80 கிமீ வேகத்திற்கு மிகாமல் காரை ஓட்டும்போது கிடைக்கும் நன்மைகள்!

Written By:
Recommended Video - Watch Now!
Angry Bull Almost Rammed Into A Car - DriveSpark

கார் டிரைவிங் பற்றி ஆலோசனை சொல்பவர்கள் அனைவருமே, காரை 80 கிமீ வேகத்திற்கு மிகாமல் ஓட்டுங்கள் என்று அறிவுறுத்துகின்றனர். அந்த அறிவுறுத்தல்கள் எல்லாம், நெடுஞ்சாலையில் வாகனப் போக்குவரத்து இருக்கும் வரைதான். சற்று நெரிசல் இல்லாத சமயங்களில் ஒரு அழுத்து அழுத்தி பார்த்துவிடுவது எல்லோருக்கும் இயல்புதான்...

80 கிமீ வேகத்திற்கு மிகாமல் காரை ஓட்டும்போது...?

ஒருவேளை நீங்கள் இந்த அறிவுறுத்தலை மனதில் கெட்டியாக பிடித்துக் கொண்டு நெடுஞ்சாலையில் காரை 80 கிமீ வேகத்திற்கு மிகாமல் ஓட்டுகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அதனால் எவ்வளவு நன்மைகள் கிடைக்கும் என்பதை தொடர்ந்து பார்க்கலாம்.

மைலேஜ்

மைலேஜ்

நெடுஞ்சாலையில் செல்லும்போது 80 கிமீ வேகத்தை ஒட்டியே ஓட்டிச் சென்றால் மிகச் சிறப்பான மைலேஜ் கிடைக்கும் என்று ஆணித்தரமாக கூற முடியும். க்ரூஸ் கன்ட்ரோல் வசதி கொண்ட கார்களில் 80 கிமீ வேகத்தில் வைத்து ஓட்டிப் பாருங்கள். மிகப்பெரிய வித்தியாசத்தை பார்க்க முடியும்.

அதிவேகம்...

அதிவேகம்...

நீண்ட தூர பயணங்களின்போது கார் அதிக மைலேஜ் தரும் என்பது உண்மைதான். அதேநேரத்தில், நீங்கள் அதிவேகத்தில் இயக்கும்போது நிச்சயம் மைலேஜ் மிக மோசமாக இருக்கும். மணிக்கு 100 கிமீ வேகத்தை கார் தாண்டிவிட்டால் மைலேஜ் தடாலடியாக குறைந்துவிடும்.

சிட்டி மைலேஜ்தான்...

சிட்டி மைலேஜ்தான்...

உதாரணத்திற்கு சிட்டியில் உங்களது கார் லிட்டருக்கு 15 கிமீ மைலேஜ் கொடுத்தால், அதிவேகத்தில் சென்றால் இதே அளவுதான் கிடைக்கும்.

நம்ம கையில இல்ல...

நம்ம கையில இல்ல...

அதிவேகத்தில் செல்லும்போது கார் நமது கட்டுப்பாட்டில் இருக்காது. அவசரத்திற்கு பிரேக் போட்டால் கூட பயன் தராது. உதாரணத்திற்கு பிரேக் ஃபெயிலியர் மற்றும் டயர் வெடிப்பு போன்ற சமயங்களில் கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுவிடும். விபத்து எப்போது ஏற்படும் என்று கூற முடியாது.

மன அழுத்தம்

மன அழுத்தம்

அதிவேகத்தில் செல்லும்போது அதிக மன அழுத்தம் ஏற்படும். நிதான வேகத்தில் செல்லும்போது இந்த மன அழுத்தத்தால் ஏற்படும் தலைவலி முற்றிலுமாக தவிர்க்க முடியும். சிறப்பான ஓட்டுதல் அனுபவத்தையும், இனிமையையும் அந்த பயணம் தரும்.

பீதி

பீதி

அதிவேகத்தில் செல்லும்போது உங்களுக்கு தலைவலி, உடல்சோர்வு, மன அழுத்தம் போன்றவை ஏற்படுவது மட்டுமல்ல, உங்களுடன் உடன் பயணிப்பவர்களும் மரண பீதியில் அமர்ந்து வரும் நிலைக்கு தள்ளப்படுவர். அவர்களது மன அழுத்தம் அதிகரிக்க நீங்கள் காரணமாக அமைவீர்கள்.

ஏசி செயல்பாடு

ஏசி செயல்பாடு

80 கிமீ வேகத்தில் ஜன்னல்களை மூடி ஓட்டும்போது ஏசியின் செயல்பாடும் சிறப்பாக இருக்கும். இதன்மூலமாகவும், கூடுதல் மைலேஜை பெற முடியும்.

பாக்கெட் பழுத்துடும்...

பாக்கெட் பழுத்துடும்...

அதிவேகத்தில் இயக்கும்போது எஞ்சின், பிரேக் சிஸ்டம், சஸ்பென்ஷன் உள்ளிட்ட முக்கிய பாகங்களில் ஏற்படும் பாதிப்புகள் மிக அதிகமாக இருக்கும். இதனால் பராமரிப்பு செலவுகள் அதிகரிக்கும்.

 எஞ்சின்

எஞ்சின்

அதிவேகத்தில் இயக்குவதால் எஞ்சினில் அதிர்வுகளும், சப்தங்களும் கூடும். நீண்ட கால பயன்பாட்டின்போது எஞ்சின் செயல்திறன் வெகுவாக குறையும். மறுவிற்பனையின்போது மிக குறைவாக மதிப்பிடப்படும்.

சுற்றுச்சூழல் பாதிப்பு

சுற்றுச்சூழல் பாதிப்பு

80 கிமீ வேகத்தில் சீராக செல்லும்போது எரிபொருள் விரயம், புகை வெளியீடு போன்றவை குறிப்பிட்ட வரம்புக்குள் இருக்கும். வேகம் மிகும்போது இந்த அதிக எரிபொருள் விரயம், அதிக புகை வெளிப்பாடு போன்றவற்றால் சுற்றுச்சூழல் தீங்கு அதிகமாகும்.

கவனம்...

கவனம்...

நெடுஞ்சாலையில் 80 கிமீ வேகத்தில் காரை ஓட்ட எண்ணினால், சாலையின் இடதுபக்க தடத்தை பயன்படுத்துங்கள். வலது பக்க சாலையில் அதிவேக வாகனங்கள் முந்திச் செல்வதற்கு வசதியாக இருக்கும். இல்லையெனில், பின்னால் வரும் வாகனம் மோதும் அபாயம் உள்ளது.

English summary
Best Ideal Speed For Highway Driving.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark