ஜூன் 3 முதல் இ-வே பில் கட்டாயம்; பில்லை எளிமையாக எடுக்க 7 டிப்ஸ்

ஜூன் 3ம் தேதி முதல் இ-வே பில் நாடு முழுவதும் கட்டாயமாகிறது. வணிகர்கள் உள்மாநிலங்களிலோ அல்லது வெளிமாநிலங்களிலோ தாங்கள் சரக்கை எடுத்து செல்ல ஆன்லைனில் இ-வே பில் எடுக்க வேண்டும்.

By Balasubramanian

ஜூன் 3ம் தேதி முதல் இ-வே பில் நாடு முழுவதும் கட்டாயமாகிறது. வணிகர்கள் உள்மாநிலங்களிலோ அல்லது வெளிமாநிலங்களிலோ தாங்கள் சரக்கை எடுத்து செல்ல ஆன்லைனில் இ-வே பில் எடுக்க வேண்டும். அவை எப்படி எடுக்க வேண்டும் யார் எல்லாம் எடுக்க வேண்டும் என்பதை கீழே பார்க்கலாம்.

ஜூன் 3 முதல் இ-வே பில் கட்டாயம்; பில்லை எளிமையாக எடுக்க 7 டிப்ஸ்

கடந்த ஏப்1ம் தேதி முதல் மாநிலத்திற்கு உள்ளாக சரக்குகளை வாகனங்களில் கொண்டு செல்வதற்கு இ-வே பில் எடுக்கும் முறை அறிமுகப்பபடுத்தப்பட்டது. இத்திட்டம் துவங்கப்பட்ட அன்றே கர்நாடகா மாநிலத்தில் இது நடைமுறைக்கு வந்தது. பின் தொடர்ந்து வாரம் ஒரு மாநிலமாக இதில் இணைந்து வருகின்றனர்.

ஜூன் 3 முதல் இ-வே பில் கட்டாயம்; பில்லை எளிமையாக எடுக்க 7 டிப்ஸ்

தற்போது 22 மாநிலங்களில் தற்போது இது நடைமுறையில் உள்ளது. கடந்த மே 25ம் தேதி சண்டிகரில் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தியது. நாளை (மே 31) மஹாராஷ்டிரா இத்திட்டத்தில் இணைகிறது. பஞ்சாப் மற்றம் கோவா ஆகிய மாநிலங்கள் வரும் ஜூன்1ம் தேதி இணைகிறது.

ஜூன் 3 முதல் இ-வே பில் கட்டாயம்; பில்லை எளிமையாக எடுக்க 7 டிப்ஸ்

கடந்த மே13ம் தேதி வரை இ-வே பில் நடைமுறைபடுத்தப்பட்டது முதல் 45 நாட்களில் மொத்தம் 4.15 கோடி இ-வே பில்கள் வெற்றிகரமாக பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் உள்மாநில போக்குவரத்திற்காக பதிவு செய்யப்பட்ட இ-வே பில்களின் எண்ணிக்கை 1 கோடியாகும்.

ஜூன் 3 முதல் இ-வே பில் கட்டாயம்; பில்லை எளிமையாக எடுக்க 7 டிப்ஸ்

இந்நிலையில் வரும் ஜூலை மாதம் 3ம் தேதி முதல் உள் மாநிலம் மற்றும் வெளிமாநிலங்களுக்கு சரக்குகளை எடுத்து செல்ல இ-வே பில் நாடு முழுவதும் கட்டாயமாக்கப்படுகிறது. இவ்வாறு இ-வே பில்களை யார் பெற வேண்டும். எப்படி அதை பெற வேண்டும் என்பதை கீழே பார்க்கலாம்.

ஜூன் 3 முதல் இ-வே பில் கட்டாயம்; பில்லை எளிமையாக எடுக்க 7 டிப்ஸ்

நீங்கள் இந்தியாவில் வர்த்தகம் செய்கிறீர்கள் என்றால் இந்த 7 விஷயங்களை மனதில் வைத்து கொள்ளுங்கள்

1. இ-வே பில்களை நீங்கள் பதிவு செய்த ஜிஎஸ்டி எண்ணை கொண்டு இ-வே பில் தளத்தில் பெற்று கொள்ளலாம்.

ஜூன் 3 முதல் இ-வே பில் கட்டாயம்; பில்லை எளிமையாக எடுக்க 7 டிப்ஸ்

2. ரூ 50 ஆயிரத்திற்கு அதிக மதிப்பு உடைய வரிவிதிப்பிற்கு உட்பட்ட பொருட்களை நீங்கள் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு வாகனம் மூலமாக எடுத்து செல்ல இ-வே பில் கட்டாயம் வேண்டும்.

ஜூன் 3 முதல் இ-வே பில் கட்டாயம்; பில்லை எளிமையாக எடுக்க 7 டிப்ஸ்

3. நீங்கள் ஒரு பொருளை தயாரிக்க உங்கள் இடத்தில் உள்ள பொருளை உங்களுக்கு சொந்தமான வேறு ஒரு இடத்திற்கு கொண்டு செல்வதற்கும் இ-வே பில் கட்டாயம் தான்.

ஜூன் 3 முதல் இ-வே பில் கட்டாயம்; பில்லை எளிமையாக எடுக்க 7 டிப்ஸ்

4. ஒரு வேலை நீங்கள் சப்ளையராக இருந்து வேறு ஒருவருக்கு பொருளை அனுப்ப வேண்டும் என்றால் நீங்கள் டிரான்ஸ்போர்ட் நிறுவனம், பொருளை கொண்டு செல்லும் கொரியர் நிறுவனம் என உங்களுக்காக அவர்களும் இ-வே பில்லை பெறலாம். அதற்கு நீங்கள் அவர்களுக்கு அங்கீகாரம் அளிக்கலாம்.

ஜூன் 3 முதல் இ-வே பில் கட்டாயம்; பில்லை எளிமையாக எடுக்க 7 டிப்ஸ்

5.பொருட்களை 50 கி.மீ. தூரத்திற்கு குறைவான தூரத்தில் உள்ள இடங்களுக்கு எடுத்து செல்ல இ-வே பில்லிற்கான படிவத்தில் பகுதி ஏ வை மட்டும் நிரப்பினால் போது பகுதி பி நிரப்ப தேவையில்லை.

ஜூன் 3 முதல் இ-வே பில் கட்டாயம்; பில்லை எளிமையாக எடுக்க 7 டிப்ஸ்

6. இ-வே பில் பதிவு செய்யப்பட்டவுடன் அந்த பொருளை பெறுபவர் அதை பதிவு செய்யப்பட்ட நேரத்தில் இருந்து 72 மணி நேரத்திற்கு உள்ளாக அல்லது சரக்கு டெலிவரி செய்யப்படும் முன்பு அவர்கள் அந்த பில்லை அங்கீகரிக்க வேண்டும்.

ஜூன் 3 முதல் இ-வே பில் கட்டாயம்; பில்லை எளிமையாக எடுக்க 7 டிப்ஸ்

7. ரயில்கள், விமானங்கள், கப்பல்கள் மூலமாக சரக்குகளை கொண்டு செல்ல சரக்கை அனுப்புபவரோ அல்லது பெறுபவரோ தான் இ-வே பில்லை பெற வேண்டும். இந்த இடங்களில் பொருட்களை கொண்டு செல்லும் நிறுவனங்கள் பெறக்கூடாது. ஆனால் இந்த வகையான போக்குவரத்தில் சரக்கை அனுப்பி விட்டு கூட இ-வே பில்லை பெற்று கொள்ளலாம்.

ஜூன் 3 முதல் இ-வே பில் கட்டாயம்; பில்லை எளிமையாக எடுக்க 7 டிப்ஸ்

இன்றைய காலகட்டத்தில் உங்கள் வணிகத்தை பாதுகாப்பாக செய்ய வேண்டியது. கட்டாயமாகிறது. குறிப்பாக மாநிலம் விட்டு மாநிலத்திற்கு சரக்கு அனுப்பப்படும் போது உங்கள் பொருட்களுக்கு பாதுகாப்பாகவும் இந்த இ-வே பில் இருக்கும். இதனால் நேர்மையாக வணிகம் செய்யும் வணிகர்களுக்கு தேவையில்லாத பிரச்னையில் சிக்க வேண்டிய அவசியம் இல்லை.

ஜூன் 3 முதல் இ-வே பில் கட்டாயம்; பில்லை எளிமையாக எடுக்க 7 டிப்ஸ்

அதே போல இந்த இ-வே பில் இருக்கும் பட்சத்தில் அரசு அதிகாரிகளுக்கும் பணிச்சுமை குறையும். இதனால் இந்த திட்டம் வணிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. மேலும் இதை எந்த இடத்திற்கும் அழையாமல் ஆன்லைன் மூலமாவே இதை பெற்று விட முடிவதால் இதை பெற பெரிய பணிச்சுமையும் இல்லை.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்

Most Read Articles
English summary
Intra-state E-way Bill: 7 things to keep in mind from June 3. Read in Tamil.
Story first published: Wednesday, May 30, 2018, 15:00 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X