கார் மழையில் நனைந்தால் இவ்ளோ பிரச்சனைகள் வருமா? இது முன்னாடியே தெரியாம போச்சே!

கார் மழையில் நனைந்தால் கார் சுத்தமாகும் என நாம் நினைத்துக்கொண்டிருக்கிறோம். ஆனால் இப்படிச் செய்தால் கார் உண்மையில் சுத்தமா? காருக்கு அது நல்லதா? இது குறித்த முழு விபரங்களைக் கீழே காணுங்கள்

கார் மழையில் நனைந்தால் இவ்ளோ பிரச்சனைகள் வருமா? இது முன்னாடியே தெரியாம போச்சே !

நாம் கார்களை பயன்படுத்தும் அளவிற்கு அதைப் பராமரிக்கப் பெரிய அளவில் முயற்சி செய்ய மாட்டோம். அதில் முக்கியமாகக் காரை சுத்தம் செய்வது. சோம்பேறித்தனத்தின் காரணத்தினாலோ அல்லது வேறு வேலைகள் இருப்பதாலோ கார்களை சிலர் கழுவி சுத்தமாக வைத்திருக்காமல் இருக்கலாம். இப்படி சுத்தம் செய்யாமல் இருப்பவர்கள் மழை வந்தால் ஜாலி தான். காரை மழையில் நனைய வைத்து காரை சுத்தம் செய்யும் வேலையை மழை செய்துவிட்டது என நினைத்துக்கொள்வோம். ஆனால் அப்படிச் செய்வது சரியான செயலா? அப்படிச் செய்தால் கார் உண்மையிலேயே சுத்தமாகுமா? முழு விபரங்களைக் காணலாம்

கார் மழையில் நனைந்தால் இவ்ளோ பிரச்சனைகள் வருமா? இது முன்னாடியே தெரியாம போச்சே !

சுற்றி வளைக்காமல் முதலிலேயே விஷயத்திற்கு வந்து விடுவோம் காரை மழையில் நனைய வைத்து சுத்தம் செய்வது என்பது முற்றிலும் தவறான செயல் இப்படியாகக் காரை சுத்தம் செய்தால் கார் சுத்தமாகாது மாறாக மேலும் மோசமாகச் சேதமாகும் என்பதே உண்மை. அது எப்படி மழையில் நனைத்தால் கார் அழுக்காகும்? என உங்களுக்குத் தோன்றலாம் கார் மழையில் நனையும் போது என்ன நடக்கிறது எனக் காணலாம் வாருங்கள்

கார் மழையில் நனைந்தால் இவ்ளோ பிரச்சனைகள் வருமா? இது முன்னாடியே தெரியாம போச்சே !

மழையில் கார் நினைத்த பின்பு கார் வெளிப்புறத்தில் சுத்தமானது போல தான் தோற்றம் தரும். ஆனால் அது நன்றாக மழை பெய்தால் தான் லேசான தூரல் விழுந்தால் கார் மேலும் அழுக்காகும். மழை நீர் சுத்தமாக இருக்கும் என நாம் நம்புவோம். ஆனால் மழை நீர் காற்றில் உள்ள மாசுகளுடன் கலந்து விழுகிறது. இந்த காசுகள் எல்லாம் சேர்ந்து கெமிக்கல் ரியாக்ஷன் ஆகி இருக்கும். இந்த நீர் காரின் மீதே இருந்து அது காயும் போது காரின் பெயிண்ட்டை பதம் பார்க்கத் துவங்கும்

கார் மழையில் நனைந்தால் இவ்ளோ பிரச்சனைகள் வருமா? இது முன்னாடியே தெரியாம போச்சே !

இதனால் காரின் பெயிண்டின் பொழிவு தன்மை குறையும் தொடர்ந்து கார் மழையில் நனைந்தால் காரில் உள்ள பெயிண்ட் தன் பொழிவை வேகமாக இழுக்க துவ்கும். மழை நீர் எப்பொழுதுமே சுத்தமாக நீராக இருக்காது என்பது காரை மழையில் நனைய வைக்க கூடாது. முடிந்தால் மழை நீரில் கார் நனையாத படியாக பார்க்கிங்கில் காரை நிறுத்த வேண்டும். அல்லது வெளியில் நிறுத்த வேண்டிய கட்டாயம் இருந்தால் காரை மழையில் நனையாதவாறு கவர் போட்டு மூடவேண்டும்.

கார் மழையில் நனைந்தால் இவ்ளோ பிரச்சனைகள் வருமா? இது முன்னாடியே தெரியாம போச்சே !

கார் மழையில் நனைந்தால் அது தானாகவே காயும் வரை பலர் அதை விட்டுவிடுவார்கள். ஆனால் காரில் அதிக நேரம் ஈரம் இருந்தால் அது காரில் பல விதமான பாக்டீரியாக்கள் மற்றும் வைரஸ்களை உருவாக்கும். குறிப்பாக நோர்னோ வைரஸ், மற்றும் சால்மோனில்லா பாக்டீரியாக்கள் காரில் அதிக நேரம் ஈரம் இருந்தால் உருவாகும் அந்த பாக்டீரியா மற்றும் வைரல் ஈரம் காய்ந்த பின்பும் காரின் லேரியலேயே இருக்கும் பின்னர் நாம் அந்த இடத்தை தொடும் போது அது நம் கை வழியாக உடலுக்குள் ஏறி உடல் உபாதைகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.

கார் மழையில் நனைந்தால் இவ்ளோ பிரச்சனைகள் வருமா? இது முன்னாடியே தெரியாம போச்சே !

இதில் தப்பித் தவறி காருக்குள் லேசாகத் தண்ணீர் இறங்கிவிட்டாலும் அது காருக்குள் பங்கஸ், பாக்டீரியா போன்ற கிருமிகளை உருவாக்கத் துவங்கிவிடும். அதனால் கார் தப்பித் தவறி மழையை நனைந்தாலும் உடனடியாக காரை மழையில் நனையாதவாறு நிறுத்திவிட்டு உடனடியாக நனைந்த பகுதிகளில் உள்ள ஈரத்தை ஒரு துணியில் துடைத்துவிடுவது நல்லது.

கார் மழையில் நனைந்தால் இவ்ளோ பிரச்சனைகள் வருமா? இது முன்னாடியே தெரியாம போச்சே !

சிலருக்கு காரில் பயணம் செய்யும் போது மழை வந்தால் என்ன செய்வது என்ற கேள்வி வரும் அப்பொழுதும் அந்த பிரச்சனை இருக்கத்தான் செய்கிறது. ஆனால் இதற்காகப் பயணத்தைப் பாதியில் நிறுத்த முடியாது. அதனால் பயணத்தின் போது மழை நின்றது ஒரு சில நிமிடங்கள் காரை ஒரு இடத்தில் பாதுகாப்பாக பார்க் செய்துவிட்டு காரை துடைத்துவிட்டு பின்னர் பயணித்தால் காரின் பொழிவு கெட்டுப் போகாமல் இருக்கும். அதே நேரத்தில் அதன் மூலம் கிருமிகள் பரவுவதையும் தடுக்கலாம்

கார் மழையில் நனைந்தால் இவ்ளோ பிரச்சனைகள் வருமா? இது முன்னாடியே தெரியாம போச்சே !

அடுத்தாக முழுவதுமாக பூட்டப்பட்ட ஒரு காரை அதிக நேரம் நனைய வைத்தால் காருக்குள் இருக்கும் வெப்பம் மற்றும் வெளியில் இருக்கும் குளிர்ச்சி ஆகிய இரண்டும் சேர்ந்து காரின் சீட்களில் லேசான ஈரம் படியும். அந்த ஈரம் சுத்தம் செய்யப்படாவிட்டால் சீட்களில் பூசனம் பூத்தது போன்ற வெள்ளை வெள்ளையாக அடை அடையாக ஒரு விஷயம் வரும் அது மனிதர்கள் உடலுக்குத் தீங்கு விளைவிக்கக் கூடியது. அதை மனிதன் சுவாசித்தால் நுரையீரல் பிரச்சனை உட்படப் பல பிரச்சனைகள் ஏற்படும் மேலும் காரின் சீட் உள்ளிட்ட உட்புற கட்டமைப்பிற்கும் கெடுதலாகும். மேலும் இது காருக்குள் துர்நாற்றத்தையும் பரப்பிவிடும்.

கார் மழையில் நனைந்தால் இவ்ளோ பிரச்சனைகள் வருமா? இது முன்னாடியே தெரியாம போச்சே !

கார் மழையில் நனையும் போது காரின் ஜன்னல்கள் அல்லது கதவு திறந்திருந்தால் காருக்குள் மழை நீர் செல்ல நேரிடும். அதனால் காருக்குள் இருக்கும் ஏதாவது உதிரிப் பாகங்கள் வழியாக மழை நீர் சென்றால் அது உள்ள உள்ள பாகங்களைச் சேதப்படுத்தும். அப்படி ஏதாவது நடந்துவிட்டால் உங்கள் கார் உங்களுக்குச் செலவு இழுத்துவிடும். அதனால் காரை மழையில் நனைய விடுவதைத் தவிர்க்க வேண்டும்.

கார் மழையில் நனைந்தால் இவ்ளோ பிரச்சனைகள் வருமா? இது முன்னாடியே தெரியாம போச்சே !

இது போக எல்லா கார்களிலும் ஹெட்லைட்கள் தண்ணீர் உள்ளே புகுந்து விட முடியாத அளவிற்கு வடிவமைக்கப்பட்டிருக்கும் அதனால் கார் மழையில் நனையும் போது வெளியே உள்ள குளிர்ந்த தன்மை மற்றும் ஹெட்லைட் உள்ள இருக்கும் வெப்பம் காரணமாக காரின் ஹெட்லைட் உள்ளே துளி துளியாகத் தண்ணீர் உருவாகும். இந்த தண்ணீர் தானாகக் காய்ந்துவிடும் என்றாலும் இந்த தண்ணீர் காயும் போது சில மாசுகளை ஹெட்லைட் கண்ணாடியிலேயே விட்டு செல்லலும் இதனால் ஹெட்லைட் கண்ணாடி நாளடைவில் தனது வெளிச்சத்தை இழக்கும். உங்கள் ஹெட்லைட் சரியாக இருந்தாலும் இந்த கண்ணாடி வழியாக அந்த ஒளி வரும் போத மங்கிப்போக வாய்ப்புள்ளது.

கார் மழையில் நனைந்தால் இவ்ளோ பிரச்சனைகள் வருமா? இது முன்னாடியே தெரியாம போச்சே !

இதே பாதிப்பு தான் காரின் முகப்பு கண்ணாடியிலும் ஏற்படும் காரின் முகப்பு கண்ணாடியிலும் மழையில் கார் நனையும் போத உட்புறமாகச் சிறிய நீர்த்துளிகள் வந்து காரின் கண்ணாடியில் படியும். அது காயும் போது கண்ணாடியை படிப்படியாக மங்கிப்போக வைக்கும். அதனால் காரை மழையில் நனைய வைக்க வேண்டாம். அப்படி நனைந்தால் கார் சுத்தமாவதை விட மோசமாகத் தான் மாறும். அதனால் நீங்கள் காரை மழையில் நனைய வைப்பதைத் தவிர்த்துவிடுங்கள்

Most Read Articles
மேலும்... #எப்படி #how to
English summary
How cars get affected by rain and how to avoid that
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X