இனி LLR வாங்க யாருக்கும் லஞ்சம் கொடுக்க தேவையில்லை... அரசு அதிரடி ஆக்ஸன்... என்னனு தெரிஞ்சா சந்தோஷப்படுவீங்க!

ஓட்டுநர் உரிமம் பெற இனி ஆர்டிஓ அலுவலகத்தில் கால் கடுக்க நிற்கத் தேவையில்லை. பயிற்சி ஓட்டுநர் உரிமத்தை உங்கள் வீட்டிலிருந்தே ஆன்லைன் மூலம் பெற முடியும் எப்படித் தெரியுமா?

இனி LLR வாங்க யாருக்கும் லஞ்சம் கொடுக்க தேவையில்லை . . . அரசு அதிரடி ஆக்ஸன் . . . என்னனு தெரிஞ்சா சந்தோஷப்படுவீங்க !

இந்தியாவில் வாகனம் ஓட்ட வேண்டும் என்றால் கட்டாயம் லைசென்ஸ் எடுக்க வேண்டும். அதற்காக இந்தியாவை மத்திய போக்குவரத்துத் துறை மாநில அரசுகளுடன் இணைத்து பல்வேறு பகுதிகளாகப் பிரித்து ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு போக்குவரத்துத் துறை அலுவலகத்தை நிறுவி அதில் அதிகாரிகளை நியமித்து அவர்கள் மூலம் ஓட்டுநர் உரிமம் பெற விரும்புபவர்களுக்கு வாகன வகை வாரியாக ஓட்டுநர் உரிமத்தைச் சோதனை செய்து வழங்குகின்றனர்.

இனி LLR வாங்க யாருக்கும் லஞ்சம் கொடுக்க தேவையில்லை . . . அரசு அதிரடி ஆக்ஸன் . . . என்னனு தெரிஞ்சா சந்தோஷப்படுவீங்க !

இந்தியா முழுவதும் ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கு ஒரே விதி தான். ஆனால் இதன் செயல்பாடு ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு விதமாக இருக்கிறது. இந்தியா முழுவதும் முதலில் ஓட்டுநர் உரிமம் பெற விண்ணப்பம் செய்பவர்களுக்குப் பயிற்சி உரிமம் முதலில் வழங்கப்பட்டும். அதை வைத்து பயிற்சி எடுக்க வேண்டும். பயிற்சி முடிந்ததும். குறிப்பிட்ட காலத்திற்குப் பின்னர் போக்குவரத்துத் துறை அதிகாரி முன்பு வாகனத்தை ஓட்டி காண்பிக்க வேண்டும். அதில் பாஸ் ஆனால் லைசென்ஸ் வழங்கப்படும்.

இனி LLR வாங்க யாருக்கும் லஞ்சம் கொடுக்க தேவையில்லை . . . அரசு அதிரடி ஆக்ஸன் . . . என்னனு தெரிஞ்சா சந்தோஷப்படுவீங்க !

இந்த செயல்முறைக்காக முதலில் பயிற்சிக்கான ஒட்டுநர் உரிமத்தைப் பெற ஒவ்வொரு ஆர்டிஓ அலுவலகத்திலும் கணினி முறை தேர்வு நடக்கும். அதற்கு அந்த லைசென்ஸை எடுக்க விரும்புபவர்கள் நேரில் வந்து அந்த தேர்வில் கலந்து கொள்ள வேண்டும். தேர்வு நேரம் சராசரியாக 5 நிமிடம் தான்.

இனி LLR வாங்க யாருக்கும் லஞ்சம் கொடுக்க தேவையில்லை . . . அரசு அதிரடி ஆக்ஸன் . . . என்னனு தெரிஞ்சா சந்தோஷப்படுவீங்க !

ஆனால் ஒவ்வொரு ஆர்டிஓ அலுவலகத்திலும் சராசரியாக 10 இடங்கள் வரை தான் இருக்கும். தமிழ்நாட்டில் மட்டும் ஆண்டிற்கு 11 பிரிவில் 12 லட்சம் பேருக்கு ஓட்டுநர் உரிமம் வழங்கப்படுகிறது. இதனால் இத்தனை பேருக்கும் பயிற்சி ஓட்டுநர் உரிமத்திற்கான தேர்வை அலுவலகத்திற்கு வந்து நடத்துவது என்பது பெரிய சவாலாகக் காரியமாக இருக்கிறது. தொழிற்நுட்ப பிரச்சனைகள் நடைமுறை சிக்கல்கள் பல விஷயங்கள் இதில் சமாளிக்க முடியாத அளவிற்கு இருந்தது.

இனி LLR வாங்க யாருக்கும் லஞ்சம் கொடுக்க தேவையில்லை . . . அரசு அதிரடி ஆக்ஸன் . . . என்னனு தெரிஞ்சா சந்தோஷப்படுவீங்க !

இதற்குத் தீர்வு காணும் வகையில் தற்போது பயிற்சி ஓட்டுநர் உரிமம் வாங்குவதற்கான தேர்வை தற்போது ஆன்லைன் மூலமே செய்யலாம் அன அரசு அறிவித்துள்ளது. அதன்படி ஒருவர் பயிற்சி ஓட்டுநர் உரிமம் வாங்க வேண்டும் என்றால் இனி ஆர்டிஓ அலுவலகத்திற்கு வரவேண்டிய தேவையில்லை. இனி தங்கள் வீட்டிலிருந்தோ, இன்டர்நெட் சென்டர்கள் மூலமாகவோ, அல்லது வேறு எந்த ஆன்லைன் வழியிலும் வாங்க முடியும்.

இனி LLR வாங்க யாருக்கும் லஞ்சம் கொடுக்க தேவையில்லை . . . அரசு அதிரடி ஆக்ஸன் . . . என்னனு தெரிஞ்சா சந்தோஷப்படுவீங்க !

இதற்காக பரிவாகன் சாரதி ஆப்பை அரசு பயன்படுத்துகிறது. இந்த ஆப் மத்திய அரசு உருவாக்கி மாநில அரசுகளின் விதிமுறைகளின் கீழ் இயங்கும்படி கட்டமைத்துள்ளது. அதன்படி ஒருவர் இந்த வெப்சைட்டிற்குள் சென்று தனக்கு ஓட்டுநர் பயிற்சி உரிமத்தை விண்ணப்பிக்க முடியும். அதற்காக அவர் தனது ஆதார் கார்டை சரிபார்க்க வேண்டும். தனது ஆதார் எண்ணைப் பதிவு செய்தால் அதில் இணைக்கப்பட்ட எண்ணிற்கு OTP வரும் அதைப் பதிவிட வேண்டும்

இனி LLR வாங்க யாருக்கும் லஞ்சம் கொடுக்க தேவையில்லை . . . அரசு அதிரடி ஆக்ஸன் . . . என்னனு தெரிஞ்சா சந்தோஷப்படுவீங்க !

ஆதாரை சரிபார்ப்பது மூலமே பெரும்பாலான வேலை முடிந்துவிட்டது. இதன் மூலமே ஆதாரில் உள்ள பெயர், வயது, பிறந்த தேதி, புகைப்படம் உள்ளிட்ட விபரங்கள் அதன் மூலம் தானாகப் பெறப்பட்டுவிடும். இதன் பின்னர் பயிற்சி ஓட்டுநர் உரிமம் பெற விண்ணப்பித்தவர்களுக்கு 12 நிமிட வீடியோ ஒன்று காண்பிக்கப்படும். இந்த வீடியோவை எந்த காரணத்தைக்கொண்டும்ஸ்கிப் செய்ய முடியாது. அதை முழுவதுமாக பார்க்க வேண்டும்.

இனி LLR வாங்க யாருக்கும் லஞ்சம் கொடுக்க தேவையில்லை . . . அரசு அதிரடி ஆக்ஸன் . . . என்னனு தெரிஞ்சா சந்தோஷப்படுவீங்க !

இந்த வீடியோ முடிந்ததும் அந்த வீடியோவில் உள்ள தகவல்கள் எல்லாம் நீங்கள் முழுவதுமாக பெற்றுக்கொள்ள வேண்டும். அதன் பின்னர் பதிவு செய்யப்பட்ட எண்ணிற்கு மற்றொரு OTP வரும் அதை வைத்துத் தேர்வைத் துவங்கலாம். ஒவ்வொரு கேள்விக்கும் அதிகபட்சமாக 60 விநாடிகள் நேரம் கொடுக்கப்படும் வெறும் 5 நிமிடத்தில் இந்த தேர்வு முடியும். இந்த தேர்வில் வென்றதும் உடனடியாக பயிற்சி ஓட்டுநர் உரிமம் வழங்கப்படும்.

இனி LLR வாங்க யாருக்கும் லஞ்சம் கொடுக்க தேவையில்லை . . . அரசு அதிரடி ஆக்ஸன் . . . என்னனு தெரிஞ்சா சந்தோஷப்படுவீங்க !

அதை உடனடியாக ஆன்லைனிலேயே டவுண்லோடு செய்து கொள்ள முடியும். இந்த பயிற்சி உரிமம் பெறப்பட்ட குறிப்பிட்ட நாளுக்குப் பிறகு, குறிப்பிட்ட நாளுக்குள் நீங்கள் ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான டெஸ்டில் பங்கேற்க அனுமதியுண்டு நீங்கள் டெஸ்டில் தேர்வான பின்புதான் ஓட்டுநர் உரிமம் கிடைக்கும்.

இனி LLR வாங்க யாருக்கும் லஞ்சம் கொடுக்க தேவையில்லை . . . அரசு அதிரடி ஆக்ஸன் . . . என்னனு தெரிஞ்சா சந்தோஷப்படுவீங்க !

இந்த தேர்வுக்குக் குறிப்பிட்ட போக்குவரத்துத் துறை அலுவலகத்திற்கு நேரடியாகச் செல்ல வேண்டும். ஆனால் பயிற்சி ஓட்டுநர் உரிமத்திற்கு ஆதார் கார்டை ஆன்லைனில் சரி பார்த்துவிட்டதால் உரிமத்திற்கு ஆதார் கார்டை கொண்டு செல்ல தேவையில்லை.

இனி LLR வாங்க யாருக்கும் லஞ்சம் கொடுக்க தேவையில்லை . . . அரசு அதிரடி ஆக்ஸன் . . . என்னனு தெரிஞ்சா சந்தோஷப்படுவீங்க !

தற்போதுவரை இந்தியா முழுவதும் லைசென்ஸ் விநியோகத்தில் மோட்டார் டிரைவிங் ஸ்கூல்களில் ஆதிக்கம் தான் அதிகமாக இருக்கிறது. இதனால் பல்வேறு முறைகேடுகள் மற்றும் பல்வேறு சட்ட விரோத விஷயங்கள் நடந்து கொண்டிருக்கிறது. இதைத் தடுத்து இந்த செயல்பாட்டை நேரடியாக மக்களே பயன்படுத்தும் விதமாக இந்த முயற்சி அமல்படுத்தப்பட்டுள்ளது.

இனி LLR வாங்க யாருக்கும் லஞ்சம் கொடுக்க தேவையில்லை . . . அரசு அதிரடி ஆக்ஸன் . . . என்னனு தெரிஞ்சா சந்தோஷப்படுவீங்க !

இதனால் மக்களும் அலைச்சல் இல்லாமல் வீட்டிலிருந்தே பயிற்சி ஓட்டுநர் உரிமத்தைப் பெற முடியும். அது மட்டுமல்ல அரசு அலுவலகங்களுக்கும். இந்த லைசென்ஸ் வழங்குவதற்கான பணியில் உள்ள சுமை குறையும். என்பதால் இந்த நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளது. நீங்கள் லைசென்ஸ் வைத்திருக்கிறீர்களா? அப்படி வைத்திருந்தால் அதை எடுக்கும் போது நீங்கள் அனுபவித்த சிரமங்களை கமெண்டில் சொல்லுங்கள்

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
How to get a learner license online in Chennai via parivahan app
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X