உங்கள் வாகனத்தின் இன்ஜின் ஆயுளை அதிகரிக்க 5 டிப்ஸ்

வாகனங்கள் வைத்திருக்கும் பெரும்பாலானோருக்கு தனது வாகனத்தின் இன்ஜின்னை சரியாக பராமரிக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். ஆனால் அதை எப்படி செய்ய வேண்டும் என்ற குழப்பம் பலர் மத்தியில் இருக்கிறது.

உங்கள் வாகனத்தின் இன்ஜின் ஆயுளை அதிகரிக்க 5 டிப்ஸ்

பலர் நண்பர்களுடன் இது குறித்து பேசுகையில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விஷயத்தை கடைபிடிக்க கூறுகின்றனர். அதில் பெரும்பாலும் ஒன்றிற்கு ஒன்று முரணாக இருக்கிறது. இதில் ஏதோ ஒன்றை பாரமரிக்கையில் அது பலனில்லாமல் போகிறது.

உங்கள் வாகனத்தின் இன்ஜின் ஆயுளை அதிகரிக்க 5 டிப்ஸ்

காருக்கு இன்ஜின் என்பது மனிதனுக்கான இதயம் போல அதை சரியா பராமரிக்காவேண்டும். குறைந்தது அதில் பிரச்னை ஏற்படும் போதாவது சரி செய்ய வேண்டும். அதை சரியாக பராமரிக்காவிட்டால் இன்ஜினின் வாழ்நாள் குறைந்து விடும் இன்ஜின் வாழ்நாளை அதிகரிக்க இதோ உங்களுக்கான டிப்ஸ்.

உங்கள் வாகனத்தின் இன்ஜின் ஆயுளை அதிகரிக்க 5 டிப்ஸ்

சரியான கால கட்டத்தில் சர்வீஸ்

இன்ஜின் காரின் இதயம் போல என்றால் இன்ஜின் ஆயிலில் இன்ஜினின் ரத்தம் போல. இன்ஜின் பாதுகாப்பாக செயல்படுவதற்கு இன்ஜின் ஆயில் அவசியம் தேவை. இன்ஜின் ஆயின் தான் இன்ஜினில ஏற்படும் உராய்வை குறைத்து இன்ஜினின் வாழ்நாளை நீட்டிக்க வைப்பது. இதனால் சரியா கால இடைவெளியில் காரை சர்வீஸிற்கு விட்டு இன்ஜின் ஆயிலை மாற்ற வேண்டியது கட்டாயம்.

உங்கள் வாகனத்தின் இன்ஜின் ஆயுளை அதிகரிக்க 5 டிப்ஸ்

அதே போல தான் ஏர் பில்டரும். இன்ஜின் ஆயிலும்,ஏர் பில்டரும் அசுத்தமாக இருந்தால் அது உங்கள் வாகனத்தின் ஆயுளை குறைக்கும் அதை சரியாக பராமரிக்க வேண்டியது அவசியம். கார் தயாரிப்பாளர்கள் செல்லும் காலத்தை விட 20% முன்னதாகவே இன்ஜின் ஆயிலை மாற்றினால் இன்ஜினின் ஆயுளை மேலும் நீட்டிக்கலாம்.

உங்கள் வாகனத்தின் இன்ஜின் ஆயுளை அதிகரிக்க 5 டிப்ஸ்

ஸ்டார் செய்தவுடன் வாகனத்தை நகர்த்தாதீர்கள்

வாகனத்தை அதிக நேரம் நிறுத்தி விட்டு நீங்கள் வாகனத்தின் எடுக்கும் போது இன்ஜின் ஆயில் சூடு இல்லாமல் இருக்கும். அதனால் வாகனத்தை ஸ்டார்ட் செய்து சுமார் 30 நொடிகள் வரை நகர்த்தாமல் இனஜினை மற்றும் ஓட விடுங்கள் இந்த இடைவெளியில் இன்ஜின் ஆயில் சூடாகி செயல்பட தயாராகி விடும். இப்படிசெய்தால் சுமார் 1 லட்சம் கி.மீ., வரை ஓடும் திறன் படைத்த இன்ஜின் 1.5 லட்சம் கி.மீ. வரை ஓடும்.

உங்கள் வாகனத்தின் இன்ஜின் ஆயுளை அதிகரிக்க 5 டிப்ஸ்

அதாவது அதன் வாழ்நாள் சுமார் 50 சதவிதம் வரை அதிகரிக்கும். உங்கள் வாகனத்தில் டெம்பரேஷச்சரை செக் செய்யும் கருவி இருந்தால் அதில் முள் நடுவில் வந்தவுடன் வாகனத்தை நகர்த்தவும். இது இல்லாவிட்டால் 30 நொடிகள் கழித்து நகர்த்தலாம் ஆனால் முதல் 3 கி.மீ. மிதமான வேகத்திலேயே பயணம் செய்யுங்கள்.

உங்கள் வாகனத்தின் இன்ஜின் ஆயுளை அதிகரிக்க 5 டிப்ஸ்

இன்ஜின் செயல்பாட்டை நிறுத்துவதில் கவனம்

நீங்கள் நெடுதூரம் பயணம் செய்துவந்துள்ளீர்கள் என்றால் இன்ஜினை உடனடியாக அணைத்து விடாதீர்கள் சுமார் ஒரு நிமிடம் வாகனத்ததை நகர்த்தாமல் இன்ஜினை ஓட விடுங்கள். ஏன் என்றால் நீங்கள் அதிக வேகமாக பயணம் செய்து வந்த பின் இன்ஜின் செயல்பாடு உடனடியா நின்றால் அது இன்ஜின் ஆயிலை பாதித்து அதன் அளவு குறையும்.

உங்கள் வாகனத்தின் இன்ஜின் ஆயுளை அதிகரிக்க 5 டிப்ஸ்

இதை மனதில் வைத்து அதிக தூரம் பயணம் செய்த பின் சுமார் 1 நிமடம் மட்டும் இன்ஜினை ஓட விடுங்கள். நன்றாக தெளிபடுத்தி கொள்ளுங்கள் வாகனத்தை இயக்க துவங்கும் முன் 30 விநாடிகளும், இயக்கத்தின் நிறுத்துவதற்கு முன் 1 நிமிடமும் வாகனத்தை நகர்த்தாமல் இன்ஜினை மட்டும் ஓட விட வேண்டும்.

உங்கள் வாகனத்தின் இன்ஜின் ஆயுளை அதிகரிக்க 5 டிப்ஸ்

டிராபிக் சிக்கலுக்கு காத்திருக்கையில் கவனம்

நீங்கள் இன்ஜினை முறையாக பராமரித்தால் அது சுமார் 2 லட்சம் கி.மீ. வரை தன் வாழ்நாளை நீட்டிக்கும். ஆனால் இவை எல்லாவற்றையும் பராமரித்து நீங்கள் டிராபிக் சிக்னலில்காத்திருக்கையில் சரியாக பராமரிக்காமல் விட்டு விடாதீர்கள். பெரும் நகரங்களில் டிராப்பிக் சிக்னல் சுமார் 300 நொடிகள் கூட நீடிக்கிறது.

உங்கள் வாகனத்தின் இன்ஜின் ஆயுளை அதிகரிக்க 5 டிப்ஸ்

இதனால் நீங்கள் காரை நிறுத்தியதும் சுமார் 60 நொடிகள் கழித்து காரின் இன்ஜினைன ஆப் செய்து விடுங்கள் அதே போல் செல்வதற்கான சிக்னல் கிடைப்பதற்கு சுமார் 25-30 நொடிகளுக்கு முன்னாள் இன்ஜினை ஆன் செய்து காரை ஓட்டுங்கள். இதன் மூலம் காரின் இன்ஜின் ஆயுள் அதிகரிக்கும்.

உங்கள் வாகனத்தின் இன்ஜின் ஆயுளை அதிகரிக்க 5 டிப்ஸ்

குறைந்த தூர பயணத்தை தவிர்த்து விடுங்கள்

உங்கள் வாகனத்தை காலையில் ஸ்டார்ட் செய்துவுன் இன்ஜின் செட் ஆவதற்கு சில தூரம் பிடிக்கும். சுமார் 3 கி.மீ. வரை நீங்கள் ஓட்டினால் தான் இன்ஜின் அதன் முழு செயல்பாட்டை காட்ட துவங்கும். அதனால் காரை காலையில் முதன் முதலில் எடுக்கும் போது குறைந்தது. 3 கி.மீ. தூரமாவது நீங்கள் பயணம் செய்ய வேண்டும். குறைந்த தூரம் பயணம் செய்வது உங்கள் காரின் ஆயுளை குறைத்து விடும்.

Most Read Articles

English summary
Increasing engine life. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X