பிளைண்ட் ஸ்பாட் பகுதியில் வரும் வாகனங்களால் ஏற்படும் விபத்துக்களை தவிர்ப்பது எப்படி?

காரில் செல்லும் போது டிரைவருக்கு கண்ணுக்கு தெரியாத பகுதிகள் பிளைண்ட் ஸ்பாட் எனப்படும். அதாவது ரியர் வியூ மிரர் மற்றும் சைடு மிரர் ஆகியவற்றிலும் தெரியாத பகுதிகளை டிரைவர் திரும்பி தான் பார்க்க வேண்டும் அவ்வாறான பகுதிகள் தான் பிளைண்ட் ஸ்பார்ட் எனப்படும்.

காரில் செல்லும் போது பிளைண்ட் ஸ்பாட் பகுதியில் வரும் வாகனங்களால் ஏற்படும் விபத்துக்களை தவிர்ப்பது எப்படி?

நாம் நெடுஞ்சாலைகளில் செல்லும் போது ஒரு லேனில் இருந்து இன்னொரு லேனிற்கு வாகனத்தை மாற்றும் போது இந்த பிளைண்ட் ஸ்பாட் பகுதிகளில் வரும் வாகனங்களை கவனிக்கவில்லை என்றால் விபத்து ஏற்பட்டு விடும். அதனால் காரில் செல்பவர்களுக்கு பிளாண்ட் ஸ்பாட் பகுதியில் அதிக கவனம் இருக்க வேண்டும்.

காரில் செல்லும் போது பிளைண்ட் ஸ்பாட் பகுதியில் வரும் வாகனங்களால் ஏற்படும் விபத்துக்களை தவிர்ப்பது எப்படி?

சில கார் டிரைவர்கள் பிளைண்ட் ஸ்பாண்ட் பகுதியில் கேமராக்கள் அல்லது சென்சார்கள் வைத்து அதை தங்கள் டேஷ்போர்டிலேயே கண்காணிக்கும் படி வைத்துள்ளனர். ஆனால் இது எல்லோராலும் முடியாது. பலர் பிளாண்ட் ஸ்பாட் பகுதியை எப்படி தவிர்ப்பது என்பது தெரியாமல் திண்டாடி வருகின்றனர். இச்செய்தியில் பிளைண்ட் ஸ்பார்ட் பகுதியை எப்படி தவிர்ப்பது என்பதை பார்க்கலாம்.

காரில் செல்லும் போது பிளைண்ட் ஸ்பாட் பகுதியில் வரும் வாகனங்களால் ஏற்படும் விபத்துக்களை தவிர்ப்பது எப்படி?

பெரும்பாலான டிரைவர்கள் சைடு மிரர் மற்றம் ரியர் வீயூ மிரர் ஆகியவற்றின் போசிசன்களால் அதிக பிளைண்ட் ஸ்பாட் பகுதியை தவறவிட்டு விடுகின்றனர். இந்த இரண்டு கண்ணாடிகளையும் முடிந்த அளவு அதிகமாக கவர் செய்யும் போஷிசனில் வைக்க வேண்டும். அதன் மூலம் பிளைண்ட் ஸ்பாட் பகுதியை முடிந்த அளவிற்கு குறைந்தது விடலாம்.

காரில் செல்லும் போது பிளைண்ட் ஸ்பாட் பகுதியில் வரும் வாகனங்களால் ஏற்படும் விபத்துக்களை தவிர்ப்பது எப்படி?

அடுத்ததாக நீங்கள் செல்லும் போது உங்களுக்கு முன்பாகவே அல்லது அடுத்த லேனிலோ செல்லும் வாகனத்தின் பிளைண்ட் ஸ்பாட் பகுதியில் நீங்கள் செல்கிறீர்களா என்பதை கவனித்து கொள்ளுங்கள் அப்படி நீங்கள் சென்று கொண்டிருந்தால் உடனடியாக சற்று முன்புறமோ அல்லது பின்புறமோ சென்று அந்த வாகனத்தின் டிரைவருக்கு கண்ணில் படும் போஷனினிற்கு சென்று விட்டு பயணத்தை தொடருங்கள்.

காரில் செல்லும் போது பிளைண்ட் ஸ்பாட் பகுதியில் வரும் வாகனங்களால் ஏற்படும் விபத்துக்களை தவிர்ப்பது எப்படி?

நீங்கள் தொடர்ந்து அந்த வாகனத்தின் பிளைண்ட் ஸ்பாட் பகுதியில் பயணித்து கொண்டிருந்தால் அந்த வாகனத்தின் டிரைவரால் உங்களை பார்க்க முடியாது. அதனால் அவர் திடீர் என லேன் மாறினாலோ அல்லது வேறு நடவடிக்கையில் இறங்கினாலோ அது உங்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தலாம்.

காரில் செல்லும் போது பிளைண்ட் ஸ்பாட் பகுதியில் வரும் வாகனங்களால் ஏற்படும் விபத்துக்களை தவிர்ப்பது எப்படி?

அதே போல் நீங்கள் உங்கள் பிளைண்ட் ஸ்பாட் பகுதியை கண்காணிக்க நீங்கள் தலையை திருப்ப முடியாது. உங்கள் கவனம் எல்லாம் முன்புறம் செல்லும் வாகனம் மீதுதான் இருக்க வேண்டும். ஒரு வேலை நீங்கள் தலை திருப்பி பிளைண்ட் ஸ்பாட் பகுதியை பார்க்கும் நேரத்தில் எதிரே செல்லும் வாகனம் வேகத்தை குறைத்துவிட்டாலோ அல்லது நிறுத்தி விட்டாலோ நீங்கள் அந்த வாகனத்தின் பின் பக்கம் மோதி விபத்தை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.

காரில் செல்லும் போது பிளைண்ட் ஸ்பாட் பகுதியில் வரும் வாகனங்களால் ஏற்படும் விபத்துக்களை தவிர்ப்பது எப்படி?

ஒரு வேலை நீங்கள் நான்கு வழிச்சாலையில் சென்று கொண்டிருந்தால் லேன் மாற வேண்டிய சூழ்நிலை ஏற்படும் அந்த சமயங்களில் உங்கள் காரின் பிளைண்ட் ஸ்பாா்ட் பகுதியில் ஏதேனும் வாகனம் வருகிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும். முதலில் இரண்டு கண்ணாடிகளிலும் பார்த்து ஏதேனும் வாகனங்கள் உங்கள் பார்வையில் படும்படியே வருகிறதா என்பதை பாருங்கள்.

காரில் செல்லும் போது பிளைண்ட் ஸ்பாட் பகுதியில் வரும் வாகனங்களால் ஏற்படும் விபத்துக்களை தவிர்ப்பது எப்படி?

பின்னர் நீங்கள் லேன் மாறப்போவதை சிக்னல் மூலமாக தெரியப்படுத்துங்கள் ஒருவேலை உங்கள் பிளைண்ட் ஸ்பாட் பகுதியில் ஏதேனும் வாகனம் வந்தால் அவர்கள் எச்சரிக்கை அடைவார்கள். அதன் மூலம் அந்த வாகனத்தின் வேகமோ திசையோ மாறக்கூடும்.

காரில் செல்லும் போது பிளைண்ட் ஸ்பாட் பகுதியில் வரும் வாகனங்களால் ஏற்படும் விபத்துக்களை தவிர்ப்பது எப்படி?

அதன் பின்பு நீங்கள் செல்லும் காரின் வேகத்தை குறைக்க வேண்டும். ஒருவேலை நீங்கள் சிக்னல் செய்வதை கவனிக்காமல் உங்கள் பிளைண்ட் ஸ்பாட்டில் வரும் டிரைவர் தொடர்ந்து அதே வேகத்தில்வந்து கொண்டிருந்தால் நீங்கள் வேகத்தை குறைப்பது மூலம் அவர் உங்கள் பார்வையில் படும் பகுதிக்கு முன்னேறி வந்துவிடுவார்.

காரில் செல்லும் போது பிளைண்ட் ஸ்பாட் பகுதியில் வரும் வாகனங்களால் ஏற்படும் விபத்துக்களை தவிர்ப்பது எப்படி?

அதன் பின் அந்த வாகனத்தை கருத்தில் கொண்டு நீங்கள் சரியாகலேன் மாற வசதியாக இருக்கும். இதை நீங்கள் ஒவ்வொரு முறையும் செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதால் பிளைண்ட் ஸ்பாட் பகுதியில் வரும் வாகனங்களால் ஏற்படும் விபத்துக்களை தவிர்க்கலாம்.

காரில் செல்லும் போது பிளைண்ட் ஸ்பாட் பகுதியில் வரும் வாகனங்களால் ஏற்படும் விபத்துக்களை தவிர்ப்பது எப்படி?

மேலும் மேல்பக்கம் திறப்பது போன்ற ஆப்ஷன் உள்ள கார்களில் பிளைண்ட் ஸ்பார்ட் பகுதி மிக குறைவாக தான் இருக்கும். காரின் மேற்பகுதியில் குறையில்லாமல் இருக்கும் சமயங்களில் காரின் பின் பக்கம் உள்ள பகுதி பெரும்பாலும் ரியர் வியூ மிரரில் வந்து விடும். அதனால் அந்த மாதிரியான காரில் பிளைண்ட் ஸ்பாட் பகுதி மிககுறைவு.

Most Read Articles

மேலும்... #எப்படி #how to
English summary
How To Avoid Blind Spots. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X