காரை பார்க்கிங் செய்யும்போது எந்த கியரில் நிறுத்துவது உத்தமம்?

கார் பார்க்கிங் செய்யும்போது சில விஷயங்களை மனதில் வைத்து செயல்படுவது காரின் உடல் நலனை காப்பதற்கு உதவி புரியும். அந்த வகையில், இன்று காரை எந்த கியரில் பார்க்கிங் செய்வது நன்மை தரும் என்ற விஷயங்களை பார்க்கலாம்.

காரை பார்க்கிங் செய்யும்போது எந்த கியரில் நிறுத்துவது உத்தமம்?

இரு கார்களுக்கு இடையே பார்க்கிங் செய்யும்போதும் வாகன நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் நிறுத்தும்போதும் ஹேண்ட் பிரேக் போட்டு நியூட்ரலில் நிறுத்துவது உத்தமம். சிலவேளைகளில் பிற வாகன ஓட்டிகளில் உங்கள் கார் மீது மோதினால் கார் கியர்பாக்ஸ் மற்றும் எஞ்சின் பாதிக்கப்படாமல் இருக்கும்.

காரை பார்க்கிங் செய்யும்போது எந்த கியரில் நிறுத்துவது உத்தமம்?

சமதளமான சாலைகளில் காரை நிறுத்தும்போது ஹேண்ட் பிரேக் போட்டு நியூட்ரலில் கூட நிறுத்தலாம். இல்லையெனில் முதல் அல்லது ரிவர்ஸ் கியர் போட்டு நிறுத்தலாம்.

காரை பார்க்கிங் செய்யும்போது எந்த கியரில் நிறுத்துவது உத்தமம்?

கார் நிறுத்தும் பகுதியின் முன்புறத்தில் சாலை இறக்கமாக இருந்தால், ஹேண்ட் பிரேக் போடுவதுடன் முதல் கியரில் போட்டு நிறுத்தவும்.

காரை பார்க்கிங் செய்யும்போது எந்த கியரில் நிறுத்துவது உத்தமம்?

அதேபோன்று, காரின் பின்புறம் இறக்கமான சாலையாக இருந்தால் ரிவர்ஸ் கியர் போட்டு நிறுத்தவும். ஹேண்ட் பிரேக் பழுதாகி கார் நகர்ந்தாலும், பிற வாகன ஓட்டிகள் இடித்தாலும் கார் நகரும்போது எஞ்சினுக்கு பாதிப்பை தராது.

காரை பார்க்கிங் செய்யும்போது எந்த கியரில் நிறுத்துவது உத்தமம்?

மலைச்சாலைகளில் மேற்கண்ட முறைகளில் நிறுத்தும்போது கார் எஞ்சின் இயல்பாக இயங்கும் முறையிலேயே நகரும். இதனால், எஞ்சின் பாதிப்படையாது. அதேநேரத்தில், எஞ்சின் எதிர்திசையில் சுழன்றால் பல பாதிப்புகளை சந்திக்க நேரிடும்.

காரை பார்க்கிங் செய்யும்போது எந்த கியரில் நிறுத்துவது உத்தமம்?

இதேபோன்று, சமதள சாலைகளில் நிறுத்தும்போது முன்சக்கரங்கள் இரண்டும் நேராக இருக்குமாறு பார்த்து நிறுத்தவும். கார் நிறுத்தும் பகுதிக்கு முன்புற சாலை இறக்கமாக இருந்தால் இடதுபக்கமாக சக்கரங்களை சற்றே திருப்பி நிறுத்தவும்.

காரை பார்க்கிங் செய்யும்போது எந்த கியரில் நிறுத்துவது உத்தமம்?

இதுவே, காரின் பின்புறம் சாலை இறக்கமாக இருந்தால், வலது பக்கம் நோக்கி முன்சக்கரங்களை சற்றே திருப்பி நிறுத்தி வைப்பது நலம்.

காரை பார்க்கிங் செய்யும்போது எந்த கியரில் நிறுத்துவது உத்தமம்?

மற்றொரு விஷயம் நாம் சாதாரணமாக செய்யும் தவறு, மேடு பள்ளமான சாலைகளில் நிறுத்தி வைக்கும்போது காரை நியூட்ரலில் விட்டு[பிரேக்கில் கால் இருக்க வேண்டும்] கார் சமதளத்தில் தானாக நிற்கும்போது ஹேண்ட் பிரேக்கை போட்டு நிறுத்தவும்.

காரை பார்க்கிங் செய்யும்போது எந்த கியரில் நிறுத்துவது உத்தமம்?

சிலர் காரை சிறிய மேடுபள்ளங்களை கண்டு கொள்ளாமல் ஹேண்ட் பிரேக் போட்டும், கியரில் போட்டு நிறுத்தி வைப்பதை பார்க்க முடிகிறது. காரின் சுமையை ஹேண்ட் பிரேக் கேபிள் அல்லது டிரான்ஸ்மிஷன் பகுதி தாங்க வேண்டியிருக்கும். இதனால், நாளடைவில் இவற்றில் பாதிப்புகள் ஏற்படும் என்பதை மனதில் வைத்து செயல்படுங்கள்.

காரை பார்க்கிங் செய்யும்போது எந்த கியரில் நிறுத்துவது உத்தமம்?

காரை நிறுத்தும்போது நியூட்ரல் கியருக்கு கொண்டு வந்த பின்னர் எஞ்சினை ஆஃப் செய்யுங்கள். இதேபோன்றே, ஆட்டோமேட்டிக் கார்களிலும் நியூட்ரலுக்கு கொண்டு வந்து பின்னர் பார்க்கிங் மோடுக்கு மாற்றி நிறுத்தவும்.

Most Read Articles

English summary
Is it better to park in first gear or neutral?
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X