யூஸ்டு கார்களின் ஓடோமீட்டரில் தில்லுமுல்லு: கண்டுபிடிப்பது எப்படி?

இப்போது புதிய கார்களின் விற்பனைக்கு இணையாக பயன்படுத்தப்பட்ட கார்களின் விற்பனையும் சிறப்பான நிலையில் இருக்கிறது. இதற்கு தக்கவாறு பயன்படுத்தப்பட்ட கார் விற்பனை சந்தையில் தில்லுமுல்லு நடப்பதற்கும் பஞ்சமில்லை.

கார்களின் ஓடோமீட்டரில் தில்லுமுல்லு: கண்டுபிடிப்பது எப்படி?

அவ்வாறு, பரவலாக இப்போது ஒரு தில்லுமுல்லு நடக்கிறது. அதாவது, கார் ஓடிய தூரத்தை குறைத்துக் காட்டுவதற்காக ஓடோமீட்டரில் சிலர் மோசடி செய்கின்றனர்.

இதில், பலர் காரின் மதிப்பைவிட அதிக விலை கொடுத்து வாங்கும் நிலை ஏற்படுகிறது. இதுகுறித்து எமது வாசகர் ராகுல் அனுப்பியிருந்த கேள்வியின் அடிப்படையில் இந்த செய்தித் தொகுப்பை வழங்குகிறோம்.

கார்களின் ஓடோமீட்டரில் தில்லுமுல்லு: கண்டுபிடிப்பது எப்படி?

இப்போது வரும் கார்களில் டிஜிட்டல் ஓடோமீட்டர் கொடுக்கப்படுகிறது. இதனை அவ்வளவு எளிதாக மாற்றங்கள் செய்ய முடியாது. இருந்தாலும், மோசடி கம்ப்யூட்டர் சாஃப்ட்வேர் உதவியுடன் சில இடைத்தரகு செய்யும் விற்பனை நிலையங்கள் மற்றும் சில டீலர்களில் கூட இந்த தில்லுமுல்லு நடப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

கார்களின் ஓடோமீட்டரில் தில்லுமுல்லு: கண்டுபிடிப்பது எப்படி?

முதல்முறையாக கார் வாங்குவோர் அல்லது விற்பனை ஏஜென்ட்டுகளின் பேச்சை நம்பி கார் வாங்குவோர் அதிகம் ஏமாற்றப்படும் நிலை இருந்து வருகிறது. இந்த மோசடியை கண்டுபிடிப்பதற்கான சில வழிமுறைகளை இந்த செய்தியில் காணலாம்.

கார்களின் ஓடோமீட்டரில் தில்லுமுல்லு: கண்டுபிடிப்பது எப்படி?

காரின் சர்வீஸ் ரெக்கார்டு பார்த்து முழுமையாக ஆய்வு செய்யவும். ஒவ்வொரு முறையும் சர்வீஸ் செய்தபோது பதிவு செய்யப்பட்டிருக்கும் கிலோமீட்டர் விபரத்தையும், ஓடோமீட்டரில் தற்போது இருக்கும் ஓடிய தூரத்தையும் ஒப்பிட்டு பார்த்து உறுதி செய்ய முடியும்.

கார்களின் ஓடோமீட்டரில் தில்லுமுல்லு: கண்டுபிடிப்பது எப்படி?

ஓடோமீட்டருக்குள் உள்ள டயலில் விரல் ரேகை அல்லது ஏதேனும் மெல்லிய கீறல் உள்ளிட்ட மாற்றங்கள் தெரிந்தால், அது ஓடோமீட்டரில் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது என்று அர்த்தம் எடுத்துக்கொள்ளலாம்.

கார்களின் ஓடோமீட்டரில் தில்லுமுல்லு: கண்டுபிடிப்பது எப்படி?

சிலர் ஓடோமீட்டரை நிறுத்தி வைத்து ஓட்டுவதற்காக பிரத்யேக சுவிட்ச் ஒன்றை பொருத்தியிருக்க வாய்ப்புண்டு. எனவே, டேஷ்போர்டில் ஏதேனும் கூடுதல் சுவிட்ச் இருந்தால், அது குறித்து தெரிந்து கொண்டு பின்னர் முடிவு செய்யவும்.

கார்களின் ஓடோமீட்டரில் தில்லுமுல்லு: கண்டுபிடிப்பது எப்படி?

ஓடோமீட்டர் மாற்றப்பட்டிருந்தால், அதுகுறித்த ஸ்டிக்கர் ஒன்று ஓட்டுனர் பக்க கதவில் ஒட்டப்பட்டிருக்கும். அதில், எந்த தேதியில் ஓடோமீட்டர் மாற்றப்பட்டது. பழைய ஓடோமீட்டரில் ஓடிய தூரம் எவ்வளவு போன்ற விபரங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கும்.

கார்களின் ஓடோமீட்டரில் தில்லுமுல்லு: கண்டுபிடிப்பது எப்படி?

காரின் உட்பக்கத்தில் இருக்கைகள், டேஷ்போர்டு மற்றும் சுவிட்ச்சுகள் மிகவும் பழமையடைந்தும், தேய்ந்தும் இருந்து, ஒருவேளை ஓடோமீட்டரில் குறைவான தூரம் காண்பித்தால், நிச்சயம் ஓடோமீட்டரில் தில்லுமுல்லு நடந்திருக்க அதிக வாய்ப்புகள் உண்டு.

கார்களின் ஓடோமீட்டரில் தில்லுமுல்லு: கண்டுபிடிப்பது எப்படி?

அனலாக் ஓடோமீட்டராக இருந்தால், எண்கள் நேர்கோட்டில் சரியாக இருக்கிறதா என்பதை கவனிக்கவும். அவை சற்றே ஒழுங்கற்ற நிலையில் இருந்தால், நிச்சயமாக தில்லுமுல்லு செய்திருக்கிறார்கள் என்று புரிந்து கொள்ளலாம்.

கார்களின் ஓடோமீட்டரில் தில்லுமுல்லு: கண்டுபிடிப்பது எப்படி?

சற்றே கவனமாக ஓடோமீட்டரை ஆய்வு செய்தால், இந்த மோசடியை எளிதாக கண்டறிந்து விடலாம். பயன்படுத்தப்பட்ட கார் வாங்கும்போது, கார் பற்றி நன்கு அறிந்தவர்கள் அல்லது மெக்கானிக்கை உடன் அழைத்துச் செல்வது அவசியம். அவர்கள் மூலமாக இந்த தில்லுமுல்லுவை எளிதாக கண்டுபிடித்துவிட வாய்ப்புண்டு.

Most Read Articles

English summary
How To detect Odometer Tampering?
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X