காரில் சிகரெட் வாடையை போக்குவதற்கான சில எளிய வழிமுறைகள்!

காரில் சிகரெட் வாடையால் பல பிரச்னைகள் ஏற்படுகின்றன. கார் உரிமையாளருக்கு அது பொருட்டாக இல்லாவிட்டாலும், உடன் பயணிப்பவர்களுக்கு அது கடும் எரிச்சலூட்டும். அத்தோடு நின்றால் பரவாயில்லை.

காரில் சிகரெட் வாடயை போக்குவதற்கான சில டிப்ஸ்!

குறிப்பு: இந்த செய்தியில் கொடுக்கப்பட்டிருக்கும் ரசாயனங்களை பயன்படுத்தும்போது கவனம் அல்லது அனுபவம் தேவை. இல்லையெனில் தவிர்க்கவும்.

செய்தி தொடர்ச்சி....

உடன் பயணிப்பவருக்கு உடல் பாதிப்புகளையும், அசகவுரியமான உணர்வயையும் ஏற்படுத்துகிறது. இந்த செய்தியில் காரில் சிகரெட் வாடயை போக்குவதற்கான சில எளிய வழிமுறைகளை தந்துள்ளோம்.

காரில் சிகரெட் வாடயை போக்குவதற்கான சில டிப்ஸ்!

காரில் ஏர் ஃப்ரெஷனர் போன்றவற்றை பயன்படுத்தினாலும், அவ்வளவு சீக்கிரமாக சிகரெட் வாடை போகாது. போதிய பலன் தராது. இதுபோன்ற நிலையில், காரின் இன்டீரியரை சுத்தப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டியிருக்கும்.

காரில் சிகரெட் வாடயை போக்குவதற்கான சில டிப்ஸ்!

அதுவும் ஓரிரு நாட்களுக்கு மட்டுமே பலன் தரும். எனவே, சில எளிய வழிமுறைகளை பின்பற்றி உங்களது காரில் சிகரெட் வாடையை போக்கிக் கொள்வதற்கான வழிமுறைகளை பார்க்கலாம்.

காரில் சிகரெட் வாடயை போக்குவதற்கான சில டிப்ஸ்!

ஆஷ் ட்ரேயில் இருக்கும் சிகரெட் துகள்களை காரை விட்டு இறங்கும்போதே, சுத்தம் செய்து வைத்துவிடுவது அவசியம். அதில், ஒரு சிறிய டிஸ்யூ பேப்பரை வைத்து, அதில் நறுமண ஸ்பிரேவை அடித்து பின்னர் மாட்டவும். மறுநாள் பயன்படுத்தும்போது, அந்த பேப்பரை எடுத்துவிட்டு, சிகரெட் துகள்களை தட்டவும். இல்லையெனில், தீப்பிடிக்கும் வாய்ப்புண்டு.

காரில் சிகரெட் வாடயை போக்குவதற்கான சில டிப்ஸ்!

கார் ஜன்னல் கண்ணாடிகளை திறந்து வைத்துவிட்டு, ஏசியில் ரீசர்குலேசஷன் மோடில் வைத்து, ஹீட்டரை ஆன் செய்யவும். 30 நிமிடங்களுக்கு ஓட விடுங்கள். இந்த சமயத்தில் எஞ்சின் ஆன் செய்து வைத்திருப்பதும் அவசியம். இருக்கை, ஃபேப்ரிக், மிதியடிகள் உள்ளிட்ட சிகரெட் புகையை அதிகம் உறிஞ்சி தக்க வைக்கும் பாகங்களில் இருக்கும் வாடை குறைவதற்கு இது உதவும்.

காரில் சிகரெட் வாடயை போக்குவதற்கான சில டிப்ஸ்!

கார் கேபின் ஏர் ஃபில்டர் சிகரெட் வாடையை தக்க வைக்க வாய்ப்புள்ளது. எனவே, கார் கேபின் ஏர் ஃபில்டரை ஆண்டுக்கு ஒருமுறை அல்லது 20,000 கிமீ தூரத்துக்கு ஒருமுறை மாற்றுவதும் அவசியம்.

காரில் சிகரெட் வாடயை போக்குவதற்கான சில டிப்ஸ்!

ஃபேப்ரிக் ரீஃப்ரெஷ்னர் ஸ்பிரேவை பயன்படுத்தி, சீட் பெல்ட், ஃபேப்ரிக் இருக்கை, மிதியடிகள், அப்ஹோல்ஸ்ட்ரி ஆகியவற்றை பிரஷ் கொண்டு சுத்தம் செய்யவும். இதில், சிகரெட் புகை மற்றும் துகள்களை போக்குவதற்கு ஓரளவு உதவும். இருக்கைகளை கழற்றி, அதன் கீழுள்ள கார்ப்பெட்டுகளையும் சுத்தப்படுத்துவது கூடுதல் பலன் தரும்.

காரில் சிகரெட் வாடயை போக்குவதற்கான சில டிப்ஸ்!

இது கேட்பதற்கு சற்று வேடிக்கையாக இருந்தாலும், நல்ல பலன் தரும். வளர்ப்பு பிராணிகளின் சிறுநீர் வாடையை போக்குவதற்கு பயன்படுத்தப்படும், ஸ்பிரேயை ஃபேப்ரிக் இருக்கைகள், அப்ஹோல்ஸ்டரியில் பயன்படுத்தியும் வாடையை போக்கலாம்.

காரில் சிகரெட் வாடயை போக்குவதற்கான சில டிப்ஸ்!

ட்ரையர் ஷீட் என்று குறிப்பிடப்படும் உலர் பேப்பர்களை காரில் பயன்படுத்துவம் குறுகிய கால பயன்தரும். கார் இருக்கைகள், டேஷ்போர்டு உள்ளிட்ட இடங்களில் வெயில் படும்படி வைத்துவிட்டால், இந்த ட்ரையர் ஷீட்டுகளில் இருந்து நறுமணம் கசிந்து காருக்குள் சிகரெட் வாடை ஓரளவு மறைக்கப்படும்.

காரில் சிகரெட் வாடயை போக்குவதற்கான சில டிப்ஸ்!

அதிக சிகரெட் வாடை இருக்கும்போது, ஏசி வென்ட்டுகளில் ஆம்பி ப்யூர் போன்ற ஸ்பிரேவை அடிப்பதும் அப்போதைக்கு பலன் தரும். மேலும், ஷாம்பூவை பயன்படுத்தி, ஃபேப்ரிக் இருக்கைகள் மற்றும் அப்ஹோல்ஸ்ட்ரி ஆகியவற்றை சுத்தம் செய்யலாம்.

காரில் சிகரெட் வாடயை போக்குவதற்கான சில டிப்ஸ்!

பேக்கிங் சோடாவை காரின் மிதியடி, ஃபேப்ரிக் இருக்கைகள், அப்ஹோல்ஸ்ட்ரி ஆகிய பாகங்களில் தூவிவிட்டு, ஒரு பிரஷ் மூலமாக அதனை பரவிவிடுங்கள் குறைந்தது 30 நிமிடங்கள் முதல் அதிகபட்சமாக ஒருநாள் வரை அப்படியே விட்டுவிடுங்கள்.

காரில் சிகரெட் வாடயை போக்குவதற்கான சில டிப்ஸ்!

அதன் பின்னர் கார் வாக்கம் க்ளீனரை வைத்து படிந்திருக்கும் பேக்கிங் சோடாவை சுத்தம் செய்து விடுங்கள். இது மிகச் சிறந்த இயற்கையான முறையில் சுத்தப்படுத்துவதற்கான வழியாக கூறலாம்.

காரில் சிகரெட் வாடயை போக்குவதற்கான சில டிப்ஸ்!

அடுத்து, கால் கப் வினிகர், இரண்டு கப் தண்ணீர் அளவில் கலந்து பின்னர் நன்கு குலுக்கிவிட்டு அதனே ஒரு ஸ்பிரே பாட்டில் ஊற்றி, ஃபேப்ரிக் இருக்கைகள், அப்ஹோல்ஸ்ட்ரி உள்ளிட்ட இடங்களில் ஸ்பிரே செய்யவும். முதலில் வினிகர் வாடை சற்று பிரச்னையாக இருக்கும். வினிகர் கலவை உலர்ந்த உடன் வாடை போய்விடும்.

காரில் சிகரெட் வாடயை போக்குவதற்கான சில டிப்ஸ்!

அடுத்து ஒரு எளிய முறையின்படி, வறுத்த காபி கொட்டையை காரின் உட்புறத்தில் பார்சல் ட்ரே, டோர் பாக்கெட், பாட்டில் ஹோல்டர் உள்ளிட்ட இடங்களில் இரவு காரிலிருந்து இறங்கும்போது போட்டு வைத்து காரை பூட்டி விடுங்கள்.

காரில் சிகரெட் வாடயை போக்குவதற்கான சில டிப்ஸ்!

மேலும், இருக்கைகளில் பேப்பர் பிளேட்டுகளை வைத்து அதிலும் சில வறுத்த காபி கொட்டைகளை போட்டு வைக்கவும். கார் ஜன்னல்களை அரை இன்ச் இடைவெளி வைத்து மூடி வையுங்கள். காலையில் காரை திறக்கும்போது சிகரெட் வாடை மறைந்து, காபி நறுமணம் கமழும். வெயில் காலங்களில் இது நல்ல பலன் தரும்.

காரில் சிகரெட் வாடயை போக்குவதற்கான சில டிப்ஸ்!

இது மிக எளிய முறை. வார இறுதி நாட்களில் காரை வெளியில் எடுக்க வேண்டிய அவசியம் இல்லாதபோது, படித்து முடித்த செய்தித்தாள்களை கசக்கி, காருக்குள் எல்லா இடங்களிலும் போட்டுவிடுங்கள். இரண்டு நாட்கள் வரை அப்படியே விட்டுவிடுங்கள். செய்தித்தாள் வாடைகளை உறிஞ்சும் தன்மை கொண்டது. இரண்டு நாட்களுக்கு பிறகு சிகரெட் வாடை பெருமளவு குறைந்திருக்கும்.

காரில் சிகரெட் வாடயை போக்குவதற்கான சில டிப்ஸ்!

காரில் ஒரு பீங்கான் கிண்ணத்தில் கரித் துண்டுகளை போட்டு வைத்து காரை மூடிவிடுங்கள். வளர்ப்பு பிராணிகள் விற்பனை நிலையங்கள், உணவு பொருட்கள் விற்பனை அங்காடிகள், சூப்பர் மார்க்கெட்டுகளில் கரித்துண்டுகள் பவுடராக்கப்பட்ட நிலையில் கிடைக்கிறது. அதனை வாங்கி பயன்படுத்துவதும் பலன் தரும். பேக்கிங் சோடாவைவிட இது அதிக பலன் தரும். இது விஷத்தன்மை வாய்ந்தது என்பதால், குழந்தைகள் இருக்கும் பகுதிகளில் தவிர்ப்பது நல்லது.

காரில் சிகரெட் வாடயை போக்குவதற்கான சில டிப்ஸ்!

ஒரு பீங்கான் கிண்ணத்தில் அம்மோனியாவை வாங்கி ஊற்றி வைத்துவிடுங்கள். இரவு முழுவதும் அப்படியே இருக்கவிடுங்கள். காலையில் காரின் ஜன்னல்களை திறந்து வைத்து சிறிது நேரம் கழித்து உள்ளே இருக்கும் பீங்கான் கிண்ணத்தை வெளியில் எடுத்து கழிவுநீர் செல்லும் பாதையில் ஊற்றிவிடுங்கள். அம்மோனியா அதிக காரத்தன்மை மிகுந்திருப்பதால், சில மணி நேரம் கழித்து காரை பயன்படுத்துங்கள்.

காரில் சிகரெட் வாடயை போக்குவதற்கான சில டிப்ஸ்!

ஓஸோன் ஜெனரேட்டர் கருவியை வாங்கி பயன்படுத்துவதும பலன் தரும். சிகரெட் வாடையை போக்குவதோடு, வாடை ஏற்படுவதற்கான காரணிகளையும் செயலிழக்க வைக்கும்.

முக்கிய குறிப்பு:

முக்கிய குறிப்பு:

இதில், கவனிக்க வேண்டிய விஷயம், ஃபேப்ரிக் இருக்கைகள், அப்ஹோல்ஸ்ட்ரியில் கெமிக்கல் ஸ்பிரே பயன்படுத்தும்போது கவனமாக இருக்கவும். வினைல் ஃபேப்ரிக் உள்ளிட்டவை சில சமயம், தவறான ஸ்பிரே அடிப்பதால் சீக்கிரமே பாதிக்கக்கூடும்.

காரில் சிகரெட் வாடயை போக்குவதற்கான சில டிப்ஸ்!

எனவே, கடையில் வாங்கும்போது உங்களது ஃபேப்ரிக் எந்த வகை என்பதை சொல்லி அல்லது கார் இன்டீரியர் க்ளீனிங் நிறுவனத்தின் பணியாளர்களை கேட்டு தெரிந்து கொண்டு வாங்கி பயன்படுத்தவும். இல்லையெனில், அவை சீக்கிரம் வீணாகிவிடும் ஆபத்து உண்டு.

Most Read Articles

English summary
How to Get Rid of Cigarette Smell in Cars.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X