டிசைன் டிசைனா ஏமாத்திட்டு போயிடுவாங்க! செகண்ட் ஹேண்ட் வண்டி வாங்கும் போது இதெல்லாம் செக் பண்ணிட்டு வாங்குங்க

செகண்ட் ஹேண்ட் மார்கெட்டில் வாகனம் வாங்கும் பலர் பல நேரங்களில் ஏமாற்றப்பட்டதாக உணருவார்கள். இப்படியான சம்பவம் உங்களுக்கோ அல்லது உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கோ நடந்திருக்கலாம். இப்படியா சூழ்நிலையில் இனி நீங்கள் சிக்காமல் இருக்க வேண்டும் என்றால் அதற்காக சில விஷயங்களை நீங்கள் கடைப்பிடிக்க வேண்டும். இப்படியாக நீங்கள் கடைப்பிடிக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இங்குத் தெளிவாகக் காணலாம்.

செகண்ட் ஹேண்ட் மார்கெட்டில் வாகனங்களை வாங்குவது ஒரு நல்ல முடிவு தான் குறைந்தவிலையில் நல்ல வாகனம் கிடைக்கும்.பட்ஜெட் குறித்து அதிகம் யோசிப்பவர்களுக்கு செகண்ட் ஹேண்ட் மார்கெட் நல்ல வாய்ப்பு தான். ஆனால் பலர் இந்த மாதிரியாக வாகனங்களை வாங்கும் போது கொடுத்த பணத்திற்கு ஒர்த்தே இல்லாத வாகனத்தை வாங்கிவிட்டோமோ என்ற எண்ணம் பலருக்கு இருக்கும். சிலருக்குக் குறைந்தவிலையில் நல்ல காரை வாங்கிவிட்டோம் என்ற எண்ணம் இருக்கும். செகண்ட் ஹேண்டில் வாகனம் வாங்கும் போது நாம் செய்ய வேண்டியதைக் கீழே காணலாம் வாருங்கள்.

டிசைன் டிசைனா ஏமாத்திட்டு போயிடுவாங்க! செகண்ட் ஹேண்ட் வண்டி வாங்கும் போது இதெல்லாம் செக் பண்ணிட்டு வாங்குங்க

ஆன்லைனை மட்டும் நம்ப வேண்டாம்

இன்று செகண்ட் ஹேண்ட் வாகன விற்பனை ஆன்லைன் மூலம் அதிகம் நடக்கிறது. பலர் ஆன்லைனிலேயே போட்டோ, வீடியோ, ஆகியவற்றைப் பார்த்து ஆன்லைன் மூலமே செகண்ட் ஹேண்ட் காரை வாங்கிச் செல்கிறார்கள். இதில் பல ஏமாற்று வேலைகள் நடக்கிறது. ஆன்லைனில் ஒரு புகைப்படத்தைப் போட்டுவிட்டு, வேறு வாகனத்தை விற்பனை செய்கின்றனர். வாகனம் வாங்கிய புதிதில் எடுக்கப்பட்ட புகைப்படம் மற்றும் வீடியோக்களை ஆன்லைனில் போட்டுவிட்டு பழைய வாகனத்தை விற்பனை செய்து விடுகின்றனர். இதனால் நீங்கள் நேரடியாகச் சென்று செக் செய்த பின்பே அந்த வாகனத்திற்கான பணத்தைச் செலுத்துங்கள்.

இன்ஜின் கண்டிஷன்

ஒரு வாகனத்திற்கு உயிர் நாடியே இன்ஜின் தான். அது மட்டும் இயங்க வில்லை என்றால் வாகனத்தின் மொத்தமும் வீண் தான். அதனால் நல்ல இன்ஜினை செக் செய்து வாங்க வேண்டும். நல்ல இன்ஜினை எப்படி செக் செய்வது என்று பலருக்குத் தெரியாது. ஆனால் மெக்கானிக்களுக்கு இது அத்துபிடி, அதனால் நீங்கள் செகண்ட் ஹேண்டில் வாகனம் வாங்க நினைத்தால் அதன் இன்ஜினை செக் செய்ய உங்களுக்குத் தெரிந்த ஒரு நல்ல மெக்கானிக்கை உடன் அழைத்து செல்வது நல்லது. இதனால் நீங்கள் ஏமாறாமல் இருக்கலாம்.

சர்வீஸ்

ஒரு வாகனத்தின் கண்டிஷனை அதன் சர்வீஸ் ஹிஸ்டரியிலேயே பெரும் அளவு தெரிந்து கொள்ள முடியும். ஒரு வாகனம் வாங்கி முறையாக சர்வீஸ் செய்து பராமரித்திருந்தால் அந்த வாகனத்திற்கான சர்வீஸ் ஹிஸ்டரி சரியாக இருக்கும். அதில் வாகனத்தில் என்னென்ன பிரச்சனை ஏற்பட்டது, என்னென்ன மாற்றப்பட்டுள்ளன என்ற தகவல்கள் இருக்கும்.அதைப் படித்தாலே வாகனத்தின் கண்டிஷனை பெரும் அளவில் கண்டுபிடித்துவிடலாம். சரியாக சர்வீஸ் ஹிஸ்டரியை கொண்ட காரை தேர்வு செய்வது நல்லது. முறையான சர்வீஸ் ஹிஸ்டரி இல்லை என்றால் வாகனத்தில் ஏதாவது பெரிய பிரச்சனை இருக்க வாய்ப்பு உள்ளது.

செல்லான் சோதனை

இன்று சாலைகளில் விதிமுறைகளை மீறிய வாகனங்களுக்கு ஆன்லைன் மூலமே அபராதம் விதிக்கும் முறை அமலுக்கு வந்துவிட்டது. இப்படியான நடைமுறை அமலில் இருப்பதால் எந்த வாகனத்திற்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என அதன் உரிமையாளருக்கே தெரியாது. அதனால் குறிப்பிட்ட வாகனத்திற்கு ஏதாவது செல்லான் பாக்கி இருக்கிறதா என்பதை ஆன்லைனில் செக் செய்து கொள்ள வேண்டும். அப்படி அபராதம் இருந்தால் அதை அவரை கட்டி சொல்லிவிட்டுக் கட்டிய பின்பே வாங்க வேண்டும். அபராதம் கட்டாமல் வாங்கினால் நீங்கள்தான் பின்னர் அதற்குப் பொறுப்பாவீர்கள் என்பதைக் கவனத்தில் கொள்ளுங்கள்

இன்சூரனஸ் சோதனை

நீங்கள் செகண்ட் ஹேண்டில் வாகனம் வாங்கும் போது அது விபத்தில் சிக்கிய வாகனமாக இருக்க வாய்ப்பு இருக்கிறது. இப்படி வாகனம் விபத்தில் சிக்கி சேதமானால் பெரும்பாலும் இன்சூரன்ஸ் மூலம் வாகனத்தை ரிப்பேர் செய்திருப்பார்கள். அதை செக் செய்ய நீங்கள் வாகனம் இன்சூர் செய்யப்பட்ட நிறுவனத்தைத் தொடர்பு கொண்டு இன்சூரன்ஸ் கிளைம் செய்த ஹிஸ்டரியை செக் செய்ய முடியும். இதைப் பின்பற்றினால் வாகனம் விபத்தில் சிக்கியிருந்தால் நீங்கள் கண்டுபிடித்துவிடலாம்.

இதையெல்லாம் ஃபாலோ செய்தாலே 99 சதவீதம் நீங்கள் ஏமாற்றப்படுவதைத் தவிர்க்க முடியும். இதையும் மீறி சில ஏமாற்று வேலைகள் கூட நடக்கலாம். அதனால் ஒவ்வொரு விஷயத்திலும் நீங்கள் கவனமாக இருப்பது நல்லது. வாகனத்தைச் சரியாக செக் செய்து வாங்குங்கள் செகண்ட் ஹேண்டில் கார் வாங்கினாலும் ஏமாறாமல் இருங்கள். இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்

Most Read Articles

English summary
Important things to check before buying vehicles from second hand market
Story first published: Thursday, December 8, 2022, 19:43 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X