காரை புத்தம் புதுசா வைத்துக் கொள்ள சில எளிய வழிகள்

புதிதாக கார் வாங்கும்போது அதன் வடிவமைப்பு, பெர்ஃபார்மென்ஸ் என ஒவ்வொன்றாக பார்த்துத்தான் வாங்குகிறோம். ஆனால், அது எத்தனை ஆண்டுகள் ஆனாலும் கார் புத்தம் புதிது போல் இருப்பது உரிமையாளர் கையில்தான் இருக்கிறது.

காரை புதிது போல் பாதுகாத்து பராமரிப்பது ஒரு விஷயமாக கருதுவது தவறு. விடுமுறை நாட்களில் ஓய்வு நேரங்களில் சொந்தமாகவே சில எளிய பராமரிப்புகளை மேற்கொண்டு வந்தாலே கார் புத்தம் புதிது போல் இருக்கும். இதற்காக குறைந்த விலையில் பாலிஷ் உள்ளிட்டவை கிடைக்கின்றன. இந்த பகுதியில் அதற்கான சில உபாயங்களை காணலாம்.

கார் ஷாம்பூ

கார் ஷாம்பூ

தூசிகள் மற்றும் பறவை எச்சங்களால் புதிய கார் கூட பழைய கார் போல காட்சியளிக்கும். காரின் அழகை கெடுக்கும் முக்கிய காரணிகள் இவை. இதனை போக்குவதற்கு கார் ஷாம்பூவை போட்டு ஒரு வாட்டர் வாஷ் வீட்டிலேயே அடித்தால் தூசி, பறவை எச்சங்கள் பஞ்சாய் பறந்து போய்விடும். காரின் பெயிண்ட்டுக்கும் கார் ஷாம்பூ பாதிப்பு ஏற்படுத்தாது என்பதோடு காரையும் புத்தம் புதுசு போல் ஆக்கிவிடும்.

கிரீம் பாலிஷ்

கிரீம் பாலிஷ்

கார் ஷாம்பூவை போட்டு வாட்டர் வாஷ் அடித்தால் ஓரிரு நாளைக்கு மட்டும் சுத்தமாக இருக்கும். ஆனால், அதன் பின்னர் கிரீம் பாலிஷை காட்டன் துணி கொண்டு கார் வெளிப்புறம் முழுவதும் தடவினால் கார் நீண்ட நாட்களுக்கு பளபளப்பாக இருக்கும். தூசி படிவதையும் தவிர்க்கும் என்பதோடு பெயிண்டுக்கும் பாதுகாவலனாக இருக்கும்.

டேஷ்போர்டு பாலிஷ்:

டேஷ்போர்டு பாலிஷ்:

வெளிப்புறத்தை விட உட்புறத்தை அதிக பொலிவுடன் பாதுகாக்க வேண்டியது அவசியம்தானே. டேஷ்போர்டுக்கென பிரத்யேக பாலிஷ் விற்கப்படுகிறது. உங்களது காரின் டேஷ்போர்டின் தன்மையை கூறி அதற்கேற்ற பாலிஷ் வாங்கி உபயோகப்படுத்துவது அவசியம். மிக ரம்மியமான உணர்வை தரும்.

இருக்கை மற்றும் தரைவிரிப்பு கிளினர்

இருக்கை மற்றும் தரைவிரிப்பு கிளினர்

காரின் உட்புறத்திலேயே அதிக தூசிகள் படியும் இடம் தரைவிரிப்புதான். இதேபோன்று, வியர்வை மற்றும் திண்பண்டங்களை போடுவது உள்ளிட்ட காரணங்களால் இருக்கைளும் அழுக்கடைவது தவிர்க்க முடியாது. சில சமயங்களில் நாற்றம் கூட அடிக்கும். இதனை தவிர்க்க இருக்கைகளின் தன்மைக்குத் தக்கவாறு பாலிஷ் உபயோகிக்க வேண்டும். தரைவிரிப்புகளுக்கும் கிளினர் போட்டு சுத்தப்படுத்துவதுடன் இதற்கு முன்பாக கார் வாக்கம் கிளினர் மூலம் சுத்தப்படுத்திக்கொள்வதும் அவசியம்.

இது எஞ்சினுக்கானது...!!

இது எஞ்சினுக்கானது...!!

எஞ்சின் ஆயிலை மாற்றும்போது அதற்கு முன்பாக எஞ்சின் ப்ளஷ் என்ற திரவத்தை ஊற்ற வேண்டும். எஞ்சினில் உள்ள தேவையற்ற பிசிறுகள், கெட்டி ஆயிலை கூட அடித்துக் கொண்டு வந்து வெளியில் கொட்டிவிடும். அதன்பிறகு புதிய ஆயிலை மாற்றினால் எஞ்சின் ஸ்மூத்தாக இருக்கும்.

ஸ்லைடரில் கொடுக்கப்பட்டிருக்கும் பாலிஷ், கிளினர்கள் மற்றும் எஞ்சின் ப்ளஷ் ஆகியவை கார் ஸ்பேர் பார்ட்ஸ் விற்பனை செய்யும் கடைகளில் எளிதாக கிடைக்கிறது. மேலும், இவற்றை வாங்கி வைத்துக் கொண்டால் பல மாதங்கள் வரை உபயோகமாக இருக்கும். உங்களது பட்ஜெட்டையும் பெரிய அளவில் பாதித்துவிடாத விலையிலேயே இவை கிடைக்கின்றன. மேற்கண்ட வழிமுறைகளை பின்பற்றினால் சில ஆண்டுகள் கழித்து காரை விற்பனை செய்யும்போது கூட கூடுதல் விலையை பெற்றுதரும்.

குறிப்பு: டேஷ்போர்டு, இருக்கைகளுக்கு பாலிஷ் வாங்கும்போது தன்மையை(உ.ம், லெதர் இருக்கைக்கு தனி பாலிஷ்) எடுத்துக் கூறி வாங்குவது அவசியம்.

Most Read Articles
English summary
Many of us crib about our cars getting old or not performing well enough. But we do not realize we can keep our car as good as it was when you bought it by following some simple steps and making use of some products that are easily available in the market.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X