கேரளா வெள்ளத்தில் சிக்கிய கார்களை செகண்ட் ஹேண்டாக வாங்கலாமா?

By Balasubramanian

கேரளாவில் பெய்த பெருமழையால் அம்மாநிலத்தில் பெரும்பாலான பகுதிகள் தண்ணீரில் மிதந்தது. இதனால் அம்மாநில மக்கள் உயிர்பிழைக்க நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். நூற்றுக்கணக்கானோர் தவிர்க்கமுடியாத சூழ்நிலையால் உயிரையும் இழந்துள்ளனர்.

கேரள வெள்ளத்தில் சிக்கிய கார்களை வாங்கலாமா?

தற்போது கேரளாவிற்கு அண்டை மாநிலங்கள் மட்டும் அல்லாது இந்தியா முழுவதும் இருந்து உதவிகள் வந்து கொண்டிருக்கின்றன. மேலும் பல தனியார் தொண்டு அமைப்பும், தனியார் நிறுவனங்கள், தொழிலதிபர்கள் என பலர் கேராளவில் அவர்களால் இயன்ற உதவியை செய்துவருகின்றனர்.

கேரள வெள்ளத்தில் சிக்கிய கார்களை வாங்கலாமா?

இந்நிலையில் இந்த மழை வெள்ளத்தால் கார்கள், பைக்குகள் எல்லாம் வெள்ளத்தில் முழ்கின. இனி அந்த கார் பைக்குகள் எல்லாம் செகண்ட் ஹேண்ட் மார்கெட்டில் விற்பனைக்கு வரும் இந்த ரக வாகனங்களை வாங்கலாமா வேண்டாமா? வாங்குவதாக இருந்தால் எப்படி வாங்க வேண்டும், வாங்கும் போது கவனிக்க வேண்டிய அம்சங்கள் எல்லாம் என்ன என்பதை இங்கு பார்ப்போம்.

கேரள வெள்ளத்தில் சிக்கிய கார்களை வாங்கலாமா?

பொதுவாக வெள்ளத்தில் முழ்கிய கார்களை 3 வகையாக பிரிக்கலாம். முதல் வகை பம்பர் வகை வெள்ளத்தில் முழ்கிய வாகனம், இரண்டாம் வகை டேஷ் போர்டு வரை வெள்ளத்தில் முழ்கிய வாகனம், முழுவதுமாக வெள்ளத்தில் முழ்கிய வாகனம்.

கேரள வெள்ளத்தில் சிக்கிய கார்களை வாங்கலாமா?

பெரும்பாலும் வெள்ளத்தில் முழ்கிய வாகனங்களில் அதிகம் பாதிக்கப்படுவது காரில் உள்ள எலெக்ட்ரானிக் மற்றும் எலெகிட்ரிக்கல் பாகங்களே.டேஷ் போர் வரையில் அல்லது அதற்கும் மேலாக வெள்ள நீரில் முழ்கிய வாகனங்களில் இந்த பாதிப்புகள் நிச்சயமாக இருக்கலாம்.

கேரள வெள்ளத்தில் சிக்கிய கார்களை வாங்கலாமா?

பம்பக்கு கீழ் மட்டுமே ஒரு கார் வெள்ள நீரில் முழ்கியிருந்தால் அதில் எலெக்ட்ரிக்கல் மற்றும் எலெக்ட்ரானிக் பாகங்கள் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இல்லை. பம்பருக்கு மேலாக தண்ணீரில் முழ்கியிரு்நதால் பாதிப்புகளுக்கு வாய்ப்பு உள்ளது.

கேரள வெள்ளத்தில் சிக்கிய கார்களை வாங்கலாமா?

இந்த பாதிப்பு எல்லா வாகனங்களில் ஒரு மாதிரியாக இருக்காது ஒரே அளவில் வெள்ளத்தில் முழ்கிய இரு வேறு வாகனங்களுக்கு பாதிப்பு வெவ்வேறாகவே இருக்கும். இந்த பாதிப்பு அது எந்த வகை கார் என்பதை பொருத்து அமைகிறது.

கேரள வெள்ளத்தில் சிக்கிய கார்களை வாங்கலாமா?

பொதுவாக டீசல் கார்கள் வெள்ளத்தில் முழ்கினால் அது பெட்ரோல் காரை ஒப்பிடும் போது பாதிப்புகள் குறைவாகவே இருக்கும். இது மட்டுமல்ல ஒரு காரின் வயது மட்டும் கண்டிஷனை பொருத்தும் இது மாறுபடும்.

கேரள வெள்ளத்தில் சிக்கிய கார்களை வாங்கலாமா?

பொதுவாக எலெக்ட்ரானிக் பாகங்கள் காரின் விலையில் இருந்து 15-30 சதவீதம் வரை இருக்கும். இதனால் ஒட்டு மொத்த எலெக்ட்ரிக் மற்றும் எலெக்ட்ரானிக பாகங்களை மாற்ற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் நீங்கள் வாங்கும் காருக்கு ஏற்றபடி இதை கணக்கிட்டுகொள்ளுங்கள்.

கேரள வெள்ளத்தில் சிக்கிய கார்களை வாங்கலாமா?

பொதுவாக வெள்ளம் பாதிப்பில் சிக்கிய காருக்கு அது எவ்வாறான வெள்ளத்தில் சிக்கியது, என்ன பாதிப்புகள் ஏற்பட்டது என்பதை பொருத்தே இன்சூரன்ஸ் க்ளைம்ப் செய்ய முடியும். தற்போது கேரளா வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வாகனங்களுக்காக சில விதிமுறைகளை சில நிறுவனங்கள் தளர்த்தியுள்ளனர்.

கேரள வெள்ளத்தில் சிக்கிய கார்களை வாங்கலாமா?

இதனால் வெள்ளத்தில் சிக்கிய வாகனங்களுக்கு இன்சூரன்ஸ் க்ளைம்ப் கிடைக்க அதிக வாய்ப்புகள் உள்ளன. எனினும் வெள்ளத்தில் சிக்கிய காரை ஸ்டார்ட் செய்திருக்ககூடாது. உள்ளிட்ட சில கட்டுபாடுகள் உள்ளது. இதை கடைபிடித்த கார்களுக்கு மட்டுமே இன்சூரன்ஸ் கிடைக்கும்.

கேரள வெள்ளத்தில் சிக்கிய கார்களை வாங்கலாமா?

வெள்ளத்தில் முழ்கிய கார் ஸ்டார்ட் ஆகாமல் இருந்தால் தற்போது உள்ள எலெக்ட்ரிக்கல் பாகங்களையே பெரிய அளவில் செலவு இல்லாமல் செயல்படவைக்க முடியும். அதற்காக சர்வீஸ் சென்டர்கள் சிறப்பான சர்வீஸ்களை செய்கின்றனர்.

கேரள வெள்ளத்தில் சிக்கிய கார்களை வாங்கலாமா?

பெரும்பாலும் சர்வீஸ் சென்டர்களில் வெள்ளம் பாதித்த காரில் சில சர்வீஸ்களை தான் செய்கிறார்கள் பெட்ரோல் காராக இருந்தால் ஏர் பில்டர்களை சுத்தம் செய்தல், ஸ்பார்க் பிளக்களை சுத்தம் செய்தல் , பெட்ரோல் டேங்கை சுத்தம் செய்யும் பணியை செய்கிறார்கள். டீசல் காரை பொருத்தவரை டீசல் டேங்க், மற்றும் டீசல் பில்டர்களை சுத்தம் செய்கிறார்கள்.

கேரள வெள்ளத்தில் சிக்கிய கார்களை வாங்கலாமா?

வெள்ளத்தில் சிக்கிய காரை முழுமையாக சரியானாலும் அதில் ஏபிஎஸ் மற்றும் ஏர் பேக் சரியாக வேலை செய்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள் இது பாதுகாப்பிற்கு மிகவும் அவசியம், ஏபிஎஸ் இந்திய ரோடுகளில் பெரும் விபத்துக்களை அசால்ட்டாக சமாளிக்கும் திறன் கொண்டது.

கேரள வெள்ளத்தில் சிக்கிய கார்களை வாங்கலாமா?

உங்கள் கார் அல்லது பைக் வெள்ளத்தில் சிக்கியிருந்தால் நிச்சயம் அதை ஸ்டார்ட் செய்யவோ, அதற்கான முயற்சியையோ செய்யாதீர்கள். அப்படி நீங்கள் செய்தால் உங்கள் இன்ஜின் முற்றிலும் செயல் இழந்து போக வாய்ப்புள்ளது.

கேரள வெள்ளத்தில் சிக்கிய கார்களை வாங்கலாமா?

வெள்ள நீரில் முழுவதும் அப்பகுதியில் இருந்து வெளியேற உடன் பாதுகாப்பாக காரின் பானட்டை திறந்து பேட்டரியில் இருந்து மற்ற பாகங்களுக்கு செல்லும் வயர்களை உடனடியாக கழட்டி விடுங்கள்.

கேரள வெள்ளத்தில் சிக்கிய கார்களை வாங்கலாமா?

உங்கள் கார் வெள்ள நீரில் சிக்கி இடத்தில் இருந்தே சர்வீஸ் சென்டருக்கு காரை டோ செய்து செல்லுங்கள் காரை தள்ள வேண்டிய அவசசியம் இல்லை. சர்வீஸ் சென்டருக்கு செல்லும் முன் காரை சுத்தம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

கேரள வெள்ளத்தில் சிக்கிய கார்களை வாங்கலாமா?

மேல வெள்ள பாதிப்பால் காருக்கு ஏற்படும் பாதிப்புகளையும், அதன் பின் நாம் அறியாமையால் செய்யும் சில பாதிப்புகளையும் இங்கே பட்டியலிட்டுள்ளோம். இதை கொண்டு உங்கள் கார் வெள்ளத்தில் சிக்கியிருந்தால் இதை எப்படி மீட்பது என்பதை முடிவு செய்யுங்கள்.

கேரள வெள்ளத்தில் சிக்கிய கார்களை வாங்கலாமா?

நீங்கள் வெள்ளத்தில் சிக்கிய காரை வாங்குவது என்றாலும் எப்படி அந்த காரை தேர்ந்தேடுக்க வேண்டும் எவ்வளவு அந்த காருக்கு செலவாகும். நாம் எவ்வளவிற்கு அந்த காரை வாங்கலாம் என்பதை முடிவு செய்து கொள்ளவும்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்

01.முதல் முறையாக இந்தியாவிற்கு வருகிறது போர்ட்டபிள் பெட்ரோல் பங்க்.. மத்திய அரசு அனுமதி

02.ரூ.48,400 விலையில் புதிய டிவிஎஸ் ரேடியான் 110 பைக் விற்பனைக்கு அறிமுகம்!!

03.தமிழகத்தில் சுங்கசாவடிகளில் கட்டணம் உயர்வு; அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்

04.டாடா ஹாரியர் எஸ்யூவி பெங்களூரில் சோதனை ஓட்டம்!!

05.விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவினால் பரிசு தொகையுடன் தேசிய விருது.. போலீசை கண்டு அச்சம் வேண்டாம்

Most Read Articles

மேலும்... #எப்படி #how to
English summary
can we buy the cars affected in kerala flood as second hand?. Read in Tamil
Story first published: Thursday, August 23, 2018, 15:35 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X