உங்க பழைய காரை ஆன்லைனில் நல்ல ரேட்டுக்கு விற்கணுமா? சில ட்ரிக்ஸ்!!

Posted By:

பொதுவாக பழைய காரை விற்க செல்லும்போது பல சங்கடங்களை சந்திக்க நேர்கிறது. புதிய கார் வாங்குவதற்காக எக்ஸ்சேஞ்ச் செய்தாலும் சரி அல்லது உங்களது பழைய காரை அவசரத்திற்கு விற்க முற்படும்போதும் சரி, காரின் மதிப்பை தாறுமாறாக குறைத்து கேட்பதை கண்டு பெரும் ஏமாற்றம் ஏற்படுகிறது.

எக்ஸ்சேஞ்ச் போனஸ் என்ற பெயரில் தரப்படும் கூடுதல் மதிப்பும் ஒருபோதும் உங்கள் காரின் உண்மையான மதிப்பிலிருந்து ஒரு ரூபாய் கூட கூடுதலாக இருக்காது. இப்போது இருக்கும் சூழலில் ஆன்லைனில் உங்களது பழைய காரை விற்பதன் மூலம் சிறப்பான மதிப்பை அல்லது உண்மையான மதிப்பிற்கு விற்க முடியும். அதற்கான சில வழிமுறைகளை ஸ்லைடரில் காணலாம்.

01.சுத்தமாக இருக்கணும்...

01.சுத்தமாக இருக்கணும்...

காரை விற்பதற்கு முடிவு செய்த பின் காரை கழுவி சுத்தமாக வையுங்கள். இன்டிரியரும் மிகவும் சுத்தமாக இருக்க வேண்டும். எனவே, கார் வாஷ் ஸ்டேஷனில் கொடுத்து கழுவுவது அவசியம். அப்படியே எடுத்துச் சென்று வீல் பேலன்சிங் மற்றும் அலைன்மென்ட் செய்துவிடுங்கள். இந்த சில நூறு ரூபாய்கள் செலவை கணக்கிடாதீர்கள். இதன்மூலம், பல ஆயிரங்கள் தொகை கூடுதலாக கிடைக்கும்.

02. போட்டோ ஷூட்

02. போட்டோ ஷூட்

காரை சுத்தப்படுத்திய உடனேயே சுத்தமான பகுதியில் வைத்து வெளிப்புறம் மற்றும் உள்பக்கத்தை பல்வேறு கோணங்களில் படமெடுத்துக் கொள்ளுங்கள். அதில், சிறந்த படங்களை தேர்வு செய்து ஆன்லைனில் போஸ்ட் செய்யவும். காரை வாங்குபவர்க்கு படங்களை பார்த்தவுடனே ஓர் நல்ல அபிப்பிராயம் ஏற்படுத்துதல் அவசியம்.

03. உண்மையானத் தகவல்கள்

03. உண்மையானத் தகவல்கள்

காரில் இருக்கும் வசதிகள் மற்றும் காரின் பராமரிப்பு விபரங்களை தெளிவாகவும், சுருக்கமாகவும் எழுதுங்கள். காரின் பின்னணி, எவ்வளவு கிலோமீட்டர் தூரம் ஓடியிருக்கிறது, உரிமையாளர்கள் எண்ணிக்கை ஆகியவற்றை குறிப்பிடவும். சிலர் நண்பர்களிடமிருந்து வாங்கி வைத்துக் கொண்டு, அது இரண்டு கை மாறி, பின்னர் ஒரே உரிமையாளர் என்று சொல்லி விற்க முயற்சிப்பதுண்டு. எனவே, சரியான விபரங்களை தரவும்.

04. விலை நிர்ணயம்

04. விலை நிர்ணயம்

உங்கள் கார் மாடலின் தயாரிப்பு ஆண்டு, கார் மாடல் மற்றும் வேரியண்ட் போன்ற தகவல்களுடன் ஆன்லைனில் உங்கள் காருக்கான மார்க்கெட் விலையை தெரிந்துகொள்ளுங்கள். இதற்கு முன்னதாக பழைய கார் ஷோரூம்கள் மற்றும் காரை எக்ஸ்சேஞ்ச் செய்தால் புதிய கார் ஷோரூம்களில் எவ்வளவு விலையை அதிகபட்சமாக தர முன் வருகின்றனர் என்பதையும் பார்த்துக்கொள்வது அவசியம்.

 05. பேரம்

05. பேரம்

ரூ.2.60 லட்சம் மதிப்புடைய காரை பழைய கார் ஷோரூம்களில் 2.20 லட்சத்திற்கு எடுத்துக் கொள்வதாக கூறுவர். இதேபோன்று, புதிய கார் ஷோரூம்களில் எக்ஸ்சேஞ்ச் செய்யும்போது அதிகபட்சமாக ரூ.2.30 லட்சம் வரை கொடுக்க முன்வருவர். இவற்றை கணக்கிட்டு காரின் மார்க்கெட் விலை எது என்பதை தெளிவாக முடிவு செய்து கொள்ளவும். ஏனெனில், காரை வாங்க விரும்புபவர்கள் அட்லீஸ்ட் ரூ.5,000 முதல் ரூ.10,000 வரை குறைவாக கேட்பது வழக்கம். அதையும் மனதில் வைத்து விலையை நிர்ணயம் செய்வது அவசியம். ஆனால், ஷோரூம்கள், புரோக்கர்களை விட கூடுதல் பல ஆயிரங்கள் கூடுதலாகவும், உண்மையான மதிப்பையும் பெற முடியும்.

06.மொபைல்போன் பேச்சு

06.மொபைல்போன் பேச்சு

சரியான தகவல்களையும், படங்களையும் போஸ்ட் செய்த பின்னர், தொடர்ந்து மொபைல்போனில் அழைப்புகள் வரத்துவங்கும். அதில், உங்கள் மனதுக்கு திருப்தியான விலையை தெரிவிக்கும் வாடிக்கையாளர்களின் பெயர், மொபைல்எண் மற்றும் ஊர் உள்ளிட்ட விபரங்களை ஒரு நாட்குறிப்பில் எழுதிக் கொள்ளுங்கள். அதிகமானோர் அழைப்பு செய்யும்பட்சத்தில் குழம்பிவிட வாய்ப்புண்டு. மேலும், கார் இருக்கும் இடம், அதனை பார்வையிட அல்லது டெஸ்ட் டிரைவ் செய்வதற்கான விபரங்களையும், உங்களது ஓய்வு நேரத்தையும் சொல்லிவிடுங்கள்.

07.அவசரம் வேண்டாம்

07.அவசரம் வேண்டாம்

ஒருவர் நீங்கள் குறிப்பிட்ட விலைக்கு நெருக்கமான விலையை தெரிவித்தால் அவரிடம் வாக்குறுதி அளித்துவிடாதீர்கள். தொடர்ந்து வரும் அழைப்புகளில் சிறந்த விலையை தெரிவிப்பவர்க்கு முன்னுரிமை அளிக்கவும். உங்களது விலையிலிருந்து எளிதாக இறங்கிவிட வேண்டாம். திருப்தியான விலை தெரிவிக்கும் வாடிக்கையாளர்களிடம், நாசூக்காக சற்று காத்திருங்கள் என்று கூறவும்.

08. சரியானத் தகவல்கள்

08. சரியானத் தகவல்கள்

சிறந்த விலை தெரிவிக்கும் வாடிக்கையாளர்கள் நேரில் வரும்போது அவர்களிடம் சரியான விபரங்களை அளிக்கவும். பதட்டத்தில் கூடுதல், குறைவான பேச்சுக்களை தவிர்க்கவும். அவரின் மன ஓட்டத்தை அறிந்துகொண்டு, அதற்கேற்ப விபரங்களை தரவும். மேலும், ஒரிஜினல் ஆவணங்கள் அனைத்தையும் கையில் வைத்துக்கொள்ளவும்.

 09. வாடிக்கையாளர்களின் பின்புலம்

09. வாடிக்கையாளர்களின் பின்புலம்

உங்கள் காரை வாங்கும் வாடிக்கையாளர்கள் அல்லது புரோக்கர்களின் பின்புலத்தையும், காரை என்ன பயன்பாட்டுக்காக வாங்குகின்றனர் என்பதையும் கேட்டுத் தெரிந்துகொள்வது அவசியம். சில சமயம் சமூக விரோதிகளிடம் காரை வாங்கி விற்றுவிடும் ஆபத்தும் இருக்கிறது. எனவே, வந்திருப்பவர்கள் உண்மையானத் தகவல்களை தருகின்றனரா என்பதை பார்த்துக் கொண்டு ஒரு சிறு விசாரணையை போட்டுவிட்டு டீலில் இறங்கவும்.

10.ஆவணங்கள்

10.ஆவணங்கள்

படிவம்-30 மற்றும் படிவம் 31 ஆகியவற்றை கையில் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். அதில், நீங்கள் கையொப்பமிடவேண்டிய இடங்களில் நிரப்பிய பின்னர், அந்த படிவத்தில் இருக்கும் காரை பெற்றுக் கொண்டதற்கான டெலிவிரி நோட் எனப்படும் அத்தாட்சி கடிதத்தை அவரிடம் கையொப்பமிட்டு பெற்றுக் கொள்ளவும். வாங்குபவரின் தொடர்பு முகவரி மற்றும் சொந்த ஊர் விபரங்களையும், மொபைல் எண் உள்ளிட்டத் தகவல்களையும் பெற்றுக் கொள்ளுங்கள். மேலும், உடனடியாக ஆர்டிஓ., அலுவலகத்தில் பெயர் மாற்றம் செய்துவிட அறிவுறுத்துங்கள். ஆன்லைனில் உங்களது காரை நல்ல விலைக்கு சில மணிநேரங்களில் அல்லது ஒரு சில நாட்களில் விற்க முடியும்.

11. எப்போது டீல் செய்யக்கூடாது?

11. எப்போது டீல் செய்யக்கூடாது?

பெரும்பாலும் இரவில் டீல் செய்வதை தவிருங்கள். மேலும், பணத்தை வாங்கும்போது அவை நல்ல கரன்சி நோட்டுகளா அல்லது கள்ள நோட்டுகளாக என்பதை கண்டிப்பாக பார்க்கவும். மேலும், இரவு வேளையில் கள்ள நோட்டை தலையில் கட்டி சென்ற சம்பங்களும் கேட்கக் கிடைத்தது. எனவே, பண பரிவர்த்தனை செய்யும்போது கண்ணும் கருத்துமாக இருப்பது அவசியம். பகலிலேயே பணபரிவர்த்தனைகளை செய்யவும்.

 
English summary
My Used Cars Is Worth So Much? I Can't Believe This...

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark