பெரிய கஷ்டமே இல்ல... T போர்டு காரை எப்படி ஓன் போர்டு காராக மாற்றுவது?

கமர்ஷியல் பயன்பாட்டிற்காகப் பதிவு செய்யப்பட்ட வாகனத்தை செகண்ட் ஹேண்டில் வாங்கி சொந்த பயன்பாட்டு வாகனமாக மாற்ற முடியுமா? இதுகுறித்த விரிவான விளக்கத்தைக் காணலாம் வாருங்கள்.

பெரிய கஷ்டமே இல்ல . . . T போர்டு காரை எப்படி ஓன் போர்டு காராக மாற்றுவது . . .

இன்று இந்தியாவில் பயன்படுத்தப்பட்ட கார்களுக்கான மார்கெட் மிகப்பெரிய அளவில் இருக்கிறது. பலர் பட்ஜெட் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காகப் பயன்படுத்திய கார்களை வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதற்காகப் பல நிறுவனங்களும் செயல்பட்டு வருகின்றன. இன்று பயன்படுத்தப்பட்ட காரின் மார்க்கெட்டை பார்த்தால் புதிய காரை வாங்கும் மார்கெட்டை விடப் பல மடங்கு அதிகமாக இருக்கலாம். இந்நிலையில் பயன்படுத்த கார்களை வாங்குவதில் ஒரு முக்கியமான சிக்கல் இருக்கிறது. அதைப் பற்றித் தான் காணப்போகிறோம்.

பெரிய கஷ்டமே இல்ல . . . T போர்டு காரை எப்படி ஓன் போர்டு காராக மாற்றுவது . . .

பயன்படுத்திய கார் மார்கெட்டில் பெரும்பாலும் கமர்ஷியல் பயன்பாட்டிற்காகப் பதிவு செய்யப்பட்ட வாகனங்கள் அதிகமாக இருக்கின்றன. சொந்தமாக டாக்ஸி, ஓலா, உபேர் போன்ற நிறுவனங்களில் ஓடிய வாகனங்கள் அல்லது தனியார் டிராவல்ஸ்களில் பயன்படுத்திய வாகனங்கள் அதிகமாகப் பயன்படுத்திய கார்களின் மார்கெட்டிற்கு வருகின்றன.

பெரிய கஷ்டமே இல்ல . . . T போர்டு காரை எப்படி ஓன் போர்டு காராக மாற்றுவது . . .

சொந்த பயன்பாட்டிற்காகப் பயன்படுத்திய வாகனங்கள் விற்பனைக்கு வருவது குறைவு தான். இந்நிலையில் சிலர் சொந்த பயன்பாட்டிற்காக வாகனங்களைத் தேடிக்கொண்டிருப்பார்கள். ஆனால் அதை விட கமர்ஷியல் வாகனங்கள் சில நேரம் இவர் எதிர்பார்த்த பட்ஜெட்டிலும், தரத்திலும் கிடைக்கும். ஆனால் கமர்ஷியல் வாகனமாக இருக்கிறது என்கிற காரணத்திற்காக இந்த வாகனத்தை வேண்டாம் என ஒதுக்கி விடுவார்கள். ஆனால் அப்படிச் செய்ய வேண்டிய தேவையில்லை.

பெரிய கஷ்டமே இல்ல . . . T போர்டு காரை எப்படி ஓன் போர்டு காராக மாற்றுவது . . .

நீங்கள் பயன்படுத்திய கார் மார்கெட்டில் விற்பனைக்கு உள்ள கார் ஒன்று உண்மையிலே சிறப்பான ஆஃபரில் கிடைக்கிறது, நீங்கள் அதை சொந்த பயன்பாட்டிற்காகப் பயன்படுத்த வேண்டும் என விரும்பினால் அதைச் செய்வதற்கு வழிமுறைகள் இருக்கிறது. இந்த காரை வாங்கும் போது அதை பின்பற்றினால் போதும் கமர்ஷியல் காரை நீங்கள் தனிப்பட்ட பயன்பாட்டிற்காக பயன்படுத்த காராக மாற்றிவிடலாம்.

பெரிய கஷ்டமே இல்ல . . . T போர்டு காரை எப்படி ஓன் போர்டு காராக மாற்றுவது . . .

இதற்காக முதலில் செய்ய வேண்டியது பழைய உரிமையாளர் காரின் ரிஜிஸ்ட்ரெஷனை கேன்சல் செய்து உங்களிடம் விற்பனை செய்ய வேண்டும். நீங்கள் காரை வாங்கியதும். அந்த காரின் ரிஜிஸ்ட்ரெஷன் கேன்சல் செய்யப்பட்டதற்கான ஆவணங்களை வழங்கி மீண்டும் காரை தனி நபர் பயன்பாட்டு கார் என ரிஜிஸ்டர் செய்ய வேண்டும். பொதுவாக ரீஜிஸ்ட்ரெஷன் கேன்சல் செய்வது வெளி மாநிலங்களுக்குக் காரை விற்பனை செய்வது அல்லது கொண்டு போகும் போது நடைபெறும்.

பெரிய கஷ்டமே இல்ல . . . T போர்டு காரை எப்படி ஓன் போர்டு காராக மாற்றுவது . . .

இதற்காகக் காரை வைத்திருப்பவர் அந்த கார் பதிவு செய்யப்பட்ட ஆர்டிஓவிற்கு ஒரு கடிதம் எழுத வேண்டும். அதில் தான் காரை தனி நபர் பயன்பாட்டிற்குப் பயன்படுத்துபவருக்கு விற்பனை செய்யவுள்ளதாகக் குறிப்பிட்ட வேண்டும்.அத்துடன் ACC (Application of Surrender of permit and clearance certificate) இணைக்க வேண்டும்.

பெரிய கஷ்டமே இல்ல . . . T போர்டு காரை எப்படி ஓன் போர்டு காராக மாற்றுவது . . .

இத்துடன் வாகனத்தின் உரிமையாளரின் பான், ஆதார், வாகனத்தின் இன்சூரன்ஸ் உள்ளிட்ட ஆவணங்களையும் இணைக்க வேண்டும். இதையடுத்து ஆர்டிஓ குறிப்பிட்ட வாகனத்தின் பதிவெண்ணை கேன்சல் செய்துவிட்டு, அந்த வாகனத்தை வேறு இடத்தில் பதிவு செய்வதற்கான தடையில்லாத சான்றையும் வழங்குவர்.

பெரிய கஷ்டமே இல்ல . . . T போர்டு காரை எப்படி ஓன் போர்டு காராக மாற்றுவது . . .

இந்த வாகனத்தை வாங்குபவர் இந்த இரண்டு சான்றிதழையும் பெற்றுக்கொண்டு வாகனத்திற்கான பணத்தையும் அவரிடம் கொடுத்து வாகனத்தை வாங்கி அதை மீண்டும் அவர் பதிவு செய்ய விரும்பும் ஆர்டிஓவிடம் சென்று தன் வாகனத்தைப் பதிவு செய்ய விரும்புவதாகக் கூறி பதிவெண் ரத்து செய்யப்பட்டதற்கான சான்றிதழ், தடையில்லா சான்று, மற்றும் வாகனத்தைப் பதிவு செய்வதற்கான விண்ணப்பத்தை அளிக்க வேண்டும்.

பெரிய கஷ்டமே இல்ல . . . T போர்டு காரை எப்படி ஓன் போர்டு காராக மாற்றுவது . . .

இத்துடன் இந்த காருக்கான சாலை வரியையும் செலுத்தவேண்டும். காரை வாங்கியவரின் அடையாள அட்டைகளான ஆதார், பான்கார்டு உள்ளிட்டவற்றையும் இத்துடன் இணைக்க வேண்டும். புதிதாகக் காரை பதிவு செய்ய பாரம் எண் 20ஐ பயன்படுத்த வேண்டும். இத்துடன் வாகனம் வாங்கும்போது உள்ளஇன்வாய்ஸில் கலால் வரி செலுத்தப்பட்டதற்கான ரசீதும் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். இந்த செயல்பாட்டை வாகன் தளத்தின் மூலமும் செய்யலாம்.

பெரிய கஷ்டமே இல்ல . . . T போர்டு காரை எப்படி ஓன் போர்டு காராக மாற்றுவது . . .

பயன்படுத்தப்பட்ட கார்களுக்கான மார்கெட்டில் கமர்ஷியல் வாகனங்களை வாங்கும் போது சற்று கவனமாக இருக்க வேண்டும். இதை விலை குறைவாக இருக்கிறது என்கிற காரணத்தை மட்டும் பார்த்து ஏமாறாதீர்கள். பெரும்பாலும் கமர்ஷியல் பயன்பாட்டிலிருந்த வாகனங்கள் சொந்த பயன்பாட்டில் இருந்த வாகனங்களை விட மிக அதிகமாகப் பயன்படுத்தப்பட்டிருக்கும். இதனால் வாகனங்களில் உள்ளே ஏதாவது டெக்னிக்கல் பிரச்சனை இருக்கலாம்.

பெரிய கஷ்டமே இல்ல . . . T போர்டு காரை எப்படி ஓன் போர்டு காராக மாற்றுவது . . .

ஆனால் நீங்கள் டெக்னிக்கலாக எல்லா விஷயத்தையும் செக் செய்துவிட்டீர்கள். நீங்கள் கெடுக்கும் பணத்திற்கு ஏற்றது தான் இந்த கமர்ஷியல் கார் என்றால் நீங்கள் தாராளமாக இந்த காரை வாங்கலாம். இந்த காரை நீங்கள் கமர்ஷியல் வாகனத்திலிருந்து ரிஜிஸ்ட்ரெஷனை கேன்சல் செய்துவிட்டு சொந்த வாகனமாக ரிஜிஸ்டர் செய்து கொள்ளலாம்

Most Read Articles
English summary
How to change commercial vehicle to private vehicle
Story first published: Wednesday, September 28, 2022, 11:15 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X