடுகின்றனர். இதனால் இதை தவிர்த்தாலே உங்கள் கார் திருடப்படும் வாய்ப்பை பெரிய அளவில் தவிர்த்து விடலாம்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ்தளத்தில் அதிகம் வாசிக்கப்படும் செய்திகள்

Most Read Articles
மேலும்... #எப்படி #how to
English summary
How thieves unlock cars in just seconds: Live demo video EXPLAINS. Read in Tamil
Story first published: Monday, June 18, 2018, 11:36 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X