Just In
- 9 min ago
பெட்ரோல் பைக் வச்சிருந்தா அத ஓரங்கட்டி வச்சிடுங்க.. இந்த இ-சைக்கிள்ல ஒரு கிமீ பயணிக்க வெறும் 5 பைசாதான் ஆகும்!
- 54 min ago
மஹிந்திரா பொலிரோவை வாங்கும் பிளானில் உள்ளவர்கள் இந்த புதிய ஸ்பெஷல் எடிசனை வாங்கலாம்!! விலையும் குறைவு...
- 1 hr ago
கார் ஓட்டும்போது ஏன் கழுத்து வலிக்குது தெரியுமா? இந்த விஷயங்களை செஞ்சா வலி இருந்த இடமே தெரியாம பறந்து போயிரும்
- 2 hrs ago
2-3 லட்ச ரூபா டவுண்பேமென்டிலேயே இந்த எஸ்யூவி கார்களை வாங்கிடலாம்! நம்பவே முடியல.. இந்த காரைகூட வாங்க முடியுமா?
Don't Miss!
- News
"மதங்களும், மொழிகளும் நம்மை ஒன்றிணைத்துள்ளன" நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி திரெளபதி முர்மு உரை!
- Movies
விக்ரமின் தங்கலான்.. விரைவில் கேஜிஎப் பயணமாகும் படக்குழு!
- Lifestyle
பெற்றோர்களே! உங்க குழந்தை அதிகமா சாப்பிடுறாங்களா? அப்ப இந்த அறிகுறிகள கண்டிப்பா நீங்க கவனிக்கணுமாம்!
- Finance
இது அதிர்ச்சியளிக்கிறது..FPO-வில் தாக்கத்தினை ஏற்படுத்தும் ஒரு முயற்சி.. அதானி குழுமம் பரபர கருத்து!
- Sports
அவர் டென்னிஸ் ஆடிட்டு இருக்காருங்க.. ஹர்திக் பாண்ட்யாவிடம் உள்ள ஸ்பெஷல் ஷாட்.. இர்ஃபான் புகழாரம்
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
- Technology
வாரே வா.. பிரபல நிறுவனத்தின் 42-இன்ச் ஸ்மார்ட் டிவிக்கு தள்ளுபடி வழங்கி அதிரடி காட்டிய பிளிப்கார்ட்.!
காருக்குள் குழந்தைகள் விளையாடியதால் நேர்ந்த சோகம், இதை மட்டும் செய்திருந்தால் அவர்களைக் காப்பாற்றியிருக்கலாம்
நெல்லை பணகுடி அருகே 3 குழந்தைகள் காருக்குள் சிக்கி உயிரிழந்த நிலையில் அவர்கள் ஏன் உயிரிழந்தார்கள். அதற்குப் பின்னால் உள்ள அறிவியல் காரணம் என்ன? இதை எப்படித் தடுக்க முடியும்? இனிமேல் இது போல் நடக்காமல் விழிப்புணர்வுடன் இருப்பது எப்படி? முழு விபரங்களைக் காணலாம் வாருங்கள்.

பூட்டிய கார்களுக்குள் குழந்தைகள் சிக்கி உயிரிழக்கும் சம்பவம் உலகம் முழுவதும் பல இடங்களில் அவ்வப்போது நடந்து வருகிறது. பெற்றோர்களின் அஜாக்கிரதையாலும் கவனக்குறைவாலும் இவ்வாறான சம்பவங்கள் நடந்துவருகிறது. சமீபத்தில் தமிழகத்திலும் நெல்லை மாவட்டம் பணகுடி அருகே காருக்குள் சிக்கி மூச்சுத் திணறல் ஏற்பட்டு 3 குழந்தைகள் பலியாகியுள்ளனர். இந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கிப் போட்டுள்ளது. முதலில் என்ன நடந்தது என பார்க்கலாம்.

நெல்லை மாவட்டம் பணகுடி அருகே லெப்பை குடியிருப்பைச் சேர்ந்தவர் நாகராஜன். இவர் ஊர் திருவிழாவிற்கு குடும்பத்துடன் செல்வதற்காகத் தனது அண்ணனின் நண்பர் ஒருவரிடம் காரை வாங்கி வந்துள்ளார். அந்த காரில் நாகராஜன், அவரது மனைவி மற்றும் 2 குழந்தைகளைத் திருவிழாவில் அழைத்த சென்று பின்னர் வீடு திரும்பியுள்ளனர். இந்நிலையில் அந்த காரை திரும்ப ஒப்படைக்காமல் நாகராஜன் வீட்டின் வெளியே நிறுத்தி வைத்திருந்தார்.

நாகராஜனின் குழந்தைகளுக்கு கார் மிகவும் பிடித்துப் போக காருக்குள்ளேயே விளையாடுவது சாப்பிடுவது என இருந்துள்ளனர். குழந்தைகள் சந்தோஷமாக இருப்பதால் கார் சும்மா தானே நிற்கிறது,குழந்தைகள் விளையாடட்டும் என நாகராஜின் மனைவியும் விட்டுவிட்டார். இந்நிலையில் நாகராஜனின் 7 வயது மகன் நித்திஷ், 5வது மகள் நிதிஷா மற்றும் பக்கத்து வீட்டிலிருந்து சுதாகர் என்பவரது 4 வயது மகன் கபிசந்த் ஆகியோர் காருக்குள் விளையாடியுள்ளனர்.

வெகு நேரமாகியும் குழந்தைகளைக் காணாததால் நாகராஜனின் மனைவியும் சுதாகரின் மனைவியும் குழந்தைகளைத் தேடியுள்ளனர். அப்பொழுது அங்கிருந்தவர்கள் குழந்தைகள் காரின் அருகே விளையாடிக்கொண்டிருந்ததை வெகு நேரத்திற்கு முன்பு பார்த்ததாகச் சொல்லியுள்ளார். உடனடியாக இருவரும் காரில் சென்று பார்த்த போது 3 குழந்தைகளும் மயங்கிய நிலையில் கிடந்துள்ளனர்.

உடனடியாக அக்கம் பக்கத்தினரை இருவரும் உதவிக்கு அழைத்த நிலையில் அவர்கள் வந்து காரின் ஜன்னலை உடைத்து மூன்று குழந்தைகளையும் மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் 3 குழந்தைகளையும் சோதனை செய்து பார்த்த போது 3 பேரும் ஏற்கனவே இறந்துவிட்டதாகக் கூறினார். இதைக் கேட்டுப் பெற்றோர் கதறி அழுதனர். காருக்குள் சென்ற குழந்தைகள் கதவைப் பூட்டிக்கொண்டதால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு பரிதாபமாகப் பலியாகியுள்ளனர். இந்த சம்பவம் கடந்த 2-3 நாட்களுக்கு முன்பு நடந்தது. இந்த சம்பவத்தைப் பலர் செய்திகளில் படித்திருப்பீர்கள்.

இந்த சம்பவத்தைப் படித்த பலருக்கு காருக்குள் எப்படி மூச்சுத் திணறல் ஏற்படும். நாம் காரில் செல்லும் போது பல மணி நேரம் காருக்குள் அமர்ந்துதான் செல்கிறோம். அப்பொழுது நமக்கு ஏற்படாத மூச்சுத் திணறல் எப்படி குழந்தைகளுக்கு மட்டும் ஏற்படும்? இப்படியான சம்பவங்கள் அடிக்கடி குழந்தைகளுக்கு மட்டும் ஏன் நடக்கிறது. பெரியவர்கள் இப்படியா மரணத்தைச் சந்திப்பது அரிதாக இருக்கிறது இதற்கான காரணம் என்ன எனப் புரியாமல் குழம்பி வருகின்றனர். அவர்களுக்குத் தெளிவான விளக்கத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.

பொதுவாக கார்கள் டிசைன் செய்யப்படும் போது கார்களின் ஜன்னல் கண்ணாடிகளை ஏற்றிவிட்டால் காருக்குள் வெளியிலிருந்து காற்று வராத படியே டிசைன் செய்வார்கள். இப்படி டிசைன் செய்யப்பட்டால் தான் காரில் பயணிக்கும் போது வேகமாகப் பயணிக்க முடியும். அதனால் தான் காரில் பெரும்பாலும் ஏசி வழங்கப்படுகிறது. காரின் ஏசியை ஆன் செய்தால் அது காருக்குள் இருக்கும் காற்றை வெளியேற்றி வெளியில் உள்ள காற்றைக் குளிர்ச்சியாக்கி உள்ளே அனுப்பும் அதனால் சுவாசிப்பதில் பிரச்சனை இருக்காது. ஆனால் கார் தனியாக ஆஃப் செய்யப்பட்ட முற்றிலும் அடைக்கப்பட்டு நிறுத்தப்பட்டிருந்தால் காருக்குள் இருக்கும் காற்று வெளியே வரமுடியாமல் வெளியில் உள்ள காற்று காருக்குள் செல்ல முடியாத நிலையில் இருக்கும்.

அதனால் நிறுத்தப்பட்ட பூட்டிய காருக்குள் இருப்பவர்களுக்கு சில நிமிடங்கள் மட்டுமே சுவாசிக்கக் காற்று இருக்கும் பின்னர் காருக்குள் இருக்கும் காற்று எல்லாம் அவர்கள் மூச்சு காற்றுகளாக மாறும் அப்படி நடந்தால் அவர்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்படும் காற்றில் போதுமான அளவிற்கு ஆக்ஸிஜன் இருக்காது. உடனடியாக அவர்கள் காரிலிருந்து வெளியே வெளிக்காற்றைச் சுவாசிக்க வேண்டும். இல்லை என்றால் அவர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு சில மணிநேரங்களில் உயிரிழக்கக் கூடும். ஆனால் இந்த பூட்டிகார் குழந்தைகளுக்கும் வெயிலில் நிறுத்தப்பட்டிருந்தாலும் மேலும் பெரிய ஆபத்தை ஏற்படுத்தும்.

பூட்டிய கார் வெயிலில் நிறுத்தப்பட்டிருந்தால் காருக்குள் இருக்கும் காற்று விரைவாகச் சூடாகிவிடும். சூடான காற்றில் ஆக்ஸிஜன் அளவு குறைவாக இருக்கும். அதனால் பூட்டிய காரை வெயிலில் நிறுத்தி வைத்திருந்தால் அதற்குள் இருக்கும் ஆக்ஸிஜன் அளவு விரைவாகக் குறையும் அந்த நேரத்தில் காருக்குள் மனிதர்கள் இருந்தால் அவர்கள் சில நிமிடங்களில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழக்கக் கூடும். அதுவும் குழந்தைகள் என்றால் மிக சீக்கிரமாக அவர்கள் உயிர் பிரியும் அபாயமும் உள்ளது. இதை ஆங்கிலத்தில் Heat stroke என அழைக்கிறார்கள்.

பொதுவாக இப்படி பூட்டி காருக்குள் Heat stroke ஏற்படும் போது ஒரு பெரிய ஆள் சிக்கும் போது அவருக்கு ஏற்படும் மூச்சுத் திணறலை விட 3-5 மடங்கு வேகமாகக் குழந்தைகளுக்கு மூச்சுத் திணறல் ஏற்படும் என ஒரு ஆய்வு சொல்கிறது. வெயிலில் நிறுத்தப்பட்ட ஒரு காருக்குள் ஒவ்வொரு 10 நிமிடத்திற்கும் 20 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெப்பம் அதிகரிக்கும். காருக்குள் 104 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெப்பம் ஏறிவிட்டால் குழந்தைகளின் உடல்களில் சில பாகங்கள் செயல் இழந்துபோகும் 107 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெப்பம் செல்லும் போது குழந்தைகள் மரணித்துவிடுவார்கள்.

ஆனால் இந்த வெப்பம் அதிகரிப்பதற்குள் காரின் கண்ணாடியைத் திறந்தாலோ, உடைத்தாலோ காருக்குள் காருக்குள் வெளிக்காற்று உள்ளே சென்று வெப்பம் அதிகரிப்பதைத் தடுக்கும். அல்லது ஏசியை ஆன் செய்தாலும் வெப்பத்தைத் தடுக்க முடியும். பொதுவாகப் பெரியவர்கள் இப்படியாகச் சிக்கும் போது அவர்கள் காரின் கதவுகளை உடைப்பார்கள் அல்லது மற்றவர்களுக்குக் கேட்டும் அல்லது தெரியும் படி காரின் கதவுகளைத் தட்டுவது காரை ஆட்டுவது போன்ற விஷயங்களைச் செய்வார்கள். அதன் மூலம் அவர்களே காரிலிருந்து வெளியேறவோ அல்லது உதவியை நாடவோ முடியும்.

ஆனால் குழந்தைகளுக்கு அவ்வளவு பலம் இருக்காததால் அவர்கள் காருக்குள் கத்தினாலும் காரின் கதவுகளைத் தட்டினாலும் தொலைவில் இருப்பவர்கள் அது தெரியாமல் போகும். அதுவும் காரில் அதிகமாகக் குழந்தைகள் மரணமடைய முக்கியமான காரணம். இவ்வாறான விபத்துக்களில் 15 வயதிற்குள் குறைவான குழந்தைகளே அதிகம் மரணமடைந்துள்ளனர். 15 வயதிற்கு அதிகமானவர்கள் மரணமடைவது குறைவு தான். குறிப்பாக வெளிநாடுகளில் இவ்வாறான மரணங்கள் அதிகமாக நடக்கிறது.

இப்படியான மரணங்கள் நடப்பதைத் தவிர்ப்பது எப்படி?
இப்படியான மரணங்களுக்கு மிக முக்கியமான காரணம் கவனக்குறைவு தான் பெரியவர்கள் எந்த நேரத்திலும் காருக்குள் குழந்தைகளைப் பூட்டி வைத்துவிட்டுச் செல்லக்கூடாது. காரை நிறுத்திவிட்டு இறங்கிச் செல்லும் போது செல்போன் பேசிக்கொண்டே அல்லது வேறு ஏதாவது விஷயத்தில் கவனத்தை வைத்துக்கொண்டோ காரை லாக் செய்துவிட்டு செல்லக்கூடாது. குழந்தைகள் எளிதாக எடுக்கும் இடத்தில் கார் சாவிகளை வைக்கக் கூடாது. குழந்தைகளை கார்களில் விளையாட அனுமதிக்கக்கூடாது. கார் குழந்தைகள் விளையாடும் இடம் கிடையாது.

கார்களை பயன்படுத்தாமல் வீட்டிலோ வீட்டின் அருகிலோ நிறுத்தி வைத்திருந்தால் கார்களை மூடி வைக்க வேண்டும். அப்பொழுது தான் காருக்குள் வெளி நபர்களை எளிதாகச் செல்ல முடியாதவாறு இருக்கும். கார்கள் நிறுத்தப்படும் பகுதிக்குக் குழந்தைகளைப் பெரியவர்களின் துணையில்லாமல் செல்ல அனுமதிக்கக் கூடாது.

நீங்கள் சாலையில் நிறுத்தப்பட்ட காருக்குள் குழந்தைகள் பூட்டி நிலையிலிருந்தால் உடனடியாக அந்த குழந்தைக்கு உதவி செய்யுங்கள் காரின் கதவையோ, அல்லது ஜன்னலையோ இறக்க முயற்சி செய்யுங்கள் அருகில் குழந்தைகளை அழைத்து வந்தவர்கள் கவனக்குறைவாக இருக்கிறார்களா என்பதைப் பார்த்து அவர்களை உஷார் படுத்துங்கள். முடிந்தவரை மூச்சுத் திணறல் ஏற்படும் முன்பு குழந்தையை காருக்குள்ளிலிருந்து வெளி வரவையுங்கள்.

குழந்தைகள் காருக்குள் மூச்சு விடத் திணறினால், அருகில் போலீசார் யாராவது இருந்தால் அவரை துணைக்கு அழைத்து பின்னர் காரின் ஜன்னலை உடைத்து குழந்தையைக் காப்பாற்றுங்கள். இந்த சூழ்நிலைகளில் நீங்கள் எவ்வளவு வேகமாக செயல்பட முடியுமோ அவ்வளவு வேகமாகச் செயல்பட்டால் தான் குழந்தையைச் சுலபமாகக் காப்பாற்ற முடியும். கார் விஷயத்தில் குழந்தைகளிடம் எப்பொழுதும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.
-
இந்த காருக்கு வெயில்தான் எரிபொருள்.. கரண்ட், பெட்ரோல், டீசல்னு எதுமே தேவையில்ல! காச சூப்பரா மிச்சப்படுத்தலாம்!
-
கண் தெரியாமல் லாரியை ஓட்டும் டிரைவர்கள்! டாக்டர்கள் நடத்திய ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!
-
கார்களுக்கு பதிலா இந்த ஆட்டோக்களையே வாங்கிடலாம் போல... விலையோ கம்மி, வசதியோ மிக அதிகம்!