Just In
- 41 min ago
மாருதி அரேனா கார்களுக்கு ஆன்லைன் மூலமாக எளிதாக கடன் பெறும் திட்டம்!
- 55 min ago
ரொம்ப பாதுகாப்பானது... 1 கோடி ரூபாய்க்கு வால்வோ கார் வாங்கிய பிரபல டிவி நடிகை... யார்னு தெரியுமா?
- 1 hr ago
2021 சுஸுகி ஜிஎஸ்எக்ஸ்-எஸ்125 பைக் சர்வதேச சந்தையில் அறிமுகம்!! 125சிசி பைக்கிற்கு இவ்வளவு விலையா?!
- 3 hrs ago
இந்தியாவின் மலிவான க்ரூஸர் மோட்டார்சைக்கிள், பஜாஜ் அவென்ஜெர்ஸின் விலை அதிகரிப்பு!!
Don't Miss!
- Movies
சுச்சி தெரிஞ்சுதான் பண்றாங்களா? அதை எதுக்கு சொல்லணும்.. சுச்சி பேச்சால் கடுப்பான நெட்டிசன்ஸ்!
- News
தூய்மை பணியாளர் முத்துமாரிக்கு தமிழகத்தில் முதல் கொரோனா தடுப்பூசி!
- Sports
ஹர்திக் பாண்டியா தந்தை மாரடைப்பால் மரணம்.. எதிர்பாராத சோகம்!
- Education
தமிழ்நாடு சிமெண்ட் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலை வேண்டுமா?
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 16.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் அவசர முடிவுகள் எடுக்காமல் இருப்பது நல்லது…
- Finance
கலவரத்திற்கு முன் பிட்காயின் மூலம் பேமெண்ட்.. அமெரிக்காவில் நடந்த கொடூரம்..!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
உங்கள் காருக்கான சிறந்த டயரை தேர்வு செய்வது எப்படி?
கார் வைத்தருக்கும் சிலருக்கு எது சிறந்த டயர், டயரின் பயன்பாடுகளை பொருத்து அதை எப்படி தேர்வு செய்வது. அதில் எந்தெந்த அசம்சங்களை பார்த்து டயர் வாங்க வேண்டும் என்பது தெரிவதில்லை. அவர்களுக்குக்காக தான் இந்த செய்தி இதில் உங்கள் காருக்கான சிறந்த டயரை எப்படி தேர்வு செய்ய வேண்டும் என சொல்லியுள்ளோம்.

காருக்கு மிக முக்கியமான பாகம் டயர் தான். இது தான் வானகத்தில் ரோட்டில் நேரடியாக செயல்படும் ஒரே பாகம். இதனால் இதற்கு ரோட்டின் கரடு முரடான பகுதிகளை கடந்து செல்லும் வேலையும் இதற்கு உள்ளது. இதனால் நமது காருக்கான சிறந்த டயரை தேர்தேடுப்பது மிக முக்கியம்.

டயரின் தான் அக்ஸிலரேஷன், பிரேக்கிங், கையாளும் குவாலிட்டி, ஆகியவற்றை நிர்ணயக்கிறது. அது மட்டுமல்லாமல் சிறந்த டயர் தான் உங்கள் வாகனத்தின் மைலேஜையும் நிர்ணயக்கிறது. அதே நேரத்தில் குறைந்த விலை டயர்கள் சொகுசு இல்லாத அலுங்கள், குலுங்கலுடனான ரைடை வழங்குகிறது.

டயர் வகை
டயரில் மொத்தம் இரண்டுவகை தான் உள்ளது. ஒன்று டியூப் உள்ள டயர், இன்னொன்று டியூப் இல்லாத டயர். இதில் நீங்கள் டியூப் இல்லாத வகை டயரையே தேர்வு செய்யலாம். அதிக பாதுகாப்பு வாய்ந்த டயராக இந்த டயர் உள்ளது. இது அலாய் வில் மட்டுமல்ல சாதாரண ஸ்டீல் வீல் உள்ள வாகனங்களில் கூட இதை பயன்படுத்தலாம்.

டயர் சைஸ்
பொதுவாக டயர்கள் பல விதமான சைஸ்களில் வெளிவருகிறது. அந்த சைஸ்கள் டயரின் பக்கவாட்டு பகுதியில் பதிவு செய்யப்பட்டிருக்கும் அதை வைத்து நமக்கு தேவையான டயரை தேர்வு செய்து கொள்ளலாம். அனால் டயர் பக்கவாட்டு பகுதியில் பதிவு செய்யப்பட்ட டயரில் பிரிண்ட் செய்ததை எப்படி புரிந்து கொள்வது என்பதை கீழே பார்ப்போம்.

உதராணமாக நீங்கள் வைத்திருக்கும டயரில் 195/55R16 87V என்ற எண் பொறிக்கப்பட்டுள்ளது என வைத்துக்கொள்வோம். அதில் முதலில் உள்ள 195 என்பது டயரின் அகலமாகும். இதன் அர்த்தம் 195 மிமீ. அகலம் கொண்டது. டயர் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

அடுத்துள்ள 55 என்பது டயரில் உள்ள த்ரேட்டின் சதவீதம் ஆகும். அதாவது. பக்கவாட்டில் உள்ள பகுதியில் 55 சதவீதம் த்ரேட் பொருத்தப்பட்டுள்ளது என அர்த்தமாகும். அடுத்துள்ள ஆர் என்பது ரேடிகல் அதாவது வட்ட வடிவடிலான டயர் என்பதை உணர்த்துகிறது.

அதன் பின் உள்ள 16 என்ற என்ற டயரின் உட்பகுதியில் உள்ள இடைவெளியில் விட்டமாகும். அந்த பகுதியில் தான் ரிம் பொருத்தப்பட வேண்டும் என்பதால் அது மிகவும் முக்கியம். இந்த 16 என்பது இன்ச் கணக்கில் கூறுவது மேலே கூறப்பட்டுள்ள மாடல் டயரில் டயரின் நடுவில் 16 இன்ச் விட்டம் உள்ளதாக எடுத்து கொள்ளலாம்.

அடுத்ததாக உள்ள 87 என்பது டயர் எவ்வளவு லோடு தாங்கும் என்பதை குறிக்கிறது. அதாவது லோடு இன்டெக்ஸ் எனும் சார்ட் இருக்கிறது. அதில்இந்த எண் உள்ள டயர் எவ்வளவு பவுண்ட் எடையை தாக்கும் என குறிப்பிடப்பட்டிருக்கும். மேல கூறுப்பட்டுள்ள 87 என்ற எண்ணை பொருத்த வரை 1201 பவுண்ட் எடை அதாவது 544 கிலோ எடையை தாங்க கூடியது.

அடுத்ததாக உள்ள V என்பது டயர் எவ்வளவு வேகம் வரை தாங்கும் தாங்கும் என்பதை குறிக்க கூடியது. இதில் பல விதமான என்கள் உள்ள ஏ1ல் துவங்கி மொத்தம் 32 வகைகள் இதில் உள்ளன. மேல கொடுக்கபட்டுள்ள Vஎன்பது 240 கி.மீ., வேகம் வரை இது தாங்கும் என்பதை குறிப்பிடுகிறது.

டயரின் தரம் என்பது 3 வித அம்சங்களை மையமாக வைத்து மதிப்பிடப்படுகிறது. நமது வாகனத்தில் உள்ள ரிம்மின் அளவு, டயரின் அகலம், மற்றும் டயரின் பக்கவாட்டு பகுதியில் உள்ள உயரம் என்பதை கணக்கில் கொண்டு மதிப்பிடப்படுகிறது.

ரிம் சைஸ்
உங்கள் வாகனத்திற்கான டயரை நீங்கள் தேர்ந்தேடுக்கும் போது டயரின் ரிம் பகுதியை முதலில் மனதில் கொள்ள வேண்டும். ரிம் என்பது டயரின் இடைப்பட்ட பகுதியில் வருவதால், டயரை விட ரிம் அதிகமாக இருந்தால் அது டயரின் உயரத்தை குறைத்து விடும். இதனால் வாகனத்தில் செல்லும் போது கையாள்வதற்கு கடினமாக இருக்கும்.

த்ரேட் அகலம்
டயரை பொருந்தவரை மிக அகலமான த்ரேட் உள்ள டயர்களை தான் தேர்வு செய்ய வேண்டும். இது தான் காரின் செயல் திறனை பாதுகாக்கும். வாகனத்தின் லுக், மைலேஜ் என பல அசம்ங்களை இந்த த்ரேட் தான் முடிவு செய்கிறது. சிட்டி டிராபிக்களுக்கு இந்த வகை டயர் தான் பெஸ்ட் .

டயர் பக்கவாட்டு பகுதி உயரம்
உங்கள் வாகனத்தின் ரிம் சைஸ் மற்றும் மற்றும் சரியான டயர் திரேட் அகலத்தை தேர்வு செய்த பின் டயரின் பக்கவாட்டு பகுதி உயரத்தை நீங்கள் தேர்வு செய்ய வேண்டும். இது உங்கள் பழைய டயர் உள்ள உயரைத்திலயே வாங்குங்கள் இதுதான் உங்களுக்கு டிரைவ் செய்ய சரியாக அமையும்.

த்ரேட் பேட்டன்
த்ரேட் பேட்டனை தேர்வு செய்வது அடுத்த கடினமான காரியம் தான். பல்வேறு கால சூழ்நிலைக்கு ஏற்பட த்ரேட் பேட்டனை தேர்வு செய்யவேண்டும். அதாவது மழை காலம், பனிக்காலம், வெயில்காலம் அனைத்தும் இந்த பேட்டன் ஒத்துழைக்க வேண்டும்.

நன்மதிப்பு
டயர் என்பது எவ்வளவு தான் நல்ல தரம் பார்த்து வாங்கினாலும் அதிலும் சில வில்லங்கள் செய்யப்படுவதாக கூறப்படுகின்றன. இதனால் நீங்கள் வாங்கும் டயர் நிறுவனத்தின் மீது மக்கள் மத்தியில் என்ன அபிப்பிராயம் இருக்கிறது என்பதை தெரிந்து வைத்து கொள்ளுங்கள். நல்ல அபிப்பிராயங்கள் உள்ள நிறுவனங்களின் டயர்களை வாங்குதல் சிறந்தது.

வாரண்டி
டயரை பொருத்தவரை வாரண்டி தராத நிறுவனங்களின் டயர்களை பயன்படுத்துவதை தவிர்க்கலாம். அதில் குறைந்த தரமுற்ற த்ரேட், தரமில்லாத ரப்பர்கள் பயன்படுத்தப்பட்டிருக்கலாம். அதனால் எப்பொழுதும் குறைந்த பட்ச வாரண்டி தரும் டயர் நிறுவனங்களின் டயர்களை வாங்குவது சிறந்தது.

தயாரிப்பு தேதி
எல்லா டயர்களிலும் தயாரிப்பு தேதி பதிவு செய்யப்பட்டிருக்கும் மெத்தம் 4 இலக்க எண்கள் கொண்ட இதில் முதல் இரண்டு எண் எந்த வாரம் என்பதையும், கடைசி இரண்டு எண்கள் எந்த ஆண்டு என்பதையும் குறிப்பிடுகிறது. நீங்கள் வாங்கும் டயர் 6 மாதங்களுக்குள் தயாரிக்கப்பட்ட டயராக இருக்க வேண்டும். டயர் வாங்கும் முன் இதை செக் செய்வது நல்லது.