புதிய காரை டெஸ்ட் டிரைவ் செய்யும்போது கடைபிடிக்க வேண்டிய விஷயங்கள்!

By Saravana

கார் வாங்கும்போது டெஸ்ட் டிரைவ் செய்து பார்ப்பது மிக அவசியமானது. அப்போதுதான் அந்த காரின் நல்லது கெட்டது என அனைத்து விஷயங்களையும் தெரிந்துகொள்ள முடியும்.

டெஸ்ட் டிரைவ் செய்கிறேன் என்ற பெயரில் ஒரு சில கிலோமீட்டர் தூரம் ஓட்டிச் சென்று விட்டு என்ன வசதிகள் என்பதைகூட பார்க்காமல் சிலர் இறங்கி விடுவர். இது முற்றிலும் தவறானது. எனவே, டெஸ்ட் டிரைவ் செய்யும்போது கடைபிடிக்க வேண்டிய சில வழிமுறைகளை காணலாம்.

டிப்ஸ்

டிப்ஸ்

புதிய கார் வாங்கும்போது டெஸ்ட் டிரைவ் செய்யும்போது சில எளிய வழிமுறைகளை கடைபிடித்தால் காரை தேர்வதற்கு எளிதாகும். அடுத்தடுத்த ஸ்லைடுகளில் நினைவில் இருத்திக் கொள்வதற்கான சில வழிமுறைகளை வழங்கியுள்ளோம்.

 செக்லிஸ்ட்

செக்லிஸ்ட்

காரில் என்னென்ன அம்சங்கள் உங்களுக்கு தேவையானதாக நினைக்கிறீர்கள் என்பதை ஒரு பேப்பரில் எழுதி வைத்துக் கொள்ளுங்கள். டெஸ்ட் டிரைவ் செய்யும்போது அனைத்து விஷயங்களையும் சோதித்து பார்த்துவிட்டதை சரிபார்த்துக் கொள்ள இது உதவும். மேலும், நீங்கள் வாங்கப்போகும் வேரியண்ட்டும், டெஸ்ட் டிரைவ் செய்யும் வேரியண்ட்டிற்கும் வித்தியாசம் இருக்கலாம். எனவே, விற்பனை பிரதிநிதியிடம் இந்த செக்லிஸ்ட்டை வைத்து வசதிகளை கேட்டு தெரிந்து கொள்ளலாம்.

 எங்கு டெஸ்ட் டிரைவ் செய்வது?

எங்கு டெஸ்ட் டிரைவ் செய்வது?

போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலை, நெடுஞ்சாலை என இரண்டிலும் டெஸ்ட் டிரைவ் செய்வது அவசியம். அப்போதுதான் காரின் எஞ்சின், கையாளுமை போன்ற முக்கிய விஷயங்கள் பற்றி நன்றாக தெரிந்துகொள்ள முடியும். மேலும், பிரேக் எவ்வாறு செயல்படுகிறதை என்பதையும் பார்த்துவிடுங்கள். பாதுகாப்பான பயணத்தை வழங்குமா என்பதையும் அறிந்துகொள்ள ஏதுவாகும். மேலும், நீங்கள் எந்தவிதமான சாலையில் தினசரி பயன்படுத்துவீர்களோ அதேபோன்ற சாலையில் டெஸ்ட் டிரைவ் செய்து பார்ப்பதும் அவசியம்.

பார்க்கிங் பிரச்னை

பார்க்கிங் பிரச்னை

நீங்கள் வாங்கப் போகும் கார் உங்கள் வீடு மற்றும் அலுவலகத்தில் பார்க்கிங் செய்ய ஏற்றதாக இருக்கிறதா என்பதையும் பார்த்துக் கொள்வது நல்லது. மேலும், தினசரி பார்க்கிங் செய்யும்போது பிரச்னை இல்லாமல் இருக்கும்.

குடும்பத்தினர் அவசியம்

குடும்பத்தினர் அவசியம்

நீங்கள் வாங்கப்போகும் காரில் உங்கள் குடும்பத்தினரையும் அழைத்துச் சென்று டெஸ்ட் டிரைவ் செய்து பாருங்கள். இது மிக அவசியமானது. அவர்களது சவுகரியத்தையும் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.

வசதிகள்

வசதிகள்

சிலர் காரை வாங்கிவிட்டு அதில் இருக்கும் வசதிகளை இயக்கத் தெரியாமலே கைவைக்க மாட்டார்கள். எனவே, காரை டெஸ்ட் டிரைவ் செய்யும்போது உடன் வரும் டெஸ்ட் டிரைவரிடம் காரைப் பற்றிய அனைத்து வசதிகள் குறித்தும், அதை எவ்வாறு இயக்குவது என்பது குறித்தும் முழுமையாக கேட்டு தெரிந்துகொள்ளுங்கள். ஏசி, டிவிடி பிளேயர், குரூஸ் கன்ட்ரோல் மற்றும் வழிகாட்டி சாதனம் என காரில் இருக்கும் அனைத்து வசதிகளை இயக்குவது பற்றி ஏ டூ இசட் கேட்டு தெரிந்துகொள்ளுங்கள். கார் வாங்கிய பின் ஓட்டும்போது வசதிகளை எளிதாக கையாள உதவும். அவை இயக்குவதற்கு எளிதாக இருக்கிறதா என்பதையம் பார்த்துக்கொள்ளுங்கள்.

காரை ஓட்டினால் போதுமா?

காரை ஓட்டினால் போதுமா?

காரை டெஸ்ட் டிரைவ் செய்யும்போது டிரைவர் இருக்கையில் அமர்ந்து சென்று பார்ப்பது மட்டும் கிடையாது. டீலர்ஷிப்பிலிருந்து வரும் டிரைவர் அல்லது விற்பனை பிரதிநிதியை ஓட்டச் சொல்லிவிட்டு. பிற இருக்கையிலும் சிறிது தூரம் அமர்ந்து சென்று இருக்கை அமைப்புகள் சரியாகவும், சொகுசாகவும் இருக்கிறதா, சஸ்பென்ஷன் செயல்பாடு எவ்வாறு இருக்கிறது என்று பார்க்கவும். மேலும், காருக்குள் அமர்ந்தவுடன் கூரை மீது தலை இடிக்காமல் போதிய இடைவெளி இருக்கிறதா என்று பார்க்கவும்.

இதேபோன்று, மற்ற இருக்கைகளிலும் கால் வைக்க இடம் போதுமானதாக இருக்கிறதா என்பது பார்ப்பது அவசியம். ஒரே பட்ஜெட்டில் விற்பனை செய்யப்படும் கார்களில் அதிக இடவசதி கொண்ட காரை கண்டறிந்து வாங்குவது நல்லது.

தேவையில்லாத சப்தம்

தேவையில்லாத சப்தம்

காரை டெஸ்ட் டிரைவ் செய்யும்போது தேவையில்லாத சப்தம் ஏதெனும் வருகிறதா என்பதை கூர்ந்து கவனிக்கவும். பெரும்பாலும் பெட்ரோல் கார்களின் கேபினுக்குள் அதிக சப்தம் இருக்காது. அதேவேளை, டீசல் கார்களில் சப்தம் வர வாய்ப்புள்ளது. மேலும், ஏசி கம்பரஷரிலிருந்து சப்தம் வருகிறதா என்பதையும் நன்றாக கவனிக்கவும். மியூசிக் சிஸ்டம் இருந்தால் ஸ்பீக்கரின் தரம் மற்றும் துல்லியமாக உள்ளதாக என்பதையும் பாருங்கள்.

அனுபவஸ்தர் அவசியம்

அனுபவஸ்தர் அவசியம்

டெஸ்ட் டிரைவ் செய்யும்போது காரை பற்றி நல்ல அனுபவமுள்ள நண்பர் அல்லது மெக்கானிக்கை உடன் அழைத்துச் செல்லுங்கள். உங்களுக்கு காரை பற்றி நன்கு தெரிந்திருந்தாலும், நீங்கள் டெஸ்ட் டிரைவ் செய்யும்போது கவனிக்காத விஷயத்தை அவர் சொல்ல வாய்ப்புண்டு. மேற்கண்ட வழிமுறைகளை கடைபிடித்து டெஸ்ட் டிரைவ் செய்யுங்கள். நிச்சயம் உங்கள் முதலீட்டுக்கும், வசதிக்கும் ஏற்ற காரை தெளிவாக தேர்வு செய்யலாம்.

Most Read Articles

English summary
A car test drive might appear simple but it is the most important aspect for buying or not buying a car. Here are some tips that will help you choose the best car as per your requirements.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X