க்ருஸ் கன்ட்ரோல் என்றால் என்ன ? அத்தொழில்நுட்பத்தை எவ்வாறு பயன்படுத்துவது ?

க்ரூஸ் கன்ட்ரோல் என்பது ஓட்டுனர் அயர்வதை தவிர்க்கும் நோ்க்கில், பாதுகாப்பை கருத்தில் கொண்டு வேகத்தை நிலைநிறுத்தி பயணத்தை செம்மனே செய்வதே இதன் நோக்கம். ஓட்டுனரால் முன்பே வரையறுக்கப்பட்ட வேகத்தை அடைந்த

க்ரூஸ் கன்ட்ரோல் என்பது ஓட்டுனர் அயர்வதை தவிர்க்கும் நோ்க்கில், பாதுகாப்பை கருத்தில் கொண்டு வேகத்தை நிலைநிறுத்தி பயணத்தை செம்மனே செய்வதே இதன் நோக்கம்.

க்ருஸ் கன்ட்ரோல் என்றால் என்ன ? அத்தொழில்நுட்பத்தை எவ்வாறு பயன்படுத்துவது ?

ஓட்டுனரால் முன்பே வரையறுக்கப்பட்ட வேகத்தை அடைந்தவுடன் வாகனத்தை அதற்கு மேல் செலுத்தாமல் என்ஜின் மற்றும் மற்ற தேவைகளை கட்டுக்கோப்புக்குள் நிறுத்துகிறது. அப்படி என்றால் அதிகபட்ச வேகத்தை இதன் மூலம் எப்படி வரையறுப்பது கீழே காணலாம்.

க்ருஸ் கன்ட்ரோல் என்றால் என்ன?

இயக்கும் விதம் :

CRUISE CONTROL என்பது மேல குறிப்பிட்டது போல் மிதமான நிலையான வேகத்தை அளிக்குமே தவிர மாறுபட்ட வானிலை சாலை அமைப்பு போன்றவற்றை இவை கருத்தில் கொள்ளாது. அது போன்ற கால கட்டங்களில் MANUAL SWITCH மூலம் முன்பு வரையறுக்கபட்ட CRUISE CONTROL கட்டுக்கோப்புகளை மாற்றி அமைக்கலாம் என்பது இதன் சிறப்பம்சம்.

க்ருஸ் கன்ட்ரோல் என்றால் என்ன?

வேக கட்டுக்கோப்பை அமைக்கும் விதம்:

CRUISE CONTROL ஐ ACTIVATE செய்வதற்கு முன்னால், ஓட்டுநர் தான் செல்ல விருக்கும் சாலையில் தான் அதிகபட்ச வேகமாக நினைக்கும் வேகத்தை ACCELERATOR மூலமாக வரையறுத்து கொள்ளலாம். அறிமுகமில்லாத சாலையில் செல்பவர்களால் அச்சாலை வேகத்தை கணிக்க இயலாது என்பதால் டாப் ஸ்பீட் செட் செய்யும் பொது கவனம் தேவை.

க்ருஸ் கன்ட்ரோல் என்றால் என்ன?

CRUISE CONTROL-ஐ பயன்படுத்தும் முறை :

ஓட்டுநர் தான் நினைத்த வேகத்தை அடைந்த உடன் எளிதாக CRUISE CONTROL ஐ ACTIVATE செய்து கொள்ளலாம். பொதுவாக அனைத்து வாகனத்திலும் ஸ்டீயரிங் வீல் அருகிலேயே CRUISE CONTROL பட்டன் இருப்பது எளிமையின் மேன்மைத்தனம். அழுத்திய அடுத்த நொடியே உங்கள் வாகனத்தின் அதிகபட்ச வேகம் வரையறுக்கப்பட்டுவிடும்.

க்ருஸ் கன்ட்ரோல் என்றால் என்ன?

எளிதான பயணத்தின் உச்சம் :

CRUISE CONTROL ஒழுங்குற அமைத்தீர்கள் ஆயின் அதன் பரிசாக , நீங்கள் விரும்பிய வேகத்தை அடைந்த உடன், உங்கள் கால்களுக்கு ஓய்வு குடுத்து நீக்கி விடலாம். வாகனம் கிளி பிள்ளைபோல் சொன்ன வேகத்தில் அமைதியாய் ஓடி கொண்டிருக்கும். மீண்டும் குறிப்பிடுகிறேன் சாலை அமைப்பு வானிலை அமைப்பு இதில் விதி விளக்கு. அறிமுகமில்லா சாலையில் மிக்க கவனம் தேவை.

க்ருஸ் கன்ட்ரோல் என்றால் என்ன?

சாலையில் முழு கவனம் தேவை :

எல்லாம் கையில் இருந்தும் இளையராஜா பாடல் கேட்டாலே , கண்ணை கட்டிவிடும். இதில் அதுவே வண்டியை இயக்குகிறது என்ற கவன குறைவு வேண்டாம். ஸ்டீயரிங் வீல் உங்கள் கையில் உள்ளதென்பது மிக முக்கியம். எனவே வண்டி தானியங்கும் போது கவனம் சிதற அதிக வாய்ப்புண்டு என்பதால் ஒரு கண் இல்லை இரு கண்ணுமே சாலை இருக்கட்டும் நண்பர்களே.

க்ருஸ் கன்ட்ரோல் என்றால் என்ன?

அவசரகால நிறுத்தம் :

ஓட்டுநர் பதட்டமான சூழ்நிலையில் பிரேக் பெடல் ஐ பதம் பார்ப்பரெனில் CRUISE CONTROL தன்னை தானே அணைத்து கொண்டுவிடும். அதே போல் சாதாரண பிரேக் செலுத்துகையில் ஒவ்வொரு முறையும் CRUISE CONTROL செட் செய்ய வேண்டுமா என்றால் இல்லை. மிதமான பிரேக்குகளை கணித்து வேகத்தை குறைத்து பின் வரையறுக்க பட்ட வேகத்தை அதுவே எட்டும் அருமையாய்.

க்ருஸ் கன்ட்ரோல் என்றால் என்ன?

ADAPTIVE CRUISE CONTROL

இது CRUISE CONTROL இன் அடுத்த அப்டேட் என்றால் மிகையாகாது. இவை வாகனத்தின் வேகத்தை முன்னே செல்லும் வாகனத்தின் வேகத்தை வைத்து ரேடார் மூலம் கணித்து ஒரே வேகத்தில் சாரணர் படை போல் பறக்க உதவும். சரி முன்னே செல்லும் வாகனம் நிறுத்தப்பட்டால்?? நம்மை போல் அதன் பின்னே சென்று நலம் விசாரிக்காது . அதையும் கணித்து வேகத்தை குறைத்து கூட வல்லது இந்த தொழில்நுட்பம்.

க்ருஸ் கன்ட்ரோல் என்றால் என்ன?

டிரைவ்ஸ்பார்க் கருத்து

அழகு ஆபத்து நிறைந்தது என்பது போல் என்னதான் CRUISE CONTROL நம் பயணத்தை எளிமை படுத்தினாலும் அதை ஒழுங்குற பயன்படுத்தவில்லை என்றால் தேவையற்ற மோதல்களில் விட்டுவிடும், தொல்லை நமக்கே. இதை களையும் வகையில் தற்பொழுது ஆட்டோமேட்டிக் பிரேக்கிங் முறையும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது மகிழ்ச்சியே .

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Cruise control is a feature that makes driving convenient and easy while also making sure that safety is taken care of. It is a feature that is making its way into more cars with every passing day.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X