வெள்ளக்காடாக மாறிய சென்னையில் பாதுகாப்பாக கார் ஓட்டுவதற்கு சில வழிமுறைகள்

Posted By:

வரலாறு காணாத மழையால் சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. இந்த நிலையில், அலுவலகம் செல்வோர், வர்த்தகர்கள் மற்றும் அவசர வேலையாக  காரில் வெளியில் செல்வோர் மிகுந்த அவஸ்தையும், ஆபத்தையும் அனுபவித்து வருகின்றனர்.

உயிரை கையில் பிடித்துக் கொண்டுதான் தங்கள் அன்றாட பணிகளை செய்யுமளவிற்கு நிலைமை உள்ளது. இந்த நிலையில், அவசர வேலையாகவும், அத்தியாவசியமாகவும் காரில் செல்ல வேண்டியிருப்பவர்கள், தண்ணீர் தேங்கிய சாலைகளில் காரை பாதுகாப்பாகவும், எச்சரிக்கையாகவும் இருக்கும் விதத்தில் சில விஷயங்களை தொகுத்து வழங்கியிருக்கிறோம். இது உங்களுக்கு பயன்படும் என்று நம்புகிறோம்.

 01. மாற்று வழி

01. மாற்று வழி

அதிக மழை நீர் தேங்கி பாதிப்பு உள்ள பகுதிகளில் இருப்போர், காரை எடுப்பதை தவிர்க்கவும். அவசியம் அல்லது அவசரம் செல்ல வேண்டியிருந்தால் மட்டுமே காரை பயன்படுத்துங்கள். உங்கள் வீட்டிலிருந்து செல்லுமிடத்திற்கான வழி குறித்த நிலையை தெரிந்துகொண்டு காரில் செல்வதும், மாற்று வழியில் செல்வதும் சிக்கல் இருக்காது. வானிலை முன் அறிவிப்புகளை தெரிந்து கொண்டு வெளியூர் பயணங்களை திட்டமிட்டு செல்வதும் அவசியம்.

02. விஷப்பரீட்சை வேண்டாம்

02. விஷப்பரீட்சை வேண்டாம்

கார்கள் சராசரியாக 12 இன்ச் அளவு உயரத்திற்கு தேங்கியிருக்கும் தண்ணீரை கடக்கும். ஆனால், 6 இன்ச் அளவுக்கு மேல் தேங்கி நிற்கும் தண்ணீரிலும், 4 இன்ச் உயரத்திற்கு மேல் ஓடும் தண்ணீர் உள்ள இடங்களிலும் காரை செலுத்துவதை தவிர்க்கவும். அப்படி செல்ல வேண்டியபட்சத்தில், அடுத்து வரும் முறைகளை கடைபிடிக்கவும்.

03. ஆழம் தெரியாமல் காரை விடாதே...

03. ஆழம் தெரியாமல் காரை விடாதே...

புதிய இடங்களுக்கு செல்லும்போது, ஆழம் தெரியாத இடங்களில் மிக மெதுவாக செல்லவும். முன்னால் செல்லும் கனரக வாகனங்கள் அல்லது பிற வாகனங்களை வைத்து கணித்துக் கொண்டு சாலையின் பாதுகாப்பான இடத்தில் காரை செலுத்தவும். மேலும், கழிவு நீர் கால்வாய்கள் திறந்து வைக்கப்பட்டிருப்பதால், மெதுவாக செல்வதன் மூலமாக ஓரளவு கணித்து செலுத்த வாய்ப்புண்டு.

04. எஞ்சின் ஹைட்ரோலாக்

04. எஞ்சின் ஹைட்ரோலாக்

அவசரப்பட்டு தண்ணீர் தேங்கிய சாலைகளை கடக்க முற்படும்போது, அலைகள் ஏற்பட்டு, காரின் பானட்டிற்குள் தண்ணீர் புகுந்து ஹைட்ரோலாக் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது. எனவே, மிக மெதுவாக வாகனத்தை தண்ணீரில் செலுத்தவும். ஹைட்ரோலாக் பிரச்னை மட்டுமின்றி, மெதுவாக தண்ணீர் தேங்கிய சாலைகளை கடக்கும்போது புகைப்போக்கி குழாயில் நீர் புகுந்துவிடும் வாய்ப்புள்ளது.

05. எப்படி செலுத்துவது?

05. எப்படி செலுத்துவது?

புகைப்போக்கியில் தண்ணீர் புகும் அபாயம் உள்ள சமயங்களில், முதல் கியரில் வைத்து செலுத்தவும். அத்துடன், அரை கிளட்ச்சில் வைத்துக் கொண்டு ஆக்சிலரேட்டரை சற்று அதிகமாக கொடுத்து செல்லவும். 5 கிமீ வேகத்திற்கும் மிகாமல் வண்டியை நகர்த்தவும். அவசரப்பட்டால், ஆபத்தை விலை கொடுத்து வாங்குவீர்கள்.

06. நீர் ஓட்டம்

06. நீர் ஓட்டம்

சாலைகளின் சில இடங்களில் தண்ணீர் ஒரு புறத்திலிருந்து மற்றொரு புறத்திற்கு வேகமாக செல்லும். அந்த இடத்தில் அரிப்பு ஏற்பட்டு, பள்ளம் தோன்றியிருக்கலாம். அல்லது கார் கடக்கும்போது இழுத்துச் செல்லப்படலாம். எனவே, மிக மெதுவாக முதலில் காரை செலுத்த முயற்சிக்கவும். தண்ணீரின் வேகத்தில் கட்டுப்பாடு குலைந்தால், காரை பின்னோக்கி எடுத்துவிடவும். கடக்க முயற்சிக்க வேண்டாம்.

07. தேங்கிய நீரும் ஆபத்து...

07. தேங்கிய நீரும் ஆபத்து...

தேங்கிய நீரில் காரை ஒருபோதும் வேகமாக செலுத்தி கடக்க வேண்டாம். சில சமயங்களில் காரின் ஸ்டீயரிங் கன்ட்ரோல் போகும் ஆபத்து உள்ளது. மேலும், தண்ணீர் தேங்கிய சாலைகளை கடந்த பின்னர், டிரம் பிரேக் கொண்ட கார்களில் மட்டுமல்ல, அனைத்து கார்களிலும் தண்ணீரை கடந்தவுடன் ஒருமுறை பிரேக்கை பிடித்து பார்த்து பின்னர் மேற்படி செல்லவும்.

 08. சமயோஜிதம்

08. சமயோஜிதம்

மழை பெய்தால், இண்டிகேட்டர்களை ஒளிர விட்டு செல்லுங்கள். தண்ணீர் தேங்கிய சாலைகளில் முன்னால் மெதுவாக செல்லும் வாகனங்களை ஓவர்டேக் செய்வதையும் தவிர்க்கலாம். அத்துடன், குறிப்பிட்ட இடைவெளி செல்வதுடன், எதிரில் வரும் வாகனங்களுக்கு வழிவிடுங்கள். பாதுகாப்பான இடத்தில் காரை நிறுத்தி, எதிரில் வரும் வாகனங்களுக்கு வழிவிடுங்கள். போக்குவரத்து ஸ்தம்பிப்பதை தவிர்க்கலாம்.

09. மின்சார கம்பங்கள்

09. மின்சார கம்பங்கள்

சாலையில் மின்சார கம்பங்கள் அல்லது மரங்கள் முறிந்து விழும் ஆபத்தும் இருக்கிறது. அதுபோன்ற, சமயங்களில் மிகவும் நிதானித்து, கவனித்து எச்சரிக்கை உணர்வுடன் செல்க. சாலையில் அதிக மின்னழுத்தம் கொண்ட மின்தட கம்பிகள் இருக்கும் இடங்களில் எச்சரிக்கையாக செல்லவும்.

10. எஞ்சின் ரீ - ஸ்டார்ட்

10. எஞ்சின் ரீ - ஸ்டார்ட்

தண்ணீர் தேங்கிய இடத்தில் செல்லும்போது, கார் எஞ்சின் அணைந்துவிட்டால் காரை திரும்ப ஸ்டார்ட் செய்து பார்க்கவும். இல்லையென்றால், காரிலிருந்து பாதுகாப்பாக வெளியில் இறங்கி, உதவி மையத்திற்கு தகவல் தெரிவிக்கவும். இல்லையெனில், அக்கம் பக்கத்தினரின் உதவியுடன், சாலையில் பாதுகாப்பான இடத்திற்கு நகர்த்தி வைத்து விட்டு, அங்கீகரிக்கப்பட்ட சர்வீஸ் மையத்தின் உதவியை கோரலாம்.

11. இரவு நேரத்தில்...

11. இரவு நேரத்தில்...

அவசரத்தை தவிர்த்து, இரவு நேரத்தில் காரை எடுத்து வெளியில் செல்வதை அவசியம் தவிர்ப்பது நல்லது. குறிப்பாக, தண்ணீர் தேங்கிய சாலைகளில் அறவே செல்லக்கூடாது. மேலும், இரவு நேரத்தில் பிற வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கும் விதத்தில், இண்டிகேட்டர் விளக்குகளை ஒளிர விட்டு செல்லவும். லோ பீம் மற்றும் பனி விளக்குகளை போட்டு, குறைவான வேகத்தில் கூடுதல் கவனத்துடன் செல்க.

12. பார்க்கிங்

12. பார்க்கிங்

இன்று பெரும்பாலான கார்கள் சாலையோரங்களில்தான் பார்க்கிங் செய்யப்படுகின்றன. இந்தநிலையில், மழை மற்றும் காற்று வீசும் வாய்ப்பு இருப்பதால், தண்ணீர் தேங்கும் வாய்ப்பு அதிகம் உள்ள பகுதிகளிலும், மரங்கள் முறிந்து விழும் ஆபத்து உள்ள பகுதிகளிலும் கார்களை நிறுத்த வேண்டாம். நண்பர்கள் அல்லது உறுவினர்கள் வீடுகளில் பாதுகாப்பாக பார்க்கிங் செய்துவிடுங்கள்.

தண்ணீர் தேங்கிய சாலைகளில் டிரைவிங் செய்யும்போது...

01. மழைநேரத்தில் கார் ஓட்டும்போது...

02. கார் எஞ்சின் ஹைட்ரோலாக் ஆவதை தவிர்க்க...

03. மழைக்காலத்தில் கார் பராமரிப்பு...

மழை பாதிப்புகள் குறித்த புகார்களுக்கான அவசர உதவி எண்கள்

மாவட்ட கட்டுப்பாட்டு மையத்தை தொடர்பு கொள்ள 1077 என்ற தொலைபேசி எண்ணை அழையுங்கள்.

மின் வயர் அறுந்தது குறித்த புகாருக்கு 1913 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்...

விரிவான செய்திக்கு க்ளிக் செய்க...

டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்துடன் தொடர்பில் இருங்கள்

தமிழ் கூறும் நல் உலகின் முதல் ஆட்டோமொபைல் செய்தி தளம் டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் சமூக வலைதள பக்கங்களில் உடனே விருப்பதை தெரிவித்து இணைந்து கொள்ளுங்கள்.

ஃபேஸ்புக் பக்கம்

டுவிட்டர் பக்கம்

 
English summary
Follow these tips to drive your car on flooded roads.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark