காரில் அதிகபட்ச மைலேஜை பெறுவதற்கான வழிமுறைகள்!

இந்திய வாடிக்கையாளர்களில் பெரும்பாலானோர் மைலேஜ் விஷயத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பது தெரிந்ததே. அதேநேரத்தில், மைலேஜை பெறுவதற்காக சிலர் செய்யும் காரியங்களால் காரின் ஆயுட்காலம் குறைந்துபோகும் ஆபத்தும் இருக்கிறது.

சரியான ஓட்டுதல் முறைகளை கடைபிடிக்காததே இதற்கு காரணம். எனவே, காரில் அதிக மைலேஜை பெறுவது எப்படி? அதேசமயத்தில், காரையும் பாதுகாப்பாகவும், அதன் ஆயுட்காலத்தை அதிகரிக்கச் செய்யும் சில விஷயங்களை தொகுத்துள்ளோம்.

செய்தியின் தொடர்ச்சியை ஸ்லைடரில் படிக்கலாம்.

வழிகாட்டு முறைகள்

வழிகாட்டு முறைகள்

காரில் அதிகபட்ச மைலேஜை பெறுவதற்கான 15 முக்கிய வழிமுறைகளை அடுத்தடுத்த ஸ்லைடுகளில் காணலாம்.

1.மித வேகம், மிக நன்று

1.மித வேகம், மிக நன்று

பெரும்பாலான கார்கள் 60 கிமீ முதல் 80 கிமீ வேகத்திற்கு இடையில் செல்லும்போது சிறப்பான மைலேஜை வழங்கும். எனவே, சாலையை பொறுத்து இந்த வேகத்தை கடைபிடித்தால் வியக்கத்தக்க அளவில் மைலேஜ் மேம்படும். மேலும், போக்குவரத்து நெரிசல்களில் வெடுக் வெடுக் என்று காரை நகர்த்துவதை தவிர்ப்பதும் நல்லது.

2.மென்மையாக கையாளுங்கள்

2.மென்மையாக கையாளுங்கள்

ஆக்சிலேட்டரை மென்மையாக கொடுப்பதும், கியர் மாற்றும் முறைகளிலும் மைலேஜை மேம்படுத்தலாம். ஆக்சிலேட்டரை ஒரு முட்டையாக நினைத்துக் கொண்டு காலை மிதிக்க பழகுங்கள். உங்களது ஆக்சிலேட்டர் கொடுக்கும் விதத்தில் அதிக மாற்றம் வரும். இதன்மூலம், மைலேஜும் நிச்சயமாக அதிகரிக்கும். சிக்னல்களை நெருங்கும்போது காரை நிறுத்த வேண்டிய அவசியத்தை உணர்ந்தால் முன்கூட்டியே ஆக்சிலேட்டர் கொடுப்பதை நிறுத்திவிட்டு காரின் வேகத்தை தானாக குறையுமாறு செய்து சிக்னல் அருகில் வந்து பிரேக் போட்டு நிறுத்துங்கள்.

3.சரியான கியர்

3.சரியான கியர்

வேகத்துக்கு தகுந்தவாறு கியரை மாற்ற வேண்டும் என்று என்பதை அனைவரும் அறிந்ததுதான். ஆனால், சிலர் சரியான கியரில் காரை ஓட்டுவதில்லை. ஒரு வேகத்தடை அருகில் நின்று கவனித்தீர்கள் என்றால், சிலர் கியரை மாற்றாமல் டாப் கியரிலேயே வைத்து ஆக்சிலேட்டரை அதிகமாக கொடுத்து காரை இயக்குவர். இது அபத்தமான டிரைவிங். சிலர் தெரியாமலும், சிலர் சோம்பேறித்தனமாகவும் இவ்வாறு செய்கின்றனர். இது கார் எஞ்சினின் ஆயுட்காலத்தை குறைக்கும் செயல். மைலேஜும் குறையும். எனவே, வேகத்துக்கு தகுந்தவாறு கியரை மாற்றி செல்வது மைலேஜை அதிகரிக்கும்.

4. எஞ்சின் ஆஃப்

4. எஞ்சின் ஆஃப்

சிக்னலில் நிற்கும்போது எஞ்சினை அணைத்தால் அதிக மைலேஜ் பெறலாம் என்று பெரும்பாலானோர் நினைக்கின்றனர். அது தவறானதாகவே குறிப்பிடப்படுகிறது. அதிக நிமிடங்கள் நிற்க வேண்டிய சிக்னல்களில் மட்டும் அணைத்து வைக்கலாம்.

5. ஏசி பயன்பாடு

5. ஏசி பயன்பாடு

காரில் ஏசி.,யை பயன்டுத்தும்போது எஞ்சின் கூடுதல் திறனை அளிக்க வேண்டி அதிக எரிபொருளை உட்கொள்ளும். இதனால், மைலேஜ் குறையும். ஆனால், வெயில், தூசி என நம் நாட்டு தட்பவெப்ப நிலை மற்றும் சுற்றுப்புறம் காரின் கதவை திறந்து வைக்க அனுமதிப்பதில்லை. இருப்பினும், சீதோஷ்ண நிலை சிறப்பாக இருக்கும்போது ஏசி., பயன்பாட்டை தவிர்க்கலாம். மேலும், குறைவான வேகத்தில் செல்லும்போது ஏசி.,யை அணைத்துவிடலாம். கிளைமேட் கன்ட்ரோல் ஏசி இருந்தால் ஆட்டோமேட்டிக் வசதியை அணைத்துவிட்டு, குறைவான வேகத்தில் புளோயர்களை வைக்கலாம். அதேவேளை, நெடுஞ்சாலையில் அதிவேகத்தில் செல்லும்போது கண்ணாடி ஜன்னல்களை மூடி விட்டு ஏசி.,யை போட்டுச் செல்லுங்கள். இது காரின் ஏரோடைனமிக்கை அதிகரித்து அதிக எரிபொருள் சிக்கனத்தை அளிக்கும்.

6. டயரில் காற்றழுத்தம்

6. டயரில் காற்றழுத்தம்

டயரில் பரிந்துரைக்கப்பட்ட அளவு காற்றழுத்தத்தை வைத்திருத்தாலே 3 சதவீதம் கூடுதல் மைலேஜை பெற முடியும். குறைந்த ரோலிங் கொண்ட டயர்களை வாங்கி பொருத்துவதும் ஆற்றல் விரயத்தை தவிர்க்கும். நீண்ட தூர பயணங்கள் செல்லும்போது, அலாய் வீல்களில் லோ புரோஃபைல் டயர்களை பொருத்தியிருந்தால், சாதாரண டயர்களை மாற்றிவிட்டு செல்லும்போது அதிக மைலேஜ் கிடைக்கும். லோ புரோஃபைல் டயர்கள் அதிக உராய்வுத் தன்மை, தரை பிடிமானம் கொண்டதால் மைலேஜ் அதிகம் எதிர்பார்க்க முடியாது.

7. சர்வீஸ்

7. சர்வீஸ்

குறித்த இடைவெளியில் சர்வீஸ் செய்வதும் காரின் மைலேஜ் சிறப்பாக இருப்பதற்கான முக்கிய காரணம். ஏர் ஃபில்டர், ஃப்யூவல் ஃபில்டர் மற்றும் ஸ்பார்க் பிளக்குகளை சோதிக்க தவறாதீர். 60,000 கிமீ ஓடிய கார்களில் ஆக்சிஜன் சென்சாரையும் சோதிக்க வேண்டும். ஆக்சிஜன் சென்சாரில் பிரச்னை இருந்தால், காரின் மைலேஜ் 20 சதவீதம் வரை குறையும்.

8. சுமையை சுமத்தாதீர்

8. சுமையை சுமத்தாதீர்

காரின் எடை கூடும்போது மைலேஜிலும் அதிக மாற்றம் ஏற்படும். எனவே, எப்போதுமே காரில் அதிக பொருட்களை எடுத்துச் செல்வதை தவிர்க்கவும்.

9. குளிர்ச்சியான சமயம்

9. குளிர்ச்சியான சமயம்

குளிர்ச்சியான சமயங்களில் பெட்ரோல், டீசலின் அடர்த்தி அதிகமாக இருக்கும். எனவே, காலை அல்லது இரவு நேரத்தில் எரிபொருள் நிரப்பும்போது சரியான அளவு எரிபொருளை பெற முடியும்.

10. ப்ளான் பண்ணி போகணும்

10. ப்ளான் பண்ணி போகணும்

பொருட்களை வாங்க செல்லும்போது ஒவ்வொரு கடையாக நிறுத்தி ஒரு பொருளை வாங்குவதற்கு பதிலாக, அனைத்து பொருட்களையும் வாங்கும் வசதி கொண்ட வணிக வளாகங்களுக்கு செல்வது நல்லது. ஜிபிஎஸ் கருவியையும் பொருத்திக் கொண்டால், நிச்சயம் போக்குவரத்து நெரிசல்களை தெரிந்துகொண்டு மாற்று வழிகளில் செல்ல முடியும். இதனால், கூடுதல் எரிபொருள் சிக்கனத்தை பெற முடியும்.

11. எரிபொருள்

11. எரிபொருள்

செறிவூட்டப்ட்ட எரிபொருள் மற்றும் ஆயில்களை பயன்படுத்தாதீர். கார் தயாரிப்பாளர் பரிந்துரைக்கப்பட்ட எரிபொருள் மற்றும் ஆயில்களையே பயன்படுத்துங்கள். செறிவூட்டப்பட்ட எரிபொருள் மற்றும் ஆயில்களால் காரின் எஞ்சினில் பாதிப்புகள் ஏற்படும்.

12. ஆட்டோமேட்டிக் கியர் கார்

12. ஆட்டோமேட்டிக் கியர் கார்

ஆட்டோமேட்டிக் கார் வைத்திருப்பவர்கள் வாய்ப்பு இருக்கும் சமயங்கள் மற்றும் நெரிசல் குறைந்த சாலைகளில் செல்லும்போது மேனுவல் மோடில் வைத்து ஓட்டலாம். இதன்மூலம், அதிக எரிபொருள் சிக்கனத்தை பெற முடியும்.

13. ஃபாலோ பண்ணுங்கள்

13. ஃபாலோ பண்ணுங்கள்

நீங்கள் சென்றடைய வேண்டிய இடத்தை எட்டுவதில் அவசரம் இல்லையெனில் இந்த ஐடியாவை முயற்சித்து பார்க்கலாம். கனரக வாகனங்களை குறிப்பிட்ட இடைவெளியில் பின்தொடர்ந்து செல்லும்போது மிதமான வேகத்தில் செல்ல முடியும். அதேசமயம், கனரக வாகனங்கள் பிரேக் போடுவதை கணிக்க முடியாமல் போகலாம். எனவே, கவனமாக இதனை முயற்சிக்கவும். இதன்மூலம், அதிக எரிபொருள் சிக்கனம் மட்டுமின்றி, பதட்டமில்லாமல் காரை ஓட்ட முடியும். ஆனால், நெடுஞ்சாலைகளில் கனரக வாகனங்களை பின்தொடர்வதை தவிர்த்துவிடுங்கள். ஆபத்தை விளைவிக்கும்.

14. இதையும் தவிர்க்கலாம்

14. இதையும் தவிர்க்கலாம்

நம்மில் பலர் கார் எஞ்சினை ஸ்டார்ட் செய்த பிறகே கூலிங் கிளாஸ் மற்றும் சீட் பெல்ட் போடுவது உள்ளிட்ட கடமைகளை செய்வோம். இவற்றை கார் எஞ்சினை ஸ்டார்ட் செய்வதற்கு முன்னரே செய்துவிட்டால், தேவையில்லாமல் எஞ்சின் ஐட்லிங்கில் நீண்ட நேரம் நிற்க வேண்டிய தேவையில்லை. இதன்மூலம், கூடுதல் எரிபொருள் சிக்கனத்தை பெறலாம்.

15. ரிவர்ஸ் பார்க்கிங்

15. ரிவர்ஸ் பார்க்கிங்

தினசரி காரை பயன்படுத்துபவர்கள் வீட்டிற்கு சென்றவுடன் காரை பின்புறமாக போர்டிகோ அல்லது கேரேஜில் நிறுத்திவிடுங்கள். காலையில் காரை ஸ்டார்ட் செய்யும்போது எஞ்சின் குளிர்ச்சியாக இருக்கும் சமயத்தில் நேராக எடுத்துச் சென்றால் எஞ்சினுக்கு அதிக தொந்தரவு கொடுப்பதை தவிர்க்க முடியும். இது கூடுதல் மைலேஜுக்கும் வழிவகுக்கும்.

பகிர்ந்து கொள்ளுங்கள்

பகிர்ந்து கொள்ளுங்கள்

இங்கு வழங்கப்பட்ட சில வழிகாட்டு முறைகளை மனதில் பதிய வைத்துக் கொண்டு டிரைவிங்கை பழங்குங்கள். நிச்சயமாக, உங்களது காரின் மைலேஜில் முன்னேற்றம் இருக்கும். இதனால், பணம் மிச்சமாவதோடு, உங்களது காரின் ஆயுளும் கூடும்.இதில், விடுபட்ட விஷயங்கள் அல்லது ஏதேனும் டிப்ஸ் இருந்தால் பகிர்ந்து கொள்ளுங்கள். பிறருக்கு பயனுள்ளதாக அமையும்.

Most Read Articles
English summary
We’ve put together a list of to-dos to get the most mileage out your car, but safely and without doing your car harm. We hope that these tips will not only keep the wallet from shedding weight, but make you a more aware and improved driver.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X