இரவில் கவனமாக வாகனம் ஓட்டுவது எப்படி? விபத்துகளைத் தவிரப்பதற்கான டிப்ஸ் இதோ...

By Lekhaka

இரவு நேரக் கொண்டாட்டங்களும், உற்சாகப் பார்ட்டிகளும்தான் இன்றைய நவநாகரீக உலகின் அடையாளமாக மாறிவிட்டது. குறிப்பாக, இளைய சமூகம் பெரும்பாலும் விரும்புவது இத்தகைய நைட் பார்ட்டிகளைத்தான்.

புயல் வேகத்தில் பைக்கையோ, காரையோ ஓட்டிக் கொண்டு செல்லும் அவர்கள், எதைப் பற்றியும் கவலைப்படுவதில்லை. மதுவின் மயக்கத்தில் அசுர வேகத்தில் செல்பவர்களைப் பார்க்கும்போது நமக்கே ஒரு வித அச்சம் எழுகிறது.

கார் டிரைவிங் டிப்ஸ்

ஹைவேஸில் போலீஸ் செக்கிங் இருக்காது என்பதால், பார்ட்டியில் பங்கேற்கும் பெரும்பாலான இளைஞர்கள் செல்வது நெடுஞ்சாலைகள் வழியாகத்தான். விளைவு, நாளுக்கு நாள் அதிகரிக்கும் சாலை விபத்துகள். அதிலும், இரவு நேரங்களில் மிக அதிகமான விபத்துகளும், உயிரிழப்புகளும் நேர்வதாக அதிர்ச்சி ரிப்போர்ட் ஒன்று தெரிவிக்கிறது.

நம் கண் முன்னே நடக்கும் இத்தகைய சம்பவங்களை கண்டும், காணாமல் இருந்தால் எப்படி? அதன் காரணமாகவே இந்த கட்டுரையை எழுத வேண்டிய கட்டாயத்துக்கு டிரைவ் ஸ்பார்க் தள்ளப்பட்டிருக்கிறது.

இரவு நேரங்களில் நெடுஞ்சாலைகளில் கவனமாக வாகனங்களை ஓட்டுவது எப்படி? என்பது குறித்த டிப்ஸ்களை வழங்க நாங்கள் முன்வந்துள்ளோம். அதை படித்துப் பார்த்து விவேகமாக செயல்பட்டு, உங்கள் குடும்பத்தின் மகிழ்ச்சியை நீட்டிக்கச் செய்யுங்கள்.

1. நகருக்குள் வண்டி ஓட்டுவதற்கான அதிகபட்ச வேகம் வரையறுக்கப்பட்டிருக்கிறது. ஆனால், நெடுஞ்சாலையில் நாம் அத்தகைய வேகக் கட்டுப்பாட்டை கடைப்பிடிக்காமல் இஷ்டம்போல ஓட்டுகிறோம். அது முற்றிலும் தவறு. ஆளில்லாத நெடுஞ்சாலையில் சென்றாலும் மிதமான வேகத்திலேயே வாகனத்தை ஓட்டுங்கள். அப்போதுதான் திடீரென ஏதாவது வாகனம் குறுக்கிட்டால் கூட நிதானமாக வண்டியை நிறுத்த முடியும்.

2. தூக்கக் கலக்கத்தில் வாகனத்தை ஓட்டாதீர்கள். உடல் சோர்வாகவோ, தூக்கம் வருவதாகவோ நீங்கள் உணர்ந்தால், உடனடியாக வண்டியை நிறுத்தி விட்டு சிறிது நேரம் ஓய்வெடுங்கள்.

3. இருள் நிறைந்த நெடுஞ்சாலைகளின் ஓரத்தில் பார்க் செய்யப்பட்டிருக்கும் வாகனங்கள் கண்ணுக்குத் தெரியாது. இன்டிகேட்டர் விளக்குகளைப் போடாமலே வாகனத்தை நிறுத்தி வைத்திருப்பார்கள். எனவே, சாலையின் இடதுபுறம் செல்லும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

4. பிரேக் டவுன் ஆன வண்டிகளை அப்படியே நடு ரோட்டில் நிறுத்தி வைப்பதுதான் நமது ஊர் வழக்கம். அத்தகைய நபர்கள் திருத்தவே முடியாது. நாம்தான் அந்த வாகனங்கள் மீது மோதாமல் மிகவும் விழிப்புடன் செயல்பட வேண்டும்.

5. உங்களுக்கு பரிச்சயம் இல்லாத சாலையில் ஒருபோதும் இரவு நேரத்தில் பயணம் மேற்கொள்ளாதீர்கள்.

6. அதிக சப்தமாக பாடல்களைக் கேட்டுச் செல்லாதீர்கள். பிற வாகனங்கள் கொடுக்கும் எச்சரிக்கை ஒலிகளை உங்களால் கேட்க இயலாது.

7. மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுவதும், எமனுடன் ஐஸ்பாய் விளையாடுவதும் ஒன்றுதான். தயவுசெய்து மது அருந்திவிட்டு வாகனத்தைத் தொடாதீர்கள். அது உங்களை மட்டுமின்றி, உங்கள் குடும்பத்தினரின் சந்தோசத்தையும் குலைத்துவிடும்.

இந்த விஷயங்களையெல்லாம் கவனத்தில் வைத்துக் கொண்டு உங்களது காரையோ, பைக்கையோ பாதுகாப்பாக ஓட்டிச் செல்லுங்கள்... உங்கள் பயணம் இனிதாக டிரைவ் ஸ்பார்க்கின் வாழ்த்துக்கள்...

Most Read Articles
English summary
How To Drive At Night: Tips For Driving After Dark.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X