கதவை மட்டும் திறக்கக் கூடாது... கார் தண்ணீருக்குள் மூழ்கும்போது அதிலிருந்து எப்படித் தப்பிக்க வேண்டும்?

கார் விபத்தில் சிக்கி தண்ணீருக்குள் விழுந்துவிட்டால் அதிலிருந்து எப்படித் தப்பிப்பது என்பது குறித்த விபரங்களைக் காணலாம்.

கதவை மட்டும் திறக்கக் கூடாது . . . கார் தண்ணீருக்குள் மூழ்கும்போது அதிலிருந்து எப்படித் தப்பிக்க வேண்டும் . . .

நம்மில் பலருக்கு கார் ஓட்டும் போது எப்பொழுதும் கார் விபத்தில் சிக்கி விடுமோ என்ற பயம் இருக்கும். பலருக்கு விபத்தில் சிக்கிய அனுபவம் கூட இருக்கும். குறிப்பாக நாம் பாலங்களில் பயணிக்கும் போது கார் விபத்தில் சிக்கி பாலத்தின் கீழ் உள்ள ஆற்றிலோ குளத்திலோ விழுந்துவிட்டால் என்ன செய்வது என்ற பயம் பலருக்கு இருக்கும். இப்படி விழுந்துவிட்டால் மரணம் உறுதி தான் எனப் பலர் நினைப்பதுண்டு, என்னதான் நீச்சல் தெரிந்தாலும்காருக்குள் அமர்ந்திருக்கும் போது நாம் தண்ணீருக்குள் விழுந்துவிட்டால் பிழைக்க முடியாது என்ற எண்ணம் பலருக்கு இருக்கும்.

கதவை மட்டும் திறக்கக் கூடாது . . . கார் தண்ணீருக்குள் மூழ்கும்போது அதிலிருந்து எப்படித் தப்பிக்க வேண்டும் . . .

ஆனால் இப்படியாக விபத்தில் சிக்கினாலும் நாம் நம் உயிரைக் காப்பாற்ற வழிகள் இருக்கிறது. இதற்காக நாம் கொஞ்சம் அறிவியலையும் கணிதத்தையும் அறிந்து வைத்துக்கொள்ள வேண்டும். அதன்படி முறையாகச் செயல்பட்டால் இப்படியாக நாம் காரில் செல்லும் போது கார் எதிர்பாராத விதமாகத் தண்ணீருக்குள் விழுந்துவிட்டாலோ அல்லது மூழ்கிவிட்டாலோ எப்படித் தப்பிக்க வேண்டும் என காணலாம்.

கதவை மட்டும் திறக்கக் கூடாது . . . கார் தண்ணீருக்குள் மூழ்கும்போது அதிலிருந்து எப்படித் தப்பிக்க வேண்டும் . . .

இதைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் கார் தண்ணீருக்குள் மூழ்கினால் என்ன நடக்கும் என காணலாம். பொதுவாக பெரும்பாலான மக்கள் காரை ஓட்டிச்செல்லும் போது காரின் அனைத்து கண்ணாடிகளையும் அடைத்துத் தான் வைத்திருப்பர். கார் விபத்தில் சிக்கி தண்ணீருக்குள் விழுந்துவிட்டால் காரின் கண்ணாடிகள் எல்லாம் அடைத்திருக்கும்பட்சத்தில் காருக்குள் தண்ணீர் உடனடியாக வராது.

கதவை மட்டும் திறக்கக் கூடாது . . . கார் தண்ணீருக்குள் மூழ்கும்போது அதிலிருந்து எப்படித் தப்பிக்க வேண்டும் . . .

இந்த நேரத்தில் எல்லோரும் காரின் கதவைத் திறந்து வெளியே செல்ல முயற்சி செய்வார்கள் ஆனால் காரின் கதவைத் திறக்க முடியாது. இதற்கு முக்கியமான காரணம் காரின் கதவிற்கு வெளியே தண்ணீர் அதிகமான அழுத்தத்தில் இருக்கும் காருக்குள் தண்ணீர் இல்லாததால் குறைவான அழுத்தத்தில் இருக்கும் இதனால் கதவைத் திறக்க முடியாது. இந்த நேரத்தில் நீங்கள் கதவைத் திறக்க முயற்சிக்கவும் கூடாது.

கதவை மட்டும் திறக்கக் கூடாது . . . கார் தண்ணீருக்குள் மூழ்கும்போது அதிலிருந்து எப்படித் தப்பிக்க வேண்டும் . . .

இந்த நேரத்தில் நீங்கள் முதலில் பதற்றத்தைக் குறைக்க வேண்டும். உங்களையும் காரில் உள்ள மற்றவர்களின் உயிரையும் காப்பாற்ற வேண்டும் என்பது மட்டுமே உங்கள் எண்ணமாக இருக்க வேண்டும். அதனால் இந்த நேரத்தில் பதற்றமடையாமல் செயலில் இறங்க வேண்டும். அமெரிக்காவில் இது குறித்து நடந்த ஆய்வு ஒன்றில் ஒரு கார் தண்ணீரில் விழுந்தால் அது விழுந்த முதல் 60 நொடியில் நடக்கும் சம்பவங்களே அங்கிருப்பவர்களைக் காப்பாற்ற உதவும் என சொல்கிறது.

கதவை மட்டும் திறக்கக் கூடாது . . . கார் தண்ணீருக்குள் மூழ்கும்போது அதிலிருந்து எப்படித் தப்பிக்க வேண்டும் . . .

ஏன் என்றால் கார் முதலில் தண்ணீரில் விழுந்தவுடன் காரின் உள்ளே முழுவதும் காற்று இருப்பதால் கார் எடுத்தவுடன் தண்ணீரில் முழ்கிவிடாது. சற்று நேரம் மிதக்கும். இந்த நேரத்தில் காருக்குள் கொஞ்சம் கொஞ்சமாகத் தண்ணீர் ஏற துவங்கிவிடும். தண்ணீர் ஏற ஏற கார் கொஞ்சம் கொஞ்சமாக மூழ்க துவங்கிவிடும். காருக்குள் முழுவதும் தண்ணீர் ஏறிவிட்டால் கார் நீருக்கடியில் செல்ல துவங்கிவிடும் அப்படியான நிலை வந்துவிட்டால் காருக்குள் இருப்பவர்கள் பிழைப்பது கடினம் தான்.

கதவை மட்டும் திறக்கக் கூடாது . . . கார் தண்ணீருக்குள் மூழ்கும்போது அதிலிருந்து எப்படித் தப்பிக்க வேண்டும் . . .

அதனால் கார் முழுவதுமாக தண்ணீருக்குள் மூழ்குவதற்குள் காருக்குள்ளே இருந்து தப்பி வெளியே சென்றுவிட வேண்டும். அதனால் கார் தண்ணீருக்குள் மூழ்கியதும் நீங்கள் காரின் கதவைத் திறக்க முயற்சி செய்யாமல் முதலில் காரின் ஜன்னலை திறந்து அது வழியாக காருக்குள் இருந்து வெளியேற வேண்டும். இது நாம் காருக்குள் விழுந்த அடுத்த நொடியே செய்திருக்க வேண்டும் காரின் கண்ணாடி வரை தண்ணீரில் முழ்கிவிட்டாலும் அதை திறக்க முடியாது.

கதவை மட்டும் திறக்கக் கூடாது . . . கார் தண்ணீருக்குள் மூழ்கும்போது அதிலிருந்து எப்படித் தப்பிக்க வேண்டும் . . .

கார் தண்ணீரில் விழுந்ததை நீங்கள் உணர்ந்ததும் முதலில் சீட் பெல்டை அகற்ற வேண்டும் பின்னர் ஜன்னல் வழியாகத் தப்பிக்க வேண்டும். காரின் ஜன்னலை திறக்க முடியவில்லை என்றால் அதை உடைக்கவும் தயங்க வேண்டாம். காரின் ஜன்னல் கண்ணாடியை உடைத்துக்கொண்டும் அதிலிருந்து தப்பிக்கலாம். ஆனால் காரின் ஜன்னல் கண்ணாடியை உடைப்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. இதற்காக நீங்கள் காரின் சீட்டில் உள்ள ஹெட்ரெஸ்டை பயன்படுத்தலாம்.

கதவை மட்டும் திறக்கக் கூடாது . . . கார் தண்ணீருக்குள் மூழ்கும்போது அதிலிருந்து எப்படித் தப்பிக்க வேண்டும் . . .

இந்த நேரத்தில் நாம் கட்டாயமாகச் செய்யக்கூடாது காரின் கதவைத் திறப்பது. கார் தண்ணீருக்குள் விழுந்ததும் நமக்கு 60 விநாடிகள் வரை கார் மூழ்குவதற்கு நேரம் கிடைக்கும். காரின் கண்ணாடி மூழ்கிவிட்டால் அதை உடைத்து வெளியேறுவதைத் தவிர வேறு வழியில்லை. எப்படியாவது நாம் காரிலிருந்து வெளியேறிவிட்டால் ஒரு நொடி கூட தாமதிக்காமல் காரில் உள்ள மற்றவரையும் காப்பாற்ற முயற்சிக்க வேண்டும்.

கதவை மட்டும் திறக்கக் கூடாது . . . கார் தண்ணீருக்குள் மூழ்கும்போது அதிலிருந்து எப்படித் தப்பிக்க வேண்டும் . . .

இதில் நீச்சல் தெரிந்தவர்கள் நீச்சல் தெரியாதவர்களுக்கு உதவி செய்து அவர்களைக் கரைக்குக் கூட்டிச்செல்ல உதவ வேண்டும். இந்த செய்தியில் நாம் முக்கியமாகத் தெரிந்து கொள்ள வேண்டியது. கார் தண்ணீருக்குள் விழந்துவிட்டால் சற்றும் யோசிக்காமல் கதவையும் திறக்காமல் காருக்குள் இருந்து ஜன்னல் வழியாக எப்படி வெளியேற வேண்டும் என்பது தான்.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
How to escape from a submerged car
Story first published: Thursday, September 22, 2022, 16:56 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X