Just In
- 15 min ago
பிஎஸ்-6 எஞ்சினுடன் விரைவில் வருகிறது ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200டி... முக்கிய விபரங்கள் வெளியானது
- 1 hr ago
18 முக்கிய ஆர்டிஓ சேவைகளை இனி வீட்டில் இருந்தே பெறலாம்... கூட்ட நெரிசலை தவிர்க்க மத்திய அரசு அதிரடி!
- 1 hr ago
டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 பைக்கின் விலை குறைவான வேரியண்ட் அறிமுகம்!
- 2 hrs ago
யமஹா ஆர்15 பைக்கின் விலை மீண்டும் அதிகரிப்பு!! ஆரம்ப எக்ஸ்.ஷோரூம் விலை ரூ.1.5 லட்சத்தை கடந்தது...
Don't Miss!
- News
இதுதான் அதிமுக.. கூட்டணிக்கு கொடுத்த "ஸ்ட்ராங் சிக்னல்.." வியந்து பார்க்கும் பாஜக, தேமுதிக!
- Finance
மார்ச் 31க்கு முன் கட்டாயம் செய்ய வேண்டிய முக்கியமான விஷயங்கள்..!
- Lifestyle
உங்கள் ஆயுளை அதிகரிக்கும் சமநிலை உணவு என்றால் என்ன? அதனை எப்படி சரியாக சாப்பிடுவது தெரியுமா?
- Education
TNPSC 2021: ராஷ்டிரிய இந்திய ராணுவ கல்லூரி சேர்க்கைகான அறிவிப்பு வெளியீடு!
- Sports
மார்க் மை வேர்ட்ஸ்... வரலாற்றிலேயே இதுதான் சிறந்த அணியாக இருக்கும்....சுனில் கவாஸ்கர் உறுதி
- Movies
ரஷ்யாவில் லொகேஷன் வேட்டை.. தளபதி 65 இயக்குநர் வெளியிட்ட சூப்பர் பிக்ஸ்.. விஜய் ரசிகர்கள் உற்சாகம்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ஒரு பட்டனை அழுத்தினால் மின்னல் வேகத்தில் பறக்கும் கார்கள்… எப்படி சாத்தியமாகிறது?
சினிமாக்களில் வருவது போல ஒரு பட்டனை அழுத்தினால் வாகனங்கள் மின்னல் வேகத்தில் பறப்பது சாத்தியமா? அப்படி ஒரு பட்டனை அழுத்துவதன் மூலம் இன்ஜினில் என்ன மாற்றங்கள் நிகழ்கிறது? என்பதை பற்றி பார்க்கலாம் வாருங்கள்.

ஹாலிவுட் படங்கள், கார்ட்டூன்கள், சூப்பர் ஹீரோ படங்களில் காரில் சேஸிங் செய்யும் காட்சியோ அல்லது ரேஸிங் செல்லும் காட்சியோ பார்த்திருப்பீர்கள். அதில், ஹீரோ ஒரு பட்டனை அழுத்தியதும் கார் மின்னல் வேகத்தில் பறக்கும். இதன் மூலம் பெரும் இலக்கையும் சுலபமாக அடைந்து வெற்றி பெறுவார் ஹீரோ.

இவ்வாறு சினிமாக்களில் காட்டப்படுவது நிஜமா? அப்படி எல்லாம் நடக்க சாத்தியம் இருக்கிறதா? சாத்தியம் என்றால் எப்படி சாத்தியம்? சினிமாக்களில் கடைசியில் அந்த பட்டனை அழுத்தி வெற்றி பெறும் ஹீரோ அதை ஏன் முதலிலேயே செய்யவில்லை? இப்படி பல கேள்விகள் உங்களுக்கு இருக்கலாம். இதற்கு பதிலளிக்கும் வகையில் இந்த செய்தி அமையும்.

சினிமாவில் காட்டப்படும் அளவிற்கு இந்த விஷயம் சாத்தியம் இல்லை என்றாலும் ஒரு அளவிற்கு இந்த விஷயம் சாத்தியம்தான். இன்ஜினிற்குள் நைட்ரஸ் ஆக்ஸைடை செலுத்துவதன் மூலம் இது சாத்தியப்படுகிறது. இதனால் காரின் வேகம் அதிகரிக்கிறது.

பொதுவாக கம்பஷன் இன்ஜின் என்பது பெட்ரோலை எரிப்பது மூலம் கிடைக்கும் சக்தியை கொண்டு இயங்குகிறது. பெட்ரோல் எரிய வேண்டும் என்றால் அதற்கு ஆக்ஸிஜன் தேவை. அதற்காக காற்றை இன்ஜின் உள் வாங்குகிறது. அதில் உள்ள ஆக்ஸிஜன் மூலம் பெட்ரோல் எரிக்கப்பட்டு இன்ஜின் செயல்படுகிறது.

இவ்வாறாக பெட்ரோல் எரியும்போது அதிக அளவிற்கு ஆக்ஸிஜன் இருந்தால் பெட்ரோலின் எரியும் திறன் அதிகமாகி இன்ஜின் சிறப்பாக செயல்படும். நைட்ரஜன் ஆக்ஸைடை நேரடியாக இன்ஜினிற்குள் செலுத்துவதன் மூலம் இது சாத்தியமாகிறது.

நைட்ரஜன் ஆக்ஸைடு 570 டிகிரி ஃபேரன்ஹீட்டில் அதாவது 300 டிகிரி செல்சியஸ் வெப்பத்தை சந்திக்கும் போது நைட்ரஜன் தனியாகவும், ஆக்ஸிஜன் தனியாகவும் பிரிகிறது. இதனால் இன்ஜினிற்குள் அதிக வெப்பத்தில் கம்பஷன் நடக்கும் போது இந்த நைட்ரஜன் ஆக்ஸைடு நைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜனாக பிரிந்து பெட்ராலை வேகமாக எரிக்க துணை புரிகிறது.

இதனால் வாகனத்தின் ஆர்பிஎம் வழக்கமானதை விட அதிகமாகும். இதனால் வாகனத்தின் ஒட்டு மொத்த குதிரை திறனும் அதிகமாகி வாகனம் மிக வேகமாக செல்லும்.

மேலும் எரிந்த நைட்ரஸ் ஆக்ஸைடு இன்ஜினிற்குள் வரும் போது இன்ஜினிற்குள் வரும் காற்றையும் குளிரூட்டுகிறது. இதனால் இன்ஜினிற்குள் வெப்பம் குறைந்து காற்றின் அழுத்தம் அதிகமாகிறது. இது வழக்கமாக உள்ளே வரும் ஆக்ஸிஜனை விட அதிக அளவு கொண்ட ஆக்ஸிஜனை பெறுகிறது. இதனால் பெர்பார்மென்ஸ் மேலும் அதிகமாகிறது.

இந்த முறை இன்ஜினின் ஆயுள், செயல் திறன் அனைத்திற்கும் ஏற்றதுதான். இதை செய்வதால் இன்ஜினிற்கு எந்த விதமாக பாதிப்புகளும் ஏற்படுவதில்லை. ஆனால் இதில் ஒரு சிக்கல் இருக்கிறது.

நைட்ரஸ் ஆக்ஸைடை சேமிக்க அதிக அளவு இடம் இருக்க வேண்டும். மேலும் இந்த செயல்பாடு தீவிரமாக இருக்க இன்ஜினிற்குள் தொடர்ந்து நைட்ரஸ் ஆக்ஸைடு சென்று கொண்டே இருக்க வேண்டும்.

பெட்ரோலை போல இந்த நைட்ரஸ் ஆக்ஸைடு தேவைப்படுவதால் தொடர்ந்து வாகனத்தை அதிக வேகத்தில் இயக்க இது பெரும் அளவிற்கு தேவைப்படுகிறது. அந்த அளவிற்கான நைட்ரஸ் ஆக்ஸைடை சேமித்து வைக்க போதுமான இடவசதியை வாகனத்திற்குள் பெறமுடியாது.

உதாரணமாக 5 லிட்டர் திறன் கொண்ட ஒரு இன்ஜின் 4000 ஆர்பிஎம்மில் செயல்படும் போது சுமார் 10,000 லிட்டர் காற்றை உள்வாங்கும். அதற்கு தகுந்தார் போல் நைட்ரஸ் ஆக்ஸைடும் செலவாகும். அவ்வளவு அளவு நைட்ரஸ் ஆக்ஸைடை சேமிக்க இடம் இருக்காது.

அதனால் நைட்ரஸ் ஆக்ஸைடை பயன்படுத்தும் கார்களில் ஒரு குறிப்பிட்ட அளவு மட்டுமே நைட்ரஸ் ஆக்ஸைடு சேமிக்கப்படும். அது சில நிமிடங்கள் மட்டுமே வேலை செய்யும். இதை தேவைப்படும் போது மட்டும் ஒரு பட்டனை அழுத்துவதன் மூலம் இதை செயல்பாட்டிற்கு கொண்டு வர முடியும். அது சிறிது நேரம் மட்டுமே செயல்படும்.

அந்த நேரத்தில் வாகனம் எதிர்பார்க்காத அளவிற்கு சிறப்பான பெர்பார்மென்ஸை வழங்கும். அதனால் தான் திரைப்படங்களில் வரும் காட்சிகளில் கடைசி சில நிமிடங்களில் இந்த நைட்ரஸ் ஆக்ஸைடு பயன்படுத்தும் விதமாக காட்சிகள் அமைக்கப்படுகிறது.

தற்போது நைட்ரஸ் ஆக்ஸைடு காரில் எந்த மாதிரியாக பயன்படும் என்பது உங்களுக்கு தெளிவாக தெரிந்திருக்கும் என நம்புகிறோம்.தற்போது நைட்ரஸ் ஆக்ஸடை முழு அளவில் பயன்படுத்த முடியாததற்கு அதை சேமிக்கும் இட வசதியே காரணம்.

ஒரு வேலை எதிர்காலத்தில் குறைந்த இடத்தில் அதிக நைட்ரஸ் ஆக்ஸைடை சேமிக்கும் தொழிற்நுட்பம் வந்தால் எதிர்காலத்தில் எல்லா வாகனங்களும் சாலையில் மின்னல் வேகத்தில் பறக்கும்.