அதிகம் திருடுபோகும் டாப் - 10 கார்கள்... அத்துடன் திருட்டிலிருந்து காரை பாதுகாப்பதற்கான டிப்ஸ்!!

இந்தியாவின் வர்த்தக தலைநகரமான மும்பை, கார் திருட்டிலும் தலைநகரமாக இருந்து வருகிறது. அதுவும் சில குறிப்பிட்ட கார் மாடல்களை கட்டம் கட்டி தூக்குகின்றனர் திருடர்கள்.

குறிப்பாக, பழைய கார் மார்க்கெட்டில் அதிகம் போனியாகும் மாடல்களை குறிவைத்து அவர்கள் தங்களது கைவரிசையை காட்டுகின்றனர். அதுபோன்று, கடந்த ஆண்டு மும்பையில், அதிகம் திருடுபோன டாப் 10 கார்களை பற்றி விபரங்களை ஸ்லைடரில் தரப்பட்டுள்ளன.

மும்பை மட்டுமல்ல, அனைத்து பகுதிகளிலும் இந்த கார் திருட்டு சர்வசாதாரணமாகிவிட்டது. அதற்காக, காரை எளிதாக பாதுகாப்பதற்கான சில வழிமுறைகளை தொடர்ந்து வழங்கியுள்ளோம்.

 10. மாருதி எஸ்டீம்

10. மாருதி எஸ்டீம்

அதிகம் திருடுபோகும் கார்களின் பட்டியலில் மாருதி எஸ்டீம் கார் பத்தாவது இடத்தில் உள்ளது. குறைவான பராமரிப்பு செலவு கொண்ட மாருதி எஸ்டீம் காருக்கு பழைய கார் சந்தையில் அதிக வரவேற்பு இருப்பதை இதற்கு காரணம்.

 09. பிரிமியர் பத்மினி

09. பிரிமியர் பத்மினி

பட்டியலில் இந்த காரை பார்த்து ஷாக் ஆயிட்டீங்களா. ஆம், மும்பையில், பிரிமியர் பத்மினியை கட்டம் கட்டி தூக்குகின்றனராம் திருடர்கள்.

 08. டாடா விஸ்டா

08. டாடா விஸ்டா

சிறப்பான இடவசதி கொண்ட டாடா விஸ்டா காருக்கு மும்பை டாக்சி மார்க்கெட்டில் நல்ல டிமான்ட் இருக்கிறதாம். எனவே, இந்த கார்களை பழைய கார் மார்க்கெட்டில் மலிவாக வாங்க விரும்புவதால் டிமான்ட் அதிகமாம்.

07. மாருதி ஸ்விஃப்ட்

07. மாருதி ஸ்விஃப்ட்

பழைய கார் மார்க்கெட்டில் மாருதி ஸ்விஃப்ட் காருக்கு டிமான்ட் உள்ளது. மேலும், எங்கும் நிறைந்திருக்கும் இந்த மாடலை, எளிதாக திருடி சென்றுவிடுகின்றனர். பழைய கார் மார்க்கெட்டில் நல்ல விலைக்கு விற்று விடுகின்றனர்.

06.மஹிந்திரா பொலிரோ

06.மஹிந்திரா பொலிரோ

இந்தியாவின் நம்பர்- 1 எஸ்யூவி.எந்தவித சாலைநிலைகளுக்கும் ஏற்ற மாடல். எனவே, மஹிந்திரா பொலிரோவை வைத்திருப்பவர்கள் சற்று எச்சரிக்கையாக இருப்பது அவசியம்.

 05. டாடா இண்டிகோ

05. டாடா இண்டிகோ

திருடர்கள் எளிதாக திருடி செல்லும் மாடலாக கருதப்படுகிறது. இந்த காருக்கும் மும்பை பழைய கார் மார்க்கெட்டில் டிமான்ட் உள்ளது.

 04. ஹூண்டாய் சான்ட்ரோ

04. ஹூண்டாய் சான்ட்ரோ

பழைய கார் மார்க்கெட்டின் ஹாட் கேக் ஹூண்டாய் சான்ட்ரோ. எனவே, சான்ட்ரோ காரும் அதிகம் திருடுபோகும் காராக உள்ளது. உற்பத்தி நிறுத்தப்பட்டிருப்பதால், இனி சான்ட்ரோவுக்கு உள்ள மவுசு கொஞ்சம் கொஞ்சமாக குறையும். அதுவரை பாதுகாப்பாக வைத்திருப்பது அவசியம்.

 03. டொயோட்டா இன்னோவா

03. டொயோட்டா இன்னோவா

சிறப்பான இடவசதி, நம்பகத்தன்மை வாய்ந்த ஓர் சிறப்பான மாடல். எனவே, டொயோட்டா இன்னோவாவும் அதிகும் திருடுபோகும் மாடல்களின் பட்டியலில் இடம்பெற்றிருக்கிறது.

02. மஹிந்திரா ஸ்கார்ப்பியோ

02. மஹிந்திரா ஸ்கார்ப்பியோ

கடந்த 2012, 2013ம் ஆண்டுகளில் அதிகம் திருடுபோகும் மாடல்களின் பட்டியலில் முதலிடத்தில் இருந்த ஸ்கார்ப்பியோவுக்கு சிறிது மவுசு குறைந்துவிட்டது போல. தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது.

01. செவர்லே தவேரா

01. செவர்லே தவேரா

நினைத்து பார்க்க முடியாத மாடல்தான். ஆனால், செவர்லே தவேராதான் அதிகம் திருடுபோகும் காராக உள்ளது. எனவே, மும்பையில் தவேரா வைத்திருப்பவர்கள் கெட்டி பத்திரமாக வைத்திருக்க வேண்டியது அவசியம். மும்பை மட்டுமில்லை, அனைத்து நகரங்களிலும் கார் திருட்டு அதிகரித்து வருகிறது. தற்போது நவீன பாதுகாப்பு வசதிகளுடன் வந்தாலும், திருடர்கள் அதனை லாவகமாக திருடிச் சென்றுவிடுகின்றனர். எனவே, திருட்டிலிருந்து காரை பாதுகாப்பதற்கான சில வழிமுறைகளை அடுத்தடுத்த ஸ்லைடுகளில் காணலாம்.

01. ஜிபிஎஸ் ட்ராக்கர்

01. ஜிபிஎஸ் ட்ராக்கர்

காரில் ஜிபிஎஸ் ட்ராக்கர் கருவி பொருத்தப்பட்டிருப்பது அவசியம். இது கொஞ்சம் கூடுதல் செலவு பிடிக்கும் விஷயம்தான். ஆனால், பல லட்சம் முதலீடு செய்து வாங்கும் காரை, திருடு போனால் கார் எங்கிருக்கிறது என்பதை கண்டுபிடித்து மீட்பதற்கு உதவும்.

02. இம்மொபைலசர்

02. இம்மொபைலசர்

தற்போது அனைத்து கார்களும் இம்மொபைலசர் வசதியுடன் வருகிறது. இந்த வசதி இல்லாத காரில் உடனடியாக இம்மொபைலைசர் சாதனத்தை பொருத்திக் கொள்வது உத்தமம்.

 03. சிம்பிள் வழி

03. சிம்பிள் வழி

காரில் அலாரம் இருந்தாலும், அதனை செயலிழக்க செய்வதை திருடர்கள் அறிந்துகொண்டுள்ளனர். எனவே, காரில் அலாரம் இருப்பது போன்ற ஸ்டிக்கரையோ அல்லது மின்னும் சிறிய சிவப்பு விளக்கு ஒன்றை பொருத்திவிட்டால், திருடர்கள் காரில் அலாரம் இருப்பதாக நினைத்து முயற்சியை கைவிடலாம். இது ஏமாற்று வித்தைதான்.

 04. மறக்காதீங்க

04. மறக்காதீங்க

பலர் ஸ்டீயரிங் வீலை லாக் செய்யாமலே சாவியை எடுத்துக்கொண்டு பூட்டி விடுகின்றனர். இது திருடர்கள் காரை எளிதாக திருடிச் செல்ல வாய்ப்பு ஏற்படுத்தும். ஸ்டீயரிங் வீல் லாக் போட்டுவிட்டு சாவியை எடுப்பது அவசியம். ஸ்டீயரிங் வீல் லாக்கிலிருந்து விடுவிக்க சிறிது நேரம் பிடிக்கும் என்பதால், திருடர்கள் முயற்சியை கைவிட வாய்ப்புகள் அதிகம். இதேபோன்று, பிரேக் பெடல், கியர் லிவர், ஸ்பேர் வீல்களுக்கு கூடுதலாக பூட்டு போடுவதும் நல்லது.

 05. வின் நம்பர் ஸ்டிக்கர்

05. வின் நம்பர் ஸ்டிக்கர்

அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில், காரின் கண்ணாடிகளில் அந்த காரின் வின் நம்பர் கொண்ட ஸ்டிக்கர்களை ஒட்டி வைத்து விடுவர். ஒருவேளை, அந்த காரை திருடர்கள் திருடிச்சென்றால் கூட, அந்த ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட பாகங்களை மாற்றி, விற்பதற்கு நடைமுறையில் பல சிரமங்கள் இருப்பதால், திருடுவதை தவிர்ப்பர். இதுவும் ஒரு உபாயம்தான்.

 06. விலையுயர்ந்த ஆக்சஸெரீகள்

06. விலையுயர்ந்த ஆக்சஸெரீகள்

காரை சாலையோரங்களில் தினசரி நிறுத்துபவர்கள், நைஸ் லைட் ஃபோர்ஸ் லேம்ப் எனப்படும் கூடுதல் முகப்பு விளக்குகளை பொருத்துவதை தவிர்க்கவும். படத்தில் நீங்கள் காணும் பொலிரோவில் இருந்த அந்த விளக்குகளை திருடர்களின் கபளீகரத்துக்கு ஆளானதுதான். எனவே, காரை நிறுத்தும்போது திருடர்களின் கண்களில் படாதவாறு, கோணத்தில் நிறுத்த வேண்டும். அல்லது சுவரையொட்டி நிறுத்தி வைப்பது உசிதம். எச்சரிக்கை தேவை.

07. முக்கிய ஆவணங்கள்

07. முக்கிய ஆவணங்கள்

காரின் பதிவு ஆவணங்கள், இன்ஸ்யூரன்ஸ் உள்ளிட்ட ஆவணங்களை காரில் வைப்பதை தவிர்க்கவும். தினசரி காரை பூட்டும்போது கையில் வீட்டிற்கு எடுத்து வரவும். ஒருவேளை, காரை திருடினால், இந்த ஆவணங்களை வைத்து எளிதாக விற்பதற்கு வழி கிடைத்துவிடும்.

 08. கவனம்

08. கவனம்

பொதுவாக வீட்டு போர்ட்டிகோ அல்லது கராஜில் காரை நிறுத்தி வைப்பது பாதுகாப்பானது. சாலையோரங்களில் நிறுத்துவோர், தெரு விளக்கு அல்லது ஜன நடமாட்டம் அதிகமிருக்கும் பகுதிகளில் நிறுத்தி வைப்பதுடன், அவ்வப்போது நம் வீட்டினர் கண்களில் படும்படியான இடத்தில் இருப்பதும் அவசியம்.

09. திறந்த ஜன்னல்

09. திறந்த ஜன்னல்

கார் கண்ணாடி ஜன்னல்கள் மூடியிருக்கிறதா என்பதை உறுதி செய்து கொண்டு காரை விட்டு நகர்ந்து செல்லுங்கள். கார் ஜன்னல் திறந்து வைத்து விட்டு சென்றால், திருடர்களை அழையா விருந்தாளி போல அழைப்பதற்கு வழி வகுக்கும்.

10. விலையுயர்ந்த பொருட்கள்

10. விலையுயர்ந்த பொருட்கள்

காருக்குள் விலையுயர்ந்த மியூசிக் சிஸ்டம் இருக்கும்போது கூடுதல் கவனம் தேவை. அதேபோன்று, லேப்டாப், மொபைல்போன் போன்ற சாதனங்களை காரில் விட்டுச் செல்வதை தவிர்ப்பது அவசியம். மேலும், அனைவரின் கண்படும் படி வைப்பதும் பிரச்னைக்கு வழிவகுக்கும்.

இதுவும் அவசியம்...

இதுவும் அவசியம்...

அட்லீஸ்ட் ஒரு கவரை போட்டு காரை மூடி வையுங்கள். தூசியிலிருந்து பாதுகாப்பதோடு, திருடர்களின் முயற்சியை தவிர்க்க உதவும்.

Most Read Articles
English summary
Our car, our precious. For a lot of us, our cars are the result of years of saving and several sacrifices of drinks at Watson's on Saturday nights. Thus, keeping your vehicle safe and secure at all times should be of prime importance. We've put together some ways to protect your car from becoming someone else's means to a quick buck, so do read on, and try implementing at least some of these suggestions.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X