எப்போது, எப்படி காரில் கியர் மாற்ற வேண்டும்? - வழிகாட்டு முறைகள்

கார் ஓட்டும் கலைக்கு அடிப்படையானது கியர் மாற்றும் தந்திரம். எரிபொருள் சிக்கனத்திற்கு கியர் மாற்றும் முறைக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. வேகத்திற்கு தகுந்தாற்போல் காரில் கியர் மாற்ற தெரிந்துகொண்டால், எரிபொருள் சிக்கனம் கிடைக்கும் என்பதோடு, கார் ஸ்மூத்தாக செல்லும்.

இல்லாவிட்டால், எவ்வளவு காஸ்ட்லியான காரை வாங்கி ஓட்டினாலும், கட்டை வண்டியில் போவதற்கு சமமான அனுபவத்தையே பெற முடியும். மேலும், ஸ்மூத்தாககவும், வேகத்திற்கு சரியான கியரிலும் ஓட்ட பழகிக்கொண்டால் கியர்பாக்ஸ் மற்றும் எஞ்சின் தீர்க்க ஆயுளை பெறும்.


மேனுவல் கியர் மாடல்

மேனுவல் கியர் மாடல்

மேனுவல் கியர் பாக்ஸ் கொண்ட கார் மாடலுக்கான வழிகாட்டு முறைகள் அடுத்தடுத்த ஸ்லைடுகளில் கொடுக்கப்பட்டுள்ளன.

முதல் கியர்

முதல் கியர்

மேனுவல் டிரான்ஸ்மிஷன் கொண்ட கார்களில் முதல் கியர் போட்டவுடன் கார் 10 முதல் 15 கி.மீ வேகம் எடுக்கும் வரை அடுத்த கியரை மாற்ற வேண்டாம். 10கி.மீ வேகத்திற்கு மேலும் 15 கி.மீ வேகத்திற்குள்ளும் இரண்டாவது கியரை மாற்றவும்.

இரண்டாவது கியர்

இரண்டாவது கியர்

இரண்டாவது கியருக்கு ஒரு சில கூடுதல் சிறப்புகள் உண்டு. அவசர காலத்தில் இரண்டாவது கியரை பிரேக் போன்று பயன்படுத்தலாம். அவசர நேரத்தில் கிளட்ச் பிடிக்காமல் இரண்டாவது கியரை மாற்றினால், கார் உடனடியாக சடன் பிரேக் அடித்தது போன்று நின்றுவிடும். இது விபத்துக்களிலிருந்து தப்பிக்க உதவும். இதற்கு எஞ்சின் பிரேக்கிங் என்று கூறுவார்கள்.

வளைவில் திருப்பும்போது...

வளைவில் திருப்பும்போது...

அதிக வளைவு கொண்ட சாலையில் திரும்பும்போது இரண்டாவது கியரில் திரும்ப வேண்டும். இது மிகவும் பாதுகாப்பானதும், சரியானதும் கூட. முதல் இரண்டு கியரை மாற்றுவதில் நீங்கள் திறமைசாலிகளாகிவிட்டாலே போதும். வேகத்தை கூட்ட வேண்டும் எனும்போது அடுத்தடுத்த கியர்களை மாற்றிக்கொள்ளலாம்.

எளிய வழி

எளிய வழி

ஒரு குறிப்பிட்ட கியரிலிருந்து அடுத்த கியரை மாற்ற வேண்டும் என்பதை எஞ்சினிலிருந்து சப்தத்தை வைத்தும் அறிந்துகொண்டு அதற்கேற்ப கியரை மாற்றலாம். மூன்றாவது கியர் போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகரங்களில் மிதமான வேகத்தில் ஓட்டுவதற்கு சிறந்தது.

டாப் கியர் எப்போது?

டாப் கியர் எப்போது?

கார் கேஜில் இருக்கும் ஆர்பிஎம் மீட்டரில் காண்பிக்கும் எஞ்சி்ன் வேகத்தை வைத்தும் சரியான கியரில் காரை இயக்கமுடியும். டாப் கியரில் செல்லும்போது பொதுவாக ஆர்பிஎம் மீட்டரில் எஞ்சின் வேகம் 3,000 முதல் 3,500 ஆர்பிஎம்மாக இருக்கும்.

முதல் கியர் பயன்பாடு

முதல் கியர் பயன்பாடு

தொடர்ந்து நாம் வேகமாக செல்லப்போகிறோம் என்று தெரிந்தவுடன் டாப் கியரை மாற்றலாம். இது காருக்கு கார் மாறும். பொதுவாக வேகத்தை குறைத்து ஓட்ட வேண்டும் எனும்போது இரண்டாவது கியரை மாற்றவும். முதல் கியருக்கு மாற்ற வேண்டாம். முதல் கியர் காரை கிளப்பும்போது மூவ் செய்யும்போது மட்டும் பயன்படுத்தவும்.

ரிவர்ஸ் கியர்

ரிவர்ஸ் கியர்

ரிவர்ஸ் கியரை மாற்றும்போது கிளட்ச் மற்றும் ஆக்சிலேட்டரை சரியான அளவிலும், கவனமாகவும் கொடுக்கவேண்டும். பின்புறம் வாகனம் அல்லது பொருட்கள் இருப்பது தெரிந்தால் மிக மெதுவாக ஆக்சிலரேஷன் செய்து பின்புறம் செல்லுங்கள்.

இனிய பயணம்

இனிய பயணம்

சரியான வேகத்தில் கியரை மாற்ற பழகிக்கொண்டால், கார் ஓட்டுவதில் நீங்கள் பாதி எக்ஸ்பர்ட் என்பது மட்டுமல்ல, உங்களது ஒவ்வொரு பயணமும் இனிதாக அமையும்.

Most Read Articles
English summary
This article will focus on the right methods of changing gears in a manual transmission car, so you can improve your driving style. Do keep in mind that the points covered are in relation to an average car with a manual gearbox, like say a Maruti Suzuki Swift.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X