விலை கம்மியா இருக்குதுனு கண்டதையும் வாங்கி ஊத்தாதீங்க... இன்ஜின் ஆயிலை வாங்கும் போது இதையெல்லாம் செக் பண்ணுங்க

உங்கள் வாகனத்திற்காக இன்ஜின் ஆயிலை தேர்வு செய்யும் போது எப்படித் தேர்வு செய்ய வேண்டும்? இதில் நாம் கவனிக்க வேண்டிய விஷயம் என்னென்ன? முழுமையாகக் காணலாம்

நம்மில் பலர் நம் வாகனத்திற்காக இன்ஜின் ஆயில் வாங்கும் போது அதன் விலை மட்டும் தான் நோட் செய்வோமே தவிர அதை சரியாக எப்படி தேர்வு செய்வது என்று தெரியாமல் இருப்போம். இந்த பதிவில் இன்ஜின் ஆயில் வாங்கும்போது எதையெல்லாம் செக் செய்ய வேண்டும் என்றுபார்க்கப்போகிறோம்.

விலை கம்மியா இருக்குதுனு கண்டதையும் வாங்கி ஊத்தாதீங்க... இன்ஜின் ஆயிலை வாங்கும் போது இதையெல்லாம் செக் பண்ணுங்க

இன்ஜின் ஆயில் வாங்க 3 விஷயம் தான் மிகவும் முக்கியம். 1. அதன் வகை 2. வெஸ்காசிட்டி அளவு 3. பெர்பாமென்ஸ் அளவு பொதுவாக மார்கெட்டில் 2 வகை இன்ஜின் ஆயில் தான் இருக்கிறது. மல்டி கிரேடு இன்ஜின் ஆயில், சிந்தெடிக் இன்ஜின் ஆயில் இதில் சிந்தெடிக் இன்ஜின் ஆயில் தான் சிறந்த தரம் கொண்டது. மல்டி கிரேடு இன்ஜின் ஆயில் சாதாரண தரம் கொண்டது தான்.

அடுத்தாக வெஸ்காசிட்டி அளவு பொதுவாக இன்ஜின் ஆயில் அதிகமாக இருக்கமாகவும் இருக்கக்கூடாது, அதிக லூசாகவும் இருக்கக் கூடாது. இன்ஜின் ஆயில் டப்பாவில் 5W40, 5W30, 10W40 என்ற வித விதமான அடையாளங்கள் இருக்கும் இது இன்ஜினின் வெஸ்காசிட்டி அளவை குறிக்கும். அதாவது 5W40 5 டிகிரி குளிர் முதல் 40 டிகிரி வெப்பம் வரை இந்த இன்ஜின் ஆயில் அதன் தன்மையை இழக்காது என்பது தான் இதன் அர்த்தம்

இதில் W என்பது Winter என்பதைக் குறிக்கும். இதில் நீங்கள் குளிர் பகுதியில் வசித்தால் W என்ற சொல்லுக்கு முன் உள்ள எழுத்து குறைவாக இருக்கும் இன்ஜின் ஆயிலை வாங்கிக்கொள்ள வேண்டும். அதிக வெப்பம் மிகுந்த பகுதியில் வசித்தால் W என்ற சொல்லி அடுத்து உள்ள நம்பர் அதிகமாக இருக்கும்படி வாங்க வேண்டும் உங்கள் வாகனத்திற்கு ஏற்ற வெஸ்காசிட்டி அளவை நீங்கள் வாகனம் வாங்கும் போது கேட்டு தெரிந்த கொள்வது நல்லது.

அடுத்ததாக பெர்ஃபாமென்ஸ் அளவு. இதைக் கணக்கிட ஒரு குறிப்பிட்ட இன்ஜின் ஆயில் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட சான்றுகளைப் பார்க்க வேண்டும். பெரும்பாலான இன்ஜின் ஆயில்களில் API அல்லது ACEA இதில் ஏதேனும் ஒன்று தான் இருக்கும். API என்பது அமெரிக்கச் சான்று பெற்றது. ACEA என்பது ஐரோப்ப சான்று பெற்றது. இது போக தயாரிப்பாளர்களின் சான்றுகளும் இருக்கிறது. இந்த அமெரிக்க அல்லது ஐரோப்பியச் சான்று பெற்ற இன்ஜின் ஆயில்கள் சிறப்பாக இருக்கும்.

இந்த மூன்று விஷயங்கள் தான் நீங்கள் உங்கள் வாகனத்திற்கான இன்ஜின் ஆயிலை வாங்கும் போது கவனிக்க வேண்டியது. இதை நீங்கள் டூவீலர், கார், கமர்ஷியல் வாகனங்கள், விவசாய வாகனங்கள் என எதற்காக இன்ஜின் ஆயில் வாங்கினாலும் இதைத் தான் கவனிக்க வேண்டும். விலை குறைவாக இருக்கிறது என உங்கள் வாகனத்திற்குப் பொருந்தாத ஒரு இன்ஜின் ஆயிலை வாங்கி பயன்படுத்துவது உங்கள் வாகனத்தையும் இன்ஜினையுமே பாழாக்கி விடும்.

இன்ஜின் ஆயில் என்பது உராய்வுகளைத் தடுக்கக் கூடியது. நீங்கள் அதிக குளிரில் இயங்காத இன்ஜின் அயிலைப் பயன்படுத்தினால் அதிக குளிரான நேரங்களில் ஆயில் முழுவதும் இறுகி வாகனத்தை ஸ்டார்ட் செய்ய முடியாத நிலையே ஏற்படும். ஒரு வேலை அதிக வெப்பம் தாங்காதா இன்ஜின் ஆயிலை பயன்படுத்தினால் அதிக வெப்பத்தில் இன்ஜின் ஆயில் லேசாகி அதிக உராய்வு தன்மை ஏற்பட்டு இன்ஜின் பழுதாகிப்போகும் வாய்ப்பு உள்ளது. அதனால் உங்கள் வாகனத்திற்கான சரியான இன்ஜின் ஆயிலை தேர்வு செய்வது முக்கியம்.

Most Read Articles
English summary
How to choose the right engine oil for your vehicle
Story first published: Friday, November 18, 2022, 17:25 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X