குளிர் காலத்தில் கார் கதவுல ரப்பர் கிழியாமல் பாதுகாப்பது எப்படி?

குளிர் காலத்தின் காரின் கதவுகளில் பயன்படுத்தப்படும் ரப்பர் பாதிப்படைய வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. ரப்பர் பாதிக்கப்பட்ட என்னென்ன பிரச்சனைகள் வரும்? அதை எப்படித் தடுப்பது? முழு விபரங்களைக் காணலாம் வாருங்கள்.

கார் கதவுகளின் விளிப்புகளில் ரப்பர் ஒன்று கொடுக்கப்பட்டிருக்கும். இது காருக்குள் தண்ணீர் புகுவதையும் வெளில் உள்ள தூசு போன்ற விஷயங்கள் காருக்குள் செல்வதையும் தடுப்பதற்காக வழங்கப்பட்டுள்ளது என நாம் எல்லோருக்கும் தெரியும். ஆனால் இந்த ரப்பர் எப்பொழுது எல்லாம் பாதிக்கப்படும்? இது பாதிக்கப்படாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

குளிர் காலத்தில் கார் கதவுல ரப்பர் கிழியாமல் பாதுகாப்பது எப்படி?

காரின் கதவுகளில் ரப்பர்கள் பொதுவாகக் காரை முழுவதுமாக சீல் செய்வதற்காக வழங்கப்பட்டிருக்கும். இந்த ரப்பர்கள் காருக்கு மிகவும் முக்கியம். இது மட்டும் இல்லை என்றால் காருக்குள் இருக்கும் ஏசி வெளியேறுவது, கதவு சரியாக லாக் ஆகாமல் இருப்பது, மழை காலங்களில் காருக்குள் தண்ணீர் வந்துவிடுவது போன்ற விஷயங்கள் நடந்து விடும். இதை எல்லாம் தடுக்கத் தான் இந்த ரப்பர் வழங்கப்பட்டுள்ளது.

பொதுவாக நம்மில் பலருக்கு இரவு நேரத்தில் காரை திறந்தவெளியில் அல்லது ரோட்டில் நிறுத்துவது வழக்கம். தற்போது குளிர் காலம் காலம் என்பதால் வெளியில் இரவு நேரங்களில் குளிர் அதிகமாக இருக்கும். குளிர் எந்த அளவிற்கு இருக்கிறது என்பதைக் காலையில் எழுந்து காரை பார்த்தாலே தெரியும், கார் மேல் பனியால் முத்து முத்தாகத் தண்ணீர் நிற்கும். இந்த குளிரால் காரின் கதவில் உள்ள ரப்பர் பகுதி பாதிப்படைய வாய்ப்பு இருக்கிறது.

அதிக குளிரால் கதவு குளிராகும். இந்த குளிர் ரப்பர் பகுதிக்குக் கடத்தப்படும். அப்பொழுது ரப்பர் சுருக்கம் ஏற்பட்டு விரிசல் ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது. குளிரில் இந்த விரிசல் ஏற்பட்டு விட்டால் பின்னர் இந்த விரிசல் நாளாக நாளாகப் பெரிதாகிக்கொண்டே செல்லும் விரிசல் பெரியதானால் மழைக் காலம் வரும் போது மழையில் கார் நனையும் போது காருக்குள் தண்ணீர் இறங்க வாய்ப்பு இருக்கிறது.

இதற்கு கார் கதவின் ரப்பர்களைக் குளிர்காலத்திலேயே சரியாகப் பராமரிக்க வேண்டியது அவசியம். இப்படியாகக் குளிர்காலத்தில் சுருங்கும் ரப்பர் அதிக ஸ்டிஃப்பாக இருக்கும். இந்த ரப்பருடன் காரின் கதவுகளைத் திறந்து அடைக்கும் போது அதிக உராய்வு ஏற்படும். அதனால் தான் விரிசல் ஏற்படுகிறது. அதைத் தடுக்க ரப்பரில் சில லுப்ரிகென்ட்களை தடவலாம். இது உராய்வைக் குறைத்து ரப்பர் விரிசலைடைவதை தடுக்கும்.

இதை மிஸ் பண்ணீடாதீங்க : இந்திய நிறுவனங்களை தூக்கி சாப்பிட போகும் அமெரிக்க கம்பெனி! இந்த கார் போதும் எல்லாரும் சொக்கி போயிருவாங்க!இதை மிஸ் பண்ணீடாதீங்க : இந்திய நிறுவனங்களை தூக்கி சாப்பிட போகும் அமெரிக்க கம்பெனி! இந்த கார் போதும் எல்லாரும் சொக்கி போயிருவாங்க!

இதற்காக மார்கெட்டில் சில தயாரிப்புகள் இருக்கிறது. உதாரணமாக சிலிக்கான் ஸ்பிரே, WD 40 ஆகிய லுப்ரிகென்ட் ஸ்பிரேக்கள் ரப்பரில் செயல்படுவதற்காக இருக்கின்றன. அதை வாங்கி பயன்படுத்தினால் குளிர் காலங்களில் இந்த ரப்பர்களுக்கு ஏற்படும் பாதிப்பைத் தடுக்கலாம். ஆனால் இதைப் பயன்படுத்தும் போது கவனமாக இருக்க வேண்டும்.

சிலிக்கான் ஸ்பிரேக்களை பயன்படுத்தும் போது பெயிண்ட்களில் படாதவாறு இருக்க வேண்டும். இல்லை என்றால் பெயிண்ட்களுக்கு பாதிப்பு ஏற்படும். WD 40 ஸ்பிரேவை தொடர்ந்து பயன்படுத்தக்கூடாது. அப்படிப் பயன்படுத்தினால் அந்த ரப்பரின் ஆயுள் குறையவும் வாய்ப்பு இருக்கிறது. இதனால் குளிர் காலத்தில் இதைப் பின்பற்றி உங்கள் காரின் கதவு ரப்பரைப் பாதுகாத்துக்கொள்ளுங்கள்

Most Read Articles

மேலும்... #எப்படி #how to
English summary
How to protect your car door rubber in the winter season
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X