உங்கள் காரில் ஏற்படும் சத்தத்தை நிறுத்த என்ன வழி?

ரோல்ஸ் ராய்ஸ் காரில் உலகின் சொகுசு அம்சங்கள் நிறைந்த வாகனங்களில் ஒன்று. அந்த கார் தயாரிக்க பயன்படுத்தப்படும் பாகங்கள் பெரும்பாலும் விலை மதிப்பு மிக்க பாகங்களாக இருக்கின்றன.

உங்கள் காரில் ஏற்படும் சத்தத்தை நிறுத்த என்ன வழி?

இந்த காரின் சொகுசுக்கு முக்கிய காரணம் காரில் இருந்து எந்த சத்தமும் வராதது தான். இந்த கார் ஆன்னில் இருக்கிறதா இல்லையா என்பது கூட தெரியாத அளவிற்கு இருக்கும். இது மாதிரி உங்கள் காரையும் சத்தம் வராமல் பாதுகாக்கலாம் அதை இங்கே பார்க்கலாம் வாருங்கள்

உங்கள் காரில் ஏற்படும் சத்தத்தை நிறுத்த என்ன வழி?

காற்றில் சத்தம்

காரில் வேகமாக செல்லும் போது காற்றின் சத்தம் அதிகமாக இருக்கும். இதற்கு முக்கியமான காரணம் காரின் ஏரோடைனமிக்ஸ் டிசைன்.எஸ்யூவடி ரக கார்களில் இந்த மாதிரியான பிரச்னைகள் இருக்கும். காற்றின் சத்தத்தை இரண்டு வகையில் சீர் செய்யலாம்.

உங்கள் காரில் ஏற்படும் சத்தத்தை நிறுத்த என்ன வழி?

டோர், ப்ளோர், ரூப் லைனிங், பயர் வால்ஆகிய பகுதியில் டைனமேட்டை சேர்ப்பது மூலம் காற்றின் சத்தத்தை அதிக அளவில் குறைக்கலாம். குறைந்த விலை கார்களில் டோர்களில் உள்ள சீல்கள் சரியாக இருக்காது. இதனால் கார் செல்லும் போது கேபினிற்குள் கார் வரலாம். இதனால் வெதர் ஸ்டிரிப்பிங்கை காரின் டோர்களில் பொருத்துவது மூலம் காருக்குள் வரும் காற்றின் அளவை கட்டுப்படுத்தலாம்.

உங்கள் காரில் ஏற்படும் சத்தத்தை நிறுத்த என்ன வழி?

ரோடின் சத்தம்

கார் வேகமாக செல்லும் போது நாம் செல்லும் ரோட்டின் தன்மையிலோ அல்லது கார் டயரின் தன்மையினாலோ சத்தம் ஏற்பட்டலாம். இதை தவிர்க்க நாம் டயரின் சைடு வால் திக்காக இருக்கும்படியான டயர்களை நாம் பொருத்தவேண்டும். இந்த ரக டயர்கள் சாதாரண டயர்களை காட்டிலும் விலை சற்று அதிகமாக இருக்கும் அதே நேரத்தில் அதன் உழைப்பும் குறைவாகதான் இருக்கும்.

உங்கள் காரில் ஏற்படும் சத்தத்தை நிறுத்த என்ன வழி?

ரோடு சத்தத்தை குறைக்க டைனமேட் தயாரிப்புகளை பயன்படுத்தலாம். டைனமேட் பொருட்களை விட டேப்மெட் பொருட்களையும் பயன்படுத்தலாம் அதன் விலையும் அதிகம்.

உங்கள் காரில் ஏற்படும் சத்தத்தை நிறுத்த என்ன வழி?

அது மட்டுமல்ல காரின் பாடிக்கு அடியில் ரப்பரிஷ் கோட்டிங் அக்டிங் பொருத்துவது மூலம் சத்தத்தை கட்டுப்படுத்தலாம்.

உங்கள் காரில் ஏற்படும் சத்தத்தை நிறுத்த என்ன வழி?

இன்ஜின் சத்தம்

பெட்ரோல் இன்ஜின்கள் இயங்கும் போது அதிகமாக சத்தம் வராது. குறிப்பாக அதிக ஆர்பிஎம்மில் இயங்கும் போது சத்தம் வெகுவாக குறைந்து விடும்.டீசல் இன்ஜினில் சத்தம் அதிகமாக இருக்கும். சரியாக மேனேஜ் செய்யப்படாத இன்ஜின்கள் அதிகமாக சத்தம் எழுப்பும.

உங்கள் காரில் ஏற்படும் சத்தத்தை நிறுத்த என்ன வழி?

இதை தவிர்க்க தரமான இன்ஜின் ஆயில்களை பயன்படுத்த வேண்டும். இதனால் இன்ஜினில் ஏற்படும் அதிக சத்தத்தை கட்டுப்படுத்த முடியும். அதே போல இன்ஜினும், கியர் பாக்ஸூம் இணையும் இடத்தில் அதிக சத்தம் வந்தால் சரியான மெக்கானிக்கிடம் சென்று இதை சீர் செய்ய வேண்டும்.

உங்கள் காரில் ஏற்படும் சத்தத்தை நிறுத்த என்ன வழி?

எக்ஸாட் சத்தம்

புதிய கார்களில் எக்ஸாட்டில் இருந்து சத்தம் வராது. ஆனால் சில நாட்களுக்கு பிறகு எக்ஸாட் மஃப்ளர்களில் துரு உருவாகி அதில் சிறிய ஓட்டைகள் விழுந்தால் அதில் இரந்து சத்தம் வரும். சில சிறந்த பெர்பாமென்ஸ் தரும் எக்ஸாட்களை மாற்றினால் அதில் புகை ஃப்ரீ ப்ளோ ஆகி சத்தத்தை குறைக்கும்.

உங்கள் காரில் ஏற்படும் சத்தத்தை நிறுத்த என்ன வழி?

சஸ்பென்ஸன் சத்தம்

காரை அதிகம் பயன்படுத்தினால் சஸ்பென்ஸன் சிஸ்டத்தில் இருந்து சத்தம் வரத்துவங்கும். சஸ்பென்ஸில் உள்ள ராடுகள், பால் ஜாயிண்ட்கள், ஸ்டியர் எண்ட்கள், குறிப்பிட்ட கால இடைவெளியில் சர்வீல் செய்ய வேண்டியது அவசியம். பால் பியரிங் பகுதியில் கிரீஸ் செய்யப்பட வேண்டும். 4வீல் டிரைவிற்காக தனியாக சஸ்பென்ஸன் சிஸ்டத்தை சரி செய்ய வேண்டும்.

உங்கள் காரில் ஏற்படும் சத்தத்தை நிறுத்த என்ன வழி?

ஜெனரிக் சத்தம்

டேஷ் போர்டு, பார்சல் ட்ரே, டோர் பேனல், உள்ளிட்ட சில இன்ட்டிரீயர் ரில் சத்தம் வரும். இதை தவிர்க்க நீங்கள் காரில் எந்த பகுதியில் இருந்து சத்தம் வருகிறது என்பதை துள்ளியமாக கண்டு பிடிக்க வேண்டும். இது சற்று கடினமான காரியம் தான் இருந்தாலும் இதை நல்ல அனுபவம் உள்ள மெக்கானிக்கள் கண்டு பிடித்து விடுவார்கள்.

Most Read Articles

English summary
How to make you car silent. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X