உங்கள் காரில் பிரேக் எப்படி வேலை செய்கிறது தெரியுமா?

நாம் தினமும் காரில் பயணம் செய்து வருகிறோம். கார் பயணத்தில் பிரேக் என்பது எவ்வளவு முக்கியமானது என்பதையும் நாம் அறிவோம். ஆனால் அந்த பிரேக் எவ்வாறு வேலை செய்கிறது தெரியுமா? வாருங்கள்தெரிந்து கொள்ளலாம்

நாம் தினமும் காரில் பயணம் செய்து வருகிறோம். கார் பயணத்தில் பிரேக் என்பது எவ்வளவு முக்கியமானது என்பதையும் நாம் அறிவோம். ஆனால் அந்த பிரேக் எவ்வாறு வேலை செய்கிறது தெரியுமா? வாருங்கள் தெரிந்து கொள்ளலாம்

உங்கள் காரில் பிரேக் எப்படி வேலை செய்கிறது தெரியுமா?

நவீன கார்களில் நான்கு வீல்களிலும் ஹைட்ராலிக் பிரேக் முறைகளேயே கையாள்கின்றனர். அதுவும் டிஸ்க் மற்றும் டிரம் ஆகிய இரண்டு வகை பிரேக்குளாக வருகிறது.

உங்கள் காரில் பிரேக் எப்படி வேலை செய்கிறது தெரியுமா?

காருக்கு நான்கு வீல்களிலும் பிரேக் இருந்தாலும், முன்பக்க வீல்களில் உள்ள பிரேக் பின்பக்க வீல்களின் பிரேக்கை காட்டிலும் சற்று உறுதியானதாக இருக்கும்.

உங்கள் காரில் பிரேக் எப்படி வேலை செய்கிறது தெரியுமா?

ஏன் என்றால் காரில் பிரேக் பிடிக்கும் போது காரின் வெயிட் முழுவதும் காரின் முன் புறம் தான் வரும் அதை பொருத்துக்கொள்ள பிரேக்கின் உறுதி அதிகரிக்கப்பட்டுள்ளது.

உங்கள் காரில் பிரேக் எப்படி வேலை செய்கிறது தெரியுமா?

உயர் ரக, விலை அதிகம் உள்ள கார்களில் டிஸ்க் வகை பிரேக்கள் பயன்படுத்தப்படும். சிறிய ரக, குறைந்த விலை கார்களில் டிரம் வகை பிரேக்குகள் பயன்படுத்தப்படும்.

உங்கள் காரில் பிரேக் எப்படி வேலை செய்கிறது தெரியுமா?

ஹைட்ராலிக் தொழிற்நுட்பம்

கார் பிரேக்களில் ஹைட்ராலிக் தொழிற்நுட்பத்தையே பயன்படுத்தி வருகின்றனர். இது தான் பிரேக் பிடிப்பதற்காக சிறந்த தொழிற்நுட்பமாக கார் தயாரிப்பாளர்கள் கருதுகின்றனர்.

உங்கள் காரில் பிரேக் எப்படி வேலை செய்கிறது தெரியுமா?

இந்த தொழிற்நுட்பத்தில் மாஸ்டர், ஸ்லேவ் ஆகிய இரண்டு சிலிண்டர்கள் இருக்கும் மாஸ்டர் சிலிண்டரின் ஒரு புறம் பிஸ்டனும், மறுபுறம் ஸ்லேவ் சிலிண்டருக்கான கனெக்ஷனும் இருக்கும்.

உங்கள் காரில் பிரேக் எப்படி வேலை செய்கிறது தெரியுமா?

ஸ்லேவ் சிலிண்டரில் நடுவில் மாஸ்டர் சிலிண்டரில் இருந்து வரும் கனெக்ஷனும், இரண்டு புறங்களிலும் பிஸ்டனும் இருக்கும்.

உங்கள் காரில் பிரேக் எப்படி வேலை செய்கிறது தெரியுமா?

இந்த இரண்டுசிலிண்டர்களும் திரவத்தால் இணைக்கப்பட்டிருக்கும். மாஸ்டர் சிலிண்டரின் பிஸ்டன் இருக்கும் பகுதி பிரேக் பெடலுடன் இணைக்கப்பட்டிருக்கும்.

உங்கள் காரில் பிரேக் எப்படி வேலை செய்கிறது தெரியுமா?

இதனால் பிரேக் பெடலை அழுத்தும் போது மாஸ்டர் சிலிண்டரில் உள்ள பிஸ்டர் திரவத்தை அழுத்தும் அது ஸ்லேவ் சிலிண்டருக்குள் சென்று இரண்டு புறங்களிலும் உள்ள பிஸ்டனை அழுத்தி பிரேக் பிடிக்க வழிசெய்யும்

உங்கள் காரில் பிரேக் எப்படி வேலை செய்கிறது தெரியுமா?

இந்த தொழிற்நுட்பத்திற்கு பெயர் தான் ஹைட்ராலிக் தொழிற்நுட்பம். தற்போது வரும் கார்களில் இது போன்ற இரண்டுசர்க்யூட்கள் இருக்கும். இதன் மூலம ஒன்று வேலை செய்யவில்லை என்றாலும் மற்றொன்றின் மூலம் ஈடு செய்யலாம்.

உங்கள் காரில் பிரேக் எப்படி வேலை செய்கிறது தெரியுமா?

இந்த இரண்டுசர்க்யூட்கள் ஒரு சர்க்யூட் முக்க பக்கவீலுக்கும் இரண்டாவது சர்க்யூட் பின்பக்கம் உள்ள ஒரு வீலுக்கும் பொருத்தப்படலாம், அல்லது ஒரு சர்க்யூட் நான்கு வீல்களுக்கும், மற்றொரு சர்க்கியூட் முன் பக்க வீல்களுக்கு பொருத்தப்படலாம். இது கார் நிறுவனங்களின் டிசைனை பொருத்தது.

உங்கள் காரில் பிரேக் எப்படி வேலை செய்கிறது தெரியுமா?

எவ்வாறான டிசைனாக இருந்தாலும் காரின் பின் பக்க வீலை விட முன் பக்கவீலுக்கு அழுத்தம் அதிகமாக செல்லும்படி டிசைன் செய்யப்பட்டிருக்கும்.

உங்கள் காரில் பிரேக் எப்படி வேலை செய்கிறது தெரியுமா?

இதில் பவர் சர்வோ யூனிட்டிற்குள் ஹைட்ராலிக் பிரேக்கில் மாஸ்டர் சிலிண்டர் பிஸ்டனுகும் ஒரு பைக் மாட்டப்பட்டிருக்கும். இந்த பைப் காற்று இல்லாமல் வேக்கம் பைப்பாக இருக்கும். பைப் டையகிராப்புடன் இணைக்கப்பட்டு டயகிராப் சிலிண்டர் பிஸ்டனுடன் இணைந்திருக்கும்.

உங்கள் காரில் பிரேக் எப்படி வேலை செய்கிறது தெரியுமா?

பிரேக் அழுத்தப்படும் போது வேக்கம் பைப்பிற்கான வால்வு மூடப்பட்டு காற்று உள்ளே செல்லும் வால்வு திறக்கப்படும் இதனால் ஏற்படும் காற்றின் அழுதத்தால் மாஸ்டர் சிலிண்டர் பிஸ்டனில் அழுத்தம் ஏற்பட்டு ஹைட்ராலிக் செயல்படும்.

உங்கள் காரில் பிரேக் எப்படி வேலை செய்கிறது தெரியுமா?

நாம் பிரேக்கில் இருந்து காலை எடுத்தவுடன் காற்று செல்லும் வாழ்வு மூடி, வேக்கம் பைப்பில் வாழ்வுகள் திறக்கும். அதனால் சிலிண்டர் பிஸ்டன் மீண்டும் பழைய நிலைக்கே வந்து பிரேக்கை ரிலிஸ் செய்துவிடும்.

உங்கள் காரில் பிரேக் எப்படி வேலை செய்கிறது தெரியுமா?

இதில் வேக்கம் பைப்பில் பெயிலியர் ஆனால் இன்ஜின் உடனடியாக நின்று விடும் இது விபத்தில் இருந்து உங்களை காக்கும்.

உங்கள் காரில் பிரேக் எப்படி வேலை செய்கிறது தெரியுமா?

பிரேக் சர்வோ

இது ஹைட்ராலிக் சிலிண்டரை நேரடியாக பிரேக் பெடலுடன் பொருத்த முடியாத வானகங்களில் இந்த பிரேக் இருக்கும். நாம் பிரேக் பெடலை அழுத்தினால் நேரடியாக இது ஹைட்ராலிக் மாஸ்டர் சிலிண்டரில் உள்ள பிஸ்டனை தள்ளாமல் வேறு ஒரு கருவி மூலம் தள்ளதூண்டும்.

உங்கள் காரில் பிரேக் எப்படி வேலை செய்கிறது தெரியுமா?

இந்த கருவியிலும் அதிக பிரஷருக்காக வேக்கம் பைப்பை பொருத்தியிருப்பார்கள்.இதை காரில் எந்த பகுதியில் வேண்டுமானாலும் பொருத்தி செயல்படவைக்கலாம்.

உங்கள் காரில் பிரேக் எப்படி வேலை செய்கிறது தெரியுமா?

டிஸ்க் பிரேக்

டிஸ்க் பிரேக் என்பது கார் வீலுடன் பொருத்தப்பட்டுள்ள டிஸ்க் மூலம் பிரேக்பிடிப்பதாகவும், கார் வீலுடன் டிஸ்க் பொருத்தப்பட்டிருக்கும், அதில் கேளிபர் என்ற கருவி பொருத்தப்படும். அதில் சிறிய ஹைட்லாரலிக் சிலிண்டர்கள் இருக்கும்.

உங்கள் காரில் பிரேக் எப்படி வேலை செய்கிறது தெரியுமா?

நாம் பிரேக் பிடிக்கும் போது இந்த ஹைட்ராலிக் சிலிண்டர்கள் பிரேக் பிடித்து டிஸ்கை நிறுத்தும் இதன் மூலம் காரும் நிறுத்தப்படும். காரின் டிசைனை பொருத்து ஒரு கேளிபர் அல்லது இரண்டா என்பது முடிவு செய்யப்படும்.

உங்கள் காரில் பிரேக் எப்படி வேலை செய்கிறது தெரியுமா?

காரின் முன் வீல்களில் இரண்டு கேளிபர்கள், பின் வீலில் ஒரு கேளிபர் என்ற டிசைன் பொதுவாக இருக்கும் எனினும் இதுகாருக்கு கார் மாறுபடலாம்.

உங்கள் காரில் பிரேக் எப்படி வேலை செய்கிறது தெரியுமா?

டிரம் பிரேக்

டிரம் பிரேக் என்பது காரின் விலில் உள்ள ஹாலோ டிரம் மூலம் செயல்படுத்துவது. கார்விலில் உள்ள ஹாலோ டிரம் உட்புறம் இரண்டு பிரேக் ஷூக்கள் இருக்கும் இது நாம் பிரேக் பிடிக்கும் போது ஹாலோ டிரம்முடன் உராய்வை ஏற்படுத்தி பிரேக் பிடிக்கக்கூடியது.

உங்கள் காரில் பிரேக் எப்படி வேலை செய்கிறது தெரியுமா?

இதில் உள்ள இரண்டு பிரேக் ஷூக்களுக்கும் தனித்தனி ஹைட்ராலிக் சிலிண்டருடன் இணைக்கப்பட்டிருக்கும். ஒவ்வொரு ஷூக்கும் தனி சிலிண்டர் என்பதால் பிரேக்கிற்காக அதிக அளித்தத்தை தர முடியும்.

உங்கள் காரில் பிரேக் எப்படி வேலை செய்கிறது தெரியுமா?

ஆனால் இதில் உராய்வு காரணமாக ஷீக்கள் அடிக்கடி தேய்ந்து போகக்கூடும், அதே நேரத்தில் அதிக வேகத்தில் செல்லும் போது பிரேக் பிடிக்க முயன்றால் அதிக சூடு காரணமாக பிரேக் பிடிக்காமல் கூட போகும் வாயப்புள்ளது. இந்த வகை பிரேக்குள் சிறிய ரக கார்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன.

உங்கள் காரில் பிரேக் எப்படி வேலை செய்கிறது தெரியுமா?

ஹேண்ட் பிரேக்

ஹைட்ராலிக் தொழிற்நுட்பத்தை தவிர்த்து உங்கள் வாகனங்களில் கண்டிப்பாக ஹேண்ட் பிரேக் என்பது இருக்கும். இது நாம் காரின் வீலை நகர விடாமல் பாதுகாக்கும்.

உங்கள் காரில் பிரேக் எப்படி வேலை செய்கிறது தெரியுமா?

ஹேண்ட் பிரேக் நேரடியாக பிரேக் வயருடன் கனெக்ட் செய்யப்பட்டு பிரேக் பிடிக்கப்படும். அவ்வாறு பிரேக் பிடிக்கும் போது அது ஹைட்ராலிக் பிரேக்கை விட உறுதியாக பலத்தை தரும். இந்த பிரேக்கள் பெரும்பாலும் காரை பார்க் செய்யும் போதே போடப்படும்.

உங்கள் காரில் பிரேக் எப்படி வேலை செய்கிறது தெரியுமா?

சில நேரங்களில் காரை இறக்கமான பகுதியில் நிறுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் இந்த பிரேக்கை பயன்படுத்தலாம்.

உங்கள் காரில் பிரேக் எப்படி வேலை செய்கிறது தெரியுமா?

மேலே கொடுக்கப்பட்ட ஏதேனும் ஒரு தொழிற்நுட்பத்தில் தான் உங்கள் காரின் பிரேக் வேலை செய்யும். உங்கள் கார் எந்த வகை பிரேக்கை கொண்டது. அதை பயன்படுத்துவது எப்படி?, பராமிரிப்பது எப்படி என்று தெரிந்து வைத்துக்கொள்வது நல்லது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
How the braking system works. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X