ஏமாந்துடாதீங்கோ... 2016ம் ஆண்டில் தயாரிக்கப்பட்ட கார் தானா என்பதை அறிவது எப்படி?

Written By:

ஓர் ஆண்டு வித்தியாசத்தை தவிர்ப்பதற்காக, கடந்த ஆண்டு இறுதியில் கார் வாங்குவதை தவிர்த்து, விலை உயர்ந்தாலும் பரவாயில்லை புத்தாண்டில் கார் வாங்கினால் சிறப்பானது என்று கருதியிருந்தவர்கள் தற்போது தங்களது கார் வாங்கும் படலத்தை துவங்கியிருப்பார்கள். இன்வாய்ஸ் போடப்படுவதை வைத்து, 2016ம் ஆண்டு மாடல் என்று நம்பி பலர் வாங்கிவிடுகின்றனர்.

ஆனால், காரின் தயாரிப்பு தேதிதான் மறு விற்பனையின்போது பார்க்கப்படும். எனவே, புத்தாண்டில் கார் வாங்குவோர் கடந்த ஆண்டு தயாரிப்பு தேதி கொண்ட காரை கண்டறிந்து வாங்குவதை தவிர்ப்பது அவசியம். இந்தநிலையில், 2015ம் ஆண்டு மற்றும் 2016ம் ஆண்டு தயாரிப்பு தேதியை எளிதாக கண்டறிந்து வாங்குவதற்கான எளிய உபாயத்தை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.

'வின்' நம்பர்

'வின்' நம்பர்

அனைத்து நிறுவனங்களும் ஒவ்வொரு காருக்கும் பிரத்யேக அடையாள எண்ணை (வின் சேஸி நம்பர்)குறிப்பிடுகின்றன.

வின் நம்பர் பயன்

வின் நம்பர் பயன்

வின் சேஸி நம்பரில் கார் தயாரிக்கப்பட்ட மாதம் மற்றும் வருடத்தை துல்லியமாக குறிப்பிடுகின்றன. பூதாகரமாக நினைத்துக்கொள்ள வேண்டாம். ஒவ்வொரு மாதம் மற்றும் ஆண்டுக்கு ஒரு குறிப்பிட்ட ஆங்கில எழுத்தை குறியீட்டு எழுத்தாக கார் நிறுவனங்கள் பயன்படுத்துகின்றன. சில நிறுவனங்கள் எண்களையும் குறியீடாக பயன்படுத்துகின்றன.

வின் நம்பர் இலக்கம்

வின் நம்பர் இலக்கம்

பெரும்பாலான நிறுவனங்கள் 17 எழுத்துக்கள் மற்றும் எண்கள் கொண்ட வின் நம்பர் குறியீட்டை பயன்படுத்துகின்றன. ஆனால், சில நிறுவனங்கள் அதிக வின் நம்பர்களை பயன்படுத்துகின்றன. அதாவது, 22 இலக்க வின் நம்பர்களை பயன்படுத்துகின்றன.

குறியீடுகள்

குறியீடுகள்

மாதக் குறியீடுகள்:

A-ஜனவரி, B-பிப்ரவரி, C- மார்ச், D-ஏப்ரல், E-மே, F- ஜூன், G- ஜூலை, H- ஆகஸ்ட், J- செப்டம்பர், K-அக்டோபர், L-நவம்பர், M- டிசம்பர்

ஆண்டு குறியீடுகள்:

A- 2010, B- 2011, C- 2012, D- 2013, E- 2014, F- 2015, G- 2016, H- 2017, J- 2018, K- 2019 என்று குறிக்கப்படுகின்றன. இது பெரும்பாலான நிறுவனங்களுக்கு பொதுவான குறியீடுகள்.

உதாரணம்

உதாரணம்

உதாரணமாக, டாடா மோட்டார்ஸ் நிறுவனம் பயன்படு்த்தும் 17 எழுத்துக்களில் 10வது எழுத்து வருடத்தையும், 12- வது எழுத்து மாதத்தையும் குறிப்பிடுகிறது. இந்த குறியீட்டு எழுத்துக்கள் ஒன்றுதான் என்றாலும், எழுத்து வரிசை முறை நிறுவனத்துக்கு நிறுவனம் மாறுபடுகிறது.

கண்டறியும் முறை

கண்டறியும் முறை

டாடா மோட்டார்ஸ் கார் ஒன்றின் வின் நம்பரில் 10 வது எழுத்து G என்றும் 12 வது எழுத்து A என்றும் இருந்தால், அந்த கார் 2016ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் தயாரிக்கப்பட்ட கார் என்பதை எளிதாக கண்டுபிடித்துவிடலாம்.

2015 மற்றும் 2016 தயாரிப்பு

2015 மற்றும் 2016 தயாரிப்பு

2015ம் ஆண்டு 2016ம் ஆண்டு என இரண்டையும், எளிமையாக கண்டறிவதற்கு ஒரே உபாயம் இதுதான். வின் நம்பரின் 10வது இலக்கம் F என்று இருந்தால் 2015ம் ஆண்டையும், G என்று இருந்தால் 2016ம் ஆண்டையும் குறிக்கும். இதை வைத்து எளிதாக கண்டுபிடித்துவிடலாம். ஆனால், இந்த இலக்க வரிசை நிறுவனத்துக்கு நிறுவனம் மாறுபடுகிறது.

மஹிந்திரா

மஹிந்திரா

மஹிந்திரா பயன்படுத்தும் மொத்தம் 17 எழுத்து மற்றும் எண்களில் 10வது எழுத்து வருடத்தையும், 12 வது எழுத்து மாதத்தையும் குறிக்கும்.

செவர்லே:

செவர்லே:

செவர்லே பயன்படுத்தும் மொத்தம் 17 எழுத்து மற்றும் எண்களில் 7 வது எழுத்து மாதத்தையும், 9 வது எழுத்து வருடத்தையும் குறிக்கும்.

ஹோண்டா கார்ஸ்:

ஹோண்டா கார்ஸ்:

மொத்தம் 17 எழுத்து மற்றும் எண்களில் 9 வது எழுத்து மாதத்தையும், 10 வது ஆங்கில எழுத்து வருடத்தையும் குறிக்கும்.

ஃபோக்ஸ்வேகன்:

ஃபோக்ஸ்வேகன்:

ஃபோக்ஸ்வேகன் நிறுவன கார்களின் 4வது எழுத்து மாதத்தையும், 10-வது எழுத்து காரின் மாடல் வருடத்தையும் குறிக்கும்.(சில கார் நிறுவனங்கள் புதிய மாடல்களை ஆண்டு பெயரை குறிப்பிட்டு மாடலை அழைக்கிறது.

ஸ்கோடா ஆட்டோ:

ஸ்கோடா ஆட்டோ:

ஸ்கோடா ஆட்டோ நிறுவனம் 6வது எழுத்தை மாதத்திற்கும், 10வது எழுத்தை வருடத்தை குறிப்பதற்கும் பயன்படுத்துகிறது. வின் வரிசையில் 6வது எழுத்து சி என்றும் 10 வது எழுத்து பி ஆங்கில எழுத்தாக இருந்தால் அது 2011ம் ஆண்டு மார்ச்சில் தயாரிக்கப்பட்ட கார்.

ஃபியட்:

ஃபியட்:

ஃபியட் நிறுவனம் தனது கார்களில் 20 இலக்க வின் நம்பராக பயன்படுத்துகிறது. வின் வரிசையில் 18 வது எழுத்தை மாதத்திற்கும், 19 மற்றும் 20வது இடத்தில் உள்ள எழுத்துக்கள் வருடத்தையும் குறிக்கும். அதாவது, ஆண்டு குறியீடாக இரண்டு ஆங்கில எழுத்துக்களை ஃபியட் பயன்படுத்துகிறது.

மாருதி சுஸுகி

மாருதி சுஸுகி

மாருதி நிறுவனம் 21 இலக்க எண்களை பயன்படுத்துகிறது. 20வது எழுத்து மாதத்தையும், 21வது எழுத்து ஆண்டையும் குறிக்கிறது.

ஃபோர்டு:

ஃபோர்டு:

ஃபோர்டு கார்களின் வின் நம்பரின் 11வது இலக்கம் வருடத்தையும், 12வது இலக்கம் மாதத்தையும் குறிக்கும். ஆனால், மாதக் குறியீடுகள் மாறுகின்றன. அவற்றை கீழே காணலாம்.

ஃபோர்டு மாதக் குறியீடுகள்:

L- ஜனவரி, Y- பிப்ரவரி, S- மார்ச், T- ஏப்ரல், J- மே, U- ஜூன், M- ஜூலை, P- ஆகஸ்ட், B- செப்டம்பர், R- அக்டோபர், A-நவம்பர், G- டிசம்பர்

ஹூண்டாய் மோட்டார்ஸ்

ஹூண்டாய் மோட்டார்ஸ்

ஹூண்டாய் நிறுவனத்தின் 10வது இலக்கம் வருடத்தையும், 19வது இலக்கம் மாதத்தையும் குறிக்கும்.

டொயோட்டா

டொயோட்டா

டொயோட்டா ஆங்கில எழுத்துக்களுக்கு பதிலாக எண்களையே குறியீடாக பயன்படுத்துகிறது. அதாவது, இதன் வின் நம்பரின் கடைசி 21வது மற்றும் 22வது இலக்கங்கள் 14 என்று முடிந்தால், 2014ம் ஆண்டை குறிக்கும்.

ரெனோ மற்றும் நிசான்

ரெனோ மற்றும் நிசான்

ரெனோ மற்றும் நிசான் கார் நிறுவனங்கள் 10வது எழுத்து வருடத்தையும், 11வது இலக்கத்தில் உள்ள எழுத்து மாதத்தையும் குறிப்பிடுகின்றன.

வின் நம்பர் எங்கெங்கு குறிக்கப்பட்டிருக்கும்

வின் நம்பர் எங்கெங்கு குறிக்கப்பட்டிருக்கும்

எஞ்சின் பகுதியில் இடது ஓரத்தில் ப்ரேமில் குறிக்கப்பட்டிருக்கும். ஓட்டுனர் பக்கம் கதவை திறந்து பார்த்தால், ஃப்ரேமில் குறிக்கப்பட்டிருக்கும். சில கார்களில் டேஷ்போர்டிலும் குறிக்கப்பட்டிருக்கும். இன்வாய்ஸ் போடுவதற்கு முன்னர் வின் நம்பரை கண்டறிந்து 2015ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட காரா என்பதே டீலரிடம் தெரிவித்துவிடவும். இன்வாய்ஸ் போட்டுவிட்டால் எதுவும் செய்ய இயலாது என்று டீலரில் கையை விரித்துவிடும் வாய்ப்பு இருக்கிறது.

 
English summary
Here is an easy way to identify and decode manufacturing year of Car through VIN Chassis Number.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark