Just In
- 5 min ago
இது வானத்தில் பறக்காது... கட்டிட கலைஞர் உருவாக்கிய வித்தியாசமான வாகனம்... சூப்பர் திறமை!!
- 10 min ago
புதிய ஆடி எஸ்5 ஸ்போர்ட்பேக் காரின் டீசர் வெளியீடு... முக்கிய அம்சங்கள் விபரம்!
- 1 hr ago
இது நடக்கும்னு எதிர்பார்க்கவே இல்ல! ஸ்கூட்டர்களின் விலையை பெருமளவில் உயர்த்திய யமஹா... மனச திடப்படுத்திக்கோங்க
- 1 hr ago
எம்340ஐ எக்ஸ்ட்ரைவ் காருக்கான முன்பதிவுகள் துவக்கம்!! இந்தியாவின் முதல் செயல்திறன்மிக்க பிஎம்டபிள்யூ கார்..!
Don't Miss!
- News
முதல் ரவுண்டில் கறார்.. திமுக மீட்டிங் முடிந்த கையோடு கேஎஸ் அழகிரி சொன்ன அந்த விஷயம்.. என்ன நடந்தது?
- Finance
கவனிக்க வேண்டிய முக்கிய 10 விஷயங்கள்.. ஈஸி டிரிப் பிளானர்ஸ் ஐபிஓ.. நல்ல வாய்ப்பு..!
- Movies
என்னை தேவதையாக்கிய தாய்மை.. நிறைமாத கர்ப்பத்துடன் போட்டோஷூட் நடத்திய 'எருமை சாணி' ஹரிஜா!
- Sports
எரியுற தீயில் எண்ணெய ஊத்துறதா? ..... டக் அவுட்டான கோலி... மறைமுகமாக கடுப்பேத்தும் க்ரீம் ஸ்வான்
- Lifestyle
நீங்க சாப்பிடும்போது இந்த அறிகுறி தெரியுதா? அப்ப அது பிங் உணவுக் கோளாறா இருக்கலாமாம்... ஜாக்கிரதை..!
- Education
TNPSC 2021: ராஷ்டிரிய இந்திய ராணுவ கல்லூரி சேர்க்கைகான அறிவிப்பு வெளியீடு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
புதிய காரை எப்படி கையாள்வது? உங்களுக்கு அவசியமான டிப்ஸ்
நீங்கள் வாங்கிய புதிய காரை எப்படி கையாளுகிறீர்களோ அப்படி தான் மீதம் உள்ள வாழ்நாளில் அந்த காரின் இயக்கம் அமையும். புதிய காரை எப்படி கையாள்வது என்பது உங்களுக்கு தெரியுமா?

நீங்கள் புதிய கார் வாங்கிருக்கீங்களா? புதிதாக காரை வாங்கும் முன் எந்த காரை வாங்கலாம் அந்த காரில் என்னென்ன வசதிகள் இருக்கிறது. இந்த காரில் என்னென்ன அம்சங்கள் இருக்கிறது என நீங்கள் நிச்சயம் அலசி ஆராய்ந்து தான் காரை வாங்கியிருப்பீர்கள்.

அப்படி நீங்கள் வாங்கிய காரை சரியாக பராமரிப்பது என்பது மிக முக்கியமான ஒன்று. காரை பராமரித்தல் என்றால் காரை சரியான நேரத்திற்கு சர்வீஸ் செய்வது மட்டுமல்ல காரை சரியாக கையாள்வதும்தான்.

புதிய காரை நீங்கள் கையாளும் விதத்தை பொறுத்துதான் காரின் மைலேஜ், பிக்கப், செயல் திறன், ஆயுட்காலம் என பல அம்சங்கள் காரில் செட் ஆகும். அதாவது காரில் உள்ள பாகங்கள் அதன் செல்பாடை செட் செய்ய சில காலம் ஆகும் அந்த கால கட்டத்தில் நீங்கள் காரை கவனமாக கையாள வேண்டும். அதற்கான டிப்ஸ்களை தான் கீழே வழங்கியுள்ளோம்.

செட் செய்ய வேண்டிய காலம்
நீங்கள் வாங்கும் காரை பொறுத்து ஒவ்வொரு காருக்கும் ஒவ்வொரு விதமான செட்டிங் காலம் என்பது இருக்கும் சில கார்களுக்கு 1000 கி.மீ., தூரம் பயணிப்பது, சில கார்களுக்கு 2500 கி.மீ., தூரம் பயணிப்பது என காரை செட் செய்யும் காலம் என்பது இருக்கும்.

உங்கள் காருக்கான செட்டிங் காலம் தெரியாவிட்டால் பராவாயில்லை, அதிகபட்ச செட்டிங் காலமான 2500 கி.மீ., தூரத்தையே நீங்கள் செட்டிங் காலமாக எடுத்துக்கொண்டு செயல்பட துவங்குங்கள். அந்த காலங்கள் நீங்கள் காரை எவ்வாறு இயக்குறீர்கள் என்பதை பொறுத்து தான் மீதம் உள்ள காலங்களில் அந்த காரின் இயக்கம் அமையும்.

ஜென்டிலாக இயக்குங்கள்
புதிய காரின் இன்ஜினிற்கு அதிக பளூவை கொடுக்காதீர்கள். குறைவான ரேஸ கொடுத்து பழகுங்கள். பெட்ரோல் காருக்கு முதல் 1000 கி.மீ., வரை 2500 ஆர்.பி.எம்.மிற்கு மிகாமல் ரேஸ் கொடுக்க வேண்டும்.

1000 கி.மீ., அடுத்து உங்கள் காரின் செட்டிங் காலம் முடியும் வைர 3000 -3500 வரை ஆர்.பி.எம்.மை ஜென்டிலாக அதிகரிக்கலாம்.

டீசல் இன்ஜினை பொருத்தவரை முதல் 1500 கி.மீ., வரை 2000-2500 வரை மட்டுமே ஆர்பிஎம் கொடுக்க வேண்டும். 1500 கி.மீ. அடுத்து உங்கள் காரின் செட்டிங் காலம் முடியும் வரை 3000க்கு மிகாமல் ஆர்.பி.எம் கொடுக்கலாம்.

தேவையில்லாமல் ஆர்.பி.எம் அதிமாக கொடுத்து உடனடியாக குறைப்பது உங்கள் காரின் மைலேஜை பாதிக்கும்.

கியர் பாதுகாப்பு
புதிய காரில் கியரை கையாள்வது என்பது மிகவும் முக்கியமானது. பொதுவாக புதிய காரில் நெடுதூரம் பயணம் செய்வதை தவிர்த்து விடுங்கள். அதே நேரத்தில் மிகவும் நெருக்கடியான டிராபிக்களுக்கு இடையே காரை கொண்டு செல்ல வேண்டாம்.

அதிக தூரம் பயணம் செய்வதால் அடிக்கடி தொடர்ச்சியாக கியரை பயன்படுத்த வேண்டியது இருக்கும் இது கீயரை விரைவில் தேய்மானமாக்கும். அதிக டிராப்பிற்குள் செல்வதால் அதிகமாக கியரை மாற்றி மாற்றி பயன்படுத்த வேண்டியது வரும் இதுவும் நல்லதல்ல.

அதே நேரத்தில் காரை குறைந்த வேகத்தில் இயக்க வேண்டும் என்று அதிக கியரில் குறைந்த வேகத்தில் காரை இயக்கினாலும் கியர் அதிகளவில் பாதிக்கப்படும்.

100ஐ தொடாதீர்கள்
புதிய கார் வாங்கி 1000 கி.மீ., மீட்டர் தூரம் பயணிக்கும் வரை காரில் 100 கி.மீ., வேகத்தை தொடாதீர்கள். அதுவும் இன்ஜினை சிறப்பாக கண்டிஷன் செய்யாது. அதேநேரத்தில் முதல் 300 கி.மீ., தூரம் வரை கடினமாக பிரேக்குகளை போடாதீர்கள் இதுவும் இன்ஜினை பாதிக்கும். மேலும் காரின வேகத்தை மெதுவாகவும், படிப்படியாகவும் அதிகரியுங்கள்.

சிந்தட்டிக் ஆயிலை பயன்படுத்தாதீர்கள்
காரின் சிலர் சிந்தட்டிக் ஆயிலை பயன்படுத்துகின்றனர். சிந்தட்டிக் ஆயில் என்பது அதிகமான பிசுபிசுப்பு தன்மை கொண்டது. இதை பயன்படுத்தினால் முதலில் நல்ல ரிசல்டை தந்தானாலும் பின்னர் பாதிப்பை உண்டாக்கும். சாதாரண, கார் நிறுவனங்கள் பரிந்துரைக்கும் மினரல் ஆயில்களையே முதல் 5000 கி.மீ., பயணிக்கும் வரை பயன்படுத்துங்கள்.

முதல் சர்வீஸ்
உங்கள் காருக்கான முதல் சர்வீஸை 1000 கி.மீ., கடந்த பின்பு கொண்டு செல்லுங்கள். முதல் சர்வீஸ் என்பது இலவச சர்வீசாக தான் இருக்கும். இந்த சர்வீஸின் போது ஆயில் மாற்றப்படும். மேலும் உங்கள் காரின் தயாரிப்பின் போது உள்ள சிறு சிறு கோளாறுகள் இருந்தால் இந்த சர்வீஸிலேயே சரி செய்துகொள்ளுங்கள்.

வேக்ஸ் பூசுங்கள்
நவீன காலத்தில் தயாரிக்கப்படும் கார்களுக்கு பெயிண்ட் பூசுகின்றன. இந்த பெயின்ட் கார் பாடியில் நன்றாக செட்டாகி விடும். அதை பாதுகாக்க காரில் வேக்ஸ் பூசலாம். இதன் மூலம் காரின் பெயிண்ட்டை தண்ணீர், மாசு, உள்ளிட்டவற்றில் இருந்து பாதுகாக்கமுடியும்.

நினைவில் கொள்ளுங்கள்
1. காரை சில காலங்களுக்கு மெதுவாகவும், பூப்போன்றும் கையாளுங்கள்.
2.நீங்கள் எதிர்பார்த்த அளவிற்கு புதிய காரில் முதலில் மைலேஜ் இல்லாமல் போகலாம். அதை முதல் சர்வீஸின் போது சரி செய்து கொள்ளுங்கள்.
3. எவ்வளவு வேகத்தில் செல்லும் போது எந்தெந்த கியருக்கு மாற்ற வேண்டும் என்பதை காரின் மெனுவலை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

4. காரை நிறுத்தும் போது காரை கவர் போட்டு நிறுத்துங்கள் சுற்றுசுழலில் உள்ள மாசுகள் காரை பாழாக்கி விடும்.
5. காரின் உட்புறத்தை எந்த வித வெளி மார்க்கெட்டில் கிடைக்கும் பொருட்களை கொண்டும் சில காலங்களுக்கு சுத்தம் செய்யாதீர்கள். அது உட்புற பினிஸிங்கை பாதித்து விடலாம்.

6. வாரந்தோறும் காரின் உள்ள ஆயில் லெவல்களை சரி பார்த்து கொள்ளுங்கள். புதிய காரில் அதிக ஆயில் பயன்படலாம். அதை வாரந்தோறும் கவனிப்பது அவசியம்.

இன்று நீங்கள் காரை கவனிக்கும் விதம் தான் நாளை அந்த கார் உங்களுக்கு பலனை தரும் ஆகையால் காரை கவனமாக பராமரிப்பது என்பது முக்கியது. உங்கள் புதிய கார் பயணம் இனிதே அமைய எங்களின் வாழ்த்துக்கள்.