இவங்க கிட்ட மட்டும் வாகன கடன் வாங்கிறாதீங்க... அப்புறம் உங்க சொத்த வித்தாலும் கடனை அடைக்க முடியாது...

வாகன கடன் என்ற பெயரில் பல மோசடிகள் நடந்து வருகிறது. அதனால் வாகன கடன் என்றால் என்ன? அது எப்படி வழங்கப்படுகிறது? அதை வாங்குவதற்கான தகுதி என்ன? என்னென்ன ஆவணங்கள் வழங்க வேண்டும். கடன் வழங்கும் நிறுவனத்தை எப்படி தேர்வு செய்யவேண்டும்?முழு விபரங்களை காணலாம் வாருங்கள்

ஆசைப்பட்டு ஏமாந்து போகாதீங்க . . . . கடன் வாங்கி கார் வாங்குறதுல இவ்வளவு பிரச்சனைகள் இருக்குதா . . .

இன்று இந்தியாவில் ஏராளமான வாகனங்கள் சாலையில் ஒடுகிறது. சுமார் 20-30 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு வாகனம் வாங்க வேண்டும் என்றால் ஒரு வாகன ஷோரூமிற்கு சென்று அங்கு அந்த வாகனத்திற்கான பணத்தை கட்டி அந்த வாகனத்தை வாங்க வேண்டும். அதனால் வாகனம் என்பது பெரும் பணக்காரர்களுக்கு மட்டுமே சாத்தியமாக இருந்தது. அதிக பணம் வைத்திருப்பவர்கள் மட்டுமே வாகனங்களை வாங்கி வந்தனர். ஆனால் இன்று நிலைமை அப்படி அல்ல வங்கிகள் மற்றும் தனியார் நிறுவனங்கள் வாகனங்களை வாங்க லோன்களை வழங்குகின்றன.

ஆசைப்பட்டு ஏமாந்து போகாதீங்க . . . . கடன் வாங்கி கார் வாங்குறதுல இவ்வளவு பிரச்சனைகள் இருக்குதா . . .

இன்று பெரும்பாலான மக்கள் லோன் மூலமே வாகனங்களை வாங்குகின்றனர். அதனால் பணக்காரர்கள் மட்டுமல்லாமல் சாதாரண மக்கள் கூட சொந்தமாக வாகனங்களை வாங்க துவங்கிவிட்னர். மாத வருமானத்தில் குறிப்பிட்ட பணத்தை மட்டும் லோனிற்கான இஎம்ஐயாக கட்டினால் போதும் என்பதால் மக்கள் வாகனங்களை பயன்படுத்த துவங்கிவிட்டனர். இதனால் நாடு முழுவதும் வானகங்களின் எண்ணிக்கை மிக அதிகமாகிவிட்டது.

ஆசைப்பட்டு ஏமாந்து போகாதீங்க . . . . கடன் வாங்கி கார் வாங்குறதுல இவ்வளவு பிரச்சனைகள் இருக்குதா . . .

இந்நிலையில் இந்த வாகனத்தின் பெயரில் வழங்கப்படும் கடனில்பல மோசடிகள் நடந்து வருகிறது. என்னென்ன மோசடிகள் எல்லாம் நடக்கிறது? வாகன கடனை மோசடி இல்லாமல் வாங்குவது எப்படி? வாகன கடன் வாங்கும் போது நாம் கவனிக்க வேண்டிய அம்சங்கள் என்னென்ன? ஆகியவற்றை தான் இங்கு காணப்போகிறோம். ஆனால் அதை பற்றி காணும் முன்பு வாகன கடன் குறித்த அடிப்படை விஷயங்களை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்

ஆசைப்பட்டு ஏமாந்து போகாதீங்க . . . . கடன் வாங்கி கார் வாங்குறதுல இவ்வளவு பிரச்சனைகள் இருக்குதா . . .

வாகன கடன் என்றால் என்ன?

வாகன கடன் என்பது ஒரு வங்கி அல்லது தனியார் நிறுவனம் ஒரு குறிப்பிட்ட நபரின் வாகனத்தின் மதிப்பிற்கு தகுந்தார் போல் அந்த நபருக்கு கடனாக வழங்கும் பணம் தான் வாகன கடன். இந்த கடனை வாங்கிய நபர் குறிப்பிட்ட நிறுவனம்/வங்கிக்கு மாத தவணை முறையில் வட்டியுடன் சேர்த்த வாங்கிய பணத்தை திரும்ப செலுத்த வேண்டும். வீட்டுக்கடன், நகைக்கடன் எப்படியோ அப்படி தான் வாகன கடனும் வழங்கப்படுகிறது

ஆசைப்பட்டு ஏமாந்து போகாதீங்க . . . . கடன் வாங்கி கார் வாங்குறதுல இவ்வளவு பிரச்சனைகள் இருக்குதா . . .

எந்தெந்த வாகனங்களுக்கு கடன் வழங்கப்படுகிறது?

பொதுவாக எல்லா விதமான வாகனங்களுக்கு கடன் வழங்கப்படுகிறது. ஸ்கூட்டர், பைக், கார், கமர்ஷியல் வாகனங்கள், பஸ், லாரி, கனரக வாகனங்களுக்கும் கடன் வழங்கப்படுகிறது. இதில் ஒவ்வொரு நிறுவனம்/வங்கி ஒவ்வொரு பாலிசியை வைத்திருக்கின்றனர். அதன்படி கடன் வழங்கும் நிறுவனமே எந்தெந்த வாகனங்களுக்கு கடன் வழங்கலாம் என முடிவு செய்து கொள்ள முடியும்.

ஆசைப்பட்டு ஏமாந்து போகாதீங்க . . . . கடன் வாங்கி கார் வாங்குறதுல இவ்வளவு பிரச்சனைகள் இருக்குதா . . .

வாகன கடன் வாங்க தகுதி என்ன?

ஒருவர் வாகன கடன் வாங்க வேண்டும் என்றால் அவர் இந்திய குடிமகனாக இருக்க வேண்டும். 18-75 வயதிற்குட்பட்டவராக இருக்க வேண்டும், மாதம் ரூ10,000 வருமானம் உள்ளவராக இருக்க வேண்டும், அவருக்கு எனவ நிரந்தர முகவரி ஓன்று இருக்க வேண்டும். குறிப்பிட்ட முகவரியில் அவர் 1 ஆண்டிற்கும் மேல் வசித்து வர வேண்டும் என்பது மட்டுமே அடிப்படை தகுதி அந்த தகுதியிருந்தால் மட்டும் போதாது குறிப்பிட்ட நபருக்கு வாகன கடன் வழங்கலாமா வேண்டாமா என்பதை கடன் வழங்கும் நிறுவனமே முடிவு செய்யும்.

ஆசைப்பட்டு ஏமாந்து போகாதீங்க . . . . கடன் வாங்கி கார் வாங்குறதுல இவ்வளவு பிரச்சனைகள் இருக்குதா . . .

என்னென்ன ஆவணங்கள் தேவை

வாகன கடன் வாங்க விரும்பும் நபர் தனக்கான அடையாள அட்டை, தன் வயதிற்கான அடையாள அட்டை, தன் வசிக்கும் முகவரிக்கான ஆதாரம், வருமானத்திற்கான ஆதாரம், சமீபத்திய புகைப்படம், வங்கி கணக்கு குறித்த தகவல்கள், செக் லீஃப்கள் ஆகியன கட்டாயமாக கேட்கப்படும்.சில நிறுவனங்கள் கடன் வாங்குபவர் குறித்த மேலும் சில விபரங்களை தெரிந்து கொள்ள விரும்பினால் அது குறித்த ஆவணங்களையும் கேட்பார்கள்.

ஆசைப்பட்டு ஏமாந்து போகாதீங்க . . . . கடன் வாங்கி கார் வாங்குறதுல இவ்வளவு பிரச்சனைகள் இருக்குதா . . .

எவ்வளவு கடன் வழங்கப்படும்?

பொதுவாக ஒரு வாகன கடன் வழங்கப்படும் போது கடன் வாங்குபவரின் தகுதியை பொருத்து எவ்வளவு கடன் வழங்கப்படும் என்பதை கடன் வழங்கும் நிறுவனம்/ வங்கி முடிவு செய்யும். குறிப்பிட்ட நபரின் வருமானம், அவர் ஏற்கனவே வாங்கியுள்ள கடன் விபரங்கள், இதற்கு முன்பு அவர் கடனை எவ்வாறு அடைத்தார் என்ற தகவல் உள்ளிட்ட விபரங்களை வைத்து எவ்வளவு கடன் வழங்கலாம் என்பதை முடிவு செய்வார்கள். பெரும்பாலும் வாகனத்தின் மதிப்பில் 80 சதவீதம் கடன் வழங்கப்படும். சில வாடிக்கையாளர்களுக்கு 100 சதவீதம் கூட வழங்கப்பட வாய்ப்பு இருக்கிறது.

ஆசைப்பட்டு ஏமாந்து போகாதீங்க . . . . கடன் வாங்கி கார் வாங்குறதுல இவ்வளவு பிரச்சனைகள் இருக்குதா . . .

லோன் வாங்கும் செயல்பாடு எப்படி நடக்கும்?

ஒருவர் தனக்கு வாகன கடன் வேண்டும் என்ன விண்ணப்பித்தவுடன் குறிப்பிட்ட நிறுவனம் அவரின் சிபில் ஸ்கோரை கணக்கிடும். அதில் அவர் இதற்கு முந்தைய கடன் விபரங்களை வைத்து தெரிந்து கொள்ளலாம். அதன் பின் அவரின் வருமானத்தை கணக்கிட்டு குறிப்பிட்ட நபரால் எவ்வளவு மாத தவணை கட்ட முடியும் என கணக்கிட்டு குறிப்பிட்ட மாத தவனை வரும்படி எவ்வளவு கடன் வழங்கலாம் என்பதை கணக்கிட்டு இந்த கடன் தொகையை முடிவு செய்வார்கள். இதில் எதாவது விஷயத்தில் ஆட்சேபனை இருந்தால் குறிப்பிட்ட வங்கி கடன் விண்ணப்பத்தை ரத்து செய்யவும் செய்யலாம்.

ஆசைப்பட்டு ஏமாந்து போகாதீங்க . . . . கடன் வாங்கி கார் வாங்குறதுல இவ்வளவு பிரச்சனைகள் இருக்குதா . . .

ஏமாற்று வேலை எப்படி நடக்கும்?

பொதுவாக இப்படியாக வாகன கடன்கள் வழங்கும் நிறுவனம் ரிசர்வ் வங்கியில் பதிவு செய்யப்பட்ட, செபியால் கண்காணிக்கப்படும் நிறுவனமாக இருக்க வேண்டும். இந்தியாவில் கடன் வழங்குவதற்கு என ஒரு சில சட்டவிதிமுறைகள் இருக்கிறது. அதை பின்பற்றி தான் கடன் வழங்க வேண்டும். ஆனால் சில தனியார் நிறுவனங்கள் இவற்றில் பதிவு செய்யலாமல் முறையான இல்லாமல் கடன்களை வழங்குகிறது. இப்படியாக கடன் வழங்கும் நிறுவனங்கள் அதிகமான வட்டியை வசூலிக்கிறது, வாகனத்தை பறிமுதல் செய்யும் நோக்கில் செயல்படுகிறது. உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் உள்ளன.

ஆசைப்பட்டு ஏமாந்து போகாதீங்க . . . . கடன் வாங்கி கார் வாங்குறதுல இவ்வளவு பிரச்சனைகள் இருக்குதா . . .

இதனால் நீங்கள் கடன் வாங்கும் போது உங்களுக்கு மற்ற நிறுவனங்கள் மறுத்த போதும், அதிகமான தொகை தருவதாக பதிவு செய்யாத ஒரு தனியார் நிறுவனம் சொன்னாலும், குறிப்பிட்ட ஆவணம் இல்லாவிட்டாலும் கடன் தருவதாக ஒரு நிறுவனம் சொன்னால் பணத்திற்காக ஆசைப்பட்டு ஆபத்தில் சிக்கி விடாதீர்கள். இதனால் சரியான இடத்தில் உங்கள் வாகனத்திற்கான கடனை பெறுங்கள். புதிய வாகனத்தை விட பழைய வாகனங்களுக்கு கடன் வழங்குவதில் தான் மோசடி செய்யும் நிறுவனங்கள் அதிகம் செயல்படுவதாக சொல்லப்படுகிறது. இது போன்ற ஏதாவது மோசமான அனுபவம் இருந்தால் அதை கமெண்டில் பகிருங்கள்

Most Read Articles
மேலும்... #எப்படி #how to
English summary
How to choose right bank to get car loan
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X