இன்சூரன்ஸின் காலாவதி தேதியை ஆன்லைனில் செக் செய்வது எப்படி? இப்படி கூட ஒரு வழி இருக்கா?

ஆன்லைன் மூலம் உங்கள் வாகனத்தின் இன்சூரன்ஸ் குறித்த விபரங்களை எப்படித் தெரிந்து கொள்ள வேண்டும் எனக் காணலாம் வாருங்கள்.

இன்சூரன்ஸின் காலாவதி தேதியை ஆன்லைனில் செக் செய்வது எப்படி? இப்படி கூட ஒரு வழி இருக்கா?

இந்தியாவில் சாலை செல்லும் அத்தனை வாகனங்களுக்கு இன்சூரன்ஸ் என்பது கட்டாயம். இன்சூரன்ஸ்களில் பல வகைகள் இருந்தாலும் குறைந்த பட்சம் மூன்றாம் நபர் இன்சூரன்ஸையாவது எடுத்திருக்க வேண்டும். முறையான இன்சூரன்ஸ் இல்லாமல் சாலைகளில் செல்லும் வாகனங்கள் சட்டவிரோதமாகப் பயன்படுத்தப்படும் வாகனங்கள்.

இன்சூரன்ஸின் காலாவதி தேதியை ஆன்லைனில் செக் செய்வது எப்படி? இப்படி கூட ஒரு வழி இருக்கா?

இப்படியாகச் சாலைகளில் வாகனங்கள் முறையான இன்சூரன்ஸ் ஆவணங்கள் இன்றி பயன்படுத்தப்பட்டால் அந்த வாகனங்களுக்கு அபராதம் விதிக்க அதிகாரிகளுக்கு அதிகாரம் இருக்கிறது. இன்றைய சூழ்நிலைகளில் ஒரு நபர் ஒன்றிற்கும் மேற்பட்ட வாகனங்களை வைத்திருக்கின்றனர். ஒரு வீட்டில் கணவன் ஒரு பைக், மனைவி ஒரு ஸ்கூட்டர், இவர்கள் குடும்பத்துடன் பயணிக்க ஒரு கார் என மிடில் கிளாஸ் குடும்பத்திற்கே 3 வாகனங்கள் இருக்கும் நிலை வந்துவிட்டது.

இன்சூரன்ஸின் காலாவதி தேதியை ஆன்லைனில் செக் செய்வது எப்படி? இப்படி கூட ஒரு வழி இருக்கா?

இப்படிப்பட்ட சூழ்நிலைகளில் ஒவ்வொரு முறையும் அவர்கள் பயணிக்கும் வாகனத்தின் ஆவணங்களை உடன் வைத்துக்கொண்டே இருப்பது என்பது சாத்தியம் அல்ல. அதனால் பலர் இப்படியான ஆவணங்களை டிஜிட்டல் முறையில் தங்கள் செல்போனில் சேமித்து வைத்துக்கொள்கின்றனர். அதிகாரிகள் சோதனை செய்யும் போது இந்த ஆவணங்களைக் காட்டுகின்றனர்.

இன்சூரன்ஸின் காலாவதி தேதியை ஆன்லைனில் செக் செய்வது எப்படி? இப்படி கூட ஒரு வழி இருக்கா?

இப்படியான பழக்கம் மக்கள் மத்தியில் வந்துவிட்டதால் பிசிக்கல் ஆணவத்தைப் பலர் தொலைத்து விடுகின்றனர். அல்லது எந்த இடத்தில் வைத்திருக்கிறோம் என மறந்துடுவிடுகின்றனர். இந்நிலையில் ஏதாவது சூழ்நிலையில் டிஜிட்டல் ஆணவங்கள் எல்லாம் அழிந்து போய்விட்டால் உங்கள் வாகனத்தின் இன்சூரன்ஸ் பேப்பர் குறித்த எந்த தகவலும் உங்களுக்குத் தெரியாமல் இருக்கும்.

இன்சூரன்ஸின் காலாவதி தேதியை ஆன்லைனில் செக் செய்வது எப்படி? இப்படி கூட ஒரு வழி இருக்கா?

குறிப்பாக உங்கள் வாகனத்திற்கு எவ்வளவு காலம் இன்றும் இன்சூரன்ஸ் இருக்கிறது என்பது தெரியாமல் இருக்கும் இந்த மாதிரியான சூழ்நிலைகளில் ஆன்லைன் மூலம் உங்கள் வாகனத்தின் இன்சூரன்ஸ் குறித்த தகவல்களைத் தெரிந்து கொள்ளமுடியும்.

இன்சூரன்ஸின் காலாவதி தேதியை ஆன்லைனில் செக் செய்வது எப்படி? இப்படி கூட ஒரு வழி இருக்கா?

இப்படியான சூழ்நிலைகளில் 2 வழிகளில் ஒன்று இன்சூரன்ஸ் பியூரோ வெப்சைட் மற்றொன்று பரிவாகன் தளம். இந்த பதிவில் நாம் இந்த தகவலைப் பெறலாம் எனக் காணலாம். முதலில் இன்சூரன்ஸ் பியூரோ என அழைக்கப்படும் IIB வெப்சைட்டில் எப்படிக் கண்டறியலாம் எனக் காணலாம்.

இன்சூரன்ஸின் காலாவதி தேதியை ஆன்லைனில் செக் செய்வது எப்படி? இப்படி கூட ஒரு வழி இருக்கா?

முதலில் IIB வெப்சைட்டிற்குள் சென்று அங்கு உங்கள் பெயர், வாகனப் பதிவு எண், உள்ளிட்ட தகவல்களை பதிவு செய்ய வேண்டும். பின்னர் உங்களுக்கு வேண்டிய தகவலைத் தேர்வு செய்து செய்து Submit செய்ய வேண்டும். அப்படிச் செய்தவுடன் கொள்கை குறித்த தகவல்கள் உங்களுக்குக் கிடைக்கும். வாகன எண்ணை வைத்து பாலிசி கிடைக்கவில்லை என்றால் வாகனத்தின் இன்ஜின் எண் அல்லது சேசிஸ் எண்ணை வைத்து வாகனத்தின் பாலிசி விபரங்களை அறியலாம்.

இன்சூரன்ஸின் காலாவதி தேதியை ஆன்லைனில் செக் செய்வது எப்படி? இப்படி கூட ஒரு வழி இருக்கா?

புதிய வாகனங்கள் மற்றும் ஒரு வாகனத்திற்கு முதன்முறையாக வாங்கப்படும் இன்சூரன்ஸ்களுக்கு வாகன பதிவெண்ணில் தரவுகள் இருக்காது. நீங்கள் வாகனத்திற்குப் பதிவெண் வாங்கும் முன்பே இன்சூரன்ஸ் வாங்கப்படுவதால் இது இருக்காது.

இன்சூரன்ஸின் காலாவதி தேதியை ஆன்லைனில் செக் செய்வது எப்படி? இப்படி கூட ஒரு வழி இருக்கா?

இதே போல வாகன் ஆப்பில் மூலமும் இன்சூரன்ஸ் குறித்த விபரங்களைத் தெரிந்து கொள்ள முடியும். அந்த தளத்திலும் உங்களின் வாகன எண் மூலமே இந்த தகவலை பெற்றுக்கொள்ள முடியும். இந்த இரண்டு தளத்தின் மூலமும் நீங்கள் உங்கள் வாகனத்தின் இன்சூரன்ஸ் குறித்த விபரங்களைத் தெரிந்து கொள்ளலாம். அதன் மூலம் நீங்கள் வாகன இன்சூரன்ஸ் எப்பொழுது காலாவதியாகிறது என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
How to check you the expiry date of your vehicle insurance online
Story first published: Tuesday, June 21, 2022, 13:24 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X