வெள்ளத்தில் சிக்கிய வாகனங்களுக்கு காப்பீடு மூலம் இழப்பீடு பெறுவதற்கான வழிமுறைகள்!

Written By:

வரலாறு காணாத மழை வெள்ளம் காரணமாக சென்னையில் கார், பைக் உள்ளிட்ட பல்லாயிரணக்ககான வாகனங்கள் நீரில் மூழ்கி கடுமையாக சேதமடைந்திருக்கின்றன. ஒருபுறம் இவை விலை மதிப்புமிக்க உடமை என்பது மட்டுமல்லாமல், தினசரி பயன்பாட்டுக்கு அவசியமானதாகவும் இருக்கிறது.

இந்த நிலையில், இயற்கை சீற்றத்தால் பலரின் வாகனங்கள் கடுமையாக சேதமடைந்து அவர்களது போக்குவரத்தை முடங்க செய்திருக்கிறது. வெள்ளத்தால் சேதமடைந்த வாகனங்களுக்கு இழப்பீடு கிடைத்தால் மட்டுமே அவர்கள் ஓரளவு இந்த பாதிப்பிலிருந்து மீண்டு விரைவாக இயல்பு நிலைக்கு திரும்ப முடியும். இந்த செய்தித்தொகுப்பில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட வாகனங்களுக்கு இழப்பீடு கிடைக்குமா, எவ்வாறு இழப்பீடு கோருவது உள்ளிட்ட தகவல்களை காணலாம்.

தகவல் தெரிவியுங்கள்

தகவல் தெரிவியுங்கள்

இயற்கை சீற்றங்களால் சேதமடையும் அல்லது பாதிக்கப்படும் வாகனங்களுக்கு இழப்பீடு கோர முடியும். ஆனால், Comprehensive Motor Insurance எனப்படும் ஒருங்கிணைந்த காப்பீட்டு திட்டத்தின் மூலமாக காப்பீடு செய்த வாகனங்களுக்கு மட்டுமே இழப்பீடு பெற இயலும். இந்த இன்ஸ்யூரன்ஸ் வைத்திருப்பவர்கள் சில விஷயங்களை கவனத்தில் வைக்க வேண்டும்.

முதலில் செய்ய வேண்டியது...

முதலில் செய்ய வேண்டியது...

வெள்ளத்தில் சிக்கிய உங்களது வாகனம் குறித்து இன்ஸ்யூரன்ஸ் நிறுவனத்திடம் உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும். தற்போது டீலர்களே இன்ஸ்யூரன்ஸ் தரகர்களாக செயல்படுவதால், அங்கு உடனடியாக தகவல் தெரிவிக்கலாம். அவர்களே வந்து உங்களது வாகனத்தை ஆய்வு செய்து விரைவாக சரிசெய்வதற்கான நடைமுறைகளையும், இழப்பீடு கோரும் வழிமுறைகளையும் மேற்கொள்வர்.

ஸ்டார்ட் செய்யாதீர்

ஸ்டார்ட் செய்யாதீர்

வெள்ளத்தில் முழுமையாக மூழ்கிய கார், பைக்கை ஸ்டார்ட் செய்ய முயற்சிக்க வேண்டாம். ஒருவேளை, ஸ்டார்ட் செய்து, எஞ்சினில் தண்ணீர் புகுந்து க்ராங்க்சாஃப்டில் பெரிய அளவிலான பாதிப்பு ஏற்படும். மேலும், உங்களது தவறால் எஞ்சினில் பாதிப்பு ஏற்பட்டிருப்பது தெரியவந்தால் இழப்பீடு கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டு விடும். மேலும், எஞ்சினில் பாதிப்புகள் ஏற்பட்டால், அதற்கு தனியாக Add-On திட்டதில் காப்பீடு செய்திருந்தால் மட்டுமே இழப்பீடு கோர முடியும். எனவே, எஞ்சினை ஸ்டார்ட் செய்ய வேண்டாம்.

இழப்பீடு கோரும் முறை

இழப்பீடு கோரும் முறை

வாகன காப்பீட்டு திட்டத்தின் மூலம் இழப்பீடு கோரும்போது காப்பீடு செய்ததற்கான ஆவணம், வாகனத்தின் பதிவுச் சான்று, டிரைவிங் லைசென்ஸ் மற்றும் இன்ஸ்யூரன்ஸ் செய்த ஆவணம் ஆகியவற்றை சமர்பிக்க வேண்டும்டீலரை விட்டு வெளியில் இன்ஸ்யூரன்ஸ் எடுத்திருந்தால், பாதிப்புகளின் விபரம் மற்றும் எவ்வளவு செலவாகும் என்று அளிக்கப்படும் ஆவணங்கள் ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும். வர்த்தக வாகனங்களுக்கு தகுதிச் சான்று மற்றும் பர்மிட் ஆகிய ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டியிருக்கும்.

மதிப்பீடு

மதிப்பீடு

தகவல் கிடைத்தவுடன் காப்பீட்டு நிறுவனத்தின் மதிப்பீட்டாளர் ஒருவர் உங்களது வாகனத்தையும், அதில் ஏற்பட்டிருக்கும் பாதிப்புகள், சேதாரங்களை மதிப்பீடு செய்வார். சர்வீஸ் மையத்திலிருந்து கொடுக்கப்பட்டிருக்கும் இழப்பீடுக்கான தொகையும், அவரது மதிப்பீடும் சரியாக உள்ளதா என்பதையும் ஒப்பிட்டு பார்த்து காப்பீட்டு நிறுவனத்திற்கு பரிந்துரை செய்வார்..

இழப்பீடு

இழப்பீடு

மதிப்பீட்டாளர் ஆய்வுக்கு பின்னரே, அவர் வழங்கும் மதிப்பீட்டுக்கு தக்கவாறு, வாகனத்தை சரி செய்ய முடியும். வாகனத்தை சரிசெய்த பின்னர் சர்வீஸ் மையத்திலிருந்து வழங்கப்படும் ஒரிஜினல் ரசீதுகளை காப்பீட்டு நிறுவனத்திடம் சமர்பிக்க வேண்டும். காரை டெலிவிரி எடுக்கும்போது மீண்டும் காப்பீட்டு நிறுவனத்தின் மதிப்பீட்டாளர் இழப்பீடு கோரிய பாகங்கள் மாற்றப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்த பின் உங்களது கார் அல்லது பைக் டெலிவிரி கொடுக்கப்படும்.

காலக்கெடு

காலக்கெடு

விபத்தில் சிக்கினால், அதிகபட்சமாக மூன்று நாட்களுக்குள் காப்பீட்டு நிறுவனத்திடம் தகவல் தெரிவித்துவிட வேண்டும். ஆனால், தற்போதைய நிலையில், மொபைல்போன் உள்ளிட்ட தகவல் தொடர்பு சேவைகள் முடங்கியிருக்கின்றன. முடிந்தவரை உடனடியாக தகவல் காப்பீட்டு நிறுவனத்தின் கால் சென்டருக்கு போன் செய்து தகவல் தெரிவித்துவிடுவது அவசியம். ஆனால், தற்போதைய நிலையில், பலர் வீடுகளை விட்டு வெளியில் தங்கியிருப்பதால், இந்த விஷயத்தில் கூடுதல் கால அவகாசத்தை இன்ஸ்யூரன்ஸ் நிறுவனங்கள் வழங்கினால் சிறப்பாக இருக்கும்.

புகைப்படங்கள் அவசியமா?

புகைப்படங்கள் அவசியமா?

புகைப்படங்கள் அவசியம் இல்லை. இருப்பினும், வெள்ளத்தில் உங்களது கார் வெள்ளத்தில் மூழ்கியிருந்தால், மொபைல்போன் அல்லது கேமராவில் சில புகைப்படங்கள் எடுத்து வைத்துக் கொள்வது நல்லது. வெள்ளம் வடிந்த பிறகு, நம்பர் பிளேட்டுடன் சேர்த்து புகைப்படம் எடுத்து வையுங்கள்.

இழப்பீடு உடனடியாக கிடைக்குமா?

இழப்பீடு உடனடியாக கிடைக்குமா?

ஆம். ஆய்வாளர் மதிப்பீட்டுக்கு பின்னர் இழப்பீடு உடனடியாக அளிக்கப்படும். காரை சர்வீஸ் செய்யும் கால அவகாசம்தான் தேவைப்படும். டீலரைவிட்டு வெளியில் இன்ஸ்யூரன்ஸ் எடுத்திருந்தால், பணத்தை செலுத்தி காரை டெலிவிரி எடுத்துக் கொள்ளலாம். பின்னர், ரசீதுகளை இன்யூரன்ஸ் நிறுவனத்திடம் சமர்ப்பித்தால், 15 நாட்களுக்குள் இன்ஸ்யூரன்ஸ் கிடைத்துவிடும்.

தகவல் உதவி

தகவல் உதவி

கூடுதல் தகவல்கள் உதவி:

Sudish.KT, Insurance Advisor

Eurydice Financial Services,

Bangalore.

மோட்டார் இன்ஸ்யூரன்ஸ்- ஸ்பெஷல் ரிப்போர்ட்

மோட்டார் இன்ஸ்யூரன்ஸ்- ஸ்பெஷல் ரிப்போர்ட்

மோட்டார் இன்ஸ்யூரன்ஸ் மற்றும் அதன் விதிமுறைகள், இழப்பீடு கோரும் முறைகள் குறித்த தகவல்களை இங்கே க்ளிக் செய்து காணலாம்.

 

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark